Language Selection

புதிய ஜனநாயகம் 2005

07_2005.jpg பன்னாட்டு தண்ணீர் நிறுவனங்களின் தரகர்கள் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டால், மோர் கொடுத்து உபசரிக்கும் பண்பாட்டைக் கொண்டது நமது தமிழகம். ஆனால், இப்பொழுதோ, தாகத்துக்குத் தண்ணீர் கேட்கும் முன்பாக, பாக்கெட் தண்ணீர் வாங்கும் அளவிற்கு சட்டைப் பையில் காசு இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ள வேண்டிய பண்பாடு நம் மீது திணிக்கப்படுகிறது.

  

1985ஆம் ஆண்டு வாக்கில் குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை 750 ஆக இருந்ததாகவும், 1995இல் இந்த எண்ணிக்கை

07_2005.jpgதலித்திய சீரழிவின் புதிய பரிமாணங்கள் ஆடுகள் ஒன்றுசேர்ந்து ஓநாய்களுக்கு விழா நடத்தி கூட்டணி கட்டியதுண்டா? தாழ்த்தப்பட்டோர் ஒன்றுதிரண்டு பார்ப்பனர்களுக்கு விழா நடத்தியதுண்டா? அதிசயம்; ஆனால் உண்மை. உ.பி. மாநில வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத புதுமை. "சரித்திரம்' படைத்துக் கொண்டிருக்கிறார், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவியான செல்வி மாயாவதி!

07_2005.jpg திருப்பூர் என்றதும் நமக்கெல்லாம் சட்டென்று நினைவுக்கு வருவது, அங்கு நடைபெறும் பனியன் ஏற்றுமதித் தொழில்தான். ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 15 கோடி ரூபாயாக இருந்த திருப்பூர் நகரின் பனியன் ஏற்றுமதி, 2004இல் 6,000 கோடி ரூபாயாக, பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்திய அரசிற்கு அந்நியச் செலாவணி ஈட்டித் தருவதாகவும்; திருப்பூரைச் சேர்ந்த 4,500 முதலாளிகளுக்குப் பொன் முட்டை இடும் வாத்தாகவும் பனியன் ஏற்றுமதித் தொழில் அமைந்திருக்கிறது. அகில உலகமுமே அறிந்திருக்கும் திருப்பூர் நகரின் இந்த பிரம்மாண்டமான வளர்ச்சி, ஏறத்தாழ 50,000 விவசாயிகளின் வாழ்க்கையை உருத்தெரியாமல் அழித்து வருவது உங்களுக்குத் தெரியுமா?

07_2005.jpg நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் கடற்கரையை ஒட்டியிருக்கும் ஜி.எச்.சி.எல். ஆலையின் நச்சுக் கழிவால், ""40 கி.மீ. வட்டச் சுற்றுக்குள் உள்ள பகுதிகள் பாலைவனமாய் மாறிவிடும் அபாயம் ஏற்படும்'' என்று அவ்வாலையினால் ஏற்பட்ட கேடுகளை பட்டியலிட்டு எச்சரித்ததோடு உடனடியாக, ஜி.எச்.சி.எல். நச்சு ஆலையின் ""மின் இணைப்பைத் துண்டிக்கவும்'', ""ஆலையின் உற்பத்தியை நிரந்தரமாக நிறுத்தி வைக்கவும்'' வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் ஆணை நிறைவேற்றி, அதை அரசின் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி உடனடியாக அமல்படுத்தக் கோரியது.

07_2005.jpg சமூகம் கல்வி, அரசியல்பொருளாதாரம் ஆகிய பலவகைகளிலும் ஒடுக்கப்படும் உழைக்கும் மக்கள், தமது வாழ்வுரிமை, வாழ்வாதாரங்களுக்கான போராட்டங்களை நடத்தவேண்டிய களம் தேர்தல்களோ, நாடாளுமன்றம் சட்டமன்றங்களோ, நீதிமன்றங்களோ அல்ல. அவற்றுக்கு வெளியே எழுச்சிக் களங்களை உருவாக்க வேண்டும். இந்த உண்மையை தொழிற்கல்விக்கான நுழைவுத்தேர்வு ரத்தை செல்லாது என்று தீர்ப்புக் கூறியதன் மூலம் நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. பொதுவில் தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கம் ஆகிய விவகாரங்கள் தொழிற்

07_2005.jpgதிருச்சி, சிறீரங்கம் வட்டத்தில் அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம், உத்தமர் சீலி. கடந்த 18.5.05 தேதியன்று இரவு 9 மணி அளவில் திருச்சி மெயின்கார்டு கேட்டிலிருந்து, கல்லணைக்குப் போகும் தனியார் பேருந்தில் உத்தமர் சீலி கிராமத்தைச் சேர்ந்த முத்தரையர் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிலரும் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் இருவரும் வந்தனர். இந்த இளைஞர்கள் அவர்களுடைய "அரிசன தெரு பஸ் ஸ்டாப்'பில் இறங்கத் தயாரான போது, முத்தரையர் சாதியினர் வேண்டுமென்றே படியில் நின்று கொண்டு வழியை மறித்தனர். அப்போது தாழ்த்தப்பட்ட இளைஞர் கையிலிருந்த "பிளம்பர்' தொழில் செய்யும் கருவி முத்தரையர் மீது உரசியது. "பள்ளப்பயலுக்கு என்னடா இவ்வளவு திமிரு' என்று

06_2005.jpg"விடுதலை'', ""ஜனநாயகம்'' என்பதற்கு அமெரிக்க மேலாதிக்கவாதிகளின் அகராதியில் உள்ள பொருள் என்ன என்பதை ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு நிரூபித்துக் காட்டிவிட்டது. அமெரிக்க ஆக்கிரமிப்பின் கொடூரத்தையும் ஈராக்கிய மக்களின் வாழ்க்கை எப்படி உருக்குலைந்து கிடக்கிறது என்பதையும், பாக்தாத் நகரைச் சேர்ந்த பொறியாளர் காஸ்வான் அல் முக்தார், அமெரிக்க அதிபர் புஷ்ஷûக்கு எழுதியுள்ள இப்பகிரங்கக் கடிதம் படம் பிடித்துக் காட்டுகிறது. குமுறிக் கொண்டிருக்கும் ஈராக்கிய மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள இக்கடிதம் ""மூன்றாம் உலக மறுமலர்ச்சி'' என்ற ஆங்கில இதழில் வெளிவந்தது. அக்கடிதத்தைச் சுருக்கமாக வெளியிட்டுள்ளோம். — ஆசிரியர் குழு.

 

06_2005.jpgகரண்ட் பில் கட்டாத சாமானிய மக்களின் வீடுகளில் ப்யூஸைப் பிடுங்கும் ஆட்சியாளர்கள், மக்கள் வரிப்பணத்திலிருந்து என்ரானின் 5,250 கோடி ரூபாய் கடனை அடைக்கக் கிளம்பியுள்ள நிலையில், இம்மக்கள் விரோதிகளை எதைக் கொண்டு அடிப்பது? இவர்களுக்குச் சாமரம் வீசிக் கொண்டிருக்கும் போலி கம்யூனிசத் துரோகிகளை எதைக் கொண்டு அடிப்பது?
பிரியதர்ஷிணி, சென்னை.

06_2005.jpg"போலீசு துறையைக் கலைத்திடு!'' இப்படியொரு முழக்கம் கொண்ட பதாகையை (ஆச்ணணழூணூ) ஏப்ரல் மாத இறுதியில் மும்பய் நகரில் காண முடிந்தது. இது, ஏதாவதொரு புரட்சிகர அமைப்பின் வேலையாயிருக்கும் என நீங்கள் நினைத்தால், அது தவறு. மும்பய் நகர மக்கள்தான், தாங்களே இந்தப் புரட்சிகரமான முழக்கத்தை வடிவமைத்து, பேனர்களில் எழுதி, மும்பய் நகரின் பல இடங்களில் கட்டியிருந்தார்கள். ஏப்ரல் 21 அன்று மும்பயில் நடந்த சம்பவம்தான், போலீசுக்கு எதிரான போராட்டத்தில் இப்படியொரு புரட்சிகரமான தீர்வைத் தன்னெழுச்சியாக முன்வைக்கும் நிலைக்கு மும்பய் நகர மக்களைத் தள்ளியது.

06_2005.jpg"பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் ஒப்படைத்தால், என்ன ஆகும்?'' எனப் படித்த மேதாவிகளிடம் கேட்டுப் பாருங்கள். ""அரசின் கையில் இருந்ததைவிட, அந்த நிறுவனங்கள் நல்ல இலாபத்தில் நடக்கத் தொடங்கிவிடும்; நிர்வாகம் ஒழுங்காக நடக்கும்'' என்ற ஒரே பதில்தான் நமது செவிட்டில் வந்து விழும்.

06_2005.jpg"ஆன்மீகச் செம்மல், அன்னதானப் பிரபு, இந்தியாவின் விடிவெள்ளி, வாழும் அம்பேத்கார், உலகப்புகழ் ஸ்ரீமான் மு.ஆதிகேசவன், பி.ஏ.பி.எல் தேசிய தலைவர், அகில இந்திய டாக்டர் அம்பேத்கார் எஸ்.சி., எல்.டி., நலக்கூட்டமைப்பு'' இப்படியெல்லாம் சுவரொட்டிகளில் தனக்குத்தானே விளம்பரம் செய்து கொண்ட திருவாளர் ஆதிகேசவன் இப்போது அரைடஜனுக்கும் மேற்பட்ட செக்மோசடிகள் மற்றும் கொலை முயற்சி போன்ற கிரிமினல் குற்றச்சாட்டுகளின் கீழ் தமிழக போலீசால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

06_2005.jpg"நாட்டை மீண்டும் காலனியாக்காதே! மரணக் குழியில் மக்களைத் தள்ளாதே!'', ""மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்காவின் கொலைவெறி, ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளை முறியடிப்போம்!'', ""இந்திய அரசே! நேபாளத்தின் பிற்போக்கு மன்னராட்சிக்கு ஆயுதம் வழங்காதே! நேபாளத்தில் புதிய ஜனநாயக அரசமைக்கப் போராடும் கம்யூனிசப் போராளிகளை வேட்டையாடும் அமெரிக்காவின் சதிக்குத் துணை போகாதே!'' என முழக்கமிட்ட மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும்

06_2005.jpgகும்மிடிப்பூண்டி மற்றும் காஞ்சிபுரம் இடைத் தேர்தல்களில் அ.தி.மு.க. பெற்ற அமோக வெற்றி, அக்கட்சியினரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டது!

 

இவ்விரு தொகுதிகளிலும் முன்னெப்போதையும்விட அதிகமான அளவு ஓட்டுப்பதிவு நடந்துள்ளதோடு, அ.தி.மு.க. பெரும் வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

06_2005.jpg"குழந்தைத் திருமணம் பிற்போக்குத்தனமான மூடப்பழக்கம்; அது, குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையைக் காவு கொடுப்பதற்கு ஒப்பானது சட்டப்படி தவறானது'' எனக் கிராம மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்ததற்காக, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சகுந்தலா வர்மா என்ற பெண் அதிகாரி மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். அவரைக் கொலை செய்துவிடும் முடிவோடு நடத்தப்பட்ட இத்தாக்குதலில், அவரின் இரு கைகளும் துண்டாகித் தனியாக விழுந்துவிட்டன. அவரது கூந்தல் அறுக்கப்பட்டு, அவர் கோரப்படுத்தப்பட்டுள்ளார்.

06_2005.jpg இசுலாமிய மகளிர் அமைப்புகள், முசுலீம் தனிநபர் சட்டத்தில் சீர்திருத்தங்களைக் கோரும் சில அறிவுஜீவிகள் ஆகியோர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததற்கு இணங்க, அனைத்திந்திய முசுலீம் தனிநபர் சட்ட வாரியம், ""நிக்காஹ்நாமா'' என்றழைக்கப்படும் திருமண ஒப்பந்தமொன்றைப் புதிதாகத் தயாரித்து, கடந்த மே 1 அன்று வெளியிட்டு இருக்கிறது. திருமணத்தை நடத்தி வைக்கவும்; மணவிலக்கு உள்ளிட்டு கணவன் மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கவும் இப்புதிய திருமண ஒப்பந்தத்தையே மாதிரியாகப் பயன்படுத்திக் கொள்ளும்படி, அவ்வாரியம் முசுலீம் மதத்தைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரையும் கேட்டுக் கொண்டிருக்கிறது.

06_2005.jpgமே.வங்க போலி கம்யூனிஸ்டு முதல்வரின் ஒப்புதல் வாக்குமூலம் ""டாடா பிர்லா கூட்டாளி; பாட்டாளிக்குப் பகையாளி'' என்று முன்னொரு காலத்தில் முழங்கிய சி.பி.எம். கட்சி இப்போது, ""டாடாவும் பிர்லாவும் எங்கள் பங்காளி; பாட்டாளிகளே பகையாளி'' என்று முழக்கமிடத் தயாராகிவிட்டது. தொழிலாளர் போராட்டங்களுக்குத் தடைவிதித்துவிட்டு, அன்னிய நேரடி முதலீடுகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் இப்போலி கம்யூனிஸ்டுகள், மாவீரன் பகத்சிங், வீரபாண்டிய கட்டபொம்மன் வரிசையில் தரகுப் பெருமுதலாளி டாடாவையும் சேர்த்து மாபெரும் நாட்டுப் பற்றாளனாகச் சித்தரித்து புகழாரம் சூட்டுகிறார்கள். கொள்ளைக்கார மோசடி தரகுப் பெருமுதலாளி முகேஷ் அம்பானிக்கு

06_2005.jpgநிலத்தடி நீர் வளமிக்க கேரளத்தின் பாலக்காடு மாவட்டம், சித்தூர் தாலுகா, பிளாச்சிமடா கிராமத்தின் நீர் வளத்தை இரண்டே ஆண்டுகளில் சூறையாடி யதோடு, விளைநிலங்களையும் தனது கழிவு நீரால் நாசமாக்கியிருக்கிறது கொக்கோ கோலா ஆலை. குறிப்பிட்ட வரம்புக்கு மேல் நீரை உறிஞ்சக் கூடாதென்று கேரள உயர்நீதி மன்றத்தின் நீதிபதி பாலகிருஷ்ணன் நாயர் டிசம்பர் 13, 2003 அன்று விதித்திருந்த தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்த கொக்கோ கோலா நிறுவனம், கடந்த ஏப்ரல் 7ம் தேதியன்று தனக்குச் சாதகமான தீர்ப்பை வாங்கி விட்டது.

06_2005.jpgநாட்டை மீண்டும் காலனியாக்குவதில் போலி கம்யூனிஸ்டுகளின் ஆதரவோடு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது, காங்கிரசு கூட்டணி ஆட்சி. காப்புரிமைச் சட்டத் திருத்தம், மதிப்புக் கூட்டு வரி விதிப்பு, ஜவுளி பின்னலாடை ஏற்றுமதிக்கு இருந்து வந்த ""கோட்டா'' முறை ரத்து, புதிய ஓய்வூதியச் சட்டம், புதிய விதைச் சட்டம், புதிய சந்தைச் சட்டம் என உலக வர்த்தகக் கழக ஒப்பந்தப்படி இந்தியப் பொருளாதாரத்தை இந்த ஆண்டிற்குள் முற்றிலுமாக மாற்றியமைக்கும் வேகத்தோடு அடுத்தடுத்து தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது.

06_2005.jpgமதுரை மாவட்டம், உசிலை வட்டத்திலுள்ள ரிசர்வ் தொகுதியான கீரிப்பட்டியில் 1996 முதல் 19 முறை பஞ்சாயத்து தேர்தல் அறிவிக்கப்பட்டும், அந்த பஞ்சாயத்துத் தலைவர் நாற்காலியில் ஒரு தலித் அமர முடியவில்லை. பாப்பாபட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நின்ற நரசிங்கம் என்ற தலித் வேட்பாளர் மர்மமான முறையில் இறந்துள்ளார். நாட்டார்மங்கலம் தொகுதியில் யாரும் வேட்பு மனுக் கூடத் தாக்கல் செய்யவில்லை.

05_2005.jpgமகாராஷ்டிரத்தை ஆளும் காங்கிரசு கூட்டணி அரசுக்குத் திடீரென இளைஞர்கள் பற்றிய அக்கறை பொத்துக் கொண்டு பொங்கி வழியத் தொடங்கியிருக்கிறது. மும்பய் மாநகராட்சி எல்லை தவிர, அம்மாநிலத்தின் பிற பகுதிகளில் இயங்கி வரும் இரவு நேர நடன விடுதிகளைத் தடை செய்யப் போவதாக அறிவித்துள்ள அம்மாநில அரசு, ""இந்த விடுதிகள் இளைஞர்களின் மனதைக் கெடுப்பதோடு, நமது பண்பாட்டுக்கு ஆபத்தாகவும் இருக்கிறது'' என இத்தடைக்குக் காரணங்களை அடுக்கியிருக்கிறது.