கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்

புரட்சிகர அமைப்பு என்று கூறப்பட்ட புளொட் எதிர்ப்புரட்சிகர வடிவில்

(ஜே.ஆர் ஜெயவர்த்தனா)

அநுராதபுரநகரில் நிராயுதபாணிகளான நூற்றுக்கு மேற்பட்ட அப்பாவிச் சிங்களப் பொதுமக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கோரத்தனமாக சுட்டுக் கொன்ற சம்பவமானது " போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்" என்ற சுலோகத்துடன் சிறுபான்மை இனங்கள் மீது வெளிப்படையாகவே இனவாதத்தைக் கக்கியபடி பதவிக்கு வந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான ஜக்கிய தேசியக்கட்சிக்கு விழுந்த பெரும் அடியாக இருந்தது. இந்திய அரசின் முயற்சியால் ஒழுங்கு செய்யப்பட்டுக் கொண்டிருந்த பேச்சுவார்த்தைக்கான அழைப்பை அலட்சியம் செய்துவந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, அனுராதபுரம் நகர் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலானது தனது போர் அறைகூவலுக்கான பதிலாக தனது வாசல்படிக்கே வந்திருப்பதை கண்டுகொண்டிருந்தார். இதனால் சிறுபான்மை இனங்கள் மீது போர் தொடுப்பதையே தனது அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா தற்காலிக "சமாதானம்" வேண்டி திம்புப் பேச்சுவார்த்தைக்கு செல்லவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார். அனுராதபுரத்தில் அப்பாவிச் சிங்கள மக்களைப் பலியெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளும், குமுதினிப் படகிலும் நற்பிட்டிமுனையிலும் அப்பாவித் தமிழ்மக்களைப் பலியெடுத்த இலங்கை அரசும் தமது இரத்தக்கறை படிந்த கரங்களுடன் "சமாதானம்" வேண்டி திம்புப் பேச்சுவார்த்தைக்கு தயாராகினர்.

மேலும் படிக்க …

கேள்வி:

கடந்த இரு ஆண்டுகளாக தேசிய அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் ஏற்பட்ட தங்களுடைய அனுபவங்களையும், நேபாள காங்கிரசு போன்ற பிற்போக்குவாத பாராளுமன்ற வலதுசாரி கட்சிகளின் எதிர்ப்பு நடவடிக்கை குறித்து எவ்வாறு கருதுகிறீர்கள்?

பதில்:

மேலும் படிக்க …

உமாமகேஸ்வரனால் தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட கந்தசாமி (சங்கிலி)

செல்வன், அகிலனுடன் மூதூரில் கைது செய்யப்பட்டு பின் யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தவரான கரோலினைத்(சக்தி) தொடர்பு கொண்டு அவரைச் சந்தித்துப் பேசுவதன் மூலம் செல்வன், அகிலனுக்கு உண்மையில் நடந்ததென்ன? என்ற விபரத்தை அறிய முயன்றோம். எம்மைச் சந்தித்துப் பேசுவதற்கு உடன்பாடு தெரிவித்திருந்த கரோலின்(சக்தி) திருநெல்வேலியிலுள்ள பாண்டியின் வீட்டுக்கு வந்திருந்தார். மூதூரில் S.R.சிவராம், வெங்கட் ஆகியேரால் கைது செய்யப்பட்டபோது நடந்த சம்பவங்களால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த கரோலின்(சக்தி) அந்தக் கோரச்சம்பவங்களிலிருந்து மீண்டு வரமுடியாதவராகக் காணப்பட்டதோடு செல்வன், அகிலன் கைது செய்யப்படும்போது நடந்த சம்பவங்களையும் விபரித்துக் கூறினார். செல்வன், அகிலனை கைதுசெய்வதற்கு தலைமைவகித்துச் சென்றது S.R.சிவராம் என்பதையும், S.R.சிவராமுடன் வெங்கட்டும் வேறு சிலரும் வந்திருந்தனர் என்பதையும் உறுதிப்படுத்தினார்.

மேலும் படிக்க …

கேள்வி: புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் ஒரு வர்க்க போராட்டம் நடைபெற்று வருவதாக நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். நேபாளத்தில் எந்த விதமான சக்திகள் அது முன்னேறுவதற்கு தடையாகவோ அல்லது ஆதரவாகவோ உள்ளது என்றும், அவை அரசில் சட்டத்தை உருவாக்குவதில் எவ்விதம் வெளிப்படுகின்றன என்றும் குறிப்பிட முடியுமா? வெவ்வேறு கட்சிகளில் இந்த சக்திகளின் தாக்கம் எவ்வாறு உள்ளது. எத்தகைய கட்சிகள் பிற்போக்கானவை?

மேலும் படிக்க …

மரணத்தின் பின்னான மகிழ்ச்சி ஆரவாரங்கள்
துப்பாக்கி ரவைகளாகவே
வானை நோக்கி தீர்க்கப்படுகின்றன
எண்ணையை நோக்கியவர்கள்
குண்டுகட்கான பெறுமதியை வென்று விட்டார்கள்
உத்தியோக பூர்வமாக
லிபிய மக்களை கிளர்ச்சியாளர்கள் மீட்டு விட்டதாய்
வீழும் முதலாளித்துவம்
கிலாரி வடிவில் ‘வாவ்’ எனும் போதே
ஈராக் ஆப்கான் லிபிய இரத்தம் உதட்டில் சிவந்திருக்கிறது

மேலும் படிக்க …

மூதூரில் படுகொலை செய்யப்பட்ட செல்வன், அகிலன்

தமிழீழ விடுதலை இயக்க(TELO) வட்டுக்கோட்டை முகாமிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குச் சென்றிருந்த போது புளொட்டின் திருகோணமலை மாவட்டப் பொறுப்பாளர் செல்வன் (சின்னத்துரை கிருபாகரன்), மூதூர் மாவட்டப் பொறுப்பாளர் அகிலன் (சாமித்தம்பி லோகேந்திரராஜா) ஆகியோர் பங்குனி 26,1985 மூதூரில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டதாக அறிந்தோம். இலங்கை அரசபடைகளால் தேடப்பட்ட நிலையிலும் புளொட்டின் வளர்ச்சிக்காக முழுநேரமாக தம்மை அர்ப்பணித்து செயற்பட்டவர்களை கடத்திச் சென்றது இலங்கை இராணுவமோ அல்லது இஸ்ரேலிய மொசாட் உளவுப்படையினரால் பயிற்றுவிக்கப்பட்ட விசேட அதிரடிப்படையினரோ அல்ல, புளொட்டுக்குள் தமது சொந்தத் தோழர்களை மட்டுமின்றி சக இயக்க உறுப்பினர்களையும் தனது பதவிவெறிக்காகக் கொன்றொழித்த உமாமகேஸ்வரனின் உத்தரவின் பேரில் அவரது ஏவல்நாய்களாக தளத்தில் செயற்பட்டுக்கொண்டிருந்த பதவிமோகமும் கொலைவெறியும் கொண்ட ஒரு கும்பல்தான்.

மேலும் படிக்க …

நண்பர்கள் வட்டம், வளையம், ஒன்றியம், மாவட்டம்  என்ற பெயர்களில் இறந்தவர்களின் நினைவுதினம் கொண்டாடப்படுவது    ஐரோப்பாவில தொண்ணுறுகளில இருந்து சீவிக்கிறவர்களுக்கு  தெரியும். பாரிஸ் இதற்கு பேர்போன நகரம். அதுக்கடுத்ததாகண்டன்.

மேலும் படிக்க …

மரணமில்லை தோழனே
மக்கள் எழுச்சி கொள்ளும் இடமெல்லாம்
தோழர் விசு
மக்களிற்காய் வாழ் என்று
மூட்டிவிட்ட நெருப்பிருக்கும்

மேலும் படிக்க …

1977 ஆம் ஆண்டு தேர்தலில் போது வண்ணை ஆனந்தன் என்ற ஆசாமி “மரம் பழுத்தால் வெளவால்களை” (வெளிநாடுகளை) அழைக்கத் தேவையில்லை. அவை தாமாக பறந்து வரும் என கதை விட்டு, இளைஞர்களின் இரத்தத்தினை சுடாக்கி இரத்தத் திலகமிடவைத்தும்; தாழ்த்தப்பட்ட சாதியினைச் சேர்ந்த உடுப்பிட்டி வட்டாரக்கல்வி அதிகாரியாக இருந்த இராசலிங்கம் அவர்களை உடுப்பிட்டி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி, உலகமே உடுப்பிட்டி தொகுதியின் முடிவினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது என்று தமிழ் குறுந்தேசிய வெறியினை ஊட்டி தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் வென்று பாராளுமன்றம் சென்றதுடன் மக்களிற்கு கொடுத்த தமிழீழ வாக்குறுதியினையும் காற்றில் பறக்கவிட்டனர்.

மேலும் படிக்க …

“எமது தாயகம் தமிழீழம்எமது குறிக்கோள் தமிழீழம், எமது தலைவர் பிரபாகரன்” என்று 2009ம் ஆண்டு புலம் பெயர்ந்த நாடுகளின் தெருக்களில் நின்று மக்களை கூக்குரல் போடவைத்த புலம்பெயர் வியாபாரிகள், இன்று தமக்குள் புலிகளின் பெயரால் மக்களை ஏமாற்றி பெற்ற சொத்துகளுக்காக வெட்டுக் குத்துப்படுகின்றனர். தமிழ் மக்களின் பணத்தை தின்று ஏப்பம்விட்ட இந்த பிரகிருதிகள்,  மீண்டும் புலிகள் இயக்கம், பிரபாகரனின் பெயர் மற்றும் உயிர் நீர்த்த மாவீரர்களை பாவித்து வியாபாரம் செய்து மீளவும் மக்கள் பணத்தில் உல்லாசமாக வாழ முற்படுகின்றனர்.

மேலும் படிக்க …

புளொட்டின் அராஜகவாதிகளை நேரடியாக முகம் கொடுப்பதற்குத் தயாரானோம்

புளொட்டிலிருந்து வெளியேறியிருந்த எம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் எம்மை கைது செய்து அழிப்பதற்கான முயற்சிகளையும் மட்டுமல்லாமல் புளொட்டின் கடந்தகால அராஜக செயற்பாடுகள் குறித்தும் புளொட்டுக்குள்ளேயே ஒருபகுதியினர் கேள்விகளை எழுப்ப தொடங்கியிருந்தனர். நாம் புளொட்டிலிருந்து வெளியேறிய பின்பு எம்மேல் சுமத்தப்பட்ட உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களையும், எம்மை அழித்தொழிப்பதற்கு உமாமகேஸ்வரனின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் சிரம் தாழ்த்தி வரவேற்று உமாமகேஸ்வரனுக்கு மிகவும் விசுவாசமாக காட்ட முற்பட்டு தத்தமது சொந்த நலன்களை இலக்காகக் கொண்டு மற்றொரு பகுதியினர் செயற்பட்டுக் கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க …

“மக்கள் அவர்கள் இருப்பிடத்தைக் காலி செய்துவிட்டு கேம்ப் பகுதிக்கு வந்தாக வேண்டும். இக்காரியத்தைச் செவ்வனே செய்து முடிக்க அரசு பேருதவி செய்ய தயாராக இருக்கிறது. சரணடைய மறுக்கும் கிராமங்கள் தீக்கிரையாக்கப்படும். இந்தச் செய்தியை ஊடகத்திற்கு எடுத்துச் செல்ல முனையும் பத்திரிகையாளர், செய்தியாளரைக் கண்ட இடத்திலேயே சுட்டுத்தள்ளுங்கள்…..” இந்த அதிகார வர்க்கத்தின் குரல் வந்தது ஈழத்தில் இருந்து அல்ல. இந்தியாவிலிருந்து இந்திய மக்களுக்கு எதிராக வந்தக் குரல்தான் இது. பிஜப்பூரின் காவல்துறை அதிகாரி தனக்கு கீழ் பணி  புரியும் காவல்துறைக்கு வயர்லஸ் மூலமாக பிறப்பித்த உத்தரவு… அதிகாரியின் பெயர் டி. எஸ். மன்ஹர்.

மேலும் படிக்க …

”We Want… தமிழீழம்…We Want… தமிழீழம்…Our Leader… பிரபாகரன்…Our Leader… பிரபாகரன்… டம்… டம்… டம்… டம்” என்ற மேளத்தின் இசை ஒலியோடு மக்கள் கூட்டத்தின் கோசம் வானைப் பிளக்கிறது. ஒவ்வொருவரது கோசங்களில் இணைந்த உச்சரிப்புக்களிலும் இருந்த உணர்ச்சியின் வேகமும் அதனோடு ஊறிய உச்சாட்ட வெறியின் கொதிப்பும் ஆவேசமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. டம்… டம்… டம்… டம்… We want தமிழீழம், We want தமிழீழம், Our Leader பிரபாகரன், Our Leader பிரபாகரன். நூறல்ல.., ஆயிரமல்ல கிட்டத்தட்ட லட்சங்களைத் தாண்டிவிட்ட மக்கள் கூட்டம். குழந்தைகள் குட்டிகள், கிழடுகட்டைகள், இளைஞர்கள், குமருகள் எனச் சத்தம் போட்டபடி ஊர்வலம் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க …

ஒரு கணம்

ஒரேயொரு கணம்

கனவில் கூட

வாழ முடியாது உன்னால்

வாழ்வின் கடைநிலை மாந்தராய்.

செக்கிழுப்பாயா

கல்லுடைப்பாயா

மண் சுமப்பாயா

நீரிறைப்பாயா

மேலும் படிக்க …

புளொட்டின் அராஜகங்களுக்கு துணை போன "இடதுசாரிகள்"

புளொட்டுடன் தன்னை இணைத்துக் கொள்வதற்கு முன்பு இடதுசாரி அரசியலில் ஈடுபட்டு வந்த குமரன் (பொன்னுத்துரை) புளொட்டின் நீண்டகால உறுப்பினராகவும் விளங்கினார். மத்தியகுழு உறுப்பினராக இருந்த பெரியமுரளியும் கூட காந்தீயம், மற்றும் புளொட் அமைப்புக்களில் நீண்டகாலமாக செயற்பட்டு வந்த ஒருவர் என்பதோடு தோழர் தங்கராஜாவின் அரசியல் கருத்துக்களுடன் - இடதுசாரிய அரசியல் கருத்துக்களுடன் - மிகவும் நெருக்கமாக இனம் காணப்பட்டிருந்தார். இடதுசாரிக் கருத்துக்களுடன் காணப்பட்ட இவர்கள் இருவரையும் உமாமகேஸ்வரனும் அவரது உளவுப்பிரிவும் கூட "சந்ததியாரின் ஆட்கள்" என்ற கண்ணாடிக்கூடாகவே நோக்கியிருந்தபோதும் இவர்கள் இருவரும் "சந்ததியாரின் ஆட்கள்" என பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை.

மேலும் படிக்க …

அவனுடைய நெஞ்சு உச்சவேகத்தில் பட்டுப்பட்டென்று அடித்தது. கைகால்கள் படபடக்க.., ஆத்திர ஆத்திரமாக வந்தது. அழுகை.., கத்தல்.., ஒப்பாரி.., சத்தம் கூடக்கூட அவனது இரத்தக் கொதிப்பும் மேலும் மேலும் ஏறிக் கொண்டிருந்தது. எல்லோரையும் விலத்திக் கொண்டு போய் அங்கே இருக்கும் உலக்கையினை எடுத்து அந்த இருவரதும் மண்டையினைப் பிளந்து விட வேண்டும் போலிருந்தது. கோபத்தை அடக்கிக் கொண்டு சிந்தனையையும், பார்வையினையும் வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.

மேலும் படிக்க …

சில நாட்களுக்கு முன்னர் சென்னை தியாகராய நகரிலுள்ள சென்னை சில்க்ஸ், சரவணா ஸ்டோர்ஸ் உட்பட பல வணிக வளாகங்கள் கட்டிட விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதால் இழுத்து மூடப்பட்டன.  இதற்கு முன்னரும் இதுபோன்ற சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.  அவ்வப்போது இதுபோன்ற கண்துடைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும், அபராதம் வசூலித்துவிட்டு கண்டுகொள்ளாமல் விடுவதும் தொடர்ந்தே வந்திருக்கிறது.  ஒவ்வொருமுறை இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் போதும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள், அரசியல்வாதிகள், பின்னணிகள் மீது எந்த விசாரணைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. ஆனால் இந்தமுறை அதிகாரிகளும் இலக்காக்கப்படுவார்கள் என்று கூறப்படுவது, ஒரு நேர்மையான தோற்றத்தையும், மக்களிடம் பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறது.

மேலும் படிக்க …

பிணக்காடாக்கிய பேரழிவு

இனம் மீழ்ச்சிகொள்வதற்கான படிப்பினைகளை

மட்டுமே விட்டுச்சென்றதாயில்லை

மீள்பொறிக்கான சதியாளரிடம் கையளித்துள்ளது

ஏகாதிபத்தியங்களின் முட்டி மோதலிற்குள்

மூழ்கி முத்தெடுப்பதாய்

சாணக்கிய சவடால் மீளெளுந்துள்ளது!

மேலும் படிக்க …

எமக்கு பாதுகாப்பளிக்க முன்வந்த தமிழீழ விடுதலை இயக்கம்(TELO)

புளொட் இராணுவப் பிரிவினரால் கைதடி சுற்றி வளைக்கப்பட்ட பின், கைதடிப் பகுதியிலிருந்து வெளியேறி வேறு இடத்திற்குச் செல்வதற்கென நள்ளிரவு வரை கைதடி வடக்கு நவபுரம் பகுதியில் சண்முகநாதனுக்காக(சண்) காத்துக் கொண்டிருந்தோம். கைதடி வடக்கில் நவபுரம் கிராமம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே முறையாக செப்பனிடப்பட்டிராத வீதி வழியாக நாம் தங்கியிருந்த குடியிருப்பை நோக்கி மினிவான் ஒன்று வந்து கொண்டிருந்தது. புளொட் இராணுவப் பிரிவினர்தான் நாம் தங்கியிருக்கும் இடமறிந்து வந்து விட்டார்களோ என எண்ணிக்கொண்டு ஒவ்வொருவரும் வெவ்வேறு திசைகளில் தப்பி ஓடுவதற்கு தயாரானோம்.

 

மேலும் படிக்க …

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More