Language Selection

குழந்தைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பள்ளிக்குச் சென்று விட்டு திரும்பிய குழந்தைகளை வீட்டுக்குள் முடக்கிவைத்து, அதிக நேரம் வீட்டுப்பாடம் செய்ய வற்புறுத்துவது; தொலைக்காட்சி பெட்டிக்கு முன்பு நீண்ட நேரம் அமர்ந்திருக்க அனுமதிப்பது; வீட்டிற்குள்ளே விளையாட வேண்டும் என்று சொல்வது...

இவையெல்லாம் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு நாமே பங்கம் விளைவிப்பதற்கு ஒப்பான செயல்.

ஆம், ஒரு குறிப்பிட்ட நேர அளவுக்கு மட்டுமே வீட்டுப் பாடம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

நாள்தோறும் சில மணி நேரங்கள், அதாவது மாலை நேரத்தில் வீட்டுக்கு வெளியே குழந்தைகளை விளையாட விடுவது, அவர்களது ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்.

வீட்டுக்கு வெளியே அமைதியான, மாசற்ற சூழல் இல்லையெனில், அவர்களை பூங்கா அல்லது விளையாட்டு மைதானங்களுக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.

இவ்வாறு செய்வதால், குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மேன்மையுடன் இருக்கும் என்கின்றனர், மருத்துவர்கள்.

குறிப்பாக, வெளியே வெளிச்சத்தில் விளையாடும் குழந்தைகளின் கண்கள் மிகுந்த ஆரோக்கியத்துடன் காணப்படும் என்றும், கிட்டப்பார்வை போன்ற குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்றும் ஆஸ்திரேலிய மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

எனவே, குழந்தைகளையே வீட்டிலேயே முடக்கி வைப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.

(மூலம் - வெப்துனியா)

 தொகுப்பு : சரா

http://in.tamil.yahoo.com/Health/Treatments/0808/04/1080804034_1.htm