Language Selection

புதிய ஜனநாயகம் 2007

PJ_2007 _12.jpg

இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு அரசியலின் பின்னே, மியான்மரின் இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் சதி உள்ளது.

 

பாகிஸ்தானில் நடக்கும் இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து வரும் அமெரிக்கா, மியான்மரில் (பர்மா) நடக்கும் இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் பொருளாதாரத் தடையுத்தரவுகளைப் பிறப்பிக்கிறது. சோசலிச நாடு எனக் கூறிக் கொள்ளும்

PJ_2007 _12.jpg

அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களால் ஈராக்கில் இறக்கிவிடப்பட்டுள்ள தனியார் கூலிப்படைகள், ஈராக்கிய மக்களைக் கொலை செய்வதைப் பொழுதுபோக்காகக் கருதுகின்றன.

 

விர்ரென்று ஒலிப்பானை ஒலித்தவாறு ஒரு வாகனம் மக்கள் நெருக்கம் மிகுந்த அந்த வீதியினுள் நுழைகிறது. அது, ஈராக்கினை ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்கப் படையினருக்கும்,

PJ_2007 _12.jpg

பத்திரிக்கைகள் முதல் ப.சிதம்பரம் வரை நமது பொருளாதார வளர்ச்சி வீதம் 9 சதவீதத்தைத் தொடப் போகிறது எனச் சொல்கிறார்கள். பங்குச் சந்தைக் குறியீட்டெண் 20 ஆயிரத்தைத் தொட்டுவிட்டது. இந்திய தொழில் நிறுவனமான டாட்டா, அயல்நாட்டு நிறுவனமான கோரஸ்ஸை விலைக்கு வாங்கி விட்டது. அம்பானி உலகிலேயே பெரிய பணக்காரராகி விட்டார். இந்தியாவில் ரூ.4 கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொட்டு விட்டது.

PJ_2007 _12.jpg

புவி வெப்பம் உயர்வதைத் தடுப்பதற்காக உயிரிஎரிபொருளைப் பயன்படுத்துவது என்ற ஏகாதிபத்தியத் திட்டம் உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருகிறது.

 

அமெரிக்க ஐக்கிய நாடுகளை ஒட்டி அமைந்துள்ள மெக்சிகோ நாட்டு மக்களின் அன்றாட உணவான மக்காச் சோளம் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் அசாதாரணமான அளவிற்கு உயர்ந்ததையடுத்து,

PJ_2007 _12.jpg

நாங்கள் பேருந்துகளில் அரசியல் பிரச்சாரத்துடன் பு.ஜ. இதழை விற்பனை செய்து கொண்டிருந்தபோது, ஒரு வாசகர் இதழை வாங்கிக் கொண்டு ரூ.5/ கொடுத்தார். விலை உயர்ந்துள்ளதை அவரிடம் நாங்கள் தெரிவித்த போது, பு.ஜ.வுக்கு என்ன விலை கொடுத்தாலும் தகும் என்று கூறி ரூ.7/ செலுத்தி இதழை ஆர்வத்தோடு படிக்கத் தொடங்கினார். விலையேற்றத்தால் இதழ் விற்பனை பாதிக்கப்படக்கூடும் என்று நாங்கள் கருதினோம். ஆனால், எந்தச் சிரமமுமின்றி விறுவிறுப்பாக இதழ் விற்பனையாகியுள்ளது. இது, பு.ஜ. இதழின் அரசியல் செல்வாக்கை மீண்டும் நிரூபித்துள்ளது.

PJ_2007 _12.jpg ஓசூர்சிப்காட் 1 பகுதியில் உள்ள அசோக் லேலண்டு தொழிற்சாலை 1980 முதல் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளர்கள் 2332 பேரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1100 பேரும் வேலை செய்து வருகின்றனர். 200607 நிதியாண்டில் ரூ.441 கோடி இலாபம் ஈட்டிய இந்திறுவனம் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு ரூ.23,000 போனஸ் வழங்கியது. ஆலை நிர்வாகத்தால் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குப் போனஸ் வழங்கப்பட்டுள்ள போதிலும், ஒப்பந்ததாரர்கள் தொழிலாளர்களுக்கு போனசைக் கொடுக்காமல் முழுப்பணத்தையும் ஏப்பம் விட்டுள்ளனர்.

PJ_2007 _12.jpg

டாலர் மதிப்புச் சரிவினால் இந்தியாவில் 80 இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

இந்தியப் பொருளாதாரம் 9 சதவீத வளர்ச்சியை எட்டப் போகிறது என மன்மோகன் சிங் கும்பல் ஒருபுறம் ஆரவாரம் செய்து கொண்டிருந்தாலும், இன்னொருபுறம், அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சி என்ற கத்தி அவர்களை அச்சுறுத்தத் தொடங்கியிருக்கிறது.

PJ_2007 _12.jpg

அசாம் மாநிலத்தில் 1998 தொடங்கி 2001 வரையிலான நான்கு ஆண்டுகளில், பொதுமக்களில் பலர், அடையாளம் தெரியாத மர்ம மனிதர்களால் இரவோடு இரவாகச் சுட்டுக் கொல்லப்படுவது சர்வ சாதாரணமாக நடந்து வந்தது. அப்பொழுது ஆட்சியில் இருந்த அசாம் கன பரிசத் அரசு இப்படுகொலைகள் பற்றி மேலோட்டமான போலீசு விசாரணையை நடத்தி, கொலைக்கான காரணத்தையும், கொலையாளிகளையும் கண்டுபிடிக்க மறுத்து வந்தது.

PJ_2007 _12.jpg

இந்து மதவெறி அமைப்புகள், இசுலாமியத் தீவிரவாதிகளைப் போல
குண்டுவெடிப்பு போன்ற பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள்
என்ற பொதுக் கருத்து அடிப்படையிலேயே ஆதாரமற்றது.

 

நாட்டின் எந்த மூலையிலும் ஏதாவது ஒரு பயங்கரவாதக் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தாலும், ஒன்று இசுலாமிய பயங்கரவாதிகள் செயல் என்று முத்திரை குத்தப்படுகிறது.

PJ_2007 _12.jpg

உலகத் தமிழர் பேரமைப்பு எனும் "தமிழர்' அமைப்பு, கடந்த அக்டோபர் 28ஆம் தேதியன்று தமிழர் தொழில் வணிகச் சிறப்பு மாநாட்டை திருப்பூரில் நடத்தியது. இந்தப் பேரமைப்பின் தலைவரான ""மாவீரன்'' பழ.நெடுமாறன் இம்மாநாட்டைத் தலைமையேற்று நடத்தினார்.

PJ_2007 _12.jpg

விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளரான பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனின் படுகொலை உலகெங்குமுள்ள ஈழத் தமிழர்களையும் தமிழீழ விடுதலை ஆதரவாளர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த நவம்பர் 2ஆம் நாளன்று அதிகாலையில் கிளிநொச்சி பகுதியில் சிங்கள இனவெறி இராணுவ விமானங்களின் குண்டுவீச்சுத் தாக்குதலில் தமிழ்ச்செல்வன் மற்றும் 5 புலிகள் இயக்கப் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

PJ_2007 _12.jpg

தருமபுரி மாவட்டத்தில் உள்ள வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, பதினைந்து ஆண்டுகள் கழித்து நிவாரணம் கிடைத்திருக்கிறது.

 

சந்தன மரக் கடத்தலைத் தடுப்பது, வீரப்பனைப் பிடிப்பது என்ற பெயரில் தமிழக போலீசு நடத்தியுள்ள எத்தனையோ அட்டூழியங்களில், அரசு பயங்கரவாதத் தாக்குதல்களில் வாச்சாத்தி சம்பவமும் ஒன்று.

PJ_2007 _12.jpg

உழைக்கும் மக்களின் அரசு என்று மார்தட்டிக் கொண்ட மே.வங்க "இடதுசாரி' அரசு இன்று இரத்தக் கவிச்சி வீசும் பாசிச கொலைகார அரசாக நாடெங்கும் நாறிப் போயுள்ளது.

 

நந்திகிராமத்தில் மீண்டும் சி.பி.எம். கட்சியின் பாசிச கொலைவெறியாட்டம். 6க்கும் மேற்பட்டோர் படுகொலை. நூற்றுக்கணக்கானோர் படுகாயம். 5,000க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் நந்திகிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டு சொந்த

PJ_2007 _12.jpg அ திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைச் செல்வமும், செங்கல்பட்டு நகர அ.தி.மு.க. செயலாளர் குமார் மற்றும் 2 பேரும் கடந்த மாதம் கூலிப்படையினரால் பட்டப் பகலில் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து,""தமிழ்நாட்டு அரசியலில் கூலிப் படைகளும், ஆயுத வன்முறைக் கலாச்சாரமும் சமீப காலங்களில் பெருகிப் போய்விட்டன; அவை ஈவிரக்கமின்றி ஒடுக்கப்பட வேண்டும்'' என்று ஓட்டுக் கட்சித் தலைவர்கள் எல்லோரும் அச்சமும்,

put_oct-2007.jpg

குஜராத் மாநிலம் கோத்ரா தொடர் வண்டி நிலையத்தில் பிப்.27, 2002 அன்று சபர்மதி விரைவு வண்டியின் ""எஸ்6'' பெட்டி எரிந்து போனதையும்; அத் தீ விபத்தில் 58 பேர் இறந்து போனதையும், ""உள்ளூர் முசுலீம் மதவெறியர்கள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்''; ""ராம பக்தர்களைக் கொல்ல பாக். உதவியுடன் நடத்தப்பட்ட சதி'' என இந்து மதவெறிக் கும்பல் ஊதிப் பெருக்கியது. ஆனால், இச்சம்பவம் குறித்து நடந்து வரும் விசாரணையில், குஜராத் முசுலீம்கள்

PJ_11_2007.jpg

சென்னை மாநகரம் விழித்தெழும் முன்பே விழித்தெழுந்து இயங்கத் தொடங்கும் கூறு கட்டிக் காய்கறி விற்பவர்கள், வீட்டுக்கு வீடு பால் பாக்கெட் போடுபவர்கள், நடுத்தரமேட்டுக்குடி கனவான்களின் வீட்டு பத்துப் பாத்திரங்களையும் பளிங்குத் தரையையும் சுத்தம் செய்பவர்கள், மாநகரின் வனப்பை செதுக்கித் தரும் கொத்தனார்கள்சித்தாள்கள், மண்டல வாரியாக குப்பை அகற்றுபவர்கள், அடைத்து நாறும் பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்பவர்கள் — என லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் இயக்கம் இல்லை என்றால் சென்னை மாநகரமே இல்லை எனலாம்.

PJ_11_2007.jpg

"சமூக நீதி'யின் தாயகம் எனச் சித்தரிக்கப்படும் தமிழகத்தில், சமூக அநீதிகளும் தாழ்த்தப்பட்டோர் மீது மிகக் குரூரமான வன்கொடுமைத் தாக்குதல்களும் கேள்விமுறையின்றித் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த 2002ஆம் ஆண்டு திண்ணியத்தில் இராமசாமி, முருகேசன் எனும் இரண்டு தாழ்த்தப்பட்டோர் வாயில் ஆதிக்க சாதி வெறியர்கள் மலத்தைத் திணித்தனர். அதே ஆண்டில், திண்டுக்கல் அருகே பள்ளப்பட்டியில் சங்கன் என்ற தாழ்த்தப்பட்டவரை நடுவீதியில் அடித்து உதைத்த ஆதிக்க

PJ_11_2007.jpg

"அமெரிக்க மேலாதிக்கவாதிகள்தான் உலகின் மிகக் கொடிய பயங்கரவாதிகள்!'' இப்படி பகிரங்கமாக அமெரிக்க ஏகாதிபத்திய வாசலிலே இடியென முழங்குகிறார் தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள வெனிசுலா நாட்டின் அதிபரான ஹியூகோ சாவேஸ்.


நம்நாட்டு ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளைப் போல, வெனிசுலா அதிபர் வீரவசனம் பேசி வெற்றுச் சவடால் அடிக்கவில்லை. அமெரிக்க மேலாதிக்கவாதிகளை எதிர்த்து நிற்பதோடு, மனிதநேய மாற்றுப் பொருளாதாரத் திட்டத்தை முன்வைத்து செயல்படுத்த விழைகிறார்.

PJ_11_2007.jpg

பாகிஸ்தானில் அக்டோபர் 6 அன்று நடைபெற்ற அதிபர் ""தேர்தலில்'', முஷாரப் ""வெற்றி'' பெற்றுவிட்டாலும், அவரது வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கக் கூடாது என அந்நாட்டு உச்சநீதி மன்றம் தடை விதித்திருக்கிறது.


நவாஸ் ஷெரிப்பின் ஆட்சியை 1999ஆம் ஆண்டு கவிழ்த்துவிட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவத் தளபதி பெர்வேஸ் முஷாரப்,

PJ_11_2007.jpg

நேபாளத்தில் மன்னராட்சியை நீக்கிவிட்டு, ஐந்து மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா தலைமையிலான இடைக்கால அரசாங்கத்திலிருந்து கடந்த மாதம் மத்தியில் நேபாள கம்யூனிஸ்டு (மாவோயிஸ்டு) கட்சி விலகி விட்டது. இதன்மூலம் நேபாளத்தில் ஜனநாயக முறையில் ஒரு குடியரசை நிறுவுவதற்காக அமைதிவழி முன்னெடுப்புகளை அக்கட்சி சீர்குலைத்துவிட்டதாக நேபாளத்திலும் இந்தியாவிலும் உள்ள பிற்போக்காளர்கள், போலி கம்யூனிஸ்டுகளோடு சேர்ந்து கூச்சல் போடுகிறார்கள்.

PJ_11_2007.jpg

நீதிபதிகளை மிரட்டுவதையும், விலைக்கு வாங்குவதையும் வடிக்கையாகக் கொண்ட ஜெயா, நீதிமன்ற அவமதிப்பு பற்றிப் பேசுவது வேஎக்கையானது.

சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றக் கோரி, தி.மு.க.வும், அதன் தோழமைக் கட்சிகளும் அக்.1 அன்று தமிழகம் தழுவிய அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தின. இந்த உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்படாத, ""பந்த்'' ஆக நடந்து முடிந்தது.

PJ_11_2007.jpg

இறந்து போன மிருகத்தைக் கூட கைகால்களைக் கட்டி தெருவிலே இழுத்துச் செல்ல எந்தவொரு மனிதனுக்கும் மனம் ஒப்பாது. ஆனால் மிருகத்தை அல்ல, மனிதனை; நம்மைப் போல நினைவும் கனவும் கொண்ட உயிருள்ள மனிதனை இப்படி கைகால்களை மோட்டார் சைக்கிளில் கட்டி தரதரவென இழுத்துச் சென்றுள்ளது பீகார் போலீசு.

PJ_11_2007.jpg

ஊழல் ரேசன் கடை முகவர்களுக்குச் சரமாரியாக அடி, உதை; அவர்களின் வீடுகள்கடைகளுக்குத் தீ வைப்பு என உழைக்கும் மக்களின் உணவுக் கலகம் மே.வங்கத்தின் பல மாவட்டங்களில் பற்றிப் படர்வதைக் கண்டு, அம்மாநிலத்தை ஆளும் போலி கம்யூனிச அரசு விழிபிதுங்கி நிற்கிறது.

PJ_11_2007.jpg

"நீதிபதிகளின் கைகளில் உள்ள ""நீதிமன்ற அவமதிப்பு'' என்ற குண்டாந்தடி, உச்சஉயர்நீதி மன்ற நீதிபதிகளை அரசாங்கத்தாலும் கூடக் கேள்வி கேட்க முடியாத, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட, சட்டத்திற்கும் மேலான சர்வாதிகாரிகளாக மாற்றிவிட்டது. இந்த நீதித்துறை சர்வாதிகாரத்திற்கு, தில்லியில் இருந்து வெளியாகும் ""மிட் டே'' (Mid day) என்ற நாளிதழின் ஊழியர்கள் சமீபத்தில் பலியிடப்பட்டனர். தில்லி உயர்நீதி மன்றத்தால் ""மிட் டே'' தண்டிக்கப்பட்டதற்குக் காரணம், அப்பத்திரிக்கை ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி யோகேஷ் குமார் சபர்வால் (ஒய்.கே.சபர்வால்) பற்றிய சில உண்மைகளைத் துணிந்து அம்பலப்படுத்தியதுதான்.


தில்லி நகரின் குடியிருப்புப் பகுதிகளில் இயங்கி வந்த இலட்சக்கணக்கான சிறு வர்த்தக நிறுவனங்களை இழுத்து மூடுமாறு தில்லி மாநில அரசுக்கு கடந்த ஆண்டு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. நீதிபதி ஒய்.கே.சபர்வால் தலைமையில் அமைந்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நீதிமன்றம்தான் இத்தீர்ப்பை அளித்தது. பல ஆண்டுகளாக இயங்கி வந்த இந்தக் கடைகள், ஒரேயொரு உத்தரவினால் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டு, இழுத்து மூடப்பட்டன.


சிறு வியாபாரத்தில் நுழையும் சூப்பர் மார்க்கெட் முதலாளிகளுக்கும்; அடுக்குமாடி வணிக வளாகங்களைக் கட்டிவரும் ரியல்எஸ்டேட் அதிபர்களுக்கும் சாதகமாக எழுதப்பட்டதுதான் இந்தத் தீர்ப்பு என்று அப்பொழுது விமர்சனம் எழுந்தது. அந்த விமர்சனம் முற்றிலும் உண்மை என இப்பொழுது நிரூபணமாகியிருக்கிறது. குறிப்பாக உச்சநீதி மன்ற, தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற ஒய்.கே.சபர்வால், ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள தனது பிள்ளைகளின் வியாபார வளர்ச்சிக்காகவே, இப்படிப்பட்ட தீர்ப்பை எழுதியிருப்பதும் அம்பலமாகியிருக்கிறது. தந்தை மகனுக்கு ஆற்றிய இந்த "உதவியை'த் தக்க ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியதற்காகவே ""மிட் டே'' பத்திரிகை, நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தால் தண்டிக்கப்பட்டுள்ளது.


···


· தில்லியின் குடியிருப்புப் பகுதிகளில் இயங்கி வந்த சிறு வர்த்தக நிறுவனங்களை மூடுவது தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருந்தபொழுது, அவ்வழக்கைத் தானே நடத்துவதாகக் கோரிப் பெற்றார், நீதிபதி ஒய்.கே. சபர்வால். நிலுவையில் இருக்கும் வழக்குகளை விசாரணைக்காகக் கோரிப் பெறும் உரிமை உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியைத் தவிர, பிற நீதிபதிகளுக்குக் கிடையாது. எனினும், அப்பொழுது உச்சநீதி மன்ற நீதிபதியாக மட்டுமே இருந்த ஒய்.கே. சபர்வால், தனது அதிகார வரம்பை மீறி நடந்து கொண்டதை உச்சநீதி மன்றமும் அனுமதித்திருக்கிறது.


· ஒய்.கே. சபர்வால் அவ்வழக்கை ஏற்றுக் கொண்ட அதே தருணத்தில், அவரின் பிள்ளைகள் சேதன், நிதின் என்ற இருவரும், ""பிஸினஸ் பார்க் டவுன் பிளானர்ஸ்'' என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டனர்.


· சேதனும், நிதினும் இணைந்து நடத்தி வந்த ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்களின் அலுவலகங்கள் நீதிபதி ஒய்.கே.சபர்வாலுக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்க வீட்டின் முகவரியில் இருந்தே இயங்கி வந்தன. இது, சட்டவிரோதமானது, முறைகேடானது எனத் தெரிந்திருந்தும், நீதிபதி ஒய்.கே. சபர்வால் இதனை அனுமதித்தார். அவரின் பிள்ளைகள் பிஸினஸ் பார்க் டவுன் பிளானர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகுதான், வேறு வழியின்றித் தங்கள் நிறுவனங்களின் அலுவலகங்களை வேறு முகவரிக்கு மாற்றிக் கொண்டனர்.


· தெற்கு தில்லியில் உள்ள சாகேத் பகுதியில் இயங்கிவந்த ""சட்டவிரோத'' வணிக வளாகங்களை மூடச் சொல்லி உச்சநீதி மன்றம் உத்தரவு போட்ட அதே வேளையில், ஒய்.கே. சபர்வால் பிள்ளைகளின் வியாபாரக் கூட்டாளியான ""ஹர்பவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்'' நிறுவனத்தின் அதிபர் புருஷோத்தம் பகேரியா, சாகேத்ஐ ஒட்டிய பகுதியில், ""ஸ்கொயர் 1 மால்'' என்ற பெயரில் பிரம்மாண்டமான வணிக வளாகத்தைக் கட்டப் போவதாக அறிவித்தார். நீதிபதி ஒய்.கே.சபர்வால் பங்கு பெற்ற அமர்வு நீதிமன்றம் அளித்த தீர்ப்பால், சாகேத் பகுதியில் இருந்து துரத்தப்பட்ட ஆடை வடிவமைப்பு நிறுவனங்கள், பகேரியாவிடம் போய் கடை ஒதுக்கித் தரும்படி கேட்கும்படியான சூழல் உருவானது.


· தில்லிக்கு அருகில் உள்ள உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த நொய்டா பகுதியில், ஆலைகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த மனைகள், சபர்வாலின் பிள்ளைகளுக்கு சந்தை மதிப்பைவிடக் குறைவாக, அப்போதைய உ.பி. முதல்வர் முலயம்சிங் யாதவ் அரசால் விற்கப்பட்டன. இதற்குக் கைமாறாக, முலயம்சிங் யாதவின் கைத்தடி அமர்சிங்கின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த ஒய்.கே. சபர்வால், ஒட்டுக் கேட்கப்பட்ட பேச்சு விவரங்களை வெளியிடுவதற்குத் தடை விதித்தார்.


· நீதிபதி ஒய்.கே. சபர்வாலின் பிள்ளைகள், மகாராணி பாக் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டை 15.46 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கினர். இவ்வளவு பெரிய தொகையை, சபர்வாலின் பிள்ளைகள் எப்படி ஈட்டினர் என்பது மர்மமாக உள்ளது.


· சேதனும் நிதினும் தாங்கள் நடத்திவரும் ""பவன் இம்பெக்ஸ்'' என்ற நிறுவனத்திற்கு, பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியிடமிருந்து 28 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். இக்கடனைப் பெறுவதற்கு ஈடாகக் காட்டப்பட்டுள்ள சொத்துக்கள் அனைத்தும் போலியானவை.


இவை அனைத்தும் ""மிட் டே'' நாளிதழ், நீதிபதி ஒய்.கே.சபர்வால் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள். இக்குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரங்களையும் வீட்டுப் பத்திரம், பங்குதாரர் பற்றிய விபரங்கள், வங்கி ஆவணங்கள், வருமான வரி தாக்கீதுகள் உள்ளிட்டவை அந்நாளிதழ் வெளியிட்டுள்ளது ஓய்வு பெற்ற நீதிபதிகள், புகழ் பெற்ற வழக்குரைஞர்கள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள ""நீதித்துறையின் பொறுப்புணர்வுக்கான கமிட்டி'' என்ற சமூக அமைப்பு, இக்குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து அவற்றில் ஆதாரம் இருப்பதாக உறுதிப்படுத்தியது. நீதிபதி ஒய்.கே.சபர்வால் இக்குற்றச் சாட்டுக்களை மறுத்து, ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.


குற்றவாளிக் கூண்டில் நிற்பவரோ இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி. சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும் சாதாரணமானவையும் அல்ல; ஆதாரமற்றவையும் அல்ல. இப்படிப்பட்ட நிலையில், நீதியை வழங்க வேண்டிய பொறுப்பில் உள்ள நீதிமன்றங்கள், குற்றச்சாட்டுகள் பற்றி பாரபட்சமற்ற விசாரணையை நடத்த உத்தரவிட்டிருந்தால், அது நியாயமானதாக இருந்திருக்கும். அதற்கு மாறாக, தில்லி உயர்நீதி மன்றமோ, ""மிட் டே'' நாளிதழ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்தது.


""மிட் டே'' நாளிதழ் இவ்வழக்கு விசாரணையின் போது, ""ஓய்வு பெற்றுவிட்ட நீதிபதிக்கு எதிராகவே குற்றம் சுமத்தியிருப்பதாகவும்; அவை அனைத்தும் உண்மையானவை'' என்றும் கூறி தன்னைத் தற்காத்துக் கொள்ள முயன்றது. ஆனால், தில்லி உயர்நீதி மன்றமோ, ""என்னத்த உண்மை?'' என அதிகாரத் திமிரோடு எதிர் கேள்வி கேட்டு, அந்த உண்மைகளுக்குள் நுழைய மறுத்துவிட்டது.


""தில்லியின் குடியிருப்புப் பகுதிகளில் இயங்கிவந்த கடைகளை மூடுவது தொடர்பான வழக்கை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நீதிமன்றம்தான் விசாரித்தது. நீதிபதி ஒய்.கே. சபர்வால் மீது குற்றஞ்சுமத்துவது மூலம், மற்ற இரு நீதிபதிகள் மீதும் களங்கம் கற்பிக்கப்படுகிறது. உச்சநீதி மன்றம், தனது நீதிபதிகளுள் ஒருவரின் நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக நடந்து கொண்டிருப்பதாக மிட் டே பத்திரிக்கை சித்தரிக்கிறது'' எனத் தானே ஒரு குற்றச்சாட்டை அந்நாளிதழின் மீது சுமத்தி, அதனை உச்சநீதி மன்றத்தின் மாண்பை அவமதிப்பதாக ஊதிப் பெருக்கியது. இந்தப் புனையப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், அந்நாளிதழின் வெளியீட்டாளர், ஆசிரியர், கட்டுரையை எழுதிய பத்திரிகையாளர், கேலிச் சித்திர ஓவியர் ஆகிய நால்வருக்கும் நான்கு மாத சிறை தண்டனை விதித்தது.


இயற்கை நீதிக்கும், நியாயத்திற்கும் முரணாக அளிக்கப்பட்ட இத்தீர்ப்பை எதிர்த்து, வழக்குரைஞர்களும், பத்திரிகையாளர்களும் போராட்டத்தில் இறங்கவே, உச்சநீதி மன்றம் கொடுக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் அடிப்படையில், தில்லி உயர்நீதி மன்றம் தண்டிக்கப்பட்ட நால்வருக்கும் பிணை வழங்கியிருக்கிறது.


உச்சநீதி மன்ற நீதிபதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டால், அதனை விசாரிக்கும் அதிகாரம் உச்சநீதி மன்றத்திற்கு மட்டுமே உண்டு. ஆனால், ""மிட் டே'' வழக்கிலோ, தில்லி உயர்நீதி மன்றம் தனது அதிகார வரம்பை மீறி நடந்து கொண்டுள்ளது. மேலும், நீதிபதி சபர்வால் பங்கு பெற்ற அமர்வு மன்றம் அளித்த தீர்ப்பும் சர்ச்சைக்கும், சந்தேகத்திற்கும் உள்ளாகி இருக்கிறது. இந்நிலையில், தில்லி உயர்நீதி மன்றத் தீர்ப்பை ரத்து செய்தும்; தில்லி கடைகளை மூடச் சொல்லி உத்தரவிட்ட தீர்ப்பைத் திரும்பப் பெற்றும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருக்க வேண்டும்; இதற்கு மாறாக, உச்சநீதி மன்றத் தீர்ப்போ, புண்ணுக்குப் புணுகு தடவி, தன்னை நியாயவானைப் போலக் காட்டிக் கொண்டிருக்கிறது.


···


"சுதந்திர' இந்தியா, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து சுவீகரித்துக் கொண்ட அடக்குமுறைச் சட்டங்களில் நீதிமன்ற அவமதிப்புச் சட்டமும் ஒன்று. ஒரு நீதிபதி ஊழல், பாலியல் பலாத்காரம் போன்ற கிரிமினல் குற்றங்களைச் செய்ததற்கான அசைக்க முடியாத ஆதாரம் இருந்தால் கூட, நீதிமன்றம் அதை ஏற்றுக் கொள்ளாது; குற்றம் சுமத்தியவரைத் தண்டிக்கும் வண்ணம்தான் நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் உருவாக்கப்பட்டிருந்தது.


மைய அரசு, கடந்த ஆண்டில் இந்த நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தில் திருத்தமொன்றைக் கொண்டு வந்தது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்வோர், நீதிபதிக்கு எதிராகத் தாங்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை என்பதைத் தக்க ஆதாரங்களோடு எடுத்துக் கூறி, தண்டனையில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும் வழியினை இத்திருத்தம் கொண்டு வந்தது. எனினும், ""மிட் டே'' நாளிதழ் வழக்கில், ""என்னத்த உண்மை!'' என்ற கேள்வியின் மூலம், அத்திருத்தத்தை மலம் துடைக்கும் காகிதமாக மாற்றி விட்டது, தில்லி உயர்நீதி மன்றம்.


மேல்முறையீட்டிற்காக உயர்நீதி மன்றத்திற்கோ, உச்சநீதி மன்றத்திற்கோ வரும் வழக்குகளில் பெரும்பாலானவை, ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகளைக் கொண்ட அமர்வு மன்றங்களால்தான் விசாரிக்கப்படுகின்றன. அமர்வு மன்றங்களில் பங்கு பெறும் ஒரு நீதிபதி மீது குற்றம் சுமத்தினாலே, அது மற்ற நீதிபதிகள் மீதும் சுமத்தப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படும் என்கிறது தில்லி உயர்நீதி மன்றத் தீர்ப்பு. இதன்படி பார்த்தால், எல்லா அமர்வு மன்றங்களுமே சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவையாக ஆக்கப்பட்டு விடுகின்றன.


""நீதிபதிகளுள் 20 சதவீதம் பேர் ஊழல் கறை படிந்தவர்கள்'' என்று முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி பரூச்சா கூறியதை மனதில் வைத்துக் கொண்டு, ""அமர்வு மன்றங்களில் பங்கு கொள்ளும் நீதிபதிகளில், யார் அந்த 20 சதவீதத்தைச் சேர்ந்தவர்கள்? யார் ஊழல் கறை படியாத 80 சதவீதத்தைச் சேர்ந்தவர்கள்?'' என்ற கேள்வியெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க முடியாது.


ஜனநாயகத்தின் மற்ற தூண்கள் அதிகார வர்க்கம், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகைகள் மக்களுக்குப் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் என அடிக்கடி சாமியாடும் நீதிபதிகள், தங்களுக்கு இந்த அளவுகோல் பொருந்தாது என்கிறார்கள்.


""உச்சஉயர்நீதி மன்ற நீதிபதிகள் நியமனத்தில் மற்றவர்கள் தலையிடக் கூடாது; அதை நீதிபதிகள்தான் முடிவு செய்வார்கள்''


""உச்சஉயர்நீதி மன்ற நீதிபதிகள் தங்களின் சொத்துக் கணக்கை மற்றவர்களுக்குக் காட்ட வேண்டிய அவசியமில்லை. உச்சநீதி மன்ற நீதிபதியிடம் காட்டினால் போதும்.''


""வழக்கறிஞர்கள், நீதிபதிகளின் செயல்பாடு பற்றி விமர்சிக்கக் கூடாது; நீதிபதிகள் மீது ஊழல் புகார் சொல்லக் கூடாது; இதை மீறினால், ஓராண்டு காலத்திற்குத் தொழில் செய்யத் தடை விதிப்போம்'' என்றெல்லாம் பல்வேறு ""ஃபத்வா''க்களைப் போட்டுக் கொண்டு, தங்களைத் தற்காத்துக் கொள்கிறார்கள்.
தங்களது பிறப்புச் சான்றிதழில் ஃபோர்ஜரி செய்து அம்பலமான உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி ஆனந்த்; மற்றும் சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி சிவப்பா;


டான்சி வழக்கில் இருந்து ஜெயாவை விடுதலை செய்ததற்குப் பரிசாக சிங்கப்பூருக்கு உல்லாச சுற்றுலா சென்று வந்த நீதிபதி தங்கராசு; கர்நாடகாவில் பொதுமக்கள் முன்னாலேயே குடித்துவிட்டு, பெண்களுடன் காமக்களியாட்டம் போட்ட கர்நாடக உயர்நீதி மன்ற நீதிபதிகள் என்.எஸ்.வீரபத்ரையா, வீ.கோபால கவுடா, சந்திரசேகரய்யா போன்ற கிரிமினல் நீதிபதிகள் கம்பி எண்ணாமல் போனதற்குக் காரணமே, நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் உள்ளிட்ட இந்த ஃபத்வாக்கள்தான்!


···


நீதிபதிகளின் ஊழல், அதிகார முறைகேடுகள், கிரிமினல் குற்றங்களைவிட அவர்கள் ""தீர்ப்புகள்'' என்ற பெயரில் பொதுமக்களின் மீது சட்டபூர்வ பாசிசத்தைத் திணிப்பதும்; பன்னாட்டு நிறுவனங்களின் பகற்கொள்ளைக்கு ஆதரவாக நடந்து கொள்வதும்; இந்துமதவெறி மேல்சாதி வெறியைக் கக்குவதும் தான் மிகவும் அபாயகரமானதாக மாறி வருகிறது.


சிறுவணிக நிறுவனங்களை இழுத்து மூடச் சொன்ன சபர்வாலின் தீர்ப்புக்குப் பின்னே புத்திரபாசம் இருந்தது என்றால், ஊழல் கறைபடியாத மற்ற இரண்டு நீதிபதிகள், சபர்வாலின் தீர்ப்புக்கு ஒத்துப் பாடியதற்கு என்ன பாசம் காரணமாக இருந்தது?


உச்சநீதி மன்றத்தைச் சேர்ந்த அரிஜித் பயாஸத், எஸ்.ஹெச்.கபாடியா என்ற இரு நீதிபதிகள் மற்றொரு வழக்கில் இந்தப் பாசத்தைப் பச்சையாகவே உடைத்துச் சொல்லியுள்ளனர். தில்லியின் வசந்த் குஞ்ச் என்ற பகுதியில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட பல அடுக்கு வணிக வளாகத்தை இடிக்கச் சொல்லி போடப்பட்ட வழக்கில், இந்த இரண்டு நீதிபதிகளும், ""கட்டிடம் கட்டுவதற்கு முறையான அனுமதி பெறப்படவில்லை என்பது உண்மையானாலும், கோடிக்கணக்கான ரூபாய் இதில் முதலீடு செய்யப்பட்டுள்ளது; எனவே, கட்டிடத்தை இடித்துத் தள்ளுவதை கிளிப் பிள்ளை போலத் தீர்வாகச் சொல்ல முடியாது;''


""சிறு நிறுவனங்கள், சாதாரண தனி நபர்கள் வேண்டுமானால், உரிமம் பெறுவதற்கு சட்டத்தை மீறுவார்கள். ஆனால், வசந்த் குஞ்ச் பகுதியில் காலி மனை வாங்கியிருக்கும் நிறுவனங்களோ, பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள்; அவை, உரிமம் பெறுவதற்காகச் சட்டவிதிகளை மீறியிருப்பார்களோ, குறுக்கு வழியில் போயிருப்பார்களோ என்ற கேள்விக்கே இடமில்லை'' என ஒருமனதாகத் தீர்ப்பளித்தனர்.


தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தபொழுது, ""வேலை செய்யாத நாட்களுக்கு சம்பளம் இல்லை'' எனத் தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம், அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவர்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வேலை நிறுத்தம் செய்த வழக்கில், ""அவர்கள் வேலை செய்யாத நாட்களுக்கும் சம்பளம் தர வேண்டும்'' என மேல்சாதிப் பாசத்தோடு உத்தரவிட்டது.


கேரளாவின் பிளாச்சிமடா பகுதியில் இயங்கி வந்த கோக் நிறுவனம், அப்பகுதியில் நிலத்தடி நீரை எடுக்கத் தடை விதிக்கப்பட்ட பொழுது, ""கோக்கிற்குத் தடை விதிக்கப்பட்டால், மற்ற குடிமக்களுக்கும் தடை விதிக்க வேண்டியிருக்கும்'' எனத் தீர்ப்பளித்தது கேரள உயர்நீதி மன்றம்.


""ராமன் அரசியல் சாசனத்தின் அங்கம்'', ""இந்துமதம் இந்தியாவின் வாழ்க்கை முறை'' எனத் தீர்ப்பெழுதிய நீதிமன்றங்களுக்கும் மதச்சார்பின்மைக்கும் என்ன சம்பந்தம் இருந்துவிட முடியும்? பொது சிவில் சட்டம் தொடங்கி முசுலீம் தீவிரவாதம் வரை இவைபற்றியெல்லாம் ஆர்.எஸ்.எஸ். இன் கருத்து எதுவோ, அதுவே மாண்புமிகு நீதிபதிகளின் தீர்ப்பாகவும் இருக்கிறது.


ஊழலுக்குக் கூடத் தண்டிக்க முடியாத நீதிபதிகளை, இம்மக்கள் விரோதத் தீர்ப்புகளுக்காகத் தண்டித்து விடவா முடியும்? நாட்டை மறுகாலனியாக்குவதிலும், சட்டபூர்வமான பாசிசத்தை நாட்டின் மீது திணிப்பதிலும் நாடாளுமன்றமும், நீதிமன்றங்களும் ஜாடிக்கேத்த மூடியாகத்தான் செயல்படுகின்றன.


இந்திய அரசியல் சாசனத்துக்கே விரோதமான தடா, பொடா போன்ற கருப்புச் சட்டங்களை நாடாளுமன்றம் இயற்றி நடைமுறைப்படுத்திய பொழுது, அச்சட்டங்களைச் சட்டபூர்வமானவை என உச்சநீதி மன்றம் அங்கீகரித்தது. ""தனியார்மயம் தாராளமயம் அரசின் கொள்கை; அதில் நீதிமன்றம் தலையிட முடியாது'' என நழுவிக் கொள்கிறார்கள் நீதிபதிகள். அரசியல் அரங்கில் தீர்க்கப்பட வேண்டிய ராமர் கோவில் பிரச்சினையை ஓட்டுக் கட்சிகள் நீதிமன்றத்திற்குத் தள்ளிவிட்டதை ஏற்றுக் கொண்டு, அதில் கட்டைப் பஞ்சாயத்து செய்து வருகிறது, நீதிமன்றம். இதற்கு கைமாறாகத்தான், நாடாளுமன்றம் நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தை ரத்து செய்ய மறுக்கிறது.


போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட குட்டி முதலாளித்துவ சக்திகள் அனைவரும் 197080 களில் உச்சநீதி மன்றம் பல முற்போக்கான தீர்ப்புகளைச் சொன்னதைப் போன்ற காலம் திரும்பி வராதா என ஏங்குகிறார்கள். நீதிபதிகளின் நியமனம், அவர்களின் நடத்தை ஆகியவற்றைக் கண்காணிக்கத் தேசிய கமிசன் ஒன்றை உருவாக்கி விட்டால், நீதிபதிகள்நீதிமன்றங்களின் மக்கள் விரோதத் தன்மை மறைந்துவிடும் என ஆருடம் சொல்கிறார்கள்.
நீதிமன்றங்கள் 1970களில் "முற்போக்கான' தீர்ப்புகளை வெளியிட்ட சமயத்தில்தான், பாசிச இந்திரா கொண்டுவந்த அவசர நிலையை அங்கீகரித்துத் தீர்ப்புச் சொன்னது உச்சநீதி மன்றம். ஆந்திராவிலும், மேற்கு வங்கத்திலும் நக்சல்பாரி புரட்சியாளர்கள் போலி மோதல்களிலும், போலீசு நிலையக் கொட்டடிகளிலும் கொல்லப்பட்டதை மௌனமாக வேடிக்கை பார்த்தார்கள் நீதிபதிகள். அந்த "முற்போக்கான' தீர்ப்புகள், மக்களின் போராட்டங்களை நிறுவனமயமாக்கும் ஆளும் வர்க்கத்தின் தந்திரம் தவிர வேறில்லை.


ஜெயாவுக்கு எதிரான டான்சி நில பேர ஊழல் வழக்கிலும்; ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சி எம்.பி.க்களுக்கு நரசிம்ம ராவ் இலஞ்சம் கொடுத்த வழக்கிலும், ஊழலுக்கும், இலஞ்சத்திற்கும் புது கொள்கை விளக்கம் கொடுத்து, அக்கிரிமினல் நடவடிக்கைகளை நியாயப்படுத்தியவர்கள்தான் உச்சநீதி மன்ற நீதிபதிகள். முதலாளித்துவ வர்க்க வெறி, மேல்சாதித் திமிர் இரண்டும் கலந்து உருவான சட்டபூர்வ ஆதிக்க சக்திகள்தான் நீதிபதிகள். இப்படிபட்டவர்களின் நடத்தையைக் கண்காணிக்க தேசிய கமிசன் அமைக்கப்படுரமானால், அக்கமிசன் நீதிபதிகளின் முன் சோளக்காட்டுப் பொம்மையாகத்தான் இருக்குமே ஒழிய, சிம்ம சொப்பனமாக இருக்காது. நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தை மட்டுமல்ல, மக்கள் விரோத நீதிமன்றங்களையே கலைக்கக் கோரி மக்களை அணிதிரட்டுவதுதான் இன்றைய காலத்தின் கட்டாயம்!


· செல்வம்

PJ_11_2007.jpg

இந்துவெறியர்களின் தேசிய நாயகன் ராமனை இழிவுபடுத்திப் பேசியதற்காக, தி.மு.க. தலைவர் கருணாநிதியைக் கொல்ல உத்தரவிட்ட தலைவெட்டி வேதாந்தியின் பார்ப்பனத் திமிரை எதிர்த்தும், ராமன் பாலத்தை வைத்து தமிழகத்தை குஜராத்தாக்கத் துடிக்கும் பார்ப்பன இந்துவெறி அமைப்புகளைத் தடைசெய்யக் கோரியும் தமிழகமெங்கும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் இணைந்து கடந்த 27.9.07 அன்று தாங்கள் செயல்படும் பகுதிகளில் விரிவான பிரச்சாரத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின. கிரிமினல் வேதாந்தியின் உருவப் பொம்மையைத் தூக்கிலிட்டும்,

PJ_11_2007.jpg

அடுத்து வரும் தேர்தல்களில் ""இந்துக்களின் ஆசியும் ஆதரவும் பெற்ற சின்னம் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்'' என்று இந்துவெறி பா.ஜ.க.வுக்குப் போட்டியாக இடதுவலது போலி கம்யூனிஸ்டுகள் விளம்பரம் செய்து ஓட்டுப் பொறுக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கொலைகார காஞ்சி மட சங்கராச்சாரி ஜெயேந்திரனுக்கு ""அரசு விருந்தினர்'' என்ற சிறப்புத் தகுதியளித்து கடந்த டிசம்பரில் வரவேற்று உபசரித்து, பார்ப்பன கும்பலுக்கு விசுவாசமாகச் செயல்பட்ட கேரள "மார்க்சிஸ்டு' முதல்வர் அச்சுதானந்தன், இப்போது பார்ப்பன முறைப்படி விஜயதசமி சடங்குகளைச் செய்து அசத்தியுள்ளார்.

PJ_11_2007.jpg

இந்து மதவெறி அமைப்புகள், இசுலாமியத் தீவிரவாதிகளைப் போல குண்டுவெடிப்பு போன்ற பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்ற பொதுக் கருத்து அடிப்படையிலேயே ஆதாரமற்றது.

 

1990களில் இசுலாமியத் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் பல குண்டுவெடிப்பு வழக்குகளில் அடுத்தடுத்து தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

PJ_11_2007.jpg

"எங்களால் நம்பவே முடியவில்லை. பார்ப்பனக் கும்பலுக்கு எதிரான உங்கள் கூட்டத்துக்கு, எந்தக் கட்சிக்கும் திரளாத அளவுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டுள்ளார்களே! இது பொதுக்கூட்டம் அல்ல; மிகப் பெரிய மாநாடு. நீங்கள்தான் பெரியாரின் உண்மையான வாரிசுகள்!'' கூட்டம் முடிந்து விடைபெற்றுக் கொள்ளும்போது நா தழுதழுக்க இப்படிப் பலர் கூறிய கருத்துகள் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல.

put_oct-2007.jpg

மே.வங்கத்தில் ஏகபோக ""பெண்டலூன்'' சூப்பர் மார்க்கெட்டுகளைத் தொடங்கி வைத்து "புரட்சி' செய்து வரும் சி.பி.எம். ஆட்சியாளர்கள், இப்போது ""ரிலையன்ஸ் பிரஷ்'' காய்கறி அங்காடிகள் மற்றும் ரிலையன்ஸ் பேரங்காடிகளைத் தொடங்க கதவை அகலத் திறந்து விட்டுள்ளனர். கொல்கத்தா நகரின் 76 ஆண்டுகாலத் தொன்மை வாய்ந்த ""பார்க் சர்க்கஸ்'' காய்கறி அங்காடியை ரிலையன்சுக்கு 99 ஆண்டுகால குத்தகைக்குக் கையளித்துள்ளனர். இதுதவிர ""பஜார்கள்'' என்று குறிப்பிடப்படும் நகரின் பல்வேறு அங்காடிகளையும் ரிலையன்சுக்குத் தாரை வார்த்துள்ளனர்.

put_oct-2007.jpg

கட்டுமானப் பொருட்களான சிமெண்ட், இரும்புக் கம்பிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களில் சிமெண்ட் விலை மூட்டைக்கு ரூ.100க்கு மேல் அதிகரித்து, தற்போது ஒரு மூட்டை ரூ. 300 வரை விற்கப்படுகிறது. இதனால் கடன் வாங்கி வீடு கட்டும் நடுத்தர வர்க்கத்தினரும் ஒப்பந்தக்காரர்களும் கட்டுமான வேலைகளை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே வேலை கிடைப்பதே பெரும்பாடாகிவிட்ட நிலையில், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஏறத்தாழ ஒன்னேமுக்கால் கோடி கட்டுமானத் தொழிலாளர்களின் வேலையை, தற்போதைய சிமெண்ட் விலையேற்றம் வேகமாகப் பறித்து வருகிறது.

put_oct-2007.jpg

திருவாரூர் மாவட்டத்திலுள்ள தில்லைவிளாகம் ஏழாண்டுகளுக்கு முன்புவரை பொன் விளையும் பூமியாக இருந்தது. ஆனால் இன்றோ, அது இறால் பண்ணைகளுக்கும் உப்பளங்களுக்கும் இரையாகி, பாரம்பரிய விவசாயமும் மீன்பிடித் தொழிலும் நாசமாக்கப்பட்டு, அப்பகுதிவாழ் மக்கள் வாழ்விழந்து நிற்கிறார்கள். இப்பகுதியை ஒட்டியுள்ள அலையாத்திக் காடுகளின் அரணால், சுனாமியால்கூட இந்தத் தில்லைவிளாகத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. எல்லை காத்தானாகப் பாதுகாத்து வந்த அக்காடுகளும் இன்று இறால்பண்ணை உப்பளங்களால் அழிக்கப்பட்டு வருகிறது.

put_oct-2007.jpg"நம் இலக்கு எப்பவுமே உயர்வாக இருக்கவேண்டுமென நினைப்பவன். எங்கள் சமத்துவக் கொள்கைகளை எடுத்துச் சென்று மக்களுக்காக உழைப்போம் என்று சொல்லமுடியும். சாதிக்கவும் முடியும். இப்பவும் சொல்கிறேன். 2011ம் வருடம் என்னை தமிழக முதல்வராகப் பார்ப்பீர்கள்.'' (19.9.07, குமுதம்) இப்படிப் பச்சையான சுயநலத்தைக் கக்கியிருப்பது ""அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி''யைத் தொடங்கியிருக்கும் சினிமாக் கழிசடை சரத்குமார்.

put_oct-2007.jpg கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, ""தனியார்மயத்தை அனுமதியோம்; அரசுத்துறையைப் பாதுகாப்போம்!'' என்று சவடால் அடித்து அடையாள எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வந்த சி.பி.எம். கட்சி, இப்போது கேரளத்தில் இலாபமீட்டும் அரசுத்துறை நிறுவனத்தை முடக்கி, வெளிப்படையாகவே தனியார்மயத்துக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கக் கிளம்பிவிட்டது.

put_oct-2007.jpg

அமெரிக்காவில், அடித்தட்டு மக்களுக்கு வங்கிகள் மூலம் வீடு வாங்கக் கடன் கொடுப்பதை, துணைக் கடன் என அழைக்கிறார்கள். வாங்கும் சம்பளம் வாய்க்கும் வயிற்றுக்கும் பத்தாத அமெரிக்கர்களைக் கூட விட்டுவிடாமல், இந்தக் கடன் வலைக்குள் பிடித்துப் போடுவதை, அமெரிக்க வங்கிகளும், ""ஹெட்ஜ் ஃபண்டுகள்'' என அழைக்கப்படும் தனியார் முதலீட்டு நிறுவனங்களும் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன.

put_oct-2007.jpg

நான்காவது ஈழப்போர் நாளும் கடுமையாகி வருகிறது. மோதிக் கொள்ளும் இரு தரப்பாகிய தமிழீழ விடுதலைப் புலிகளாகட்டும், சிங்களப் பாசிச பேரினவாத அரசாகட்டும் இரண்டு தரப்புமே உரிமை பாராட்டிக் கொள்வதைப் போல எத்தரப்புக்கும் முழு சாதகமாகப் போரின் போக்கு இல்லை என்பதுதான் உண்மை.

put_oct-2007.jpg மாதச் சம்பளமாக ஏறத்தாழ ரூ. 18,000 வாங்கும் ஒரு போலீசு இன்ஸ்பெக்டர், பல இடங்களில் பலகோடி மதிப்புள்ள சொகுசு பங்களாக்களைக் கட்டியெழுப்ப முடியுமா? ஏன் முடியாது என்று தன்னையே உதாரணமாகக் காட்டும் சேலம் பள்ளப்பட்டி போலீசு இன்ஸ்பெக்டர் இலட்சுமணனின் மகாத்மியங்களைக் கேட்டால் தமிழக மக்கள் அதிசயித்துப் போவார்கள்.

put_oct-2007.jpg

பாரதிய ஜனதாவின் அலுவலகத்தை தி.மு.க. தொண்டர்கள் நொறுக்குவதையும், கொடிமரத்தைப் பிடுங்கி எறிவதையும், தமிழகமெங்கும் வேதாந்தியின் உருவப்பொம்மைகளும் அத்வானியின் உருவப்பொம்மைகளும் எரிக்கப்படுவதையும் தொலைக்காட்சியில் பார்த்த வட இந்திய மக்கள் என்ன நினைத்திருப்பார்கள்? கட்சியின் தலைமை அலுவலகத்தின் கதவை மூடிக்கொண்டு கம்பக்கதவின் பின்னே பேயறைந்தாற்போல நின்று கொண்டிருந்த பா.ஜ.க தலைவர்களைப் பார்த்த அவர்களது வட இந்தியத் தலைவர்கள் எப்படிப் புழுங்கியிருப்பார்கள்? முகத்தில் பார்ப்பனக் கொழுப்பையும் திமிரையும் தவிர,

put_oct-2007.jpg

"இராமனை இழிவுபடுத்தி இந்துக்களைப் புண்படுத்திய கருணாநிதியின் தலையை வெட்ட வேண்டும், நாக்கை அறுக்க வேண்டும். அப்படிச் செய்பவருக்கு எடைக்கு எடை தங்கம் தரப்படும்'' என்று பார்ப்பனத் தினவெடுத்துப் பேசிய வேதாந்தி என்ற சாமியார் யார்? ""அவர் யாரென்றே எங்களுக்குத் தெரியாது. யாரோ ஒருவர் பேசியதற்காக எங்களைத் தாக்குவது என்ன நியாயம்?'' என்று இராம.கோபாலன், இல.கணேசன், ராஜா என்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் முழுவதும் ஒரே குரலில் புளுகுகிறது. வேதாந்தி பேசியதை விட இந்தப் பித்தலாட்டம்தான் மிகப்பெரிய அயோக்கியத்தனம். இதற்காக இன்னொரு முறை இந்தக் கும்பல் முழுவதையும் நிற்க வைத்து உரிக்கவேண்டும்.

put_oct-2007.jpg

நெற்றிப் பொட்டில் துப்பாக்கியாக அழுத்திக் கொண்டிருக்கிறது இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம். துப்பாக்கியின் குதிரை அழுத்தப்படுவதற்கான தருணம் குறித்த திகிலை காங்கிரசு"மார்க்சிஸ்டு' கூட்டுக் கமிட்டி பராமரித்துக் கொண்டிருக்கிறது. ""இடி.. இடி..'' என்ற கூச்சலுடன் 15 ஆண்டுகளுக்கு முன் அரசியல் அரங்கை ஆக்கிரமித்த பார்ப்பன மதவெறியின் திரிசூலம், இன்று ""இடிக்காதே.. இடிக்காதே'' என்ற கூச்சலுடன் மக்களின் இதயத்தைக் குறிபார்க்கிறது. இன்று திடீரெனக் கிளம்பியிருக்கும் இராமர் சேது விவகாரம், அரசியல் களத்தில் நிற்கும் காங்கிரசு, "மார்க்சிஸ்டு'கள், பா.ஜனதா ஆகிய ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் கைகொடுக்கிறது.

put_oct-2007.jpg

அமெரிக்கஇந்திய அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்காவின் அடியாளாகவும் அடிமையாகவும் இந்தியாவை மாற்றியிருக்கிறது, மன்மோகன் சிங் அரசு. நமது அணு மின்நிலையங்களையும் ÷தாரியத்தைப் பயன்படுத்தி சுயசார்பாக நம் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் அணு தொழில்நுட்பத்தையும் முடக்கவும் திருடவும் அமெரிக்காவுக்கு இந்த ஒப்பந்தத்தின் மூலம் வழிசெய்து கொடுத்திருக்கிறது.

sep_2007.jpg

வேலூர் நகரின் மத்திய பேருந்து நிலையம் ""எக்ஸ்னோரா'' என்ற தனியார் நிறுவனத்தின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனியாரிடம் ஒப்படைத்தால் நிர்வாகம், பராமரிப்பு, சேவை என அனைத்துமே மேம்பட்டு சிறப்படையும் என்று கருதும் மேதாவிகள் இப்பேருந்து நிலையத்துக்கு வந்தால், மூக்கைப் பிடித்துக் கொண்டு ஓடிவிடுவார்கள்.

sep_2007.jpg

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எனும் மறுகாலனியக் கொள்கையைத் தீவிரமாகச் செயல்படுத்தி வரும் ஆட்சியாளர்கள், இதற்கு சீனாவை முன்னுதாரணமாகக் காட்டுகிறார்கள். சாதாரண மீன்பிடி கிராமமாக இருந்த சீனாவின் ஷென்சென் இன்று ஆலைகள், அலுவலகங்கள், அடுக்குமாடிக் கட்டிடங்கள் வர்த்தக நிறுவனங்கள் என பிரம்மாண்டமான வளர்ச்சியைப் பெற்றதற்கு அங்கு நிறுவப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலம்தான் காரணம்

sep_2007.jpg

ஏழே கால் ஆண்டுகளுக்கு சென்னையின் குப்பையை அள்ளுவதற்காக மு.க. ஸ்டாலினால் அழைத்து வரப்பட்ட சிங்கப்பூர் நிறுவனமான ஓனிக்ஸின் ஒப்பந்த காலம் ஆகஸ்ட் 2007இல் முடிவடைகின்றது. அதன் பின்னர் குப்பை அள்ள, நீல் மெட்டல் புராடக்ட்ஸ் எனும் கொலம்பிய குப்பை அள்ளும் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மீண்டும் தனக்கே ஒப்பந்தம் கிடைக்கும் என்ற ஓனிக்ஸின் கனவு தகர்ந்து போனதால்,

sep_2007.jpg

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிமக்களுக்கு எதிரான சமீபகால வன்கொடுமைகளைப் பார்க்கும்போது, அவை தன்மையிலும் செய்யும் முறையிலும் பெருமளவு மாற்றமடைந்து வருகின்றன என்று தெரிகிறது. பொருளாதாரதொழில் முன்னேற்றத்துக்கு ஏற்ப சாதிய உணர்வும் வெறியும் மங்கி வருவதற்குப் பதிலாக, சமூகத்தில் சாதிய முரண்பாடுகள் முன்பைவிட மிக வேகமாக வளர்ந்து வருவதையே காண முடிகிறது. இப்போது சாதிய அட்டூழியங்கள் சாதியுணர்வின் ஒன்றுதிரண்ட, கொடூர வெளிப்பாடாகியிருக்கின்றன.

sep_2007.jpg

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள அகரம் என்கிற குலதீபமங்கலம் கிராமத்திலுள்ளது தர்மராஜா திரௌபதையம்மன் கோவில். அரசுக்குச் சொந்தமான இப்பொதுக்கோவிலில் வழிபடச் சென்ற தாழ்த்தப்பட்ட மக்களைத் தடுத்து தாக்கி வெறியாட்டம் போட்டுள்ளனர், வன்னியர் உடையார் சாதிவெறியர்கள்.

sep_2007.jpg

உத்தரப் பிரதேசத்தில் பார்ப்பனர்களுடன் கூட்டணி கட்டிக் கொண்டு மாயாவதி ஆட்சியைப் பிடித்து சிறிது காலம்தான் ஆகியுள்ளது. அதற்குள்ளாகவே இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணியின் சாயம் வெளுக்கத் தொடங்கி விட்டது. தலித் ஒருவர் ஆளுவதனாலேயே தலித் மக்கள் வாழ்வில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு விடும் என்ற பிரச்சாரம் பொய்த்துப் போயுள்ளதோடு, தலித் இளைஞர் ஒருவரை அடித்துக் கொன்ற பார்ப்பன சாதி வெறியர்களைச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்புவிக்க மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியே துணைபோகும் கொடுமையும் அங்கு நடந்தேறியுள்ளது.

sep_2007.jpg

ஓசூரை அடுத்துள்ள கெலமங்கலம், பைரமங்கலம், குண்டுமாரனப்பள்ளி, ஒன்னல்வாடி, அஞ்செட்டிப் பள்ளி, சனமாவு, அக்கொண்டப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களின் விளைநிலங்களைப் பறித்து 3640 ஏக்கர் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. தமிழக அரசின் டிட்கோ நிறுவனமும் ஜி.எம்.ஆர். குழுமம் என்ற தனியார் நிறுவனமும் இணைந்து இம்மண்டலத்தை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று தமிழக முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

sep_2007.jpg

"கல்லூரி நிர்வாகம் "பறக்கும் படை' என்ற பெயரில் ஒரு குண்டர் படையை வைத்திருக்கிறது. போராடும் மாணவர்களை "டார்க் ரூம்' எனப்படும் கொட்டடியில் அடைத்து வைத்து ஆபாச வசவுகளுடன் காட்டுமிராண்டித்தனமாக அக்குண்டர்கள் அடிப்பார்கள்'' என்று கடந்த 2006ஆம் ஆண்டில் ஜேப்பியாரின் சத்யபாமா நிகர்நிலைப்பல்கலைகழக மாணவர்கள் முகத்தைக் கைக்குட்டையால் மறைத்துக் கொண்டு தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்ததையும்,

sep_2007.jpg

தூத்துக்குடி மாவட்டத்தில் 2500 கோடி ரூபாயில் டைட்டானியம் உலோகத்தை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் டாடா நிறுவனம் 2007, ஜூன் 28ஆம் தேதியன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஏற்கெனவே 2002ஆம் ஆண்டிலேயே அன்றைய அ.தி.மு.க. அரசாங்கத்திற்கும் டாடா நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

sep_2007.jpg

"அடுத்த தேர்தலில் ஆட்சி: பச்சோந்தி இராமதாசின் பகல் கனவு'' என்ற தலைப்பில் ""புதிய ஜனநாயகம்'' ஆகஸ்டு இதழில் அட்டைப்படச் சிறப்புக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதற்கு, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் நல்ல வரவேற்பு இருந்தது. ""பாரபட்சமின்றி'' அனைத்து ஓட்டுக் கட்சிகளையும் அம்பலப்படுத்தி வரும் ""புதிய ஜனநாயகம்'', பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் இராமதாசின் சந்தர்ப்பவாத, மோசடி அரசியலை உரிய நேரத்தில் உரிய வகையில் அம்பலப்படுத்தியிருப்பதாகப் பலரும் வரவேற்றுள்ளனர்.

sep_2007.jpg

"ஒரு இந்து ஏதாவது செய்து விட்டால் விசாரணைக் கமிசன் அமைக்கப்படுகிறது; ஆனால், ஒரு முசுலீம் ஏதாவது செய்துவிட்டால், அவன் தூக்கில் போடப்படுகிறான்.''

 

— மும்பய்க் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஜாகீர் உசைனுக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டவுடன், அத்தண்டனை குறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் சொன்ன கருத்து இது.

sep_2007.jpg

சில்லறை வணிகத்தில் நுழைந்து நாடெங்கும் நாலு கோடிக்கும் மேலான உழைக்கும் மக்களின் வாழ்வைப் பறிக்க வந்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரசு, பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க. முதலான ஆளும் வர்க்கக் கட்சிகள் பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் ரிலையன்சுக்கு எதிராக வீரவசனம் பேசிக் கொண்டே, ரிலையன்சு கடைகளுக்குக் குத்துவிளக்கேற்றி திறப்பு விழா நடத்துபவர்களைத் துரோகிகள் என்பதா, அல்லது மக்களின் எதிரிகள் என்பதா?

இவர்கள் வேறு யாருமல்ல, ரிலையன்சுக்கு எதிராக வீரதீரமாக வாய்ச்சவடால் அடித்துவரும் சி.பி.எம். கட்சியினர்தான் கடந்த ஜூலை மாதத்தில், கேரளத்தில் இந்த அயோக்கியத்தனத்தை அரங்கேற்றியுள்ளனர்.

 

கொச்சி நகரத் துணைமேயரும், சி.பி.எம். கட்சியின் எர்ணாகுளம் மாவட்டக் கமிட்டி உறுப்பினருமான சி.கே. மணிசங்கர், லெமக்காரா எனுமிடத்தில் ரிலையன்ஸ் பிரஷ் காய்கறிக் கடையைத் தொடங்கி வைத்து, தமது கட்சியின் துரோகத்தனத்தை அம்மாநிலமெங்கும் பறைசாற்றியுள்ளார். துணை மேயரே இந்த வேகத்தில் செல்லும்போது சி.பி.எம். கட்சியின் கொச்சி எம்.எல்.ஏ. சும்மாயிருப்பாரா? மாநிலக் கமிட்டி உறுப்பினரும் கொச்சியின் எம்.எல்.ஏ.வுமான தினேஷ் மணி, தேவாரா எனுமிடத்தில் ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டைத் திறந்து வைத்து அசத்தியுள்ளார்.

 

சில்லறை வணிகத்தில் நுழைந்துள்ள ரிலையன்சுக்கு எதிராக சி.பி.எம். கட்சி வீரவசனம் பேசி வரும் நிலையில், அம்மாநிலத்தை ஆளும் சி.பி.எம். தலைமையிலான இடதுசாரி அரசு, ரிலையன்சை அனுமதிப்பது ஏன்? அதிலும் சி.பி.எம். பிரமுகர்களே கடையைத் திறந்து வைக்கிறார்கள் என்றால், சி.பி.எம். கட்சி ரிலையன்சை ஆதரிக்கிறதா அல்லது எதிர்க்கிறதா என்று கேட்டு கேரள மாநிலமெங்கும் மக்கள் காறி உமிழத் தொடங்கியதும் சி.பி.எம். கட்சித் தலைமை பீதியடைந்தது. தனது துரோகத்தனத்தை மறைக்க, இப்பிரமுகர்களிடம் ரிலையன்ஸ் கடை திறப்பு பற்றி விளக்கம் கோரும் நாடகமாடியது.

 

இதைத் தொடர்ந்து இப்பிரமுகர்கள் தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டனர். தங்களது நெருங்கிய நண்பர்களின் வற்புறுத்தலால் ரிலையன்ஸ் கடைகளைத் திறந்து வைத்ததாக விளக்கம் அளித்தனர்.

 

இப்"பாட்டாளி' வர்க்கப் பிரமுகர்களுக்கு நெருங்கிய நண்பர்களாக இருப்பவர்கள் முதலாளித்துவவாதிகள்தான் என்பதையும், நாளை இந்த "நண்பர்கள்' வற்புறுத்தினால் உழைக்கும் மக்களுக்கு எதிராக எதையும் செய்யத் துணியும் துரோகிகள்தான் இப்பிரமுகர்கள் என்பதையும், இவர்களது தன்னிலை விளக்கமே நிரூபித்துக் காட்டியது. ஆனாலும் இப்பிரமுகர்கள்மீது கட்சித் தலைமை பாரதூரமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெயரளவுக்கு எடுத்த நடவடிக்கையிலும் இரட்டை அளவுகோல்களைப் பின்பற்றியுள்ளது.

 

எர்ணாகுளம் மாவட்டக் கமிட்டி மணிசங்கரின் விளக்கத்தைப் பரிசீலித்து, அவருக்கு "எச்சரிக்கை' விடுப்பதாக அறிவித்தது. இம்மாவட்டக் கமிட்டி, கேரள முதல்வர் அச்சுதானந்தன் தலைமையிலான கோஷ்டியின் ஆதிக்கத்தில் உள்ளது.

 

மறுபுறம், தினேஷ்மணியின் விளக்கத்தை மாநிலக் கமிட்டி பரிசீலித்து, அவரை மன்னிப்பதாக அறிவித்துள்ளது. மாநிலக் கமிட்டியோ, மாநிலச் செயலாளர் பினாரயி விஜயன் தலைமையிலான கோஷ்டியின் ஆதிக்கத்தில் உள்ளது. அச்சுதானந்தன் கோஷ்டியிலிருந்து விலகி விஜயன் கோஷ்டிக்கு தினேஷ் மணி வந்துள்ளதால், அவருக்குச் சாதகமாக இந்த "நடவடிக்கையை' மாநிலக் கமிட்டி எடுத்துள்ளது.

 

ஒரே வகையிலான துரோகத்துக்கு, மாவட்டக் கமிட்டியில் எச்சரிக்கை; மாநிலக் கமிட்டியில் மன்னிப்பு என இரட்டை அளவுகோல்களுடன் சி.பி.எம். கட்சி எடுத்துள்ள இந்நடவடிக்கைகளைப் பார்த்து கேரள மக்கள் கைகொட்டிச் சிரிக்கிறார்கள். கட்சியின் கொள்கைபடி தாங்கள் செயல்படுவதாகவும், ஆனால் விஜயன் கோஷ்டி சமரசப் பாதையில் செல்வதாகவும் புலம்பும் அச்சு கோஷ்டி, இந்த இரட்டை அளவுகோல் விவகாரத்தை வைத்து உட்கட்சித் தேர்தலில் ஆதாயமடைய முயற்சிக்கிறது. துரோகிகளுக்கிடையே கோஷ்டிச் சண்டை புழுத்து நாறும் அதேநேரத்தில், ரிலையன்ஸ் நிறுவனமோ புதிய பேரங்காடிகளைத் திறந்து, சில்லறை வியாபாரிகளின் வாழ்வைச் சூறையாடிக் கொண்டிருக்கிறது.


· அழகு

sep_2007.jpg

ஆகஸ்ட்15: போலி சுதந்திரத்தின் 60ஆம் ஆண்டு நிறைவு விழாவை ஆட்சியாளர்களும் ஓட்டுப் பொறுக்கிகளும் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், 1947இல் நாம் பெற்றது சுதந்திரமல்ல; அதிகார மாற்றம்தான் என்பதை விளக்கியும், அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் நாட்டை அமெரிக்காவுக்கு அடிமையாக்கும் துரோகத்தனத்தைத் திரைகிழித்தும், மறுகாலனியாக்கத்திற்கு எதிராகப் போராட உழைக்கும் மக்களை அறைகூவியும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் துண்டுப் பிரசுரம் சுவரொட்டிகள் மூலம் விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டன.

sep_2007.jpg

இந்தியா அமெரிக்கா இடையே, அணுசக்தி கூட்டுறவு மற்றும் வர்த்தகம் தொடர்பாக கையெழுத்தாகியுள்ள ""123 ஒப்பந்தம்'', காங்கிரசின் அமெரிக்க அடிமைத்தனத்தை மட்டும் அம்பலப்படுத்தவில்லை; அந்த ""அடியாருக்கு அடியாராக''ப் போலி கம்யூனிஸ்டுகள் செயல்படுவதையும் நாறடித்து விட்டது.

sep_2007.jpg

மிகவும் அறிவுப்பூர்வமான, ஆக்கப்பூர்வமான அணுகுமுறை என்று காட்டிக் கொண்டு இந்தியப் போலி கம்யூனிஸ்டுகள் பின்பற்றி வரும் நடைமுறை, எப்போதும் உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எதிராகவும் நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகம் இழைப்பதாகவும் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும்தான் பயன்பட்டு வந்திருக்கிறது. இந்துத்துவ வகுப்புவாத சக்திகள் ஆட்சிக்கு வருவதை எப்படியாவது தடுப்பது என்ற பெயரில் காங்கிரசின் சிறுபான்மை ஆட்சியை உண்மையில் நிபந்தனையற்ற முறையில் போலி கம்யூனிஸ்டுகள் ஆதரித்து வருகின்றனர்.எனவேதான் ஆரம்பம் முதலே போலி கம்யூனிஸ்டுகளுக்கு உடன்பாடே இல்லாத பல்வேறு விசயங்களுக்கும்

sep_2007.jpgநாடு தொழில் வளர்ச்சியில் முன்னேறி வல்லரசாக வேண்டுமா? அதற்கு அன்னிய நேரடி முதலீடுதான் ஒரே தீர்வு! வேலை வாய்ப்பு பெருக வேண்டுமா? அதற்கும் அன்னிய நேரடி முதலீடுதான் ஒரே தீர்வு! தொழில் நுட்பம், தரமான உற்பத்திப் பொருட்கள், உயரிய சேவை, நிர்வாகத் திறன், ஏற்றுமதிக்கான வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் என அனைத்திற்கும் ஒரே சர்வரோக நிவாரணியாகச் சித்தரிக்கப்படுகிறது அன்னிய நேரடி முதலீடு.

aug_2007.jpg

தனது மகன் சுரேஷின் பொறியியல் படிப்பிற்கான கட்டணத்தைக் கட்ட முடியாமல் போனதால், பெரம்பலூர் மாவட்டம் வளவெட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வம் கடந்த மாதம் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டு விட்டார். தனது மகனின் படிப்புச் செலவிற்காக ஏற்கெனவே ஒரு இலட்ச ரூபாய் வரையில் வெளியே கடன் வாங்கிவிட்ட பன்னீர் செல்வம், இந்த ஆண்டிற்கான கட்டணத்தைக் கட்டுவதற்கு அரசு வங்கிகள்

aug_2007.jpgகொள்வதற்குப் பல சமூகக் காரணங்கள் இருப்பதை நாம் அறிவோம். ஆனால், காசுமீரிலோ இவற்றையெல்லாம்விட, இராணுவம் மற்றும் துணை இராணுவப் படைகளால் விசாரணை, தேடுதல் வேட்டை என்ற பெயரில் பொதுமக்கள் அவமானப்படுத்தப்படுவதுதான் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. ""எல்லை கடந்த மருத்துவர்கள் சங்கம்'' என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பு எடுத்த ஓர் ஆய்வில், ""இந்த அவமானப்படுத்துதல் தங்களின் மன அமைதியைக் குலைத்து விடுவதாக'' காசுமீர் மக்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

aug_2007.jpg

உடலெங்கும் காயங்கள்; சீழ்பிடித்து புரையோடிவிட்ட தீப்புண்கள், அழுக்கடைந்து கிழிந்து தொங்கும் ஆடைகள், துயரத்தை நெஞ்சிலே தாங்கி உருக்குலைந்து நிற்கும் தொழிலாளர்கள்... சீனாவின் செங்கற்சூளைகள்நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்து அண்மையில் மீட்கப்பட்டுள்ள இக்கொத்தடிமைகளைக் கண்டு உலகமே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

aug_2007.jpg

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்திலுள்ள சிகரல அள்ளி கிராமத்தைச் சேர்ந்த 90 தாழ்த்தப்பட்ட குடும்பத்தினர், வசிக்க வீடின்றி ஓடைகளின் கரையோரங்களில் குடிசை போட்டு வாழ்ந்து வந்த நிலையில், 1980ஆம் ஆண்டு இம்மக்களுக்குத் தொகுப்பு வீடுகள் கட்டித் தரும் திட்டப்படி, சின்னப்பொண்ணு என்பவரது நிலத்தைத் தமிழக அரசு கையகப்படுத்தி, உரிய தொகையையும் அளித்துள்ளது.

aug_2007.jpg

மரங்களை எளிதில் வெட்டி வீழ்த்த உதவும் கருவியான கோடரியின் காம்பும் மரத்தால்தான் ஆனது என்பது எத்தனை பெரிய சோகம்! தனது சொந்த இனத்தையே எதிரியிடம் காட்டிக் கொடுக்கும் நபர்களையும் கோடரிக்காம்பு என்றுதான் அழைக்கிறார்கள். அண்மையில் திருநெல்வேலியில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம், நமக்குக் கோடரிக் காம்பைத்தான் நினைவுக்குக் கொண்டு வருகிறது.

aug_2007.jpg

தேசாபிமானி. கேரள சி.பி.எம். கட்சியின் அதிகாரபூர்வ நாளேடு. இடதுவலது என்று போலி கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டாகப் பிரிவதற்கு முன்பு, அது ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடாக வெளிவந்து கொண்டிருந்தது. 1947ஆம் ஆண்டில் தேசாபிமானி நாளேட்டுக்காக கம்யூனிஸ்டுகள் நிதி திரட்டியபோது, கோழிக்கோடு மாவட்டம் சொம்பாலா கிராமத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளரும் எழுதப் படிக்கத் தெரியாத

aug_2007.jpg

தாழ்த்தப்பட்ட சாதியினர் பழங்குடியினர் மீதான (வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 1989ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு நாடு முழுவதும் இம்மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து இழைக்கப்படும் வன்கொடுமைச் சம்பவங்களில் மிகமிக முக்கியமானவற்றையும் வகைமாதிரிகளையும் பின்வருமாறு தொகுக்க முடியும்.

aug_2007.jpg

பாலஸ்தீன மக்கள் நடத்திவரும் சுயநிர்ணய உரிமைப் போர், மேலும் ஒரு பின்னடைவுக்கு உள்ளாகியிருக்கிறது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (பி.எல்.ஓ.) ஓர் அங்கமான ஃபதா இயக்கத்திற்கும், முசுலீம் அடிப்படைவாத அமைப்பான ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையே கடந்த ஓராண்டு காலமாக நடந்து வந்த பதவி அதிகாரச் சண்டை, உள்நாட்டுப் போராக மாறக் கூடிய சூழல் உருவாகி இருப்பதுதான் இப்பின்னடைவுக்கான காரணம்.

aug_2007.jpg

ஈராண்டுகளுக்கு முன்பு ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து, தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க கோக்கை எதிர்த்து நெல்லையில் நடத்திய மறியல் போராட்டத்தையொட்டி, தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சந்தைப் பகுதியில் சுவரெழுத்து விளம்பரம் செய்த வி.வி.மு.வைச் சேர்ந்த 4 தோழர்கள் தருமபுரிஅதியமான் கோட்டை போலீசாரால் 24.6.05 அன்று கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

aug_2007.jpg

கல்லூரி மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் இரத்து, தொழிற்கல்விக்கான நுழைவுத் தேர்வு இரத்து, ""ஷிப்டு'' முறை கல்லூரி, இலவச பஸ் பாஸ் என அடுக்கடுக்கான அறிவிப்புகளை தி.மு.க. அரசு வெளியிட்டுள்ளதோடு, உயர்கல்வி அமைச்சர் சுயநிதிக் கல்லூரிகளுக்கு எதிராக வீர வசனமும் பேசி வருகிறார்.

aug_2007.jpg

நாடு மீண்டும் காலனியாக்கப்படும் நிலையில், அமெரிக்க உலக மேலாதிக்கப் போர்த் தேரில் இந்தியாவைப் பிணைக்கும் நடவடிக்கையின் ஓர் அங்கமாக, அமெரிக்க அணு ஆயுதப் போர்க்கப்பலான நிமிட்ஸ், கடந்த ஜூலை முதல் வாரத்தில் சென்னைத் துறைமுகத்துக்கு வந்ததை எதிர்த்தும், இக்கப்பலை இந்திய கடற்பகுதியில் உலாவ அனுமதிக்கும் துரோக ஆட்சியாளர்களை எதிர்த்தும் ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

aug_2007.jpg

ஓட்டுக்கட்சி அரசியல் தலைவர்களும் மாயத் தோற்றங்களைக் காட்டி மக்களை ஏய்க்கிறார்கள். சினிமாக்காரர்களும் இதே வேலையைத்தான் செய்கிறார்கள். இரண்டு வகையினரும் கள்ளப் பணத்தை கருப்புப் பணத்தைக் குவிப்பதற்குத்தான் இதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள்.

aug_2007.jpg

ஆட்டோ திருட்டு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திருச்சி உறையூர் ஆட்டுக்காரத் தெருவைச் சேர்ந்த செல்வம் என்பவர், போலீசாரால் சித்திரவதை செய்து அடித்துக் கொல்லப்பட்ட பயங்கரத்தைக் கண்டு திருச்சி நகரமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

aug_2007.jpg

கடந்த ஜூன் 25ம் தேதியன்று பெரியகுளம் முருகன்மலைப் பகுதியில் மாவோயிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த 3 தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பழனிவேல், வேல்முருகன், முத்தமிழ்ச்செல்வன் என்ற இந்த 3 பேரிடமிருந்து துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் போன்ற ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக போலீசு கூறுகிறது.

aug_2007.jpg

"எந்தவிதத் தொழிலாளர் சட்டங்களுக்கும் உட்படாத, அரசின் வரிகள் எதுவும் பாதிக்காத, ஒரு தனி சாம்ராஜ்யமாக இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைவது வருங்காலத்திற்கு நல்லதுதானா என்பதே விவாதத்துக்குரிய விஷயமாகத் தெரிகிறது.'' (தினமணி, 26.6.07)

july_2007.jpg

தில்லி நகரத்தின் அழகையும், சுற்றுப்புறச் சூழலையும் மெருகூட்டும் பொருட்டு, இயற்கை எரிவாயுவில் ஓடும் வாகனங்களை மட்டுமே அனுமதிப்பது என்ற திட்டத்தின்படி, அந்நகரின் வர்த்தக மையமான சாந்தினி சௌக் பகுதியில் ரிக்ஷா மற்றும் தள்ளுவண்டிகள் இயக்கப்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நகரின் தெருவோரச் சிற்றுண்டி

july_2007.jpg

போலி கம்யூனிஸ்டுகள் ஆளும் மே.வங்கத்தின் டார்ஜலிங் தேயிலை, அலாதியான மணத்தாலும் சுவையாலும் உலகப்புகழ் பெற்றது. மே.வங்கத்தின் வடக்கே டார்ஜிலிங், ஜல்பைகுரி, கூச்பிகார் மாவட்டங்களில் உள்ள இச்சிறப்பு மிக்க தேயிலைத் தோட்டங்களிலிருந்து வீசும் காற்றில் இப்போது தேயிலை மணம் வீசுவதில்லை. பிணவாடை வீசிக்கொண்டிருக்கிறது.

july_2007.jpg

காட்டாமணக்கு சாலையோரங்களில் கேட்பாரின்றி வளரும் புதர்செடி. கிராமங்களில் இதனை வேலியாக நட்டு வைப்பதுண்டு. அதன் நச்சுத் தன்மையை ஆடுமாடுகள் கூட அறிந்திருப்பதால், இச்செடியை முகர்ந்து கூட பார்க்காமல் விலகிச் சென்று விடும். அப்பேர்ப்பட்ட நச்சுச் செடியான காட்டாமணக்கைப் பயிரிட்டு பணம் சம்பாதியுங்கள் என்ற ஆட்சியாளர்கள் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

july_2007.jpg

தாழ்த்தப்பட்ட சாதி அல்லது பழங்குடி இனத்தைச் சேராத ஒருவராலோ அல்லது ஒரு சிலராலோ இம்மக்கள் வசிக்கும் ஓர் இடத்திலோ அவர்கள் வந்துபோகும் இடங்களிலோ, வன்கொடுமைகள் இழைக்கப்படும் என்ற தகவலோ, அச்சுறுத்தலோ ஒரு அரசு நிர்வாக அமலாளர் மற்றும் போலீசு துணைக் கண்காணிப்பாளருக்குக் கிடைக்கும்போது,

july_2007.jpg

"நக்சல்பாரிகள், மாவோயிஸ்டுகள்... இந்தியா ஒரு போலீசு அரசாக மாறப் போகிறது. நிலவுவதை யார் ஏற்க மறுக்கிறார்களோ, அவர்கள் தீவிரவாதிகளாக அழைக்கப்படுவார்கள். இசுலாமிய தீவிரவாதிகள் இசுலாமியராக இருந்தாக வேண்டும். எனவே, நம் அனைவரையும் குறிக்க அது போதாது. அவர்களுக்கு பெரிய வலை தேவைப்படுகிறது. எனவே, தெளிவின்றி வரையறுப்பதும், வரையறுக்காமலே விடுவதும் ஒரு சரியான உத்திதான்.

july_2007.jpg

திருவண்ணாமலை மாவட்டம் நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர், இரண்டு மாதங்களுக்கு முன்பாக, தனது ஒரு ஏக்கர் நிலத்தில் விளைந்து நின்ற கரும்புகளைத் தன் கையாலேயே தீ வைத்துக் கொளுத்தி விட்டார். ""இன்னும் சில ஏக்கர்ல கரும்பு மிச்சமிருக்கு; அதையும் கொளுத்திட்டு, எல்லாம் வீணாப் போயிடுச்சுன்னு மனதைத் தேத்திக்க வேண்டியதுதான்'' என விரக்தியோடு சொல்கிறார், அவர்.

july_2007.jpg

உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த நாடு எனக் கூறப்படும் இந்தியாவை, உணவுப் பொருளுக்குக் கையேந்தும் நாடாக மாற்றும் சதி மெல்ல மெல்ல அரங்கேறி வருகிறது. உணவுப் பொருள் இறக்குமதி; அரசாங்கம் நேரடியாக உணவுப் பொருளைக் கொள்முதல் செய்வதைப் படிப்படியாகக் குறைத்துக் கொண்டு, அந்தப் பொறுப்பைத் தனியாரிடம்

july_2007.jpg

பழங்குடியினப் பட்டியலில் தங்களைச் சேர்க்கக் கோரி, ராசஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் சாதியினர் நடத்திய போராட்டம், நயவஞ்சகமாக ஒடுக்கப்பட்டுவிட்டதோடு, ஓட்டுக்கட்சிகளின் சமூகநீதிக் கொள்கையின் ஓட்டாண்டிதனத்தையும் அப்போராட்டம் அம்பலப்படுத்திக் காட்டிவிட்டது.

july_2007.jpg

தில்லைக் கோயிலின் கருவறைக்கு எதிரில் உள்ள சிற்றம்பல மேடையில், பக்தர்கள் தேவாரம் திருவாசகம் பாடி வழிபடலாம் என்று இந்து அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி அஜித் பிரகாஷ் ஷா, ஜோதிமணி ஆகியோர் தடை விதித்திருக்கின்றனர். இந்தத் தீர்ப்பு, கடந்த ஜூன் 8ஆம் தேதியன்று வழங்கப்பட்டிருக்கிறது.

july_2007.jpg

ஆங்கிலேயக் காலனிய ஏகாதிபத்தியம் இந்தியாவில் நிறுவிய எத்தனையோ அடிமைச் சின்னங்களில் ஒன்றுதான் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம். இங்கிலாந்து நாட்டின் அரசி / அரசனைப் போன்ற ஒரு அலங்காரப் பதவிதான் இந்தியாவின் அரசுத் தலைவர். மத்திய, மாநில அரசு நிர்வாகங்களெல்லாம் முறையே அரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநரின் பெயரால்தான் நடைபெறுகின்றன;

july_2007.jpg

குஜராத் மாநிலத்தைப் பற்றிக் கேட்டவுடனே, அங்கு நடைபெறும் இந்து மதவெறிப் பாசிச ஆட்சியும், அங்கு சிறுபான்மை முஸ்லிம் மக்கள் பீதியுடன் அன்றாடம் வாழ்வதும் நம் நினைவுக்கு வருகிறது. ஆனால், ""துக்ளக்''இல் இருந்து ""இந்தியா டுடே'' போன்ற பத்திரிக்கைகள் வரை, ""குஜராத் முதல்வர் மோடி அம்மாநிலத்தை அதிநவீனமாக்கி, சந்திரபாபு நாயுடுவை விடவும் முனைப்போடு அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினிமயமாக்கி, அந்நிய முதலீட்டைப் பெறுவதில் முன்னோடி மாநிலமாக்கி இருக்கிறார்'

june_2007.jpg

"சில்லறை வணிகத்தில் ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் நுழைவதால், சிறு வியாபாரிகளுக்கு எந்தப் பாதிப்பும் வராது'' என ஆளும் கும்பலும், அவர்களது எடுபிடிகளும் நடத்தி வரும் பிரச்சாரத்திற்கு, சிறுவணிகர்கள் ஏமாந்து போய்விடவில்லை.

june_2007.jpg

மும்பை மாநகராட்சித் தேர்தல்களில் சிவசேனாவும்; டெல்லி மாநகராட்சித் தேர்தல் மற்றும் பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்றதையடுத்து, அரசியல் அரங்கில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்து மதவெறிக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகப்

june_2007.jpg

தாழ்த்தப்பட்டபழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்படும் 15 வகையான சாதியசமூகக் கொடுமைகளையும் அக்கிரமங்களையும் நுட்பமாகவும் அனுபவப்பூர்வமாகவும் உணர்ந்து தொகுத்து, வன்கொடுமைகள் என்று வரையறுத்து அவற்றுக்குரிய தண்டனைகளையும் பட்டியலிட்டிருக்கிறது வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம்.

june_2007.jpg

தொழில் நகரமான ஓசூரின் அருகிலுள்ள கொத்தகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு ஒரே ஆச்சரியம். ஓசூர் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கிக் கசக்கிப் பிழிந்து, தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்குவதில் முன்னணியில் நிற்கும் டி.வி.எஸ். நிறுவனம், இக்கிராமத்தின் பெண்களுக்கு

june_2007.jpg  குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்தின் புறநகர் பகுதியில், நவம்பர் 26, 2005 அன்று சோராபுதீன் ஷேக் என்பவர் குஜராத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ""லஷ்கர்இதொய்பா என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சோராபுதீன், முதல்வர் நரேந்திர

june_2007.jpg

சிதம்பரம் நடராசர் கோயிலில் அருட்பா பாடச் சென்ற வள்ளலாரை இழிவுபடுத்தி, பார்ப்பனர் அல்லாத யாரும் "அருட்பா' பாட இயலாது என்று விரட்டியடித்தது தீட்சிதர் கும்பல். யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரைத் தமது கையாளாகக் கொண்டு "மருட்பா' எழுதி வெளியிட்டு, வள்ளலார் மீது வழக்கும் தொடர்ந்தது. வடலூரில்

june_2007.jpg

தில்லைக் கோயிலில் தீட்சிதப் பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிராகவும் வடலூரில் வள்ளலார் வழிபாட்டு முறையைப் பார்ப்பனமயமாக்கிய சதிக்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியிருக்கின்றன. தில்லைக் கோயில் கருவறையின் எதிரில் உள்ள திருச்சிற்றம்பல மேடையில் நின்று பக்தர்கள் தேவாரம்திருவாசகம் பாடலாம் என்று

june_2007.jpg

ஓய்வு பெற்ற இராணுவ சுபேதார் திரு. நல்லகாமன் அவர்கள் தொடுத்த மேல் முறையீட்டு வழக்கில் போலீசு கண்காணிப்பாளர் பிரேம்குமாருக்கும் மேலும் 3 போலீசு அதிகாரிகளுக்கும் ஒரு மாத சிறைத்தண்டனை விதித்து 3.4.07 அன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இது குறித்த செய்தி சென்ற பு.ஜ. இதழில் வெளியாகியிருந்தது.

june_2007.jpg

மன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையில் ஆதாம் பாலம் என்றும் ராமன் பாலம் என்றும் அழைக்கப்படும், கடலுக்கடியில் கிடக்கும் மணல்திட்டுகளை வெட்டி எடுக்கும் பணி சேது சமுத்திரத் திட்டத்திற்காக ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில், இந்துவெறி பார்ப்பன கும்பல் ""ராமர் கட்டிய பாலத்தை இடிக்காதே!'' என ஓலமிட ஆரம்பித்துள்ளது.

june_2007.jpg

உத்தரப்பிரதேச மாநில சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 402 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி 206 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. அக்கட்சியின் தலைவியான மாயாவதி, உ.பி.யில் 4வது முறையாக முதல்வராகியுள்ளார்.

june_2007.jpg

கருணாநிதியின் சாணக்கிய அரசியல், பரமபத விளையாட்டில் நடப்பதைப் போல வெற்றியின் இறுதிப் படிக்கட்டில் தடுக்கி விழுந்து, சரிந்துவிட்டது. கூட்டணிக் கட்சிகளைச் சரிக்கட்டி, தனது அரசியல் எதிரியான ஜெயலலிதாவை வீழ்த்தி, இரத்தத்தின் இரத்தமான தனது மகன் மு.க.ஸ்டாலினைத் தமிழக முதல்வராக முடிசூட்டுவதற்கான எல்லாத் தடைகளையும் நீக்கிவிட்டதாகப் பெருமூச்சுவிட்டு,

june_2007.jpg

விவசாயத்தில் ஏற்பட்ட கடனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு சாவதைத் தடுக்க முன் வராத அரசு, வங்கிக் கடனைக் கட்டத் தவறியதற்காக விவசாயிகளைக் கைது செய்ய முனைப்பு காட்டுகிறது.

 

கர்நாடகா மாநிலம் பீதார் மாவட்டத்தில் மட்டும், கடந்த நான்கே மாதங்களில் 25 கரும்பு விவசாயிகள் அடுத்தடுத்து தற்கொலை

mars_2007.jpg

பெங்களூரில், கடந்த டிசம்பரில் 8 வயது சிறுமி வெறி பிடித்த தெரு நாய்களால் கடித்துக் கொல்லப்பட்ட செய்தி மனிதாபிமானம் உள்ள எவரையும் கலங்கச் செய்து விடும். காட்டில் வாழும் சிங்கம், புலி போன்ற கொடூர விலங்குகள் கூட்டாகச் சேர்ந்து மான்களை வேட்டையாடுவது போல, இந்தச் சிறுமியை நாய்கள் துரத்தித் துரத்திக் கடித்துக் குதறியுள்ளன. பெயிண்டராக வேலை

may_2007.jpg

உ.பி. மாநிலம் வாரணாசி மாவட்டத்திலுள்ள பேல்வா கிராமத்தைச் சேர்ந்த இலட்சுமிணாவிடம் அடமானம் வைப்பதற்குத் தனது திருமணப் புடவையைத் தவிர, மதிப்புமிக்க பொருட்கள் வேறெதுவும் இல்லை. அந்தச் சேலையை யாராவது அடமானம் எடுத்துக் கொண்டு நூறு ரூபாய் கொடுத்தால், சாகக் கிடக்கும் தனது மகள்

may_2007.jpg

தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எனப்படும் மறுகாலனியாக்கத்துக்கு எதிராக தொடர்ந்து உறுதியாகப் போராடிவரும் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள், சிறு வணிகத்தை விழுங்க வந்துள்ள ரிலையன்ஸ் வால்மார்ட்டுக்கு எதிராக ""சிறு வணிகம், சிறு தொழில்கள் உயர்த்திப் பிடி! சூறையாடும்

may_2007.jpg

அரசியல், சமுதாயப் புரட்சியின்றி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் சமூகப் பொருளாதார முன்னேற்றமும் சமத்துவமும் அடையவே முடியாது. மத்தியமாநில அரசுகள் கொண்டு வந்திருக்கும் பல்வேறு சட்டதிட்டங்கள், இடஒதுக்கீடு போன்ற

may_2007.jpg

அடங்க மறு; அத்து மீறு!'' இது சுவரெங்கும் விடுதலை சிறுத்தைகள் எழுதி வைக்கும் முழக்கம். இதை வாசித்துவிட்டுப் பொங்கி எழும் தலித் இளைஞர்கள் அத்துமீறினால் அவர்களுக்கு ஆதரவுக் குரல் தராமல், அந்த இளைஞர்களையே ஆதிக்க சாதியிடம் ""அடங்கிப் போ'' என எந்தத் தலைவராவது வற்புறுத்துவாரானால்,

may_2007.jpg

மே.வங்க மாநிலத்தின் நந்திகிராமத்தில் கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று சி.பி.எம். குண்டர்களும் போலீசும் இணைந்து நடத்திய கொலைவெறியாட்டத்தை மூடி மறைத்து, கூசாமல் அவதூறு பொய் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது சி.பி.எம். கட்சி.

may_2007.jpg

புதிய ஜனநாயகம் இதழின் வாசகர்களுக்கு மட்டுமல்ல, ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்டர் போன்ற முதலாளித்துவப் பத்திரிகைளின் வாசகர்களுக்கும் ""நல்லகாமனின் கதை'' நினைவிருக்கக் கூடும். ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு முன்பு வாடிப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரரான நல்லகாமன், தமிழக ஆயுதப் படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் பைரவ் சிங்கின் வீட்டை, ரூ. 5,000 கொடுத்து ஒத்திக்கு எடுத்தார்.

may_2007.jpg

சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்த்து நாட்டின் பல பகுதிகளில் நடந்து வரும் போராட்டங்களையடுத்து, 2005ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறது, மைய அரசு. இதன் மூலம், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மக்களுக்கு எதிரானவையல்ல எனக் காட்டிக்

may_2007.jpg

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஆவாரம்பட்டி முத்துவீரகண்டயன்பட்டி கிராம மக்களுக்கு ஒரே ஆச்சரியம்! இக்கிராமத்துக்கு கடந்த ஆண்டுசெப்டம்பர் 24ஆம் தேதியன்று வந்த அரசுத் தலைவர் அப்துல்கலாம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தைத் தொடங்கி வைத்து, அக்குடிநீரில் ஒரு குவளை பருகி கிராம மக்களுடன்

may_2007.jpg

நக்சல்பாரி — அது இமயமலையின் அடிவாரத்திலுள்ள ஒரு சிறு கிராமத்தின் பெயர். மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரி வட்டத்திலுள்ளது அந்தக் கிராமம். பண்ணை நிலப்பிரபுக்கள், கந்துவட்டிக்காரர்கள், அரசு அதிகார வர்க்கத்தினர், போலீசு ஆகியோரின் சுரண்டல்

may_2007.jpg

தமிழகத்து "மார்க்சிஸ்டு'கள் ரிலையன்ஸ் ஃபிரெஷ்ஷûக்கு எதிராக அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, "மார்க்சிஸ்டு' கட்சியின் தலைவர்களுள் ஒருவரான சமர் போரா, ""விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நல்ல விலை கொடுப்போம் என்றும்; நுகர்வோருக்குத் தரமான பொருட்களை விற்பனை செய்வோம் என்றும் ரிலையன்ஸ் நிறுவனம்

may_2007.jpg

நண்பனைப் போல அரிதாரம் பூசிக் கொண்டு திரியும் துரோகிகளின் உண்மை முகம் நெருக்கடிகள் முற்றும்பொழுதுதான் அம்பலத்துக்கு வரும். மளிகை மற்றும் காய்கறி வியாபாரத்தில் இறங்கியுள்ள ரிலையன்ஸ் ஃபிரெஷ், பிக் பஜார் போன்ற தரகு முதலாளித்துவ நிறுவனங்களை எதிர்த்து தமிழகத்தைச் சேர்ந்த சிறு வியாபாரிகளும், கடைச் சிப்பந்திகளும்

may_2007.jpg

கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதியன்று குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத்தின் புறநகர்ப் பகுதியில் சோராபுதீன் ஷேக் என்பவர், போலீசுடன் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இவர் லஷ்ஹர்இதொய்பா அமைப்பைச் சேர்ந்த முஸ்லிம் தீவிரவாதி என்றும், இவர் குஜராத் முதல்வர் மோடியையும், விஷ்வ ஹிந்து பரிசத் தலைவர்களையும் கொல்ல வந்த பயங்கரவாதி என்றும் போலீசார் அறிவித்தனர்.

may_2007.jpg

விளை நிலங்களைப் பறித்து, பன்னாட்டு ஏகபோக கம்பெனிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கத் துடித்த மே.வங்க போலி கம்யூனிச அரசுக்கு எதிராக, நந்திகிராம மக்கள் நடத்திய போராட்டத்தின் இடியோசை ஓயும் முன்பே, அதன் எதிரொலி போல புதுச்சேரி மாநிலத்தில் துறைமுக விரிவாக்கத்திற்காக விளைநிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து நிற்கும் தேங்காய்திட்டு கிராம மக்களின் போராட்டம் தொடர்கிறது.

may_2007.jpg

அமெரிக்காவின் வெர்ஜீனியா பல்தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தமிழகப் பேராசிரியர் ஜி.வி.லோகநாதன் கொல்லப்பட்ட செய்தி கேட்டு இங்குள்ள அமெரிக்க அடிமைகளும் அமெரிக்க மோகிகளும் அப்படியே துடிதுடித்துப் போய்விட்டார்கள். சில ஆண்டுகளுக்கு

may_2007.jpg

"நட்டத்தில் விழுந்து கிடந்த இரயில்வே துறையை இலாபமீட்டும் துறையாக மாற்றிச் சாதனை படைத்துள்ளார் லாலு'', ""தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகப் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் பட்ஜெட் போட்டுள்ளார் ஏழைப்பங்காளர் லாலு'' என்றெல்லாம் பார்ப்பன இந்தியா டுடே முதல்

 

நவம்பர் 7, 1917. இப்பூவுலகின் ஐந்தில் ஒரு பங்கு நிலப்பரப்பில் பாட்டாளி வர்க்க ஆட்சி மலர்ந்த நாள். ஏகாதிபத்தியம் என்பது காகிதப்புலியே என நிரூபித்துக் காட்டி காலனிய நாட்டு மக்களின் மனங்களில் விடுதலைக் கனலை மூட்டிய நாள். ரஷ்யாவில் பாட்டாளிகளின் பஞ்சைப் பராரிகளின் முதல் சோசலிச அரசு உதித்த அந்த நவம்பர் புரட்சிக்கு இன்று 90ஆவது ஆண்டு நிறைவுநாள்.

puja_apri_07.jpg

அனைத்துலக மகளிர் தினமான மார்ச் 8ஆம் நாளன்று திருச்சியில் செயல்பட்டு வரும் பெண்கள் விடுதலை முன்னணி, இப்போராட்ட நாளில் மறுகாலனிய அடிமைத்தனத்தை வீழ்த்த உறுதியேற்று, கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்க மண்டபத்தில் அரங்கக் கூட்டத்தை

puja_apri_07.jpg

1980ஆம் ஆண்டு காடுகள் (பாதுகாப்பு) சட்டம் என்ற பெயரில் மத்திய அரசு ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி 1980ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதிக்கு முன்பிருந்து காடுகளில் வாழ்ந்து வருவதாக நிரூபிக்க முடியாதவர்கள் எல்லாம் ""ஆக்கிரமிப்பாளர்கள்'' என்று அறிவிக்கப்பட்டார்கள்.

puja_apri_07.jpg

1993ஆம் ஆண்டு நடந்த மும்பய் குண்டு வெடிப்பு வழக்கில் 123 பேரைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பளித்திருக்கிறது, ""தடா'' சிறப்பு நீதிமன்றம். இவர்களுக்கான தண்டனை ஏப்ரல் மாதம் அறிவிக்கப்படும் எனத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

puja_apri_07.jpg

பேட்டை ரவுடிகளும் கிரிமினல் பேர்வழிகளும் சமூக விரோத கொலை பாதகச் செயல்கள் பலவற்றில் ஈடுபட்டுக் கொண்டே, தம்மைச் சுற்றியுள்ள ஏழைகளின் திருமணம், காதுகுத்தல், கோயில் திருவிழாக்கள் முதலானவற்றில் முக்கியப் பிரமுகராகக் கலந்து கொண்டு

puja_apri_07.jpg

கோவை நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரிக்கால் நிறுவனம், கார், இரு சக்கர வாகனங்களுக்குத் தேவையான மீட்டர்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் 6 தொழிற்கிளைகள், இந்தோனேஷியாவிலும், ஈரானிலும் தலா ஒரு தொழிற்கிளை என வளர்ந்துள்ள பிரிக்கால்

puja_apri_07.jpg

தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் இருந்து நாட்டுப்புறக் கலைஞர்களை சென்னைக்கு வரவழைத்து, பொதுநூலகத் துறை, சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை உதவியுடன் தமிழ் மையம் எனும் தன்னார்வ நிறுவனம், ""சங்கமம்'' எனும் பெயரில் பிப்.20ஆம் தேதி தொடங்கி பிப்.26 முடிய, 6 நாட்களில் 400 நிகழ்ச்சிகளை, சென்னையின் மூலைமுடுக்கெல்லாம் நடத்தியது.

puja_apri_07.jpg

பங்குச் சந்தையும், அந்நிய மூலதனமும், மொத்த தேசிய உற்பத்தியும் ஒருபுறம் வளர்ந்து கொண்டே செல்லும்பொழுது, இன்னொருபுறமோ வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும், விலைவாசி உயர்வும் மக்களைப் பிடித்தாட்டுகிறது. ""வளர்ச்சி இருந்தால்

puja_apri_07.jpg

மறுகாலனியாதிக்கம் தோற்றுவித்த பயங்கரத்தால் வாழ்விழந்த விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போவதும், தொழிலாளர்கள் வேலையிழந்து கொத்தடிமைகளாக உழல்வதும், வறுமையும் பட்டினியும் பெருகுவதும் தீவிரமடைந்து வருகிறது. மறுபுறம், இந்தியாவில் பணக்காரர்களும் பெருகிக் கொண்டே போகிறார்கள். உலகின் மிகப் பெரும் கோடீசுவரர்களின் பட்டியலில் இந்தியப் பெருமுதலாளிகளும் இடம் பெற்றுள்ளதாகப் பூரித்துப் போகின்றனர் ஆட்சியாளர்கள்.

puja_apri_07.jpg

பஞ்சாப், உத்தர்கண்ட் சட்டசபைத் தேர்தல்களில் வாங்கிய அடி, காங்கிரசு கட்சியை விலைவாசி உயர்வைப் பற்றிப் பேச வைத்திருக்கிறது. அதனால், சாமான்ய மக்களின் நலனை மனதில் கொண்டு, 2007/08 ஆண்டுக்கான மைய அரசின் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி கூறி வருகிறது.

puja_apri_07.jpg

தாறுமாறாக உயர்ந்து கொண்டே போகிறது விலைவாசி. மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவுதான் இந்த விலைவாசி உயர்வு என்ற உண்மையைத் திட்டமிட்டே மறைப்பதில் எல்லா ஓட்டுக்கட்சிகளும் ஓரணியில் நிற்கின்றன. விலைவாசி உயர்வு காய்ச்சலென்றால், அதைத் தோற்றுவிக்கும் டைபாய்டு கிருமி மறுகாலனியாக்கம். கிருமியைப் பாதுகாத்துக் கொண்டே, காய்ச்சலை மட்டும் கட்டுப்படுத்தி விடலாம் என்று பித்தலாட்டம் செய்கின்றன ஓட்டுக் கட்சிகள்.

puja_apri_07.jpg

கிரிமினல் போர்ஜரி வேலைகள், திருட்டு, இலஞ்ச ஊழல் ஆகியவற்றின் மூலமாகவே குறுகிய காலத்தில் உலகப் பணக்காரனாகி விட்ட அம்பானி குடும்பத்தின் ரிலையன்ஸ் நிறுவனம், சென்னையில் 14 இடங்களில் காய்கனி அங்காடிகளைத் திறந்திருக்கிறது. சென்னை நகர மூலை முடுக்குகளிலெல்லாம் தனது அங்காடிகளை விரிவுபடுத்தவும் இருக்கிறது.

puja_apri_07.jpg

உழைக்கும் மக்களின் கட்சி என்று புளுகிக் கொண்டு மே.வங்கத்தை ஆளும் சி.பி.எம். கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி அல்ல; கார்ப்பரேட் கட்சி. அது மார்க்சிஸ்ட் கட்சி அல்ல; பாசிஸ்ட் கட்சி. கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று மே.வங்கத்தின் நந்திகிராமத்தில் போலீசும்சி.பி.எம்.மும் இணைந்து நடத்திய பாசிசக் கொலைவெறியாட்டம் இந்த உண்மைகளை மீண்டும் நிரூபித்துக் காட்டிவிட்டது.

puja_apri_07.jpg

2007 உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவும் பாகிஸ்தானும் முதல் சுற்றிலேயே கற்றுக்குட்டி நாடுகளாக மதிப்பிடப்பட்ட வங்கதேசம் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளிடம் படுதோல்வி அடைந்து வெளியேற்றப்பட்டதும், கூடவே பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பாப் உல்மரின்

puja_apri_07.jpg

பல இலட்சக்கணக்கான சிறு வியாபாரிகள் விவசாயிகள் தொழிலாளர்களின் வாழ்வை நாசமாக்கும் வகையில், சென்னையில் பல்லாயிரம் கோடி முதலீட்டில் 14 இடங்களில் காய்கனி அங்காடிகளைத் தொடங்கியுள்ளதோடு, நகரின் மூலை முடுக்கெல்லாம்

mars_2007.jpg

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நோவார்டிஸ் என்ற பன்னாட்டு மருந்து நிறுவனம், தான் தயாரித்து விற்பனை செய்துவரும் ""க்ளீவெக்'' என்ற இரத்தப் புற்று நோய்க்கான மருந்திற்கு, இந்தியாவில், தனக்குக் காப்புரிமை வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் நோவார்டிஸுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டால், மாதம்

mars_2007.jpg

பட்டியலின பழங்குடி மக்கள் என்றாலே அவர்களைப் பற்றி நாட்டின் பெரும்பாலானவர்கள், படித்த நகர்ப்புற அறிவாளிகள் கூட ஒரு தவறான கண்ணோட்டம் வைத்திருக்கிறார்கள். அறிவியல் தொழில்நுட்பம், கல்வி பண்பாடு, சமூகப் பொருளாதாரம், நாகரிகம் ஆகியவற்றால் தாங்கள்

mars_2007.jpg

சென்னைக்கு ஆந்திரமாநிலத்தின் கிருஷ்ணா ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரும் கால்வாயைப் பலப்படுத்த 200 கோடி ரூபாயை வழங்கிய மர்மச் சாமியார் சாய்பாபாவுக்குப் பாராட்டு விழா சென்னையில் இவ்வாண்டு ஜனவரியில் நடந்துள்ளது. இதை முன்னிட்டு சென்னை வந்த சாய்பாபா கோபாலபுரம் சென்று "பகுத்தறிவு'ப் பாரம்பரியத்தில் வந்த கருணாநிதியைச் சந்தித்தார்.

mars_2007.jpg

"இந்தியா உண்மையில் ஒளிர்கிறது; உறங்கிக் கிடந்த இந்தியா என்ற புலி கம்பீரமாக எழுந்து நின்று பீடுநடை போடத் தொடங்கி விட்டது. உலக அரங்கில் இந்தியாவின் பெருமையும் கௌரவமும் மேலும் ஒருபடி முன்னேறியுள்ளது. வெள்ளைக்கார காலனியாதிக்கக் கம்பெனிகளிடம் அடிமைப்பட்டிருந்த இந்திய நாடு, அந்த அடிமைத்தளைகளை விலக்கி, வெள்ளைக்கார நிறுவனத்தையே விலைக்கு வாங்கி பதிலடி கொடுத்துள்ளது!''

mars_2007.jpg

16 ஆண்டு காலச் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம், காவிரி நதி நீரைப் பகிர்ந்து கொள்வதில் ஒருமனதான இறுதித் தீர்ப்பை அளித்திருக்கிறது. காவிரியில் ஆண்டுக்கு 74,000 கோடி கன அடி நீர் கிடைக்கும் என்ற மதிப்பீட்டை (நூற்றுக்கு) 50 சதவீதம் நம்பலாம் என்ற அடிப்படையில், கர்நாடகத்திற்கு 27,000 கோடி கன அடி நீரும்; தமிழகத்திற்கு 41,900 கோடி கன அடி நீரும்; கேரளாவிற்கு 3,000 கோடி கன அடி நீரும்; புதுச்சேரிக்கு 700 கோடி

mars_2007.jpg

மறுகாலனிய, பார்ப்பனிய பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான போர் முழக்கமாக மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தி வரும் தமிழ் மக்கள் இசைவிழாவுக்கு இது 14வது ஆண்டு. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுனாமி மற்றும் வெள்ளப் பேரழிவையொட்டி மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகள் காரணமாக தமிழ் மக்கள் இசைவிழா ரத்து செய்யப்பட்டிருந்தது. இவ்வாண்டு மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இசைவிழா பிப்ரவரி 24ஆம் தேதி மிகச் சிறப்பாக நடந்தேறியது.

mars_2007.jpg

தலைமைக்குத் தனது விசுவாசத்தைக் காட்டி, அரசியல் பதவி ஆதாயம் அடைவதற்கான வேறொரு வகை பிழைப்புவாதம்தான், இந்த மனிதத் தன்மையற்ற, கொடூரமான கொலைவெறிக்கு அடிப்படையாய் இருந்தது.

mars_2007.jpg

"ஜம்முகாசுமீர் போலீசு சிறப்பு நடவடிக்கை அதிரடிப் படையும், மத்திய ரிசர்வ் போலீசு படையும் இணைந்து பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவனைச் சுட்டுக் கொன்றதோடு, அத்தீவிரவாதியிடமிருந்து ஆயுதமொன்றையும் கைப்பற்றினர்'' இப்படியொரு முதல் தகவல் அறிக்கை டிச.9, 2006 அன்று, ஜம்முகாசுமீர் மாநிலத்தில் உள்ள கந்தேர்பால் போலீசு நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த முதல் தகவல் அறிக்கையே, மறுநாள் பத்திரிகைகளில் செய்தியாகவும் வெளிவந்தது.

mars_2007.jpg

"நேற்று வரை நாங்கள் விவசாயிகள்; இன்று எங்கள் நிலம் பறிக்கப்பட்டுச் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டு விட்டோம். நிலம்தான் எங்கள் தாய்! எங்கள் தாயைப் பறித்து, எங்களை அனாதைகளாக்கிப் பட்டினியில் தள்ளி விட்டுள்ளார்கள்'' என்று குமுறுகிறார், பல்தேவ் சிங் என்ற விவசாயி. இவர் பஞ்சாப் மாநிலத்தின் பர்னாலா மாவட்டத்தைச் சேர்ந்த நடுத்தர விவசாயி.

02_2007_pj.jpg

தை மாட்டுப் பொங்கல் திருநாளில் மாடுகளுக்குப் பொங்கல் வைத்து, மாலையில் மாடுகளை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வருவதும் குலவையிடுவதும் தமிழக விவசாயப் பெருமக்களின் பண்பாடாக உள்ளது. உசிலம்பட்டி வி.வி.மு. தோழர்கள், இம்மாட்டுப் பொங்கல் விழாவை மறுகாலனியாக்கத்திற்கெதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரமாக மாற்றி மாடுகளின் ஊர்வலத்தை நடத்தியுள்ளனர்.

02_2007_pj.jpg

நடுத்தர வர்க்கத்தினர், எப்போதுமே மற்ற வர்க்கத்தினரை விட அறிவாளிகளாகத் தங்களை எண்ணி சுயதிருப்தியில் மிதக்கிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் அற்பவாதிகள். அவர்கள் அறிவோ மிகவும் மேலோட்டமானதுதான்; ஆழமானதல்ல. சமீபத்தில் வெளியான சில வழக்குமன்றத் தீர்ப்புகளைக் கண்டதும்,

02_2007_pj.jpg

அமெரிக்கா என்றால் நாகரிகம்; அமெரிக்கா என்றால் ஜனநாயகம் என அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருப்பவர்களின் பித்தைக் கூடத் தெளிய வைக்கும் வகையில், சதாமின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சதாம் அவமானப்படுத்தப்பட்டுத் தூக்கில் தொங்கவிடப்பட்டதைத் தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கு, அமெரிக்காவின் வன்மமும், திமிரும்

02_2007_pj.jpg

புதிய வேலைவாய்ப்பு; இது, நீங்கள் இதுவரை அறிந்திராத புத்தம்புதிய வேலைவாய்ப்பு. இது ஒரு புதிய உற்பத்தித் துறை. இங்கு பணியாற்ற உயர்கல்வியோ பயிற்சியோ அவசியமில்லை. இளம் பெண்கள் ஓராண்டு காலத்தில் ரூ. 50,000 முதல் ரூ. 2 இலட்சம் வரை சம்பாதிக்கலாம்.

02_2007_pj.jpg

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மங்களூர் நகரிலும்; அதன் புறநகர்ப் பகுதிகளிலும்; அந்நகரையொட்டி அமைந்துள்ள உல்லால், கோனாஜே ஆகிய ஊர்களிலும் கடந்த அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் தொடர்ந்து ஐந்து நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நேரங்களில் கூட, அப்பகுதிகளில் 144 தடையுத்தரவு அமலில் இருந்தது.

02_2007_pj.jpg

சென்னை போலீசு துறை ஆரம்பிக்கப்பட்டு 150ஆவது ஆண்டு நிறைவடைவதை ஒட்டி ஜனவரி 5ஆம் நாளன்று சென்னையில் கோலாகலமான விழாவைத் தமிழக அரசு கொண்டாடியது. அரசுத் தலைவர் அப்துல் கலாம் நேரில் வந்திருந்து சிறப்பித்து, போலீசாரை ஒன்பது உறுதிமொழிகள் ஏற்க வைத்தார். சாகச நிகழ்ச்சிகள், கண்காட்சி மற்றும் போலீசுக்கு பதக்கங்கள், புது

02_2007_pj.jpg

சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்க்கை அவலமான நிலையில் இருப்பதை, சென்னை பகுதி மீனவர்களிடம் நடந்துள்ள சிறுநீரகத் திருட்டு அம்பலப்படுத்திக் காட்டிவிட்டது. பட்டினியில் இருந்தும், கடனில் இருந்தும் தப்பித்துக் கொள்வதற்காகவே, தங்களின் சிறுநீரகங்களை விற்று விட்டதாக மீனவப் பெண்கள் கூறியிருக்கிறார்கள்.

02_2007_pj.jpg

அமெரிக்க மேலாதிக்கத் திமிரின் உச்சகட்டமாக, ஈராக்கின் "முன்னாள்' அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்ட கொடுஞ்செயலை எதிர்த்து ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் கடந்த ஜனவரி 12 தேதிகளில் தமிழகமெங்கும் தாங்கள் செயல்படும் பகுதிகளில் சுவரொட்டிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

02_2007_pj.jpg

மழை பொய்த்துப் போகும் காலங்களில்தான் காவிரியில் நீர்கேட்டு கர்நாடகாவிடம் கையேந்தும் நிலைமை உள்ளது என்றால், நல்ல மழை பெய்தும் கூட, தமிழகமே கட்டிப் பராமரித்து வரும் முல்லைப் பெரியாறு அணையில் அதன் கொள்ளளவு நீரைத் தேக்கி வைத்துப் பயன்படுத்தும் உரிமையைக் கூட அடாவடியாக

02_2007_pj.jpg

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் எனும் அடிமைச் சாசனத்தையும் அதன் கொடிய விளைவுகள் பற்றியும் உழைக்கும் மக்களுக்கு உணர்த்திய பு.ஜ.வுக்கு எனது நன்றிகள்.
விவேகானந்தன், சென்னை.

02_2007_pj.jpg

விவசாயிகளின் விளைநிலங்களைப் பறித்துச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவி வரும் மே.வங்க "இடதுசாரி' அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில், 6 விவசாயிகள் கோரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இதை மூடிமறைத்து மம்தா கட்சியினரின் வன்முறை நக்சல்பாரிகளின் வெறியாட்டம் என்று கோயபல்சை

02_2007_pj.jpg

நாயோடு படுத்தவன் உண்ணியோடுதானே எழுந்திருக்க முடியும்? தரகுப் பெருமுதலாளிகளோடும் அந்நிய ஏகபோக நிறுவனங்களோடும் கூடிக் குலாவினால் இரத்தக் கறையோடுதானே தரிசனம் தரமுடியும்? ஆம்! கொலைகாரர்களாகக் காட்சி தருகிறார்கள், மே.வங்கத்தை ஆளும் "மார்க்சிஸ்டு'கள். உழைக்கும் மக்களின் அரசு என்று மார்தட்டிக் கொண்ட மே.வங்க "இடதுசாரி' அரசு இன்று இரத்தக் கவிச்சி வீசும் கொலைகார அரசாக நாடெங்கும் நாறுகிறது.

02_2007_pj.jpg

கடந்த ஜனவரி 58 ஆகிய நான்கு நாட்களில் எழுபதிற்கும் மேற்பட்டவர்களை அசோம் ஐக்கிய விடுதலை முன்னணியினர் (உல்ஃபா) கொன்றிருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பீகாரிலிருந்து பிழைப்புக்காக அசாமுக்குப் போய் அசாமிய மற்றும் அங்குள்ள வங்காளி ""பாபு''க்களுக்குச் சேவைசெய்யும்

02_2007_pj.jpg

பொதுமக்களுக்கு வழங்கும் அனைத்து சேவைகளுக்கும் அரசாங்கம் உரிய கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது, இந்தியா போன்ற ஏழை நாடுகளின் மீது உலக வங்கி திணிக்கும் நிபந்தனைகளுள் ஒன்று. இக்கட்டளைக்குக் கீழ்படிந்துதான், குடிநீர், மின்சாரம், போக்குவரத்து என அரசால் வழங்கப்பட்டுவரும் அனைத்து விதமான சேவைகளின் கட்டணங்களும் மெல்ல

jan_07.jpg

ஒவ்வொரு "இந்து'க் கோயிலுமே, சாதிப் பாகுபாடுகள் நிலவுவதைப் பறை சாற்றும் மையங்களாகத் தான் இருந்து வருகின்றன. ஒரிசா மாநிலம் கேந்திரபுரா மாவட்டத்திலுள்ள கேரேதகடா கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோர் நடத்திய கோவில் நுழைவுப் போராட்டம், இந்த உண்மையை மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளது.

jan_07.jpg

· முல்லைப் பெரியாறு பிரச்சினையில் சுயநிர்ணய உரிமையே அரசை உலுக்கும் சரியான ஆயுதம், சரியான தீர்வு என்ற தலையங்கம் விரிந்த அரசியல் பார்வையை அளித்தது. சாதிய வெறியாட்டத்தின் இன்னுமொரு கொடிய இரத்த சாட்சியமாக உள்ள கயர்லாஞ்சி தாழ்த்தப்பட்டோர் படுகொலை அதிர்ச்சியளிப்பதோடு, இந்த அவமானத்தைத் துடைத்தெறியப் போராட வேண்டும் என்ற உணர்வூட்டுகிறது. சாதியவர்க்கதேசிய இன முரண்பாடுகளும் மோதல்களும் நிலவும் சமுதாயத்தில் யார் யாருக்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதிலிருந்தும், புரட்சிகர அரசியல் நடவடிக்கையின் நியாயத்தை முதலாளித்துவ மனிதாபிமானம் எப்படி பின்னுக்குத் தள்ளும் என்பதையும் ஒப்பிட்டு விளக்கிய அப்சல் குரு பற்றிய கட்டுரை சிறப்பு.
இரா. மணிகண்டன், சூசுவாடி.

 

· மையமாநில அரசுகளும், உச்சநீதி மன்றமும், ஓட்டுக் கட்சிகளும் காவிரி முதல் முல்லைப் பெரியாறு வரை துரோகமிழைத்து வருவதையும், பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தின் அவசியத்தையும் உணர்த்திய தலையங்கம் சிறப்பாக அமைந்துள்ளது. தனியார்மயமும் தாராளமயமும் நாட்டைச் சூறையாடுவதோடு, நாகரீகப் பொறுக்கிகளையும் உருவாக்கி எத்தகைய விபரீதங்களை ஏற்படுத்தி வருகிறது என்பதை அட்டைப்படக் கட்டுரை எடுப்பாக உணர்த்தியது. பூவுலகையே தமது இலாபவெறிக்காக நஞ்சாக்கி நாசமாக்கி விட்ட ஏகாதிபத்தியவாதிகளின் கொடுஞ்செயலை அறியும்போது அதிர்ச்சியும் ஆத்திரமும் பொங்குகிறது. வாசகர் வட்டக் கூட்டத்தின் இறுதியில், ""காந்தியின் இந்துத்துவ கோரமுகம்'' என்ற தலைப்பில் புதுக்கோட்டையைச் சேர்ந்த மருத்துவர் ஜெயராமன் அவர்கள் சிறப்புரையாற்றினார். ""தேசப் பிதா'' என்று சித்தரிக்கப்படும் காந்தி, எவ்வாறு பார்ப்பனஇந்துவெறிக்குப் பல்லக்குத் தூக்கினார் என்பதை விரிவான சான்றாதாரங்களுடன் விளக்கிக் காட்டிய அவரது உரை, வாசகர்களுக்குப் புதிய பார்வையை அளிப்பதாக அமைந்தது.
வாசகர் வட்டம், திருச்சி.

· விறகு அடுப்பு பயன்படுத்துவதால் புகை பெருகி சுற்றுச்சூழல் நாசமாவதாக ஏகாதிபத்தியவாதிகள் பீதியூட்டி வரும் நிலையில், உண்மையில் சுற்றுச்சூழலை நாசமாக்குவது யார் என்பதை அம்பலப்படுத்திக் காட்டிய கட்டுரை, அதிர்ச்சியூட்டும் தகவல்களுடன் அருமையாக அமைந்துள்ளது.
ஜீவா, ஜெயங்கொண்டம்.

· கயர்லாஞ்சி கொடூரத்தை தமிழக பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்துவிட்ட நிலையில், சாதிவெறி பயங்கரத்தை பு.ஜ. கண்முன்னே காட்டியுள்ளது. இச்சாதிவெறி பயங்கரவாதிகளுக்கு வாக்குரிமை, சொத்துரிமை, இட ஒதுக்கீடு சலுகை உள்ளிட்ட அனைத்தையும் பறிப்பதுதான் சரியான தீர்வாகும்.
முகிலன், திருச்சி.

· கூட்டு மனசாட்சியைத் திருப்திப்படுத்த அப்சல்குருவுக்கு மரண தண்டனை விதித்துள்ள இந்திய நீதித்துறை காவிப் படையாக உள்ளதை விரிவாக விளக்கியும், போலி கம்யூனிஸ்டுகளின் பொருள் பொதிந்த மவுனத்தைத் திரைகிழித்தும், வர்க்கக் கண்ணோட்டமற்ற மனிதாபிமான பசப்பல்களை எள்ளி நகையாடியும் வெளியாகியுள்ள கட்டுரை டிசம்பர் இதழுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
சம்புகன், சிவகங்கை.

 

· கோக்கின் கைக்கூலி நடிகை ராதிகாவுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம், புரட்சிகர அமைப்புகளின் போர்க்குணத்தை மீண்டும் நிரூபித்துக் காட்டுகிறது. தாராளமயம் பெற்றெடுத்த நாகரீகப் பொறுக்கிகளால் சாமானிய மக்களுக்கு விளையும் பேரபாயத்தை வர்க்க அரசியல் கண்ணோட்டத்தோடு விளக்கிய அட்டைப்படக் கட்டுரை, எனது சிந்தனையில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது.
முரளி, இராசபாளையம்.

jan_07.jpg

ஒரு பெண் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அவள் ஒரு பெண்ணாக இருக்கிறாள் என்பதற்காகவே அவளுக்கு எதிராக வன்முறைகிரிமினல் குற்றம் ஏவிவிடப்படுகிறது. பெண் அவள் கருவிலிருக்கும்போதே படுகொலை செய்யப்படுகிறாள். பெண் ஒரு உயிரற்ற பொருளைப் போல விற்கப்படுகிறாள். பெண் ஒரு

jan_07.jpg

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் வேகமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. பல்லாயிரக்கணக்கான விளைநிலங்களை ஆக்கிரமித்து, விவசாயிகளை விவசாயத்திலிருந்தே விரட்டியடித்துவிட்டு, இந்தியர்களோ இந்தியச் சட்டங்களோ நுழைய முடியாதபடி தனி சமஸ்தானங்களாக

jan_07.jpg

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கிடுகிடுவென உயர்ந்துவிட்ட நிலையில், மத்திய அமைச்சரான ராம்விலாஸ் பாஸ்வான் அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதாகவும், இந்த விலைக் குறைப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கடந்த நவம்பரில் அறிவித்தார். நாட்டை மீண்டும் காலனியாக்கி மக்களை மரணக்

jan_07.jpg

சில்லறை வியாபாரத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் நுழைந்திருப்பது; அமெரிக்காவின் சில்லறை வியாபார நிறுவனமான வால்மார்ட்டும், இந்தியாவின் பாரதி நிறுவனமும் இணைந்து இந்தியாவில் சில்லறை வியாபாரத்தில் இறங்க முடிவெடுத்திருப்பது; இங்கிலாந்தின் டெஸ்கோ மற்றும் கேரிஃபோர் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களோடு கூட்டுச் சேர்ந்து சில்லறை வியாபாரத்தில் இறங்கப் பேச்சு வார்த்தைகள்

jan_07.jpg

இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்த அறிக்கை கையெழுத்தான நாளில் இருந்தே, அதனை அடிமைச் சாசனம் என அம்பலப்படுத்தி, நாம் எழுதி வருகிறோம். அதேசமயம், அமெரிக்க அடிவருடிகள் அனைவரும், ""அமெரிக்கா, இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவை

jan_07.jpg

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் வட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மற்றும் மொரப்பூர், நல்லம்பள்ளி ஒன்றியங்களைச் சேர்ந்த பருத்தி விவசாயிகளின் எதிர்கால வாழ்வே இன்று இருண்டு போய்க் கிடக்கிறது. இப்பகுதியில் ஏறத்தாழ 4,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பருத்திச் செடிகள் பூவும் பூக்காமல், காயும் காய்க்காமல் மலடாகி நிற்பதால், ஏறத்தாழ 20 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு நட்டமேற்பட்டுள்ளது.

jan_07.jpg

மார்க்சியம் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்; ""டாடா மார்க்சியம்'' பற்றி உங்களுக்குத் தெரியுமா?

 

அதென்ன டாடா மார்க்சியம்? மார்க்சியத்துக்கு ""டாடா'' காட்டிவிட்டு, செங்கொடி பிடித்துக் கொண்டே தரகுப் பெருமுதலாளி டாடாவுக்கு விசுவாசமாகச் சேவை செய்வதற்குப் பெயர்தான் ""டாடா

jan_07.jpgமுல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் நியாய உரிமைகளை மறுத்து அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வரும் கேரள மாநில அரசைக் கண்டித்தும், உச்சநீதி மன்ற தீர்ப்பைச் செயல்படுத்தக் கோரியும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து 14.12.06 அன்று எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

jan_07.jpg

முற்றும் துறந்த துறவி வேடத்தில் ஹார்லிக்ஸ் ஷியாமளா, ஸ்ரீரங்கம் உஷா என்று பல பெண்களுடன் உல்லாச சல்லாபம் புரிந்து கொண்டு, பக்தர்களுக்கு ஆசீர்வாதமும், பல கருப்புப்பண முதலைகளின் சொத்துக்களுக்குப் பாதுகாப்பும் வழங்கிக் கொண்டிருந்த மோசடிப் பேர்வழிதான் காஞ்சி சங்கராச்சாரி. சங்கர மடத்தின் முன்னாள் விசுவாசியான சங்கரராமன் எனும் பார்ப்பனர்,

jan_07.jpg

டிசம்பர் 6, பாபர் மசூதி இடிக்கப்பட்ட கருப்பு நாளன்று சிறீரங்கம் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்பதுதான் பார்ப்பன இந்து மதவெறியர்களின் திட்டம். ""டிசம்பர் 6 இந்தியாவின் அடிமைச் சின்னம் அகற்றப்பட்ட நாள்! இந்துக்களின் வெற்றித்திருநாள்!'' என்று

jan_07.jpg

"தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு சிங்களத் தலைவர்கள் நீதியான தீர்வினை ஒருபோதும் முன் வைக்கமாட்டார்கள் என்பது இன்று தெள்ளத் தெளிவாகியுள்ளது. ஆகவே, நடக்க முடியாத விடயத்தில் நம்பிக்கை வைத்து, அதே பயனற்ற பழைய பாதையில் நடப்பதற்கு நாம் தயாராக இல்லை. சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தமிழீழ மக்களுக்கான தனியரசு

jan_07.jpg

கை நிறைய சம்பளம்; வேலை செய்து கொண்டே மேலும் படித்து முன்னேறலாம்; அதிருஷ்டமிருந்தால் அமெரிக்காவுக்கே போய்விடலாம் என்று பத்திரிகைகளால் பிரமையூட்டப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள், கொத்தடிமைகளை விடக் கேவலமான நிலையில்