Language Selection

தமிழச்சி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தற்போது ஐரோப்பிய வாழ் தமிழர்கள் மத்தியில் அம்மனாக மதிக்கப்படுபவர் அன்னை அபிராமி. மூன்று ஆண்டுகளுக்கு முன் லலிதாவாக வாழ்ந்துக் கொண்டிருந்தவர் இன்று அம்மனாக டென்மார்க்கில் வளம் வந்துக் கொண்டிருக்கிறார். காவி வேஷம் கட்டினால் பணத்துடன் புகழ் என்னும் உச்சிப்படிக்கு வேகமாகவே சென்றுவிடுவது போல் இந்த பெண்ணுக்கு யோகம் அடித்திருக்கிறது! ஐரோப்பிய தமிழர்களுக்கு மத்தியில். தலையில் கொஞ்சம் பெரியதாகவே இருக்கும் கொண்டை, திருட்டு முழி, காவி உடை, கையில் சங்கராச்சாரியார் ஸ்டைலில் குச்சு. அதன் நுனியில் சிகப்பு துணி, கழுத்தில் பெரிய மாலை, நெற்றியில் சூலம் குங்குமத்தால் போடப்பட்டிருக்கிறது.

 

 

 இது போதுமே சாமியாரம்மாவாக காட்டுவதற்கு! போதாக்குறைக்கு கணவனும், சில கூலிக்கு மாரடிக்கும் அடியாட்கள் கூட்டம். ஒன்றை பத்தாக்கி பேசும் கொஞ்சம் ஜால்ரா கூட்டம். லலிதா அம்மாவுக்கு அடித்தது யோகம். இராமாயணத்தில் இராமன் காட்டுக்கு செல்ல அவனுடைய செருப்பை வைத்து பரதன் ஆட்சி செய்தது போல் இந்த அம்மாவின் பிறந்த நாளன்று (29.03.2008) இவருடைய செருப்பு கனடாவுக்கு அனுப்பப்பட அங்கிருந்த அறிவாளிக் கூட்டம் அதை வைத்து கூத்தடித்திருக்கிறது.

 

ஒவ்வொரு தமிழனும் வெட்கப்பட வேண்டிய சம்பவம் இது. உங்களுடைய ஓவர் செண்டிமென்டுக்கு செருப்பைக்கூட விட்டு வைக்க மாட்டீர்களா? இந்நிகழ்ச்சி நடந்தது கனடாவில் என்பது இன்னும் அதிர்ச்சியளிக்கிறது.சுவீஸ் நாட்டில் இந்த மோசடி கூட்டத்துக்கு கிளை உண்டு. அடுத்த கிளை கனடாவில் உருவாக்குவதன் உச்சக்கட்டம் தான் இந்த செருப்பு பூசை. அறிவு வளர்ச்சி அடைந்த நாட்டில் வாழும் தமிழர்களுக்கு மத்தியில் இந்த அவலங்கள் நடந்தேறி இருக்கின்றது. இந்த சம்பவத்திற்கு பேப்பரில் விளம்பரங்களும், வானொலியில் அறிவிப்பும் நடந்திருப்பது உச்சக்கட்ட கொடுமையிலும் கொடுமை. விட்டால் அம்மனின் சாணியை கூட சந்தனமாக பாய்கெட் செய்து வியாபாரம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் நம் தமிழர்கள் என்பதால் ஆளைப்பற்றி விசாரித்தால் கிடைக்கும் தகவல்களோ நம் போலிச்சாமியாருக்கும் இவருக்கும் இருக்கும் ஒற்றுமைகளைக் கண்டு ஆகா என்று வியக்க வைக்கிறது.


டென்மார்க் அபிராமி அம்மனின் உண்மையான பெயர் லலிதா. ஈழத்தில் ஏழாலை என்னும் ஊரைச் சேர்ந்த இவர் சிறு வயதிலேயே சிறு குடிசையில் அம்மன் சிலையை வைத்து உரு ஆடி குறி சொல்கின்ற தொழிலை செய்து வந்திருக்கின்றார். லலிதாவின் அம்மாவின் சகோதரி அதாவது பெரியம்மாவின் தொழிலைத் தான் இவரும் கற்றுக் கொண்டு ஈழத்தில் இருக்கும் போது இருந்திருக்கிறார். ஈழத்தில் நடக்கின்ற இனக்கலவரத்தில் புலம் பெயர்ந்த தமிழர்களில் இவரும் ஒருவர். டென்மார்க்கில் தன் கணவர் சிறிபாலனுடன் வந்த இவர் தொடக்கத்தில் கிறிண்ட்ஸ்ரெட் என்ற ஊரில் சாதாரணமாக இருந்திருக்கிறார். அதன் பிறகு பிரண்டா என்னும் ஊருக்கு இடம் மாற்றம் செய்திருக்கின்றனர். அங்குதான் சிறிய கோவிலை கட்டி இருக்கின்றனர். அதற்கு நிதி உதவியாக டென்மார்க் தமிழர்களிடம் பணம் வசுலித்திருக்கின்றனர். கோயில் நிர்மாணிக்கப்பட்ட பிறகே லலிதா டென்மார்க் அம்மனாக உருவாக ஆரம்பித்திருக்கிறார். இவருடைய கோயிலில் திருமணங்கள் கூட செய்து வைக்கப்படுகின்றது. அதிலும் சாதிகள் கலப்படம் இல்லாமல் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் திருமணம் செய்து வைப்பதாக தொலைக்காட்சியில் ஒருமுறை பேட்டியில் சொல்லியிருக்கிறார் இந்த சாதிவெறிபிடித்த லலிதா. இவரின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்த முற்படுபவர்களுக்கு இவரின் கணவரும், ஆதரவாளர்கள் மிரட்டுவதாக செய்திகள் கிடைக்கிறது. அம்மன் புகழ் பாடாமல் அவதூறு செய்பவர்களை டென்மார்க் அபிராமி அம்மன் கனவில் வந்து தண்டிப்பாள் என்று இவர்கள் ஓரே போடாக போடுகிறார்கள். நம் தமிழர்களும் ரத்தம் கக்கி செத்துப் போய்விடுவோமோ என்று பயத்தில் பக்கியை வரவழித்துக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த லலிதா அம்மா பயங்கர போஸ் கொடுத்து தமிழ்மக்களை இன்னும் பயமுறுத்துகிறார். அம்மனின் புகைப்படத்தில் தனது முகத்தை ஒட்ட வைத்துக் கொள்வதும், வாயில் ரத்தம் ஒழுக போஸ் கொடுப்பதையும் பார்த்தால் இந்த அம்மனுக்கு சீக்கிரத்தில் ஜெயிலில் "களி" கிடைக்கப் போகிறது என்று தோன்றுகிறது.

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_15.html