Language Selection

நோய்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முதுமையில், மனிதர் மிக அதிகமாகப் பயப்படும் நோய்களில் இதற்கு முதலிடம் உண்டு.

 

இது, ஒருவரின் நினைவாற்றலை, திறமையை மழுங்கடித்து விடுகிறது. இந்நோயைக் குணப்படுத்த வழியில்லை.

 

40 இலட்சம் அமெரிக்கர், இந்நோயால் அவதிப்படுகின்றனர். இந்த நூற்றாண்டின் நடுவில், இந்த எண்ணிக்கை ஒரு கோடியே 40 இலட்சமாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அல்ஷிமர் நோய் ஏற்படுவதற்கு என்ன காரணம் என்று எவருக்கும் தெரியவில்லை. முதுமை என்பது, அதற்குச் சாதகமாக அமைவது மட்டும் ஒரளவு தெரிகிறது. 65 வயது ஆன பிறகு, 5 ஆஈண்டுகளுக்கு ஒரு முறை, இந்நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது. 85 வயதுக்குப் பிறகு, பெரும்பாலும் 50 விழுக்காட்டினர் அதனால் பாதிக்கப்படுகின்றனர்.

 

நினைவாற்றலையும் சிந்திக்கும் ஆற்றலையும் ஒழுங்குபடுத்தும் மூளையின் பகுதியில், இந்நோய் தோன்றுகிறது. பிறகு, மூளையின் பிற பகுதிகளுக்குப் பரவுகிறது. மூளை மீதான இந்நோயின் தாக்குதல், உயிருக்கு உலை வைக்கப்கூடியது. 8 முதல் 10 ஆண்டு வரை, இந்நோய் நீடிக்கிறது. சிலர், வெகு விரைவில் மரணம் அடைவதுண்டு, சிலர் 20 ஆண்டு வரை உயிர் வாழ்வதுமுண்டு.

மூளையின் செல்கள் பாதிக்கப்படுவதால், உடலின் முக்கியமான பிற பகுதிகளும் பாதிக்க வழியேற்படுகின்றது.

 

ஆனால், அல்ஷிமர் நோயால் பாதிக்கப்படுவோரின் மரணத்துக்கு, இந்நோய் மட்டுமே காரணமாகாது, ஏனெனில், பல நோயாளிகள், வேறு சில நோய்களையும் கொண்டுள்ளனர்.

 

மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்தால், மூளையில் வழக்கத்துக்கு மாறாகப் புரோட்டீன் குவிந்து கிடப்பது, அல்ஷிமர் நோய்க்கு அடையாளமாகும். புரோட்டீன்கள் இவ்வாறு திரள்வதைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் அறிவியலாளர் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

 

பரம்பரையும், இந்நோய் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமாகிறது. பெற்றோருக்கு இந்நோய் இருந்திருக்குமேயானால், பிள்ளைகளுக்கு இது ஏற்படும் அபாயம் அதிகமாகத் தென்படுகிறது.

 

நினைவு இழப்பு அல்லது மறதியில், அல்ஷிமர் நோய் ஆரம்பமாகிறது. மூக்கு கண்ணாடி, சாவி போன்றவற்றை எங்கே வைத்தோம் என்று மறக்க ஆரம்பித்தால், இந்நோயின் அறிகுறி ஆரம்பமாகிறது. படிப்படியாக இந்த மறதி, விரிவடைகிறது.

 

காசோலையை நிரப்ப முடியாமல் தவிப்பது, அல்லது வழக்கமான அன்றாடப் பணிகளைச் செய்ய முடியாமல் திணறுவது என பிரச்சினை அதிகரிக்க வாய்ப்புண்டு.

 

எல்லாவற்றுக்கும் மேலாக, அல்ஷிமர் நோயாளிகள், தங்களைத் தாமே கவனித்துக்கொள்ள முடியாது என்பது வருத்தத்திற்குரியது.

 

ஆவல் அதிகரிப்பு, எரிச்சல், ஆகியவற்றுக்கு இந்நோயாளிகள் ஆளாவதுண்டு. தவிர, இல்லாத பொருட்களை இருப்பதாகக் காண்பார்கள்.

 

ஏன் ஏற்படுகிறது, எப்படி ஏற்படுகிறது என்று தெரியாத ஒரு நோய்-அல்ஷிமர்.

 

குணப்படுத்த வழியில்லாத நோய்-அல்ஷிமர் நமக்கு முதுமை வந்தால்-அல்ஷிமர் நோய்க்கு கொண்டாட்டம்.

 

http://tamil.cri.cn/1/2004/06/15/23@9088_2.htm