Language Selection

புதிய ஜனநாயகம் 2005

05_2005.jpgஇன்னுமொரு சாட்சியம்! சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலூர் சிங்காரத் தோப்பைச் சேர்ந்த பார்த்திபன் என்ற இளைஞர் கடந்த மார்ச் 27ஆம் தேதியன்று கடன் தொல்லை தாளாமல் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயுள்ளார்.ஒரு நவீன எந்திரப் படகுடன் மீன்பிடித் தொழிலைச் செய்து வந்த இவர் சிங்காரத் தோப்பு மீனவர் பஞ்சாயத்தின் செயலராகவும் இருந்து வந்துள்ளார். சுனாமி பேரழிவினால் இவரது படகு உடைந்து நாசமாகி வாழ்விழந்து நின்றார். அரசு நிவாரணத்தின் மூலம் படகைச் செப்பனிட்டு கடனை அடைத்து, மீண்டும் வாழ்ந்து முன்னேற முடியும் என்ற அவரது நம்பிக்கையில் இடியாய் இறங்கியது அரசின் அற்ப நிவாரண உதவி.

05_2005.jpgஉழைக்கும் மக்களின் வாழ்வைச் சீரழித்து நாசமாக்கும் லாட்டரி சூதாட்டத்தைத் தமிழக அரசு தடை செய்துள்ளதைத் தொடர்ந்து, லாட்டரி முதலாளிகளான கருப்புப் பணபேர்வழிகள், லாட்டரிச் சீட்டு விற்பதையே தொழிலாகக் கொண்டோரைத் திரட்டி உண்ணாவிரதம் இருப்பது, ""அம்மா''வுக்கு வேண்டுகோள் விடுத்து நாளேடுகளில் முழுப்பக்க விளம்பரம் செய்வது என்று பலவழிகளிலும் முயற்சித்து, மீண்டும் இழந்த சொர்க்கத்தைக் கைப்பற்றத் துடிக்கின்றனர். ""அம்மா'' அசைந்து கொடுக்காததாலும், சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதாலும் எதிர்க்கட்சிகளிடம் பேரம் நடத்தி தமது சுரண்டல் முயற்சிக்கு ஆதரவு கோரி வருகின்றனர்.

04_2005.jpgவிரக்தி வேதனை துயரம்; தற்கொலை! ஒருவரல்ல இருவரல்ல; 40க்கும் மேற்பட்டோர் வேலையிழந்து வாழ்விழந்து துயரம் தாளாமல் கடந்த ஈராண்டுகளில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த டிசம்பரில் திண்டிவனத்தைச் சேர்ந்த ஆறுமுகம் உடலெங்கும் மண்ணெண்ணெய் ஊற்றித் தீயிட்டுக் கொண்டு மாண்டு போனார். நான்கு குழந்தைகளுடன் அவரது குடும்பம் பரிதவிக்கிறது. ஆறுமுகம் குடும்பத்தைப் போலவே 10இ000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவலத்தில் உழல்கின்றன.

04_2005.jpg· மைய அரசின் புதிய வரிவிதிப்புகளின் பின்னே மறைந்துள்ள உண்மையான நோக்கங்களை தலையங்கக் கட்டுரை எடுப்பாக உணர்த்தியது. மறைந்த ஓவியர் உதயனின் தூரிகையில் உருவான அற்புதமான அட்டைப்படக் கேலிச் சித்திரம் அவரது நினைவை என்றென்றும் நமது மனங்களில் நிறுத்தும். தன்னார்வக் குழுக்கள் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் நோக்கங்கள் பற்றி தெளிவில்லாமல் இருந்த எனக்கு ""வட்டமிடும் பன்னாட்டு நிறுவனங்கள்'' என்ற கட்டுரை பேருதவியாக அமைந்தது.
புரட்சிக் கவிநேசன் தேரெழுந்தூர்

04_2005.jpgகடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரத்தின் மக்களுடைய போக்குவரத்துக்கு இதயமாக இருந்த மணிமுத்தாறு பாலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பெய்த பெரும் மழையின் வெள்ளப் பெருக்கில் சிதைந்து தன்னுடைய 125 ஆண்டுகாலச் சேவையை முடித்துக் கொண்டது. அது முதல் இந்நகர மக்கள் போக்குவரத்துக்குப் படும் அவதி சொல்லி மாளாது!

 

"அவசரத்திற்கு' என்று இரு சக்கர வாகனங்களில்கூடச் செல்ல முடியாத மரப்பாலம் ஒன்றைக் கட்டிய ஆளும் கும்பல் "செலவு 7 லட்சம் ரூபாய்'

04_2005.jpgஇந்தியாவின் காடுகளிலுள்ள சிங்கம் புலி நரி ராஜநாகம் முதலான விலங்கினங்கள் படிப்படியாக அழிந்து வருவதாக ""அவுட்லுக்'' என்ற ஆங்கில வார ஏடு அண்மையில் ஒரு அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது. காடுகளிலுள்ள அரிய விலங்கினங்கள் மட்டுமல்ல; நாட்டிலுள்ள கால்நடைச் செல்வங்களும் படிப்படியாக அழிந்து வருவதோடு இனி இந்திய ஆடுமாடுகளை மிருகக்காட்சி சாலையில்தான் பார்க்க முடியும் என்ற பேரபாயம் ஏற்பட்டுள்ளது.

04_2005.jpgஓட்டுக்கட்சி ரவுடிகளால் சாதி மத வெறியர்களால் ஆளும் வர்க்கக் கும்பலால் உழைக்கும் மக்கள் மீது அன்றாடம் நூற்றுக்கணக்கான தாக்குதல்கள் ஏவிவிடப்படுகின்றன. இவற்றுள் ஏதோ ஒன்றிரண்டு தாக்குதல்கள்தான் நாடெங்கிலும் அம்பலமாகி மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. இப்படி அம்பலமான தாக்குதல்களில் கூட குற்வாளிகள் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.

04_2005.jpgபோலி கம்யூனிஸ்ட் கட்சியான சி.பி.எம். தனது 18வது அகில இந்திய மாநாட்டை ஏப்ரல் மாதத்தில் நடத்தவுள்ளது. இதற்கு முன்னதாக அக்கட்சி செயல்படும் மாநிலங்களில் மாநில மாநாடுகளை நடத்தி வருகிறது. கேரள மாநில மாநாட்டில் வழக்கம் போலவே குழுச் சண்டைகள் பகிரங்கமான நாய்ச் சண்டையாகி சந்தி சிரித்தது. இக்குழுச் சண்டைகள் பதவிக்கான சண்டையாக மட்டுமின்றி கட்சி சொத்துக்களை அனுபவிப்பதற்கான அதிகாரச் சண்டையாகவும் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.

04_2005.jpgஆந்திர மாநில அரசாங்கத்துக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு (மாவோயிஸ்ட்) கட்சிக்கும் இடையிலான சண்டை நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சு வார்த்தை அதிகாரபூர்வ அறிவிப்பின்றி ஏறக்குறைய முறிந்து போய் விட்டது என்றே சொல்லலாம். போலீசு மீண்டும் பழைய முனைப்புடன் தேடுதல் மற்றும் போலி மோதல் கொலைகளை நடத்தி வருகிறது. இ.க.க. (மாவோயிஸ்ட்) தவிர வேறு பிற நக்சல்பாரிப் புரட்சியாளர்களும் வேட்டையாடப்படுகின்றனர். பதிலடி கொடுக்கும் முகமாக இ.க.க. (மாவோயிஸ்ட்) கொரில்லாக் குழுக்களும் எதிரிகள் என்று அடையாளம் காணும் நபர்களை அழித்தொழிப்பதில் ஈடுபட்டு வருகின்றனர்.

04_2005.jpg"விதி'ப்படி சொல்லி வைத்தது போல் இயங்குகிறது தமிழக சட்டமன்றம். பெரும் ரகளை; அதன் நடுவே வழக்கமான கவர்னர் உரை வழக்கமான "பட்ஜெட்' விவாதம் கடைசியில் "சட்டசபையில் ஜனநாயகம் இல்லை' என்ற எதிர்க்கட்சிகளின் வழக்கமான கூட்டு ஒப்பாரி!

 

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்துப் பேசிய தமிழகத்து எதிர்க்கட்சிகளின் கூற்றுப்படியே தமிழகத்தின் இன்றைய நிலைமை இதுதான்:

அனைத்துலக மகளிர் தினத்தை (மார்ச்8) ஒட்டி திருச்சியில் ம.க.இ.க. மகளிர் குழுவினர் மார்ச் 15ஆம் நாளன்று எழுச்சிமிகு அரங்கக் கூட்டத்தை நடத்தினர். ""உழைக்கும் வர்க்கப் பெண்களே ஒன்று சேருங்கள்'' என்ற முழக்கத்தின் கீழ் நடந்த இக்கூட்டத்தில் சுரண்டலுக்கும் ஆதிக்கத்துக்கும் எதிரான இப்போராட்ட நாளைக் கொச்சைப்படுத்தும் முதலாளித்துவ செய்தி ஊடகங்களையும் உழைக்கும் பெண்களின் போராட்டத்தை தனிப்பட்ட குடும்பத்தில் ஆணுக்கு எதிரான போராட்டமாகத் திசை திருப்பி வரும் பெண்ணியவாதிகள் மற்றும் தன்னார்வக்

04_2005.jpgவாய் பேசாத ஊமைப்பிள்ளை திருவாய் மலர்ந்து ""எப்பம்மா தாலியறுப்பே?'' என்று தன் தாயிடம் கேட்டதாம். தென் மாவட்ட வழக்குரைஞர்கள் போராடிப் "பெற்ற' சனியனான மதுரை உயர்நீதி மன்றம் தனது முதல் சாதனையாக மக்களின் கூரைக்குக் கொள்ளி வைத்துவிட்டது.

 

மதுரை கிருஷ்ணராயர் தெப்பக்குளம் கிழக்கு தெற்கு தெருக்களிலுள்ள கடை வியாபாரிகள் அதே தெருவில் வணிகம் செய்யும் தரைக்கடை வியாபாரிகளை அப்புறப்படுத்தக் கோரி மாநகராட்சிக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் தரைக்கடைகளை அகற்றுமாறு உத்தரவிட்டதுடன் மதுரை நகரெங்குமுள்ள "ஆக்கிரமிப்புகளை' அகற்றுமாறும் மாநகராட்சிக்கு உத்திரவிட்டது மதுரை உயர்நீதி மன்றம்.

04_2005.jpgபா.ஜ.க. கூட்டணி கட்சிகள் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ப.சிதம்பரத்தின் பட்ஜெட்டைப் பாராட்டாதவர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். பொருளாதார நிபுணர்கள் இந்த பட்ஜெட்டுக்கு 10க்கு 8 மதிப்பெண் கொடுக்கலாம் என்கிறார்கள்.

 

""1997க்குப் பின்வந்துள்ள நல்லதொரு எதார்த்தமான பட்ஜெட் இது'' எனத் தரகு முதலாளிகள் வருணிக்கிறார்கள். இவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு வலது இடது கம்யூனிஸ்டு கட்சிகளும் பட்ஜெட்டைப் புகழ்ந்து தள்ளியுள்ளன.

04_2005.jpgபிப்ரவரி புதிய ஜனநாயகம் இதழில் அல்லிவயல் கிராமத்தைச் சேர்ந்த செல்லக்கண்ணுவுக்கு சிவகங்கை வலது கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியப் புள்ளியும் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவருமான குணசேகரன் கும்பலால் இழைக்கப்பட்ட அநீதியை அம்பலப்படுத்தி ஒரு கட்டுரை வெளிவந்தது. இதைத் தொடர்ந்து அல்லிவயல் பிரச்சினையில் வி.வி.மு.வின் உறுதியான போராட்டத்தைக் கண்டு உத்வேகமடைந்த பல்வேறு சக்தியினர் குணசேகரன் கும்பலின் அடுக்கடுக்கான தில்லுமுல்லு மோசடிகளை ஆதாரபூர்வமாக அளித்த வண்ணமுள்ளனர். குறிப்பாக வலதுகளின் கோட்டையாகச் சித்தரிக்கப்படும் மறவமங்கலத்தில் குணசேகரன் கும்பலின் சவால்கள் அச்சுறுத்தல்களை மீறி எழுச்சியுடன்

04_2005.jpg"மதச் சுதந்திர உரிமைகளை நேரடியாகவோ ஃ மறைமுகமாகவோ மீறும் எந்தவொரு அந்நிய நாட்டு அதிகாரிக்கும் விசாவினை (நுழைவுச் சீட்டு) மறுக்கலாம்'' என்ற அமெரிக்க சட்டத்தின்படி குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு வழங்கியிருந்த வர்த்தக ஃ சுற்றுலா விசாவினை அமெரிக்கா ரத்து செய்திருக்கிறது.

 

""மோடியின் அமெரிக்க பயணம் அரசுமுறை பயணம் அல்ல. அதனால் அவருக்கு அரசுமுறை விசாவும் வழங்க முடியாது' என மறுத்துவிட்டது அமெரிக்க அரசு.

04_2005.jpgதமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தனது சிந்தனைப் போக்கை (பார்ப்பன பாசிஸ்டுகளின் சிந்தனைப் போக்கை என்றும் கருதலாம்) மிகவும் தெளிவாகக் கடந்த மாதம் சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார். ""நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைவது காவல்துறை. வலிமையான நாடாக இந்தியா இருக்க வேண்டும்; அதில் வளமிக்க மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என்ற லட்சியம் ஈடேற வேண்டுமென்றால் தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்க வேண்டும். எந்த வளர்ச்சிக்கும் முதல் தேவையாக இருப்பது அமைதியான சூழ்நிலைதான். அத்தகைய அமைதிச் சூழ்நிலையை உருவாக்குவதிலும் அதனைக் கட்டிக் காப்பதிலும் காவல்துறையின் பணி இன்றியமையாதது. இதன் அடிப்படையில்தான் காவல்துறையை நவீனப்படுத்தவும் காவல்பணியை மேம்படுத்தவும் காவலர்கள் நலன்பேணவும் பல்வேறு திட்டங்கள் சலுகைகள் உதவிகள் ஆகியவற்றை நான் அறிவித்தேன்.''

04_2005.jpg"எம் பேரு கண்ணன். எங்கப்பா செருப்பு தைக்கிறவரு. சீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி காலனியிலதான் எங்க வீடு இருக்கு. எங்கூடப் பொறந்தவங்க ஆறு பேரு. வீட்டுல ரொம்ப கஷ்டம். அதனால, ராஜஸ்தானுல கோட்டாங்கிற டவுனுல குமான்புரா தெருவுல இருக்குற சீவில்லிபுத்தூர்காரர் வெள்ளைச்சாமியோட கடலமிட்டாய் கம்பெனிக்கு வேலைக்குப் போனேன். என்னோட எங்க காலனியில இருக்குற முனியாண்டியும் வீரய்யாவும் வேலைக்கு வந்தாங்க.

03_2005.jpgஏழை எளிய மக்கள் என்ன, வேண்டாத கழிவுப் பொருட்களா? நகருக்கு வெளியே கொண்டு போய்க் குவிக்கிறது, அரசு!

 

சிங்காரச் சென்னையில் ஏழை எளிய மக்களுக்கு வாழும் உரிமை இல்லையா? இரண்டாண்டுகளில் 20,000 குடும்பங்களை வேரோடு பிடுங்கிக் கொண்டு போய் 20 மைல்களுக்கு அப்பால் (துரைப்பாக்கத்தில்) குப்பையாகக் கொட்டியது, அரசு.

 

03_2005.jpgதிருச்சி நகரில் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பயணச் சீட்டு பெயரளவில் வழங்கப்பட்டுள்ளதே தவிர, அதைப் பயன்படுத்தும் வகையில் பள்ளி நேரத்தில் கூடுதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. பள்ளி நேரங்களில் வரும் பேருந்துகளெல்லாம் அளவுக்கு மீறிய பயணிகளோடு திணறிக் கொண்டு வருவதும், மாணவர்களை ஏற்றாமல் செல்வதும் தொடர்கிறது. இதனால் மாணவர்கள் ஜன்னல் கம்பியையும் ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்துக் கொண்டு படிகளில் தொங்கியபடியும் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்கின்றனர். கிராமப்புற பேருந்துகளில் மாணவர்கள் மேற்கூரையில்தான் பயணம் செய்ய முடிகிறது. நெரிசலில் முட்டி மோதி உள்ளே ஏறும் மாணவர்களை சில ஓட்டுநர்களும் நடத்துனர்களும் கொச்சையான வார்த்தைகளால் வசைபாடுவதும் தொடர்கிறது. சில

03_2005.jpg'சைக்கிள் பாகங்களின் பெயர்கள் எல்லாம் தமிழா?" 'ஹாண்டில் பார், செயின், ரிம், டயர், டியூப்" என்பதெல்லாம் தமிழா? அது தமிழா? இது தமிழா? என்று எகிறுகிறார் ஜெயா. தமிழ் மொழியைத் துச்சமாக மதிக்கும் அவரின் திமிரைப் புதிதாக விளக்க வேண்டியதில்லை. ஆனால், இராமதாசின் தமிழ்ப் பற்றோ மலிவான நகைச்சுவை நாடகம் போல நடக்கிறது.

 

இப்போது தைலாபுரத்தில் (ராமதாசின் பண்ணை வீட்டில்) சுத்தத் தமிழ் வாசனைதான் வீசுகிறது. 'எனது வீட்டில் ராஜா என்று ஒரு பையன் இருக்கிறான். அவனை இப்போது 'ராசா" என்றுதான் அழைக்கிறேன். அதுபோல்