Language Selection

நீர் – காற்று
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கின் காலநிலை வெப்பம் அடையும் காரணத்தினால், இமய மலையின் பனிவயல் விரைவாக உருகி வருகின்றது. எதிர் வரும் பத்து ஆண்டுகளில், சீனா, இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளின் கோடிக்கணக்கான மக்கள் நீர் பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றன என்று உலக இயற்கை பாதுகாப்பு நிதியம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியது.

 

இமய மலை பிரதேசம், வடதுருவத்துக்கு அடுத்த படியாக உலகின் மிக பெரிய பனிவயல் பரப்பாகும். ஆனால் தற்போது, அங்குள்ளபனிவயல் ஆண்டுக்கு 10 மீட்டர் முதல் 15 மீட்டர் வரையான வேகமுடன் விரைவாக உருகி வருகின்றது. நடவடிக்கை மேற்கொள்ளாவிடில், குறுகிய 20 ஆண்டுகளில், காலநிலையின் மாற்றம் ஒரு அபாய நிலைக்கு மாறிவிடும் என்று ஆய்வு கூறுகின்றது. 2026ஆம் ஆண்டு முதல் 2060ஆம் ஆண்டு வரை, உலகின் சராசரி வெப்ப நிலை 2 திகிரி செல்சியஸ் அதிகரிக்கும்.

 

இமய மலையின் பனிவயல் வேகமாக உருகுவதால்,முதலில், அருகிலுள்ள ஆற்று நீர் மட்டம் உயரும், பெரும் அளவில்வெள்ளப்பெருக்கு ஏற்படும். ஆனால், பல்லாண்டுகளுக்குப் பின், நிலைமை மாறிவிடும். அப்போது ஆற்று நீரோட்டம் குறையும். மேற்கு சீனா, நேபாளம், வடக்கு இந்தியா ஆகியவற்றின் பொருளாதாத்திற்கும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று உலக இயற்கை பாதுகாப்பு நிதியத்தின் காலநிலை மாற்றம் பற்றிய ஆய்வு குழுத் தலைவர் ஜெனிபெர் மோர்கன் கூறினார்.

 

இமய மலை, கங்கை, சிந்து, யலுசாபு ஆறு, சால்வன் ஆறு, மைகுன் ஆறு, யாங்சி ஆறு, மஞ்சள் ஆறு ஆகிய 7 பெரிய ஆசிய ஆறுகளின் முகத்துவாரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அறிவியல் புள்ளிவிவரங்கள்

 

மனிதக்குலம் இது வரை 97 விழுக்காட்டு கடற்படுகைகளைத் துருவி ஆராய்ந்துள்ளனர்.

 

சுழல் காற்றின் வேகம் ஆகக்கூடியது வினாடிக்கு ஆயிரம் மீட்டரை எட்டக் கூடும். 12 நிலை காற்றின் வேகம் விநாடிக்கு 33 மீட்டர் மட்டுமே.

 

வயதுக்கு வந்தவர் நாளைக்கு சுமார் 20 ஆயிரம் தடவை சுவாசிக்கின்றனர். 0.75 கிலோகிராம் ஆக்சிஜின் உட்கொள்கின்றனர் 0.9 கிலோகிராம் கார்பன் டிஆக்சைட் வெளியேற்றுகின்றனர்.

 

சிறப்பாக வளரும் ஒரு ஹேக்டர் புல் தரை, நாளைக்கு 600 கிலோகிராம் ஆக்சிஜினை உற்பத்தி செய்ய முடியும். 900 கிலோகிராம் கார்பன் டிஆக்சைடை உட்கொள்ள முடியும்.

 

பூமியில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் தடவை நில நடுக்கம் ஏற்படுகின்றது. இவற்றில் மிகப் பெரும்பாலானவை மிகவும் சிறியவை. அளவை மானிகள் மூலம் தான் இதைக் கண்டறிய முடியும். ஆனால், ஒரு விழுக்காடு மட்டும் மனித குலத்துக்கு தேசம் ஏற்படும்.

 

தென் துருவம், பூமியில் மிகப் பெரிய மிக வறட்சியான மிக குளிரான பொட்டல் வெளியாகும். அதன் நிலப்பரப்பு ஒரு கோடியே 50 லட்சம் கிலோமீட்டராகும். இது சஹாரா பாலைவனத்தின் நிலப்பரப்பை விட ஒரு மடங்கு அதிகமாகும்.

 

சீனாவின் லோயெஸ் பீடபூமி, 4000 ஆண்டுகளுக்கு முன் 48 கோடி மோ காடுகளைக் கொண்டிருந்தது.

 

http://tamil.cri.cn/1/2005/03/29/23@19213_1.htm