Language Selection

புதிய ஜனநாயகம் 2005

08_2005.jpgமன்மோகன் சிங் அமெரிக்காவிற்குக் கிளம்பிச் செல்லும் முன்பாக இந்தியா விற்பனைக்கு அல்ல ஈரானில் இருந்து இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் திட்டத்தை மூன்றாவது நபர் தீர்மானிக்க முடியாது நாட்டுப்பற்றைப் பற்றி காங்கிரசுக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை என்றெல்லாம் போலி கம்யூனிஸ்டுகளோடு அறிக்கை போர் நடத்தினார். ஆனால் இந்த வசனமெல்லாம் வெற்றுச் சவடால்கள் என்பது மன்மோகன் சிங் அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைத்தவுடனேயே அம்பலமானது.

08_2005.jpgபுதிய அத்தியாயம் பிரதமர் மன்மோகன் சிங், அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா செல்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக, இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே இராணுவ ஒப்பந்தமொன்று கையெழுத்தானது; அவர் அமெரிக்கா சென்றிருந்த பொழுது, அணு சக்தி ஒத்துழைப்பு குறித்த மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே எத்தனையோ ஒப்பந்தங்கள் போடப்பட்டிருந்தாலும், அவற்றையெல்லாம் விட, தற்பொழுது கையெழுத்தாகியுள்ள இவ்விரு ஒப்பந்தங்களை வரலாற்றுத் திருப்பம் என்றும்; குறிப்பாக, அணுசக்தி குறித்த ஒப்பந்தம் இந்தியாவை வல்லரசாக்க உதவும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அமெரிக்க ஆதரவாளர்கள் உற்சாகம் பீறிடக் குறிப்பிடுகிறார்கள்.

08_2005.jpgகுர்கானில் ஹோண்டா நிறுவனத் தொழிலாளர்கள் மீது அரியானா போலீசார் நடத்தியுள்ள தாக்குதலுக்கு விவரணை தேவையில்லை. இராக் மக்கள் மீது அமெரிக்க இராணுவமும் பாலஸ்தீன மக்கள் மீது இசுரேல் இராணுவமும் நடத்திவரும் தாக்குதல்களில் வெளிப்படும் கொலைவெறியை இந்தத் தாக்குதலிலும் நாம் காண்கிறோம். தடிக் கம்பிற்குப் பதிலாக போலீசின் கையில் துப்பாக்கிகள் மட்டும் இருந்திருக்குமானால், இரண்டாவது ஜாலியன்வாலா பாக்கை அந்த மண் இந்தியாவிற்கு வழங்கியிருக்கும்.

08_2005.jpgதமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைஅறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலோர் சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பின்தங்கிய தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்தான். இவர்கள் தங்களின் உயர்கல்விச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக அரசிடம் போராடிப் பெற்ற சலுகைதான் கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்) ஆகும். அரசு அளிக்கும் இந்த உதவித் தொகை கல்வியாண்டின் தொடக்கத்திலேயே மாணவர்களுக்கு வழங்கப்பட்டால்தான், அவர்களால் தமது கல்விச் செலவுகளை ஈடுசெய்ய முடியும். ஆனால், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சென்ற (200405) ஆண்டிற்கான உதவித் தொகை இந்த ஆண்டு ஜூலை வரை வழங்கப்படவில்லை.

07_2005.jpg- கண்டன ஆர்ப்பாட்டம் நவரத்தினரங்கள் என்றழைக்கப்படும் இந்தியாவின் மிகப் பெரிய அரசுத்துறை நிறுவனங்களுள் ஒன்றான பாரத மிகுமின் நிறுவனத்தின் (""பெல்'') அரசுப் பங்குகளில் 10 சதவீதத்தைத் தனியாருக்கு விற்றுவிட அண்மையில் காங்கிரசு கூட்டணி அரசு அறிவித்துள்ளதை எதிர்த்து கடந்த ஜூன் 6ஆம் தேதியன்று திருச்சி ""பெல்'' ஆலை வாயிலருகே பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைமையில் ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தையும் தொழிலாளர் குடியிருப்புப் பகுதியில் தெருமுனைக் கூட்டங்களையும் நடத்தின. பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியனின் பொதுச் செயலாளர் தோழர் நாராயணசாமி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர் காளியப்பன் (ம.க.இ.க.) சிறப்பரையாற்றினார்.

07_2005.jpgபோலீசு துறையைக் கலைக்கக் கோரும் மும்பை மக்களின் போராட்டம் மிகச் சரியானது. சென்னையில் வழிப்பறி கும்பலாக, கொள்ளைக் கூட்டமாக, பிளாச்சிமடா கோக் ஆலையின் காவல் நாயாக உள்ள போலீசு துறையைக் கலைத்து, மக்கள் தமது அதிகாரத்தை ஏந்திச் சுழற்றும் மக்கள் சர்வாதிகார மன்றங்களைக் கட்டியமைக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
தளபதி சண்முகம், சென்னை.

07_2005.jpgமதுரையில் இயங்கிவரும் ""மக்கள் கண்காணிப்பகம்'' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைமையில், விடுதலைச் சிறுத்தைகள், தமிழக முசுலீம் முன்னேற்றக் கழகம், பெரியார் திராவிடர் கழகம், தமிழ் தமிழர் இயக்கம், சி.பி.ஐ., சி.பி.எம். மற்றும் தலித் மக்களுக்காகப் பாடுபடுவதாகக் கூறப்படுகின்ற தன்னார்வக் குழுக்கள் ஆகியவை இணைந்து, ""சித்திரவதைக்கு எதிரான பிரச்சாரம், தமிழ்நாடு'' என்ற ஒரு கூட்டமைப்பை கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் நடத்தி வருகின்றன.

07_2005.jpgதிருச்சி அருகே அமைந்துள்ள தரகு முதலாளித்துவ நிறுவனமான டால்மியாபுரம் சிமெண்ட் ஆலையில் 16 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியின்போது பலியானார்கள். மேலும், அதே இடத்தில் 18 கூலித் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். 28.5.05 அன்று மதியம் 12.50 மணிக்கு இக்குரூரம் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்தது.

07_2005.jpgபா.ஜ.க. அரசின் கொலை வெறியாட்டம் தவிச்ச வாய்க்கு தண்ணீர் கேட்டுப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, ஒரு கர்ப்பிணிப் பெண் உள்ளிட்டு 5 பேரைக் கொன்று வெறியாட்டம் போட்டுள்ளது, பா.ஜ.க.வின் இராஜஸ்தான் மாநில அரசு. பா.ஜ.க.வின் 18 மாத கால ஆட்சியில், இது இரண்டாவது முறையாக விவசாயிகள் மீது நடத்தப்பட்டுள்ள துப்பாக்கிச் சூடு. ஏற்கெனவே, கடந்த ஆண்டு அக்டோபரில் இதேபோல தண்ணீருக்காகப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, 5 பேரைக் கொன்றொழித்தது, கொலைகார பா.ஜ.க. அரசு.

07_2005.jpg பொலிவியாவில் அண்மையில் நடந்த மக்கள் பேரெழுச்சியும் அதைத் தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் அமெரிக்காவுக்குத் தப்பியோடியிருப்பதும் தென்னமெரிக்கக் கண்டத்தையே உலுக்குகிறது. அக்கண்டத்து நாடுகளின் பலதரப்பட்ட மக்கள் விரோத ஆட்சியாளர்கள் பொலிவிய பாணியில் இங்கேயும் மக்கள் போராட்டங்கள் வெடித்துவிடுமோ என்று பீதியில் நடுநடுங்குகிறார்கள். ஏனென்றால், கடந்த ஈராண்டுகளில் இரண்டு முறை பொலிவிய நாட்டின் அதிபர்கள், மக்கள் போராட்டங்களால் பதவியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். மேலும், பொலிவியாவில் நடக்கும் போராட்டங்கள், அந்நாட்டிற்கே உரித்தான உள்நாட்டு

07_2005.jpg ஏகாதிபத்திய நிறுவனங்கள் எள் என்றால் எண்ணெயாக நிற்கும் அடிமை புத்தி கொண்டவர்கள் இந்திய ஆட்சியாளர்கள் என்பதற்கு இன்னொரு சான்று தண்ணீர் தனியார்மயம். உலக வர்த்தகக் கழகத்தில் ""காட்ஸ்'' ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்பே, அதன் விதிகளை இந்தியாவில் நடைமுறைப்படுத்தவும் தொடங்கிவிட்டார்கள். கேரள உயர்நீதி மன்றம் கொக்கோ கோலா நிறுவனத்திற்கு ஆதரவாக அளித்த தீர்ப்பு இதை உறுதி செய்கிறது.

07_2005.jpg பன்னாட்டு தண்ணீர் நிறுவனங்களின் தரகர்கள் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டால், மோர் கொடுத்து உபசரிக்கும் பண்பாட்டைக் கொண்டது நமது தமிழகம். ஆனால், இப்பொழுதோ, தாகத்துக்குத் தண்ணீர் கேட்கும் முன்பாக, பாக்கெட் தண்ணீர் வாங்கும் அளவிற்கு சட்டைப் பையில் காசு இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ள வேண்டிய பண்பாடு நம் மீது திணிக்கப்படுகிறது.

  

1985ஆம் ஆண்டு வாக்கில் குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை 750 ஆக இருந்ததாகவும், 1995இல் இந்த எண்ணிக்கை

07_2005.jpgதலித்திய சீரழிவின் புதிய பரிமாணங்கள் ஆடுகள் ஒன்றுசேர்ந்து ஓநாய்களுக்கு விழா நடத்தி கூட்டணி கட்டியதுண்டா? தாழ்த்தப்பட்டோர் ஒன்றுதிரண்டு பார்ப்பனர்களுக்கு விழா நடத்தியதுண்டா? அதிசயம்; ஆனால் உண்மை. உ.பி. மாநில வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத புதுமை. "சரித்திரம்' படைத்துக் கொண்டிருக்கிறார், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவியான செல்வி மாயாவதி!

07_2005.jpg திருப்பூர் என்றதும் நமக்கெல்லாம் சட்டென்று நினைவுக்கு வருவது, அங்கு நடைபெறும் பனியன் ஏற்றுமதித் தொழில்தான். ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 15 கோடி ரூபாயாக இருந்த திருப்பூர் நகரின் பனியன் ஏற்றுமதி, 2004இல் 6,000 கோடி ரூபாயாக, பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்திய அரசிற்கு அந்நியச் செலாவணி ஈட்டித் தருவதாகவும்; திருப்பூரைச் சேர்ந்த 4,500 முதலாளிகளுக்குப் பொன் முட்டை இடும் வாத்தாகவும் பனியன் ஏற்றுமதித் தொழில் அமைந்திருக்கிறது. அகில உலகமுமே அறிந்திருக்கும் திருப்பூர் நகரின் இந்த பிரம்மாண்டமான வளர்ச்சி, ஏறத்தாழ 50,000 விவசாயிகளின் வாழ்க்கையை உருத்தெரியாமல் அழித்து வருவது உங்களுக்குத் தெரியுமா?

07_2005.jpg நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் கடற்கரையை ஒட்டியிருக்கும் ஜி.எச்.சி.எல். ஆலையின் நச்சுக் கழிவால், ""40 கி.மீ. வட்டச் சுற்றுக்குள் உள்ள பகுதிகள் பாலைவனமாய் மாறிவிடும் அபாயம் ஏற்படும்'' என்று அவ்வாலையினால் ஏற்பட்ட கேடுகளை பட்டியலிட்டு எச்சரித்ததோடு உடனடியாக, ஜி.எச்.சி.எல். நச்சு ஆலையின் ""மின் இணைப்பைத் துண்டிக்கவும்'', ""ஆலையின் உற்பத்தியை நிரந்தரமாக நிறுத்தி வைக்கவும்'' வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் ஆணை நிறைவேற்றி, அதை அரசின் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி உடனடியாக அமல்படுத்தக் கோரியது.

07_2005.jpg சமூகம் கல்வி, அரசியல்பொருளாதாரம் ஆகிய பலவகைகளிலும் ஒடுக்கப்படும் உழைக்கும் மக்கள், தமது வாழ்வுரிமை, வாழ்வாதாரங்களுக்கான போராட்டங்களை நடத்தவேண்டிய களம் தேர்தல்களோ, நாடாளுமன்றம் சட்டமன்றங்களோ, நீதிமன்றங்களோ அல்ல. அவற்றுக்கு வெளியே எழுச்சிக் களங்களை உருவாக்க வேண்டும். இந்த உண்மையை தொழிற்கல்விக்கான நுழைவுத்தேர்வு ரத்தை செல்லாது என்று தீர்ப்புக் கூறியதன் மூலம் நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. பொதுவில் தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கம் ஆகிய விவகாரங்கள் தொழிற்

07_2005.jpgதிருச்சி, சிறீரங்கம் வட்டத்தில் அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம், உத்தமர் சீலி. கடந்த 18.5.05 தேதியன்று இரவு 9 மணி அளவில் திருச்சி மெயின்கார்டு கேட்டிலிருந்து, கல்லணைக்குப் போகும் தனியார் பேருந்தில் உத்தமர் சீலி கிராமத்தைச் சேர்ந்த முத்தரையர் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிலரும் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் இருவரும் வந்தனர். இந்த இளைஞர்கள் அவர்களுடைய "அரிசன தெரு பஸ் ஸ்டாப்'பில் இறங்கத் தயாரான போது, முத்தரையர் சாதியினர் வேண்டுமென்றே படியில் நின்று கொண்டு வழியை மறித்தனர். அப்போது தாழ்த்தப்பட்ட இளைஞர் கையிலிருந்த "பிளம்பர்' தொழில் செய்யும் கருவி முத்தரையர் மீது உரசியது. "பள்ளப்பயலுக்கு என்னடா இவ்வளவு திமிரு' என்று

06_2005.jpg"விடுதலை'', ""ஜனநாயகம்'' என்பதற்கு அமெரிக்க மேலாதிக்கவாதிகளின் அகராதியில் உள்ள பொருள் என்ன என்பதை ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு நிரூபித்துக் காட்டிவிட்டது. அமெரிக்க ஆக்கிரமிப்பின் கொடூரத்தையும் ஈராக்கிய மக்களின் வாழ்க்கை எப்படி உருக்குலைந்து கிடக்கிறது என்பதையும், பாக்தாத் நகரைச் சேர்ந்த பொறியாளர் காஸ்வான் அல் முக்தார், அமெரிக்க அதிபர் புஷ்ஷûக்கு எழுதியுள்ள இப்பகிரங்கக் கடிதம் படம் பிடித்துக் காட்டுகிறது. குமுறிக் கொண்டிருக்கும் ஈராக்கிய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள இக்கடிதம் ""மூன்றாம் உலக மறுமலர்ச்சி'' என்ற ஆங்கில இதழில் வெளிவந்தது. அக்கடிதத்தைச் சுருக்கமாக வெளியிட்டுள்ளோம். — ஆசிரியர் குழு.

 

06_2005.jpgகரண்ட் பில் கட்டாத சாமானிய மக்களின் வீடுகளில் ப்யூஸைப் பிடுங்கும் ஆட்சியாளர்கள், மக்கள் வரிப்பணத்திலிருந்து என்ரானின் 5,250 கோடி ரூபாய் கடனை அடைக்கக் கிளம்பியுள்ள நிலையில், இம்மக்கள் விரோதிகளை எதைக் கொண்டு அடிப்பது? இவர்களுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருக்கும் போலி கம்யூனிசத் துரோகிகளை எதைக் கொண்டு அடிப்பது?
பிரியதர்ஷிணி, சென்னை.

06_2005.jpg"போலீசு துறையைக் கலைத்திடு!'' இப்படியொரு முழக்கம் கொண்ட பதாகையை (ஆச்ணணழூணூ) ஏப்ரல் மாத இறுதியில் மும்பய் நகரில் காண முடிந்தது. இது, ஏதாவதொரு புரட்சிகர அமைப்பின் வேலையாயிருக்கும் என நீங்கள் நினைத்தால், அது தவறு. மும்பய் நகர மக்கள்தான், தாங்களே இந்தப் புரட்சிகரமான முழக்கத்தை வடிவமைத்து, பேனர்களில் எழுதி, மும்பய் நகரின் பல இடங்களில் கட்டியிருந்தார்கள். ஏப்ரல் 21 அன்று மும்பயில் நடந்த சம்பவம்தான், போலீசுக்கு எதிரான போராட்டத்தில் இப்படியொரு புரட்சிகரமான தீர்வைத் தன்னெழுச்சியாக முன்வைக்கும் நிலைக்கு மும்பய் நகர மக்களைத் தள்ளியது.