Language Selection

புதிய ஜனநாயகம் 2009

இரண்டாம் உலகப்போரின்போது, ஹிட்லரின் நாஜிப்படை இலட்சக்கணக்கான யூத இன மக்களை வதைமுகாம்களில் மிருகங்களைப் போல அடைத்து சித்திரவதை செய்து கொன்றது.

இருபதாயிரம் மக்களுக்கும் மேற்பட்டோரைத் துடிதுடிக்கக் கொன்றொழித்து, ஈழப்போரை துயரமான முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது, சிங்கள இனவெறி அரசு. இந்த இன அழிப்புப் போரின் பங்குதாரர்களாக இலங்கை அரசுடன் இந்தியாவும் சீனாவும் கைகோர்த்திருந்தன.

ஓய்வின்றிக் கட்டாய வேலை; சம்பளம் கிடையாது; சம்பளம் கேட்டால் சவுக்கடி; நோய்வாய்ப்பட்டாலும் விடுப்போ, மருத்துவமோ கிடையாது; இக்கொடுமையிலிருந்து தப்பியோட முயற்சித்தால்,

 

என்ன அருள் வந்து இறங்கியதோ தெரியவில்லை. திடீரெனத் "தமிழ்த் தேசியம்'' என்று கூச்சலிட்டுக் கொண்டு சாமியாடக் கிளம்பி விட்டது தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி எனும் பெயரிலுள்ள மணியரசன் கும்பல்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண்களை கடத்திச் சென்று கற்பழித்த கண்டோன்மென்ட் போலீசு; ஆட்டோ டிரைவர் செல்வத்தை விசாரணைக்கு அழைத்து சென்று "கொட்டடி கொலை' செய்து பிணத்தை வெளியில் வீசிய உறையூர் போலீசு;

ஒரிசா மாநிலத்தின் இரும்புக் கனிமங்களை வரைமுறையின்றிச் சூறையாடி மக்களின் வாழ்வுரிமையைப் பறித்துவரும் "ஜிண்டால்'' எனும் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனம்,

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், கருமாத்தூர் அருகே வடக்குப்பட்டியிலுள்ள வி.பி.எம். பட்டாசு ஆலையில் கடந்த ஜூலை 7ஆம் தேதியன்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 18 பேர் கொல்லப்பட்டு 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதைக் கண்டு, அந்த வட்டாரமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

ஊழல் கறைபடியாத கட்சியாகக் காட்டிக் கொண்ட சி.பி.எம். கட்சி, இப்போது "ஊழலுக்கு உடந்தையாக இரு! இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்று தனது கட்சி யினரையே மிரட்டத் தொடங்கி விட்டது.

கடந்த ஜூன் 17ஆம் தேதியன்று திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில்  ஒரு டன் எடையுள்ள இரும்புத் தகடு சரிந்து விழுந்து, ரகுபதி என்ற உதிரித் தொழிலாளி கோரமாகக் கொல்லப்பட்டார். எவ்விதப் பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி உதிரித் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள்,

புதிய ஜனநாயகம் இதழின் சாத்தூர் நகர முகவராகவும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஊக்கமிகு முன்னணி ஊழியராகவும் செயல்பட்ட தோழர் கணேசன், கடந்த ஜூலை 22ஆம் தேதியன்று மாரடைப்பினால் தனது 46வது வயதிலேயே மரணமடைந்து விட்டார்.

இந்த நிதியாண்டுக்கான வரவு செலவு அறிக்கை உழவர்கள் மற்றும் கிராமப்புற ஏழைஎளிய மக்களுக்கு மரியாதை செய்திருப்பதாக முதலாளித்துவப் பத்திரிகைகள் தொடங்கி முதலாளித்துவ அறிஞர்கள் வரை அனைவரும் ஒரே குரலில் சுட்டிக் காட்டி வருகின்றனர்.

சிங்கள இனவெறி பாசிச ராஜபக்சே கும்பலை போர்க்கிரிமினலாக அறிவித்து தண்டனை வழங்கக்கோரியும்; சிங்கள இராணுவத்தின் வதை முகாம்களிலிருந்து ஈழத் தமிழர்களை மீட்டு மீள்குடியமர்த்தவும், உடனடியாக நிவாரணமறுவாழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்யக் கோரியும்; ஈழப் பகுதியில் சிங்கள குடியேற்றத்தைத் தடுக்கக் கோரியும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு.,பெ.வி.மு., ஆகிய புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் கடந்த இருமாதங்களாகத் தொடர் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வருகின்றன.

 இத்தாலி நாட்டில் சமீபத்தில் நடந்த பெரும் எட்டு நாடுகள் (ஜி 8) மாநாட்டில், "அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு அணுசக்தி மூலப்பொருளான யுரேனியத்தைச் செறிவூட்டுவதற்கும், மறுசுழற்சி செய்வதற்கும் தேவைப்படும் தொழில்நுட்பத்தையும், கருவிகளையும் வழங்கப் போவதில்லை'' என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவருகின்றன.

ஏழ்மையின் காரணமாகத் திருமணமாகாமல் இருக்கும் பெண்களுக்கு இலவசமாகத் திருமணம் செய்து வைக்கிறோம் எனக் கூறி, மணமேடை வரை அழைத்துச் சென்ற பிறகு, மணப்பெண் கன்னித்தன்மையுடன் இருந்தால்தான் திருமணம் என்று சொல்லி, அவர்களை இழிவுபடுத்திய கொடுமை மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது. அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசே இதனைச் செய்துள்ளது என்பதுதான் இன்னமும் கொடுமை.

காஷ்மீர் மாநிலத்தில் அமைதியான முறையில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்திருப்பதையும், அம்மாநிலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித் திருப்பதையும் பார்த்து அம்மாநில மக்கள் சுதந்திரம் கேட்பதை விட்டுவிட்டு, மீண்டும் தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட்டதாக இந்திய அரசு மயக்கம் கொண்டிருந்தது. இந்த மயக்கத்தை அம்மாநிலத்தின் தென்பகுதியிலும் தலைநகர் சீறிநகரிலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் போராட்டங்கள் கலைத்துப் போட்டுவிட்டன.

தமிழகத்தில் ஏறத்தாழ 3 லட்சத்து 90 ஆயிரம் சுயஉதவிக் குழுக்கள் இயங்கிவரும் நிலையில், 2011க்குள் மேலும் ஒரு லட்சம் சுயஉதவிக் குழுக்களைக் கட்டியமைக்கப் போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதவிர, விவசாயிகளுக்கென 10,000 சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்படும் என்று பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார், நிதியமைச்சர் அன்பழகன்.

பசி, பட்டினி ஏதுமில்லாத செல்வச் செழிப்பு மிக்க நாடு என்றும், குடிசைகளே இல்லாத நாடு என்றும் அமெரிக்காவைச் சொல்வார்கள். இங்கிருக்கும் படித்த நடுத்தரவர்க்க இளைஞர் களைக் கேளுங்கள்; ""அந்த சொர்க்க பூமிக்கு வேலைக்குச் செல்வதுதான் தங்கள் வாழ்வின் லட்சியம்'' என்பார்கள்.

காஷ்மீர் மாநிலத்தில் அமைதியான முறையில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்திருப்பதையும், அம்மாநிலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் பார்த்து அம்மாநில மக்கள் சுதந்திரம் கேட்பதை விட்டுவிட்டு, மீண்டும் தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட்டதாக இந்திய அரசு மயக்கம் கொண்டிருந்தது. இந்த மயக்கத்தை அம்மாநிலத்தின் தென்பகுதியிலும் தலைநகர் சீறிநகரிலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் போராட்டங்கள் கலைத்துப் போட்டுவிட்டன.

கேரளாவில் உள்ள மராத் எனும் சிறு கிராமத்தில் நடந்த மதக்கலவர படுகொலைகள் மீது ஜனவரி 15, 2009இல் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பொதுவாக, இந்து மதவெறி பாசிசக் கொடுமையிலிருந்து சிறுபான்மையினரைத் தாங்கள்தான் காப்பதாக சி.பி.எம். மற்றும் காங்கிரசு கட்சிகள் உருவாக்கி வந்த மாயையை, இந்த தீர்ப்பின் பின்னணி தகர்த்துள்ளது.

டாடா, பிர்லாக்களின் வரிசையில் இந்தியாவில் கொடிகட்டிப் பறக்கும் தொழில் குடும்பங்களில் மஃபத்லால் குடும்பமும் ஒன்று. இக்குடும்பத்தின் மருமகளான ஷீதல் மபத்லால் கடந்த ஜூன் முதல் வாரத்தில் மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.