Language Selection

பூமி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மார்சு 28ந் நாள் நள்ளிரவு நிகழ்ந்த நிலநடுக்கத்துக்குப் பின், இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் குறைந்தது 4 தடவை நிலநடுக்கம் நிகழ்ந்தன. இப்பிரதேசத்தில் ரிச்டர் அளவு கோலில் 9 புள்ளிகள் என்ற அளவுக்கு நிலநடுக்கம் நிகழ்ந்து, மாபெரும் கடல் கொந்தளிப்பு ஏற்படக் கூடும் என்று சில நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலநடுக்கத்தின் காரணம் பற்றி உலக பல்வேறு நாட்டு அறிவியல் நிபுணர்களுக்கு இடையில் கருத்து வேற்றுமை நிலவுகின்றது. ஜெர்மனியில் மிக அதிகமாக விற்பனையாகும் ஒரு செய்தித்தாள் மார்சு 30ந் நாள் ஒரு புதிய கருத்தை வெளியிட்டது. சூரிய மண்டலத்தின் 9 கோள்களில் ஒன்றான Uranus தனது சுற்றுவட்ட பாதையில் இயங்கிய போது, பூமியின் நிலநடுக்கோட்டுக்கு அருகிலுள்ள பிரதேசத்தில் கடுமையான ஈர்ப்பு ஆற்றலை ஏற்படுத்தியுள்ளது. விண்வெளியிலான ஒரு சூப்பர் சூனியத் தடை இயந்திரம் போல், இது பூமியில் மாபெரும் நிலநடுக்கம் ஏற்படுத்தியுள்ளது என்று இப்புதிய கருத்து கூறுகின்றது.

 

Uranus ஆற்றல் மிகுந்த 4 துருவ காந்த வயலைக் கொண்டிருப்பதினால், பூமியில் வலுவாக ஈர்ப்பு ஆற்றலை ஏற்படுத்துகின்றது என்று அமெரிக்க விண்வெளி அலுவலகத்தின் (NASA) அறிவியல் அறிஞர்கள் கூறுவதாக இந்த செய்தித் தாள் கூறுகின்றது. இந்த ஈர்ப்பு ஆற்றல் பூமியின் நடுக்கோட்டுக்கு அருகிலுள்ள மின்காந்த சத்துள்ள மண்ணை ஈர்க்கலாம். இதனால் பூமியின் ஓடு உயர்ந்து வரக்கூடும். ஆகையால், கடல் படுகையில் நிலநடுக்கம் நிகழ்ந்து, கடல் கொந்தளிப்பு ஏற்படுகின்றது.

 

கடந்த சில ஆண்டுகளில், Uranus இன் சுற்று வட்ட பாதை நாளுக்கு நாள் பூமியை நெருங்கி வருகின்றது. இதனால், பூமியில் இதன் ஈர்ப்பு ஆற்றல் முன்பு இருந்ததை விட அதிகமாகி வருகின்றது. முன்பு Uranus க்கும் பூமிக்கும் இடையில் 314 கோடி கிலோமீட்டர் தொலைவு இருந்தது. ஆனால், Uranus இன் சுற்று வட்ட பாதையில் நிகழ்ந்த மாற்றத்தால், இந்த தொலைவு 259 கோடி கிலோமீட்டராக குறைந்துவிட்டது. இந்த போக்கு 2012ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என்று மதிப்பிடப்படுகின்றது. ஆகையால், அடுத்த 10 ஆண்டுகளில், Uranus இன் ஈர்ப்பு ஆற்றல் நாளுக்கு நாள் பெருகிடும் காரணத்தால் ஏற்படக் கூடிய நிலநடுக்கத்தின் அச்சுறுத்தலை மனித குலம் எதிர்நோக்குகின்றது. இந்த நிலைமை, Uranus சூரிய மண்டலத்துக்கு அப்பால் நகரும் வரை நீடிக்கும் என்று அந்த செய்தித் தாள் சுட்டிக்காட்டுகின்றது.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.