Language Selection

விளாடிமிர் இலீச் லெனின் (Vladimir Ilyich Lenin, ரஷ்ய மொழி: Влади́мир Ильи́ч Ле́нин Sound கேளுங்கள், (ஏப்ரல் 22 (ஏப்ரல் 10 (பழைய முறை), 1870ஜனவரி 21, 1924), ஒரு ரஷ்யப் புரட்சியாளரும், போல்ஷவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும், மற்றும் பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் மார்க்ஸிஸம்-லெனினிஸம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினிஸம் என்ற கோட்பாட்டின் நிறுவுனரும் ஆவார்.

"லெனின்" என்பது் ரஷ்ய புரட்சிக்காக அவர் கொண்டிருந்த புனைபெயர்களில் ஒன்று. பின்னாளில் தன்னுடைய உண்மையான "விளாடிமிர் உலியனொவ்" என்கிற பெயரை "விளாடிமிர் லெனின்" என்று மாற்றிக்கொண்டார். சில சமயங்களில் அவரை நிக்கலாய் லெனின்(Nikolai Lenin) என்று மேற்கத்திய கம்யூனிச எதிர்ப்பாளர்களும் வெளிநாட்டு பத்திரிகையாளர்களும் வர்ணித்தார்கள். ஆனால், சோவியத் யூனியனில் அவர் இப்பெயரினால் அறியப்படவில்லை.

லெனின் என்கிற அவருடைய பெயரின் மூலக்காரணம் பற்றி பல கருத்துக்கள் உள்ளன. மேலும், அந்த பெயரினை எதற்காக தேர்வு செய்தார் என்று அவர் சொன்னதாக அறியப்படவில்லை. இப்பெயர் லேனா (Lena) என்கிற நதியின் பெயரோடு தொடர்பிருக்கலாம் என அறியப்படுகிறது. இதே காலகட்டத்தில் முன்னணி ரஷ்ய மார்க்சியவாதியன ஜார்ஜி பிளக்னாவ் (Georgi Plekhanov) என்பவர் வோல்கா நதியோடு தொடர்புடைய வோல்ஜின் என்கிற புனைபெயரினைக் கொண்டிருந்தார். லேனா நதி வோல்கா நதியை விட நீண்ட தூரம் ஓடுவதாலும் எதிர் திசையில் ஓடுவதாலும் லெனின் என்கிற பெயரினை லெனின் தேர்வு செய்வதற்க்கு காரணம் என்று ஒரு கருத்தும் கூறப்படுகிறது. ஆனால், அந்த காலகட்டத்தில் லெனின் பிளக்னாவின் எதிப்பாளர் அல்ல. மேலும், லேனா படுகொலைக்கு முன்னரே இப்பெயர் வழங்கப்படுவதால் அதற்க்கும் இப்பெயருக்கும் தொடர்பில்லை என அறியப்படுகிறது.