பிரஸர், உப்பு, பொட்டாசியம்
பொட்டாசியத்தின் முக்கியத்துவம்
நிச்சயமாக இல்லை.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
அண்மையில் நீரிழிவு தொடர்பான மருத்துவர்களுக்கான ஒரு கருத்தரங்கிற்குச் சென்றிருந்தேன். அங்கு நீரிழிவு நோயாளிகளின் உணவுமுறைகள், அதுபற்றி மக்களிடம் பரவியிருக்கும் தவறான கருத்துக்கள் பற்றியெல்லாம் கலந்துரையாடப்பட்டது. அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வது பயனளிக்கும் என நம்புகிறேன்.
குழந்தைகளிடம் தோன்றும் பார்வைக் குறைபாடுகளை எப்படி கண்டுபிடிப்பது?
- கவிதா சேகர், காரைக்குடி.
1) வகுப்புப் பாடங்கள் கவனிக்கும் போது தலைவலி அல்லது களைப்பாக இருப்பது.
2) கண்கள் அடிக்கடி கலங்கிக் காணப்படுவது.
3) இரண்டு கண்களிலும் பார்வை சீராக இல்லாமலிருப்பது.
4) கடைக்கண் இமைகள் சிவந்து அல்லது வீங்கி இருப்பது.
5) கண் கட்டி அடிக்கடி வருவது.
6) சாதாரணமாக இருக்கும்போதோ அல்லது படிக்கும் போதோ கண்களில் நீர் வடிவது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும்.
மாறுகண்ணை சரி செய்ய முடியுமா? எனது சித்தி பெண்ணுக்கு மாறுகண் உள்ளது? அவள் வயது 22.
- அ.வேதவல்லி, பெங்களூரு.
கண்கள் இரண்டும் ஒரே நோக்குடன் இல்லாமல் ஒன்றுக்கொன்று முரண்பட்டு வெவ்வேறு திசைகளை நோக்கி இருந்தால் அது மாறுகண் (Squint) எனப்படும். சிலர் இதை அதிர்ஷ்டத்தின் சின்னமாகக் கருதுகிறார்கள். சிலர் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும் என்று விட்டுவிடுகிறார்கள். இவை தவறான கருத்துக்களாகும். மாறுகண் நோய் உடனடியாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. அதைத் தக்க சமயத்தில் சரி செய்யாவிட்டால் அந்தக் கண் பார்வையை இழந்துவிடும் அபாயம் உள்ளது. 10 வயதிற்குள் இந்தப் பிரச்னையை சரி செய்ய வேண்டும்.. வயதாகியும் சிலர் மாறுகண்ணோடு நன்றாக இருப்பதுபோல்தான் தெரியும். ஆனால் அவரின் கண் நரம்புகள் பாதிப்படைந்திருக்கும். ஆகவே இதை உடனே கவனிப்பதே நல்லது.
கண்களில் பூ விழுவது என்றால் என்ன?
- லில்லி, அம்பத்தூர்.
கண்களில் கருவிழியில் வெள்ளையாகத் தெரிவதைத்தான் பூ விழுந்து விட்டது என்கிறோம். இது வந்தால் உடனடியாக கண் மருத்துவரிடம் காட்ட வேண்டும். அது புரையாக இருக்கலாம். அல்லது கண்ணில் தோன்றும் புற்றுநோயாகவும்கூட இருக்கலாம்.
கண்களுக்கு வைட்டமின் `ஏ‘ சிறந்தது என்கிறார்கள். எந்தெந்த உணவுகளில் வைட்டமின் `ஏ‘ அதிகமாக உள்ளது?
- காயத்ரி கோபாலகிருஷ்ணன், டால்மியாபுரம்.
முருங்கைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்காய் போன்ற பச்சைக் காய்கறிகள், எளிதாகக் கிடைக்கக் கூடிய பப்பாளிப் பழம் போன்றவற்றில் வைட்டமின் `ஏ‘ போதிய அளவு உள்ளது. மேலும் மாம்பழம் கேரட், பால், வெண்ணெய், முட்டை, மீன், மீன் எண்ணெய் ஆகியவற்றிலும் இச்சத்து உள்ளது.
மூக்குக் கண்ணாடியை எப்படி செலக்ட் செய்ய வேண்டும்?
சங்கர், போரூர்.
கண்ணாடி பிரேம்கள் வலுவுடையவையாகவும், லென்சுகளை எல்லாப் பக்கங்களிலும் நன்றாகப் பிடித்திருப்பவையாகவும், மூக்கில் படியும் பகுதிபிரேமுடன் நன்கு பொருந்தியவையாகவும் இருக்க வேண்டும். காண்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள், மூக்குக் கண்ணாடியும் ஒன்று வைத்திருப்பது நல்லது.
கண்களைப் பாதுகாக்க என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றலாம்?
- லதா, மந்தைவெளி.
இரவில் படுக்கைக்குப் போவதற்கு முன்பு கண்களையும், முகத்தையும் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும்.
எக்காரணத்திற்காகவும் அழுக்குத்துணி அல்லது பிறருடைய கண்களைத் துடைக்கப் பயன்படுத்திய துணி ஆகியவற்றைக் கொண்டு நம்முடைய கண்களைத் துடைக்கவே கூடாது.
கண்நோய் அல்லது கண் வலி, தூசு, பிசிறு போன்றவை இருந்தால் பச்சிலைச்சாறு, தாய்ப்பால் அல்லது மற்றவர் சொல்லும் கண்ட கண்ட மருந்துகள் போன்றவற்றைக் கண்களில் போடவே கூடாது. இவை அனைத்தும் கண்களைக் கெடுத்துவிடும். காலதாமதம் செய்யாமல் கண் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
Dr சித்தார்த்தன்.
தொகுப்பு : தி.
என் வயது 26. பற்கள் நிஜமாகவே வெள்ளை நிறமாகத்தான் இருக்குமா? ஏனென்றால் என் பற்கள் சிறிது பழுப்பு நிறமாக உள்ளன?
- பரிமளா, கொரட்டூர்.
ஆரோக்கியமான மற்றும் முழுமையாக உருவாகிய பற்கள் வெள்ளை நிறமாக இருக்காது. இருக்கவும் கூடாது. சிறிது பழுப்பு நிறமாகத்தான் இருக்கும். உங்களுக்கு இன்னொன்று தெரியுமா? பலமான பற்கள் சிறிது பழுப்பு நிறமாகவே இருக்கும். அதனால் கவலைப்படாதீர்கள்.
பால் பற்கள் எந்தப் பருவத்தில் முளைக்கும்? நிரந்தரப் பற்கள் எந்தப் பருவத்தில் முளைக்கும்? தெரிந்து கொள்ள சற்று ஆர்வமாக உள்ளது?
- தினேஷ், மவுண்ட்ரோடு.
கீழ் முன்வெட்டுப் பற்கள் - 6 மாதம் முதல் 15 மாதம் வரை
பக்கவாட்டு வெட்டுப்பற்கள் - 9 மாதம் முதல் 15 மாதம் வரை
கீழ்த்தாடை முதல் அரைக்கும் பற்கள் - 12 மாத அளவில்
கீழ்த்தாடை இரண்டாம் அரைக்கும் பற்கள் -20 மாத அளவில்
கீழ்த்தாடை அரைக்கும் பற்கள் - 16 மாத அளவில்
நிரந்தரப் பற்கள்
மைய வெட்டுப்பல் - 6-7 வயதில்
பக்க வெட்டுப்பல் - 7-8 வயதில்
கோரைப் பற்கள் - 9-10 வயதில்
முதல் முன் கடைவாய்ப் பற்கள் - 10-12 வயதில்
இரண்டாம் கடைவாய்ப் பற்கள் - 11-12 வயதில்
முதல் கடைவாய்ப் பற்கள் - 6-7 வயதில்
இரண்டாம் கடைவாய்ப் பற்கள் - 11-13 வயதில்
மூன்றாம் கடைவாய்ப் பற்கள் - 17-18 வயதில் இந்தப் பற்கள் சுமார் ஓரிரு ஆண்டுகள் தாமதமாக முளைக்கலாம்.
என் பற்களின் மேல் காரை காரையாகப் படிந்திருக்கிறது. ஏன்?
லிவிங்ஸ்டன், அண்ணாநகர்.
உமிழ் நீரில் உள்ள ஜீலீ 7 ன் அளவு குறையுமானால் அதிலுள்ள கால்சிய உப்புச்சத்து பற்கள், மேல் படிந்து காரையாக மாறிவிடும். இது ஆரம்பத்தில் படிமமாக்கப்பட்டு, கடினமாகும். ஈறு உள்ள இடத்தில் தங்குவதால் ஈறினை உறுத்தி வலியை ஏற்படுத்தும். இந்தக் காரை மஞ்சளாகவும் கருப்பாகவும் இளநீலமாகவும் இருக்கும். இது பற்களின் மேல் படிவதால் பயோரியா வியாதி ஆரம்பிக்கிறது. அதுமட்டுமல்ல, பற்களை சரியாகச் சுத்தம் செய்யாதவர்களின் பற்களிலும் கரை படியும்!
பற்கள் எடுத்த பிறகு உடனே எதை எதையெல்லாம் பின்பற்ற வேண்டும்?
- ஆனந்தி பாபு, அண்ணாமலைபுரம்.
பற்கள் எடுத்த இடத்தில் வைக்கப்பட்ட பஞ்சினை சுமார் ஒரு மணி நேரம் கழித்து நீக்கிவிட வேண்டும்.
நாக்கையோ, விரலையோ பயன்படுத்தி பல் எடுத்த இடத்தை நோண்டக் கூடாது. டாக்டரின் ஆலோசனையில்லாமல் ஐஸ்கட்டி வைப்பதை தடுக்க வேண்டும்.
பற்கள் எடுத்த ஆறு மணி நேரத்திற்குப் பின், வெந்நீரில் சிறிது சமையல் உப்புக் கலந்து வாய் கொப்பளிக்கலாம். தொடர்ந்து இரத்தக் கசிவு இருக்குமேயானால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
பல் மருத்துவம்- டாக்டர் பதில்கள்
Dr தாயப்பன்
என் அருமை இனிப்புப் பிரியர்களே,
இனிப்யை விரும்பிச் சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பாலில் வரை சர்க்கரை ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை. சர்க்கரையை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.
இந்த வெள்ளைச் சர்க்கரையை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்றால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள். குறிப்பாக, வெள்ளைச் சர்க்கரைத் தயார் செய்ய என்னென்ன ரசயாணப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாருங்கள்.
1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
2. பிழிந்த சாறு 60 செண்டி கிரேட் முதல் 70 செண்டி கிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.
4. 102 செண்ட் கிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாக பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.
6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.
7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு வருகிறது சர்க்கர. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சர்க்கரையில் கலந்துவிடுகிறது.
8. இப்படித் தயாரான சர்க்கரையில் விஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சர்க்கரையை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசயானம் மஞ்சல் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.
உங்கள் சட்டை காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சர்க்கரையை எடுத்து தேய்த்துப் பாருங்க. நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு சமாச்சாரத்தைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சர்க்கரையை சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடு படும்?
குடல் மட்டுமல்ல, பல் வலி, பல் சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரை வியாதி (ரத்த அழுத்தம், இதயநோய் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான நுழைவுவாயில்) நிச்சயம் வரும்.
சரி, இன்று முதல் வெள்ளைச் சர்க்கரை சாப்பிட வேண்டாம். இனி இனிப்புக்கு என்ன வழி?
வழியில்லாமல் இல்லை. ஆலைகளில் தயாரான வெள்ளைச் சர்க்கரையை சாப்பிடுவதை ஒழித்துக் கட்டிவிட்டு, வெல்லம், நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.
சீனாவில் உள்ள மக்கள் 400 வகையான காய்கறிகளை சமைத்து உண்கிறார்கள். மேலும், இயற்கையோடு இயைந்த விளைச்சலில் காய்கறிகளை அறுவடை செய்து உண்கிறார்கள். இதனால் அவர்களது ஆயுள் காலம் அதிகரிக்கிறது.
நாமோ 50 வகைககளுக்கும் குறைவான காய்கறிகளையே சமைத்து உண்கிறோம். அதிலும் பல காய்கறிகள் ஆங்கிலக் காய்கறிகள்... நமது ஆயுள்காலம் பற்றி சொல்லவா வேண்டும்...
சரி, நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின் பயன்களும் , பக்க விளைவுகளும் பற்றி இங்கே காணலாம்..!
கத்தரிக்காய்
இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றின கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும்.
இதில் தசைக்கும், இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பயன் பெறலாம்.
அவரைக்காய்
இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை உரமாக்கும், காம உணர்ச்சியைப் பெருக்கும். சூட்டுடம்புக்கு இது மிகவும் நல்லது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.
வெண்டைக்காய்
இதன் சுபாவம் குளிர்ச்சி. இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும் இதில் வைட்டமின் 'சி' , 'பி' உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை உண்டுவந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.
வெண்டைக்காய் உணவு விந்துவை கட்டி, போகத்தின் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாயுமிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.
புடலங்காய்
இது சற்று நீரோட்டமுள்ள காய். சூட்டுடம்புக்கு ஏற்றது. உடம்பின் அழலையைப் போக்கும், தேகம் தழைக்கும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றை போக்கும். இதை உண்டால் காமத்தன்மை பெருகும்.
கொத்தவரங்காய்
இது சிறுநீரைப் பெருக்கும். இதன் சுபாவம் சூடு. அதனால், இதைத் தொடர்ந்தாற்போல் உண்டால் சீதம் போகத் தொடங்கிவிடும். இது பித்தவாதக் கடுப்பு, கபம் இவற்றை உண்டாக்கும். அதனால் இது பத்தியத்திற்கு உதவாது.
இதன் கெட்ட குணங்களைப் போக்க இத்துடன் தேங்காய், பருப்பு, இஞ்சி, சீரகம் இவற்றைச் சேர்த்து சமைக்க வேண்டும்
வாழைத்தண்டு
இது பித்தத்தைத் தணிக்கக் கூடியது. இதன் சுபாவம் சூடு என்றாலும் சிறு நீரைப் பெருக்கும். வாழைத்தண்டுப் பச்சடி உடம்பின் உஷ்ணத்தைப் போக்கும். வாத பித்தம், உஷ்ணம் முதலியவற்றைத் தணிக்கும், கபத்தை நீக்கும்.
இதை உண்டால், குடலில் சிக்கிய மயிர், தோல், நஞ்சு இவற்றை நீக்கும்.
வாரத்திற்கு ஒரு முறையேனும் இதை உண்ணுவது நலம்.
தேங்காய்
இது சமையலுக்கு மிகவும் பயன்படுகிறது. இதில் 'ஏ', 'பி' வைட்டமின்கள் சிறிதளவு உண்டு. இது குடல் புண்ணையும் ஆற்றும். இதனால் தாது விளையும்.
தேங்காய் வழுக்கையில் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் மூலச் சூட்டை மாற்றும்.
சுரைக்காய்
இது உடல் சூட்டைத் ததிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது.
ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய்என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் ( இழந்தவர்கள் ) பெறுவார்கள்.
(நன்றி: நஸீம்)
காசநோயற்ற எதிர்கால இலங்கையை நோக்கி...' என்ற கருப்பொருளில் காசநோய் தொடர்பான தேசிய வைபவம் நேற்று சனிக்கிழமை பண்டாரநாயக்க ஞபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உலக சுகாதார நிறுவனப் பிரதிநிதி உள்ளிட்ட மற்றும் பலர் கலந்துகொண்டனர். இங்கு காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டப் பணிப்பாளர் டாக்டர் சந்திரா சருக்காலி கருத்துத் தெரிவிக்கையில், 2010 ஆம் ஆண்டில் இலங்கையில் ஒரு இலட்சம் பேருக்கு 42 பேர் என்ற அடிப்படையில் காசநோயாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். 2015 இல் இந்த இலக்கு சனத்தொகையில் 30/100000 ஆகவும், 2050 இல் காசநோயை முற்றாக ஒழித்து விட வேண்டுமென்பதும் எமது தேசிய வேலைத்திட்டத்தின் இலக்காகும். அண்மைய காலங்களில் காசநோய் கட்டுப்பாட்டு விடயத்தில் ஊடகங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன. இதன் காரணமாக நோயாளர்களுக்குப் பயன்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் ஒப்பீட்டளவில் 2005 ஆம் ஆண்டில் இனம்காணப்பட்ட காசநோயாளர்களின் எண்ணிக்கையைவிட 2006 ஆம் ஆண்டில் மிகக் குறைவான காசநோயாளர்களே அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2005 இல் சிகிச்சையைக் கைவிட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 8.2 சதவீதமாகும். இது 2006 இல் 6.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதேவேளை, 1982 இலிருந்து உலக காசநோய் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. காசநோயை உருவாக்கும் பெஸிவி வைரஸால் உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வருடாந்தம் 100 மில்லியன் மக்கள் இந்நோயால் தாக்கப்படுகின்றனர். இவர்களுக்குள் சுமார் 8 மில்லியன் பேர் தீவிரமான காசநோய்த் தாக்கத்திற்கு ஆளாகி 20 இலட்சம் பேர் மரணமடைகின்றனர். காசநோய் உலகிலும் இலங்கையிலும் தொடர்ந்தும் ஒரு பொதுவான சுகாதாரப் பிரச்சினையாக இருந்து வருகிறது. காசநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு மொத்தச் சமூகத்தினதும் ஆதரவு அவசியமாகும் என்றார். |
உலக அளவில் முதல் முறையாக பிரிட்டனிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் தண்டுகலங்கள் எனப்படும் ஸ்டெம் செல்களிலிருந்து மனித இதயத்தின் ஒரு பகுதியை வளர்த்து உருவாக்கியுள்ளார்கள். இந்த முன்னேற்றத்தின் காரணமாக மாற்று அறுவை சிகிச்சை மூலம் செயற்கை உறுப்புகள் பொருத்தப்படுவது குறித்த சிக்கல்கள் குறையக்கூடும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்தச் சோதனை விலங்குகளில் பரிசோதிக்கப்பட்டு, வெற்றி பெறுமேயாயின், இன்னமும் மூன்று வருடங்களில் செயற்கையாக வளர்க்கபட்ட மனித இதயத்தின் திசுக்கள், செயற்கை உறுப்புகள் அறுவை சிகிச்சையில் உபயோகப்படுத்தபடக் கூடும் என இந்த ஆராய்ச்சியின் தலைவர் மக்டி யாகூப் பிரிட்டனின் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளில் முழுமையாக செயற்கையாக ஒரு மனித இதயத்தை உருவாக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். பழுதடைந்த ஒரு திசுவை தண்டுக்கலங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட திசுக்களின் மூலம், மரபு ரீதியாக சேர்க்கப்படும் போது அதை உடல் நிராகரிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே இனி வரும் காலங்களில் தானங்கள் மூலம் செயற்கை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருக்க வேண்டிய நிலையால் ஏற்படும் பிரச்சினைகள் தடுக்கப்படக் கூடும். |
இந்த அரிய கண்டுபிடிப்பின் மூலம், யானைக்கால் நோய்க்கான மருந்துகள் அல்லது நோய் தடுப்பு மருந்துகளை உருவாக்க வழிபிறக்கும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். உலக அளவில் இந்த நோயின் காரணமாக, 13 கோடி மக்கள் பீடிக்கப்பட்டுள்ளார்கள். பார்வை இழப்புக்கு அடுத்தபடியாக உலக அளவில் வலது குறைவுக்கான, இரண்டாவது காரணமாக இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உலகில் 80 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. கொசுக்கடி காரணமாகவே இந்த நோய் பரவுகிறது. இது தொடர்பான ஆராய்ச்சிகள் லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியிலும், மேலும் மூன்று அமெரிக்க நிறுவனங்களிலும் நடைபெற்றபோதே இந்த நோயை ஏற்படுத்தும் உயிரினத்தின் மரபணுக்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்று தெரியவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பின் மூலம், அந்த மரபணுவில் எவ்வகையான புரதங்கள் உள்ளன என்று தெரியவந்திருப்பதாகவும், அவற்றை மேலும் ஆராய்ச்சி செய்வதன் மூலம், இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை வழங்கவும், தடுப்பு முறைகளை முன்னெடுக்கவும் பெரும் வாய்ப்பு ஏற்படும் என இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் டேவிட் குய்லியானோ கூறியுள்ளார். இந்த முடிவுகள் மேலும் பல நாடுகளில் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் பலருக்கு தங்களது ஆய்வுகளை வேகமாக முன்னெடுத்துச் செல்ல உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். |
|
உலகிலேயே முதன் முறையாக செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் மரணமடைந்துவிட்டார். ஆனால் அவரது இதயம் மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. |
|
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற கூற்றை நாம் பலமுறை நினைவுக்கூர்ந்தாலும், அந்த குறைவற்ற செல்வத்தை பெறுவதில் நம்மில் பலர் போதிய விழிப்புணர்வின்றியே இருக்கிறோம். நாள்தோறும் நிகழ்ந்து வரும் விஞ்ஞான-அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப, நோய்களும் பல்வேறு நிலைகளில், வெவ்வேறு தன்மைகளில் மாற்றமடைந்து வருகின்றன. |
குருட்டுத் தன்மை ஏற்படக் காரணமான இரு பிரச்சினைகளை சீர் செய்யும் மருந்தொன்றை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். மேற்படி மருந்தானது, பார்வை இழப்புக்கு வழிவகுக்கும் கண்ணிலான இரத்தக் குழாய் சிதைவைத் தடுக்கக் கூடிய புரதத்தை செயலூக்கம் பெறச்செய்வதாக உதாஹ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆரம்ப கட்டமாக இம்மருந்தை எலிகளில் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கண்களிலுள்ள இரத்தக் குழாய்களிலுள்ள தசைகள் பலவீனமடைதல் மற்றும் நீரிழிவின் தாக்கம் என்பனவற்றால் குருதிக் குழாய்கள் சிதைவடைவது வயதானவர்களில் காணப்படும் பொதுவான பிரச்சினையாகவுள்ளது என கூறும் இவ்விஞ்ஞானிகள், இதன் காரணமாக கண்ணுக்குள் இரத்தம் கசிவடையவும் வழமைக்கு மாறான புதிய இரத்தக் குழாய்கள் உருவாகவும் வழியேற்படுவதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மேற்படி விஞ்ஞானிகளால் அடையாளங் காணப்பட்டுள்ள "ரொபோ 4' புரதமானது இரத்தக் குழாய்களை உறுதியடையச் செய்வதிலும் அதன் செயற்பாட்டை சீர்ப்படுத்துவதிலும் முக்கிய வகிபாகம் வகிப்பதாக கூறப்படுகிறது. |
|
||
பொதுவாக மக்களிடத்தில் கொலஸ்ரோல் என்றால் இதயப் பாதிப்பை வர வைக்கும் ஒரு கெட்டது என்ற கண்ணோட்டம் இருக்கிறது.ஆனால் கொலஸ்ரோலில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று நல்ல கொலஸ்ரோல் (HDL) மற்றது கெட்ட கொலஸ்ரோல். |
||
|
கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் தாக்கும் ஆபத்து குறைவு என்று அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தினமும் பால் குடிப்பவர்கள் மற்றும் பால் குடிக்காதவர்கள் என ஐந்தாயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 45 வயது முதல் 85 வயதுக்குள்பட்டவர்களிடம் குறிப்பிட்ட காலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தினமும் ஒரு டம்ளர் அளவு கொழுப்பு நீக்கப்பட்ட பால் அருந்தி வந்தவர்களின் இதய செயல்பாடு மற்றும் சிறுநீரக செயல்பாடு சீராக இருந்ததாம். இதே போல் தானிய வகைகள், காய்கனிகள், பழங்கள் ஆகியவையும் ஆரோக்கியமான இதயத்துக்கு 20 சதவீதம் உதவுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தினமும் பாலும், பழமும் சாப்பிட்டு வந்தால் இதய நோய் அண்டாது என்று அடித்து கூறுகின்றனர் ஆய்வாளர்கள். |
|
||
சமையலுக்கு ஒலிவ் எண்ணெய்யைப் பாவிப்பதால் சுமார் 9% புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தைக் குறைக்கலாம் என்று கிறீஸ் மற்றும் ஸ்பெயின் வாழ் மக்களிடம் நடத்திய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது. ஸ்பெயின் மற்றும் கிறீஸ் மக்களிடம் புற்றுநோய் மற்றும் இதய நோய் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைந்திருப்பதற்கு அவர்களின் உணவுப்பழக்கமே முக்கிய காரணம் என்று அறியப்பட்டுள்ளது. அதிகம் பழங்கள் மற்றும் மரக்கறி வகைகளையும், ஒலிவ் எண்ணொய், மீன் உணவுகளையும், சிவப்பற்ற இறைச்சிகளையும், சீரியல் வகைகளையும் மற்றைய உணவுகளை விட உண்பது புற்றுநோய் மற்றும் இதய நோய்களைக் குறைக்க உதவும் என்றும் குறித்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒலிவ் எண்ணொய் அதிக அளவு நிரம்பாத கொழுப்பு அமிலங்களைக் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பிறிதொரு ஆய்வில் புறோக்கோலி (Broccoli) மற்றும் cruciferous வகை மரக்கறிகளை நாளாந்த உணவில் சேர்த்துக் கொள்வது ஆண்களில் புறஸ்ரேற் (prostate) புற்றுநோய் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர். புறோக்கோலியில் உள்ள இயற்கையான இரசாயனங்கள் ஆண்களில் புறஸ்ரேற் சுரப்பியில் உள்ள மரபணுக்களில் குறிப்பாக GSTM1 எனும் மரபணு மீது செல்வாக்குச் செய்து இந்த நோய் ஏற்படுவதைக் கட்டுப்படுத்த உதவுவதாக ஆதாரபூர்வமாகக் கண்டறியப்பட்டுள்ளது. |
||
|
மீன் உள்ளிட்ட கடல் வகை உணவுகளைச் சாப்பிட்டால் இதய நோய் வராது என்பது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. மீன் உள்ளிட்ட கடல் உணவு வகைகளை தொடர்ந்து நாம் சாப்பிட்டு வந்தால் இதய ரத்த நாளங்களில் கொழுப்பு படியாது என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க காலேஜ் ஆப் கார்டியோலோஜி பத்திரிகையில் இந்த ஆய்வு குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடல் வாழ் மீன் வகைகளில் உள்ள ஒமேகா - 3 எண்ணெய் இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. ஜப்பானில் இதய நோய் மற்றும் மாரடைப்பு மிக மிகக் குறைவாக இருப்பதற்கு அவர்களது அன்றாட உணவில் மீன் இடம் பெறுவதே காரணம். 40 வயதிலிருந்து 49 வயதுக்குள்பட்ட 868 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 281 பேர் ஜப்பானைச் சேர்ந்தவர்கள். 306 பேர் வெள்ளையர்கள். 281 பேர் அமெரிக்காவில் வசிக்கும் ஜப்பானியர்கள். இவர்களுக்கு ரத்த பரிசோதனை உள்பட அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டன. இதய ரத்த நாளங்களின் அடர்த்தி, கொழுப்புச் சத்து ஆகியவை கணக்கிடப்பட்டன. அதுபோல் ரத்தத்தில் கால்சியத்தின் படிவு எவ்வளவு என்பதெல்லாம் சோதனை மூலம் பதிவு செய்யப்பட்டது. இதில் மீன்களை அதிகம் சாப்பிடும் ஜப்பானியர்கள் உடலில் இதய நோய்களைத் தடுக்கும் ஒமேகா 3 எண்ணெய் மற்றவர்களை விட இரண்டு மடங்கு அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வெள்ளையர்களுக்கும் அமெரிக்காவில் வாழும் ஜப்பானியர்களுக்கும் ஒமேகா - 3 எண்ணெய் ஒரே அளவில்தான் இருந்தது. எனவே மீன்களை அதிகம் சாப்பிடும் ஜப்பானியர்களுக்கு ரத்தத்தில் ஒமேகா - 3 எண்ணெய் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. |
||
|
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுவத்துவதில் நவீன மருந்துகளை விட வெள்ளைப் பூண்டு ஆற்றலுடன் செயல்படுவதாக அடிலெய்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தினமும் உணவில் வெள்ளைப் பூண்டை சேர்த்துக் கொண்டாலே, உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
|