கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்

ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட முன்னோடிகள்

“ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை” இக்கோசம் 70-ம். ஆண்டு தேர்தல் காலத்திலும், வட்டுக்கோட்டை மாநாட்டிலும் “தமிழ் ஈழத்திற்காக” ஓங்கி ஒலித்தது. தமிழர் கூட்டணியின் அன்றைய பிரச்சார மேடைகளின்” ஆஸ்தான கவிஞர் காசியண்ணா அவர்களால் இளைஞர்களை உசுப்பேத்துவதற்கும் பாடிய வரிகளாகும்.

இலங்கையில் தமிழ்-சிங்கள மன்னர்கள் தொடர்ச்சியாக பரம்பரை பரம்பரையாக ஆண்ட வரலாறு என்ற ஒன்றில்லை. அப்படியானால் இந்ந ஆண்டபரம்பரைகள், பரம்பரை பரம்பரையாக யாரைத்தான் ஆண்டுள்ளது? சாதியரீதியான ஒடுக்கப்பட்ட மக்களைத் தவிர வேறு யாரையுமல்ல என்பதே நிதர்சனமாகும்.

மேலும் படிக்க …

இந்திய-இலங்கை ஒப்பந்தமும் "இந்திய அமைதி காக்கும் படை"யின் வருகையும்

இந்திய அரசின் "ஒப்பரேசன் பூமாலை" நடவடிக்கையின் மூலம், ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த "ஒப்பரேசன் லிபரேசன்" இராணுவ நடவடிக்கையைத் தொடர்வதில் தனது உடன்பாடின்மையை உறுதியாகவும், தெளிவாகவும் இந்தியா வெளிப்படுத்தியிருந்ததுடன், இலங்கை இனப்பிரச்சனையில் - இலங்கை உள்விவகாரங்களில் - தனக்குள்ள "கரிசனை"யையும் இந்தியா வெளிக்காட்டியிருந்தது.

இலங்கை இராணுவம் வடமராட்சியில் பெற்றிருந்த வெற்றியையடுத்து குடாநாட்டை கைப்பற்றுவதை நோக்கி முன்னெடுத்துச் செல்லவிருந்த இலங்கை அரசின் "ஒப்பரேசன் லிபரேசன்" இராணுவ நடவடிக்கைத் திட்டம் இந்தியாவின் "மனிதாபிமான"த் தலையீட்டால் நிறுத்தப்பட்ட அதேவேளை இந்திய அரசுடன் பேசவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு இலங்கை அரசு உள்ளானது.

மேலும் படிக்க …

"ஒப்பரேசன் லிபரேசன்" - வடமராட்சியைக் கைப்பற்றிய இலங்கை இராணுவம்

"தீப்பொறி"ச் செயற்குழுவுக்குள் தவறான அரசியல் போக்குகளும், தவறான முடிவுகளுமே மேலோங்கி வளர்ந்து கொண்டிருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது. இருந்தபோதும் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவுக்குக் கட்டுப்பட்டும் அதேவேளை தவறான அரசியல் போக்குகளுக்கும், தவறான முடிவுகளுக்கும் எதிராக செயற்குழுவுக்குள்ளிருந்தே தொடர்ச்சியாகப் போராடுவதென தீர்மானித்தேன். தோழர் சுனிமெல்லை "தீப்பொறி"க் குழுவுடன் இணைத்துக் கொள்ள முடியாது என்ற செயற்குழுவின் முடிவானது அதன் உள்ளடக்கத்தில் முழுமையான இனவாதக் கண்ணோட்டத்தின்பாற்பட்டதென்பதோடு தம்மை இடதுசாரிகள் என அழைத்துக் கொண்டு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் பலர் எப்படி இனவாதம் என்ற சகதிக்குள் காலடி எடுத்து வைத்திருந்தனரோ அதையொத்த ஒரு செயலாகவே காணப்பட்டது. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இடதுசாரிகள் பலர் இனவாதிகளாகக் காணப்படுகின்றனர் என கூறிக் கொண்டிருந்த நாமும் கூட இப்பொழுது அதே பாதையில் பயணிக்கத் தொடங்கியிருந்தோம்.

மேலும் படிக்க …

ஏழை உழைப்பில் கொளுத்தவர்களே

உங்கள் மாளிகைகளிற்கு அருகாய்
தூசு கிடந்தாலும்
தொற்றுநோய் வந்திருமென்கிறாய்

மேலும் படிக்க …

கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்) மீதான கைக்குண்டுத் தாக்குதல்

வவுனியாவில் "தீப்பொறி" குழுவின் செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தன. எம்முடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தவர்கள் குழுக்களாக உருவாக்கப்பட்டு அரசியல்ரீதியில் வளர்வதை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த வேளை வவுனியா தம்பி "தீப்பொறி" குழு செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாகவும், ஆனால் தன்னாலான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் எமக்கு தொடர்ந்தும் வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க …

சாதியம் இல்லாததாகப் போகின்றதா? சாதியப் போராட்டம் முற்றுப் பெற்றுவிட்டதா?

கட்டுரைக்குள் செல்லமுன் எனது முந்தைய “வெள்ளாள மாக்சிஸம்” பற்றிய பதிவிற்கு வந்த வெறும் “தலித் ஓதல்களை” விடுத்து,  தோழர்கள்  (இலங்கை-தமிழக-புகலிட) நண்பர்களின் ஆக்கபூர்வமான விமர்சனங்களை நான் கவனத்தில் கொள்வேன். குறித்த கட்டுரை இரு சம்பவங்களை மாத்திரம் கவனத்தில் எடுத்து எழுதப்பட்டது. குறிப்பாக தீபம் தொலைக்காட்சியில் நடந்த உரையாடலையும், தற்போது புகலிடத்தில் தலித்தியம் பேசியபடி இலங்கை அரசின் கைக்கூலிகளாக செயற்பட்டுக் கொண்டிருப்பவர்கள் பற்றியுமே பார்க்கப்பட்டது. அதை விரிவாகப் பார்த்திருக்க வேண்டும். அதை செய்யத் தவறியதாலேயே விமர்சனங்கள் குவித்தன. அவ்விமர்சனங்களை கருத்தில் கொண்டு என் பதிவுகளைத் தொடர்வேன். தவிரவும் விடயத்திற்கு வருகின்றேன்..

மேலும் படிக்க …

புதுக்கத் தார் மெழுகிய

அந்தத் தெருவை

டக்கிளசு போட்டாரென

அனுங்கினான் ஒரு தம்பி.

மேலும் படிக்க …

தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடரும் சக ஈழ விடுதலைப் போராட்ட இயக்க அழிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் அருணகிரிநாதன் விஜிதரனை விடுதலை செய்யக்கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் "நெருப்புத்தினம்" எனற பெயரில் மக்களை அணிதிரட்டி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் (EPRLF) போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) ஜனநாயக மறுப்புக்கும் பாசிசப் போக்குக்கும் எதிராக, அவ்வியக்கத்தின் இராணுவப் பொறுப்பாளர்களை குறிவைத்துக் கொன்றொழிக்கும் திட்டங்கள் போன்ற தவறான அரசியல் வழிமுறைக்கு மாறாக, மக்களை அணிதிரட்டி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போராடும் சரியான அரசியல் வழிமுறையைப் பின்பற்றியவர்களாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் (EPRLF) காணப்பட்டிருந்தனர்.

மேலும் படிக்க …

எனை நான் புலம் பெயர்த்திய

காலத்தின் முன்பாக

அந்தத் தெருக்கள்

நீண்டதாய் பரந்து கிடந்தன.

ஏன் தானோ இப்போது

ஒரு வழிப் பாதை போல

அவை குறுகிக் கிடக்கிறது.

வீட்டுக்கு அறிக்கையான வேலியும்

கறையானின் மண்ணை அப்பி

கட்டுகள் உக்கி அறுபட்டு

மேலும் படிக்க …

கிட்டுவைக் கொலை செய்வதற்கான எமது திட்டம் தனிநபர் பயங்கரவாதமே

தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) போராளிகளை கொன்றொழித்து தமிழீழ விடுதலை இயக்கத்தை (TELO) அழித்தொழிப்பதில் "வெற்றி" பெற்றிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) தமது ஜனநாயக மறுப்பையும் பாசிசத்தன்மை கொண்ட போக்கையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்த அதேவேளை அத்தகைய செயற்பாடுகளை சமூகத்தின் அனைத்துப் பகுதியினர் மீதும் தொடர்வதை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். ஆனால் ஈழவிடுதலைப் பேராட்டத்தின் மீதும் மக்கள் மீதும் உண்மையான அக்கறை கொண்டவர்களும் ஜனநாயக, முற்போக்கு சக்திகளும் தமிழீழ விடுதலைப் புலிகளின்(LTTE) ஜனநாயக மறுப்புக்கும் பாசிசப் போக்குக்கும் எதிராகப் போராட முன்வந்தனர். தமிழீழ விடுதலை இயக்க (TELO) அழிப்பைக் கண்டித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) யாழ்ப்பாணத்தில் கண்டன ஊர்வலத்தை மேற்கொண்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE)ஜனநாயக விரோத, மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும் ஜனநாயகத்தை வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புக்கள் அறிக்கைகளை வெளியிட்டன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்தும், ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்தும் "யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் குழு"வினர் தமது துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டிருந்தனர்.

மேலும் படிக்க …

நீங்கள் ஆணியே புடுங்க வேண்டாம்.

இந்தியாவே எல்லாத்தையும் புடுங்கி விடும்!

எது தேவையான ஆணி, எது தேவையில்லாத ஆணி எண்டு எப்பிடி கண்டுபிடிக்கிறது?

நீ ஆணியே புடுங்க வேண்டாம், அப்பிடியே ஓடிப்போயிடு – வடிவேலு,  தத்துவாசிரியர்

மேலும் படிக்க …

போரஸ்ரொய்கா:கிளாஸ்நொகோவின் பின் ஸ்டாலின் மீதான அவதூறு மீண்டும் ஒருமுறை தீவிரமாகியது. மதம் - மதம்சார்ந்த முற்போக்கு சிந்தனை எல்லாம் ஒன்றாகச் சங்கமிதது மாக்சிய மனிதநேயம் ரசியாவில் மலர்ந்து விட்டதாக எஸ்.வி.ராஜதுரை அவர்கள் குதுகாலித்து. ரசியபுரட்சியில் இலக்கியசாட்சியம் என்ற புத்தகத்தை ஸ்டாலின் அவர்களுக்கு எதிராகவே தொகுத்து எழுதியிருந்தார். பல முரண்பாட்டைக் கொண்ட இப் புத்தகமானது ஸ்டாலின் மீதான அவதூறு மட்டுமல்ல மார்க்சிய திரிபுமாகும். அண்மைக்காலத்தில் தேசம் நெற்றில் வெளியாகியிருந்த கட்டுரையொன்றில் ரவிசுந்தரலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட வழமையான குற்றச்சாட்டுக்களோடு புதிதாக, பாதிரியார் ஆவதற்கு ஸ்டாலின் கல்வியும் பயிற்சியும் பெற்றார் எனவும் எழுதப்பட்டிருந்தது.

மேலும் படிக்க …

தமிழீழ விடுதலை இயக்க (TELO) அழிப்பு: பாசிசப் போக்கின் வெளிப்பாடு

தளமாநாட்டினால் தோன்றிவிட்டிருந்த முரண்பாடுகளும், குழப்பநிலையும், அணிச் சேர்க்கைகளும், இந்தியாவில் புளொட்டின் தலைமைக்குள் தோன்றிவிட்டிருந்த முரண்பாடுகளும், புளொட்டின் பின்தள மாநாட்டைக் கூட்டுவதை நோக்கிய தயாரிப்புகளின் போது வெளிப்படத் தொடங்கின. உமாமகேஸ்வரன் தலைமையில் படைத்துறைச் செயலர் கண்ணன், அரசியல் செயலர் வாசுதேவா, மாணிக்கம் தாசன் போன்றோர் ஓரணியாகவும், பரந்தன் ராஜன் தலைமையில் ஆதவன் (ராமசாமி), ஈஸ்வரன், பாபுஜி, செந்தில் ஆகியோர் உட்பட ஒரு குழுவினர் மற்றொரு அணியாகவும் புளொட் பிளவுற்றது. சந்ததியார் தலைமையில் "தீப்பொறி" குழுவின் வெளியேற்றத்தின் பின்னராக புளொட்டுக்குள் ஏற்பட்ட பெரியதொரு பிளவாக அது காணப்பட்டது.

மேலும் படிக்க …

1

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின் வந்த சில மாதங்களின் பின் "வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு" என்ற தலைப்பில் காலச்சுவடு ஒரு கட்டுரையை வெளியிட்டது. அக்கட்டுரை பற்றி எழுதிய தோழர் இரயாகரன் அவர்கள், காலச்சுவட்டில் வெளிவந்த கட்டுரை முள்ளிவாய்க்காலில் இருந்து இறுதி யுத்தத்தின் பின் வெளியேறி அரச இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டவரால் எழுதப்படவில்லை என் விவாதித்தார்.

மேலும் படிக்க …

"தமிழீழ விடுதலைப் போராட்டம்" குறித்து செயற்குழுவுக்குள் ஆரம்பித்த விவாதம்

இலங்கை அரசுக்கும் ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குமிடையில் பூட்டான் தலைநகர் திம்புவில் நடைபெற்றுக்கொண்டிருந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றிருந்தது. ஜே.ஆர் ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை இனவாத அரசு வடக்கு-கிழக்கு மக்கள் மீதான போருக்குத் தயாராகிக் கொண்டிருக்க, ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கிடையிலானதும், இயக்கங்களுக்குள்ளானதுமான முரண்பாடுகளும் மோதல்களும் - ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குள்ளே காணப்பட்ட அரசியல் வறுமை காரணமாக தோற்றம் பெற்றிருந்த முரண்பாடுகளும் மோதல்களும் - வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.

மேலும் படிக்க …

ஐயோ.ஐயோ.. ஏன் இந்த வாழ்க்கை…எனக்கு…     கடவுளே இந்த ஊரிலே வந்து வாழ்வதை விட நான் செத்துத் தொலைச்சிருக்கலாம். கேவலம்….  வெட்கம் விட்டு போய்ச் சரணடைந்தேனே..

மேலும் படிக்க …

தளம் திரும்பவிருந்த சந்ததியார் சென்னையில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்

உமாமகேஸ்வரனும் அவரால் தலைமை தாங்கி வழிநடத்தப்படும் புளொட்டின் செயற்பாடுகளிலும் உறுப்பினர்களிடையே தோன்றிவிட்டிருந்த அதிருப்தியும் உள்முரண்பாடுகளும் தளமாநாடு ஒன்றைக் கூட்டுவதை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. உமாமகேஸ்வரனின் உண்மையான சொரூபத்தையும் புளொட்டின் உண்மைநிலையையும் உணர்ந்து கொண்ட பலர் புளொட் செயற்பாடுகளிலிருந்து விலகிக் கொண்டிருந்தனர்.

எமது வெளியேற்றத்தின் பின் யாழ்ப்பாண மாவட்டப் பொறுப்பாளராக செயற்பட்டுக் கொண்டிருந்த வனிதா(சாந்தி) யாழ்ப்பாண மாவட்டப் பொறுப்பாளர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். வனிதாவின்(சாந்தி) பொறுப்புக்கு இந்தியாவில் இராணுவப்பயிற்சி முடித்து தளம் திரும்பிவந்திருந்த பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார். இராணுவப் பயிற்சி முடித்தவர்களை பொறுப்பாளர்களாக நியமிப்பதன் மூலம் புளொட்டை மீண்டும் ஒழுங்குபடுத்தி, புத்துயிரளித்து தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என உமாமகேஸ்வரனும் அவரது துதிபாடிகளும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க …

ஏலவே வடக்குக் கிழக்கு மக்களை யுத்தத்தால் கொன்றொழித்து, வந்த பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கம் இப்போது நாட்டின் ஏகப் பெரும்பான்மையான அனைத்துத் தொழிலாளர்கள் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உழைக்கும் மக்களை விலை உயர்வுகளால் சாகடிக்க ஆரம்பித்துள்ளது. இவ் இடத்தில் இன, மொழி, மதப் பேதங்களுக்க அப்பால் அனைத்து உழைக்கும் மக்களும் ஐக்கியப்பட்டு வீதியில் இறங்கிப் போராடுவதே ஒரே மார்க்கமாகும்.

மேலும் படிக்க …

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More