Language Selection

புதிய ஜனநாயகம் 2007
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

may_2007.jpg

தமிழகத்து "மார்க்சிஸ்டு'கள் ரிலையன்ஸ் ஃபிரெஷ்ஷûக்கு எதிராக அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, "மார்க்சிஸ்டு' கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சமர் போரா, ""விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நல்ல விலை கொடுப்போம் என்றும்; நுகர்வோருக்குத் தரமான பொருட்களை விற்பனை செய்வோம் என்றும் ரிலையன்ஸ் நிறுவனம்

 கூறியிருக்கிறது. அதன்படி நடந்து கொண்டால், அந்நிறுவனத்தை ஏன் எதிர்க்க வேண்டும்? வேளாண் துறையில் அந்நிய நேரடி முதலீட்டைத்தான் இடதுசாரிக் கட்சிகள் எதிர்க்கின்றன. ரிலையன்ஸோ அல்லது வேறு ஏதாவது இந்திய நிறுவனமோ வர்த்தகம் செய்வதை எதிர்க்கவில்லை'' எனக் கூறியிருக்கிறார்.

 

இது அவரின் தனிப்பட்ட கருத்து எனக் கூறி, தமிழகத்து "மார்க்சிஸ்டு'கள் தப்பித்து கொண்டுவிட முடியாது. மேற்கு வங்க "மார்க்சிஸ்டு' கட்சி, அம்மாநிலத்தில் ரிலையன்ஸ் சில்லறைக் கடைகளைத் திறக்க எந்த மறுப்பும் தெரிவிக்காதபொழுது, "இடதுசாரி'க் கூட்டணியில் இருக்கும் பார்வார்டு பிளாக் கட்சிதான், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு ரிலையன்ஸ் சில்லறைக் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என முரண்டு பிடிக்கிறதாம். இந்தக் "கொள்கை' முரண்பாட்டைக் கேள்விப்படும் பொழுது, நமக்குப் புல்லரித்துப் போகிறது.

 

எப்படிப்பட்ட நிபந்தனைகள் போட்டாலும், அவற்றையெல்லாம் ஏய்த்துக் கல்லா கட்டுவதில் அம்பானி தொழில் குழுமம் கில்லாடிகள் என்பது "இடதுசாரி' களும் அறிந்த உண்மை. இருந்தாலும் என்ன செய்வது, தங்களைச் ""சிவப்பாக''க் காட்டிக் கொள்ள, "இடதுசாரி'க் கூட்டணி ஏதாவது செய்து தொலைக்க வேண்டி இருக்கிறதே!