கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்

உன்னை உதைப்பதும்

என்னை வதைப்பதும்

என்னுயிர் குடித்ததும்

உன்னுயிர் பறித்ததும்

சிங்களனல்ல

தமிழனுமல்ல

உலகெலாம் நிறைந்து

இரத்தம் உறிஞ்சும்

மூலதனத்தின்

பிசாசுக்கரங்கள்.

மேலும் படிக்க …

கொக்குவில் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட பின்னர்தான், நான் இராணுவத்தால் தேடப்படும் ஒரு நபராக இருப்பதை அறிந்தேன். எனது வீட்டிற்குச் சென்று சோதனையிட்ட இராணுவத்தினர், எனது அனைத்துப் புகைப்படங்களையும் எடுத்துச் சென்றுவிட்டிருந்தனர். நிலைமைகள் அனைத்துமே தலைகீழாகவும், முன்னரைவிட இன்னும் சிக்கலானதாகவும் மாறிவிட்டிருந்ததன. புளொட்டில் நான் இணைந்ததிலிருந்து எனது வீட்டில் இருந்தபடியே அனைத்து செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தேன். இராணுவ சுற்றிவளைப்புக்குப் பின்னான நிலைமையோ, இனிமேலும் வீட்டில் இருக்கமுடியாது என்றாகியது மட்டுமல்லாமல், கொக்குவிலை எமது தேவைகளுக்காகப் பயன்படுத்துவதையும் அறவே சாத்தியமற்றதாக்கியது. எதிரியைப் பற்றிய எமது தவறான கணிப்பீடு, விழிப்புணர்வின்மை, காலந்தாழ்த்திய முடிவுகள் போன்றவற்றால் தொடர்ச்சியாக இழப்புக்களை சந்திக்க வேண்டியிருந்தது.

 

மேலும் படிக்க …

இந்த பன்னிரண்டு வருட வெளிநாட்டு வாழ்க்கையில் இப்படி ஒரு நாளும் தினேஸ் சந்தோசமாக இருந்ததில்லை. இஞ்சை வந்த கொஞ்சக் காலம் அப்பிடி இப்படி என்று ஓடிவிட்டாலும் சினேகிதர்களுடன் சேர்ந்து முஸ்ப்பாத்தி சந்தோசம் என்று காலம் கழிந்தாலும் காசு விசையத்திலும் உழைப்பு விசையத்திலும் மிகக் கண்ணாகவே இருந்தான்.

மேலும் படிக்க …

கைலாசபதியும் மு. தளையசிங்கமும்

“இன்று எழுந்துள்ள ‘நற்போக்கு’க் கூடாரம் கைலாசபதியின் பெயரை முற்றாக ஒதுக்கிவிட முயல்கிறது. ‘முற்போக்கு’க் கட்சி எப்படி அவரையே முழு முதல் இலக்கியக் கடவுளாக வழிபட விரும்பிற்றோ அப்படியே ‘நற்போக்கு’ அவரின் பெயரை முற்றாக அழித்துவிட முயல்கிறது. அதனால் இரண்டும் பிழைத்து விடுகின்றன. உண்மை இரண்டிலும் இல்லை. இரண்டுக்குமிடையில் தான். கைலாசபதி கட்டாயம் நம் இலக்கியப் பார்வையை ஒரு படி உயர்த்தியே தான் இருக்கிறார். முதலில் அதை ஒப்புக் கொண்டு தான் கைலாசபதியின் செல்வாக்கைப் பற்றிய ஒரு ஆராய்ச்சி ஆரம்பமாக வேண்டும்”  என கைலாசபதியின் இலக்கியப் பார்வை பற்றி குறிப்பிடுகின்றார் மு.தளையசிங்கம்

மேலும் படிக்க …

குமரன்:

எஞ்சி இருக்கும் புலிகளின் வலை அமைப்பையும் துடைத்த்ழிக்கும் ஒப்பரேஷன்..

"ஒபரேஷன் கொனொக்! புலிகளை முற்றாக அழிக்க முழுச் சதி: அதிரடி ரிப்போர்ட் !

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=1813

குமரன் :

ஐ.நா அறிக்கையில் இது தொடர்பாக இரண்டு முக்கிய விடயங்கள் கூறப்பட்டிருந்தது

1. விடுதலைப் புலிகள் மக்களைக் பணயமாகப் பயன்படுத்தினார்கள் என்பது, இதன் மூலம் நாட்டின் விடுதலைக்காகவும் மக்களைக் காக்கவும் தம்முயிரைப் பணயம் வைத்த ஆயிரமாயிரம் போராளிகளின் 30 வருட தியாகம் தூக்கி எறியப்பட்டது.

 

மேலும் படிக்க …

சாமத்தியக் கொண்டாட்டம் முடிஞ்சவுடன் இரவுப் பார்ட்டிக்கு நீ கட்டாயம் நிற்க்க வேண்டும் என்ற சிவாண்னையின் வேண்டு கோளுக்கிணங்கத் தான் நான் இங்கு வரவேண்டிய நிலை. தவிர்க்கவும் முடியாது. மறுக்கவும் முடியாது.


எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. குடிப்பதற்கல்ல இங்கே வருவதற்கு தான்.
போனால் குடிக்க வேண்டும்.
குடிச்சா கதைக்க வேண்டும்.
கதைச்சா அரசியலும் வரும்.
அரசியல் வந்தா சண்டை வரும்.
சண்டைவந்தா…

மேலும் படிக்க …

சந்ததியார் படகுவழியாக இந்தியாவிலிருந்து வருகை

புளொட்டுக்குள் தோன்றியிருந்த தவறான போக்குகள் குறித்து ஆரம்ப காலங்களிலேயே பல்வேறு மட்டங்களிலும், புளொட்டுக்குள்ளேயே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும் கூட, அவற்றிற்கு சரியான முறையில் தீர்வு காணப்படவில்லை - மத்தியகுழு என்று சொல்லப்பட்ட குழுவிலும் கூட. இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் புளொட் தலைமையில் இருந்த பெரும்பான்மையானோர் தாம் தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து வித்தியாசமான போக்கை கொண்டவர்களென்றும், மார்க்சிய சிந்தனையாளர்கள் என்றும், எமது போராட்டத்தினூடாக "அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிந்து" சமத்துவ சமுதாயம் படைப்போம் என்றும் கூறிக் கொண்டனரே தவிர, அதற்கான தத்துவார்த்த வழிகாட்டலையே, அரசியல் அறிவையோ கொண்டிருக்கவில்லை என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.

 

மேலும் படிக்க …

கலியாணம் முடிச்சு மனிசி இங்கே என்னிடம் வந்து இன்றையோடு மூன்றே மூன்று நாள் தான்.  என்ன வெளியிலே மட்டுமா குளிர், உள்ளேயும் குளிர் தானே என்று ஒரு இடமும் வெளிக்கிட விருப்பமில்லாமல் போர்த்துக் கொண்டு சோபாவில் இருந்த படியே ரீவியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மனிசி என்று குறிப்பிட்டு எழுதுவதால் பெண்ணியவாதிகள் கோவிச்சு கொள்ள வேண்டாம்.

மேலும் படிக்க …

ஜெயமோகன் தன்னுடைய கட்டுரையின் மூன்றாவது பகுதியை இப்படி முடித்திருக்கிறார். “இதை ஊகிக்கப் பெரிய கோட்பாட்டு வாசிப்போ அரசியல் ஞானமோ ஒன்றும் தேவையில்லை. கொஞ்சம் பொதுப்புத்தி இருந்தாலே போதும்” அதாவது அவர் எடுத்துவைத்திருக்கும் அந்தக் கோணத்தை புரிந்துகொள்வதற்கு உள்வாங்கிக் கொள்வதற்கு பரந்த படிப்பனுபவம் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, மக்களிடம் படிந்திருக்கும் பொதுப்புத்தியே போதுமென்கிறார். சரிதான், பொதுப்புத்தியை தட்டியெழுப்பும் வகையில் ஆழ்ந்த ஆய்வு போன்ற தோற்றத்தில் குறிப்பிட்ட ஒரு உள்நோக்கோடு எழுதப்படுகையில், அந்த எழுத்தாளுமையின் மயக்கத்தோடு இணைந்துகொள்ள பொதுப்புத்தி போதுமானது தான்.

மேலும் படிக்க …

.. இராசரத்தினமும் டானியலும்

“நான் கடிதம் எழுதிக் கேட்டிருந்தபடி டானியல் அவர்கள் முதன் முதலாக என்னை ஈழகேசரிக் காரியாலயத்தில் சந்திக்கின்றார். மிக  அமைதியாக, அடக்க ஒடுக்கமாக” என்கின்றார் வ. அ.

இதற்கான காரணம் பின்னர்தான் எனக்கு விளங்கியது. யாழ்ப்பாணத்து உயர்சாதிக்காரர்கள்,  பஞ்சமர் என்ற கீழ்சாதி மக்களை ஒதுக்கியே வாழ்ந்தார்கள். மூதூரில் பிறந்த என்னை கற்பனை  பண்ணிக்கூடப் பார்க்க முடியாத அளவுக்குப் பஞ்சமர்கள் ஒதுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வாழ்ந்தார்கள். அரசியலில் கொம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே அவர்களைப்  அணைத்துப் பிடித்தது. கொம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து கொண்ட பஞ்சமர்கள் சிலர் இலக்கிய நாட்டங் கொண்டு தம் எழுத்துக்களில் சாதித் திமிரை சாடினார்கள். அப்படியாக வந்த பல எழுத்தாளர்களில் டானியலும் ஒருவர். இப்படி தன் ‘இலக்கிய நினைவுகள் எனும் நூலில் குறிப்பிடுகின்றார். வ.அ.

மேலும் படிக்க …

சுந்தரம் படுகொலையின் பின்னான சுந்தரம் படைப்பிரிவு

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அதன் ஆரம்பகாலங்களிலேயே வெறுமனவே சுத்த இராணுவக் கண்ணோட்டம் கொண்ட ஒரு குழுவின் தனிநபர் பயங்கரவாத நடவடிக்கையாகவே இருந்து வந்தது(ஐயரின் "ஈழ விடுதலைப்போராட்டத்தில் எனது பதிவுகள்" என்ற தொடரை படிக்கவும்). தமிழீழ விடுதலைப்புலிகளுக்குள் தோன்றிய முரண்பாடுகளும் அதன் பின்னான " புதியபாதைக்" குழுவினரின் பிரிவும் அன்றைய சூழலில் ஓரடி முன்னோக்கிய நகர்வாகவே பார்க்கப்பட வேண்டும். அன்றிருந்த சமூக, அரசியல் பின்னணியில் இருந்து " புதிய பாதை " யின் பணியை மதிப்பீடு செய்வோமானால் இது புலனாகும். நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சங்களுடன் கூடிய, பிரதேசவாத சிந்தனைகள், சாதிய அமைப்பு முறைகளுடன் கூடிய ஒரு "பிற்பட்ட" கலாச்சாரத்தைக் கொண்ட சமூகமாக எமது சமூக அமைப்பு இருந்தது. சிங்கள பேரினவாதம் ஒருபுறமும் தமிழ்க்குறுந்தேசியவாதம் மறுபுறமும் கோலோச்சிய காலமாக இருந்தது.

 

மேலும் படிக்க …

”நோர்வே, உயர் நீதிமன்றத்தில் புலிகளுக்கு நிதி சேகரித்தமை தொடர்பான வழக்கொன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

ஜரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகளில் விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாகக் கருதித் தடை செய்யபட்டுள்ளனர். அவ்வாறான நிலையில் ஹொலண்ட் நாட்டில் புலிகளின் நிதி சேகரிப்பாளர்கள் எனச் சந்தேகிக்கப்பட்டோர் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேலும் படிக்க …

"வங்கம் தந்த பாடம்" : வரலாற்றிலிருந்து படிப்பினை பெறாத நாம்.

யூலை 1983 இற்குப் பின் இலங்கையின் இனப்பிரச்சனை என்பது வெறுமனவே இலங்கையின் உள்நாட்டு விவகாரமாக மட்டுமல்லாது, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த ஒரு கவலைக்குரிய விவகாரமாகவும், இந்திய அரசைப் பொறுத்தவரை அவர்கள் நலன்களின் "அக்கறைக்குரிய" விவகாரமாகவும் காணப்பட்டது. இதனால் இலங்கையின் இனப்பிரச்சனையில் இந்தியாவின் தலையீட்டுக்கான சாத்தியப்பாடுகள் உணரப்பட்டது.

 

மேலும் படிக்க …

நோர்வேயின் பிரபல பத்திரிகைகளில் ஒன்றான Aftenposten புலிகளுடன் இணைந்து வேலை செய்த பன்னிரண்டு நபர்களை, நோர்வேஜிய அரசு இலங்கையில் இருந்து இலங்கை அரசுக்கு தெரியாத வண்ணம் அவர்கள் வெளியேற உதவியதாக பரபரப்பான தகவல்களை எதிர்பாராத வகையில் திடீரென வெளியிட்டுள்ளது. இந்த நபர்களை இலங்கை அரசு தீவிரமாக தேடி வருகின்றது. இவர்கள் புலிகளுடன் கடைசிவரை இருந்தவர்களாவர். நோர்வே தனது நாட்டில் உடனடி அகதி அந்தஸ்து வழங்கியதுடன், நோர்வே வருவதற்கான பொருளாதார வசதிகளையும், பிரயாணச் செலவுகளையும், இவர்கள் இலங்கையை விட்டு தப்புவதற்கும் அனைத்து உதவிகளையும், இந்த நபர்களுக்கு நோர்வே அரசு செய்துள்ளது. இதில் ஆச்சரியப்பட வைக்கும் விடயம், அகதி அந்தஸ்து கொடுத்ததோ, அல்லது பிரயாண செலவுகளை நோர்வே வழங்கியதோ அல்ல.

 

மேலும் படிக்க …

நோர்வேயில் உள்ள புலிகளின் அமைப்பான NCET இலங்கை அரச தலைமையை (மஹிந்த & கோ) மனித குலத்திற்கெதிரான குற்றம்   புரிந்தவர்கள் என  விசாரிக்க நோர்வேயில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேலும் படிக்க …

கம்பர்மலையில் துரைசாமி – தங்கமுத்து என்ற விவசாய குடும்பத்தில் பிறந்த பஞ்சலிங்கம் என்ற மனோ மாஸ்டர் வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லுரியில் கல்வி பயின்ற காலங்களில் ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளான தங்கத்துரை, குட்டிமணி போன்றோருடன் தொடர்வுகளைக் கொண்டிருந்தார். க் காலகட்டத்தில் வடமராட்சியில் கூலி விவசாயிகளிடமும், தாழ்த்தப்பட்ட மக்களிடமும் களப் பணிகளை செய்து வந்த சீன சார்பு  கம்யுனிஸ்ட் கட்சியினரின் தொடர்புகளால் மார்க்சிய சிந்தனைகளை கற்றுக் கொண்டார். கம்யுனிஸ்டு கட்சியின் தலைவரான சண்முகதாசனை அழைத்து வந்து வடமராட்சி எங்கும் கூட்டங்களை நடாத்தி வந்தார்.

மேலும் படிக்க …

“நான் எவ்வளவு தான் எஸ். பொ.வோடு ஒத்திருந்தாலும், நற்போக்கு என்ற பதச் சேர்க்கையை முழுமையாக ஆதரிக்கவில்லை”  நற்போக்கு எனும் கருத்துருவாக்கம் உருவாகிய போது வ.அ. இராஜரத்தினம் அவர்களால் முன் வைக்கப்பட்ட அபிப்பிராயம் இது.

மேலும் படிக்க …

புளொட்டின் வளர்ச்சியில் தோழர் தங்கராசாவின் பாத்திரம் 83 ஆகஸ்ட்

புளொட்டினது மக்கள் அமைப்பினை கட்டியெழுப்பும் முகமாக உறுப்பினர்களை அரசியல் ரீதியில் வளர்த்தல், பயிற்சியளித்தல் என்பன ஆரம்பமாயின. இதற்காக தோழர் தங்கராசா வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டார். தோழர் தங்கராசா மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். இடதுசாரித் தத்துவத்தில் நன்கு பரிச்சயமான ஒருவர். மலையகத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த தோழர் தங்கராசா ஜே.வி.பியின் ஆரம்ப காலகட்டங்களில் அவர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்.

 

மேலும் படிக்க …

இஸ்லாம் கற்பனை மறுப்புக்கு மறுப்பு பகுதி 6

மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

குரான் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்

எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

குரானின் பாதுகாப்பு குறித்து எழுதப்பட்டிருந்த இரண்டு கட்டுரைகளுக்கும் நண்பர் ஒன்றாக பதிலளிக்க முயன்றிருக்கிறார். நண்பரின் மறுப்புக்குள் புகுமுன் அவர் முரண்பாடு என குறிப்பிட்ட ஒன்றை சரி செய்துவிடலாம். இறுதி செய்யப்பட்ட குரானின் காலத்தை தவறுதலாக முகம்மது இறந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கால் நூற்றாண்டுக்குப் பிறகு என்று குறிப்பிட்டிருந்தேன். அது தவறானது தான். 15 ஆண்டுகளுக்குப்பிறகு என்பதே சரியானது. பதினைந்து ஆண்டுகள் என்பதையும் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தாலும் 25 ஆண்டுகள் என எழுதியிருப்பது என்னுடைய கவனக்குறைவினால் நேர்ந்தது தான்.

மேலும் படிக்க …

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More