கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்

"சமூகவிரோதி"களும் மரணதண்டனையும்

ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புக்கள் அவர்களின் ஆரம்பகாலங்களிலேயே "சமூக விரோதிகள்" என்ற சொல்லை உபயோகிக்கத் தொடங்கியிருந்தனர். சமூகத்தில் சிறுகளவுகளில் ஈடுபடுவோர், கொள்ளைகளில் ஈடுபடுவோர், தெருச்சண்டியர்கள், விபச்சாரத் தொழிலில் ஈடுபடுவோர் போன்றோரை "சமூகவிரோதிகள்" என அழைக்கத் தொடங்கினர். இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டனர் அல்லது மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இத்தகைய செயலை மிகச் சிறிய அமைப்பாக இருந்த தமிழீழ விடுதலை இராணுவம்(TELA) உட்பட புளொட், தமிழீழ விடுதலைப் புலிகள் வரை மேற்கொண்டனர்.

 

மேலும் படிக்க …

இங்கே நான் இருக்கிற இடத்திலே ஒரு பொடியன் இருக்கிறான். கிட்டத்தட்ட பதின்மூன்றோ, பதின்னாலு வயசு தான் இருக்கும். ஆள் நல்லா மொட்டையும் அடிச்சு இரண்டு காதிலே தோடும் குத்தி பார்க்கிறதுக்கு ஒரு மாதிரித் தான் இருப்பான்.


அவனின் குடும்பத்தையும் ஓரளவு எனக்குத் தெரியும். ஆனால் போய் வந்து அளவிற்கு நட்பும் பழக்கமும் இல்லை.

மேலும் படிக்க …

மனிதர் தங்களின் எண்ணத்தை சொல்வதற்கு மொழி என்பதுதான் அடிப்படை. இது மனித வரலாற்றில் தேடப்பட்ட அறிவியல். இதனை சொல் – ஊடகம் எனச் சொல்லுவர். இந்தச் சொல்லியத்தால், நாம் ஒரு கருத்தை மற்றவருக்குச் சொல்லும்போது, அது பலருக்கு விளங்காமல் போவதுண்டு. இதில் சில சொல்லுக்கு பற்பல அர்த்தங்களும் இருக்கின்றது. இதனால் நாம் எமது கருத்துகளை சந்தர்ப்பத்துக்கு ஏற்றமாதிரி, அந்த மொழியினை எப்படியெல்லாம் வளைக்க முடியுமோ..! அப்படியெல்லாம் வளைத்துப் போடுகின்றோம். அத்துடன் நாம் விரும்பும் கருத்துகளை மற்றவரில் புகுத்தவும், திணிக்கவும் துணிகின்றோம்.

மேலும் படிக்க …

ஈழ விடுதலைப் போராட்டம்: "துரோகிகளும் இனவிரோதிகளும்"

இலங்கைத் தமிழ் மக்களின் அரசியலில் முதன்முதலில் "துரோகி" என்ற சொல்லை அறிமுகப்படுத்தி வைத்தவர்கள், முதலாளித்துவ நலன்களைப் பிரதிபலித்த "அகிம்சை" தமிழ் பாராளுமன்றத் தலைமைகளே ஆவர். "சமூகவிரோதி" என்ற சொல்லை தமிழ் மக்களின் அரசியலில் அறிமுகப்படுத்தி வைத்தவர்கள் ஈழவிடுதலைப் போராட்ட ஆயுதக் குழுக்களைச் சேர்ந்தவர்களாவர். இலங்கை அரசியலில் முதலாளித்துவ நலன்களைப் பிரதிபலித்த சிங்கள பாராளுமன்ற தலைமைகள் தமது குறுகிய பாராளுமன்ற நலன்களுக்காக சிங்கள பேரினவாதத்தை வளர்த்து மக்களின் வாக்குகளை பெறுவதில் வெற்றி கண்டிருந்தனர். ஆனால் பாராளுமன்ற ஆசனங்களைக் குறிவைத்து அரசியலை மேற்கொண்ட முதலாளித்துவ நலன்களைப் பிரதிபலித்த தமிழ்த் தலைமைகளோ அவர்களின் ஆரம்பகாலங்களில் தமிழ் குறுந்தேசியவாதத்தை வளர்ப்பதில் வெற்றி பெற்றிருந்தபோதும் கூட, பெரும்பான்மையான தமிழ்மக்களின் ஆதரவையோ பெரும்பான்மை தமிழ் மக்களின் வாக்குகளையோ அவ்வளவு இலகுவாகப் பெற்று பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்ற முடிந்திருக்கவில்லை.

 

மேலும் படிக்க …

ஒரு நொடி முன்பு
உயிரசைவிருக்கையில்
குப்பைத்தொட்டி.
அசைவெலாம் அடங்கி
ஆத்மா போன
மறுநொடிப்பொழுதில்
மின்னும் கலசக்
கோபுரமாக
பரிணாம மாற்றம்.

மேலும் படிக்க …

மனிதனின் வாழ்வில் பின்னிப்பிணைந்தது அரசியல். அப்படிப்பட அரசியலை ஒரு சிலர் “அரசியல் ஒரு சாக்கடை” என்றும், “எனக்கு அரசசியலுடன் ஈடுபாடில்லை” என்று செல்வதும் கூட அரசியல் தான். தாம் எந்த அரசியலில் இருக்கின்றார்களோ அந்த அரசியலைக் காப்பாற்ற கூறும் கூற்றுகள் இவை. இதை இன்றைய இந்த சமூகத்தில் நிறையவே காணலாம்.

மேலும் படிக்க …

அண்மையில் இரு சிறுமிகளுக்கு நடந்த கொடுமைகளுக்கு பின்னால் மத அடிப்படைவாதிகள் செயல்பட்டதை அம்பலப்படுத்தியதை அடுத்து இஸ்லாமிய மதம் சார்ந்து பலர் தர்க்கம் செய்தனர். பகுத்தறிவு கொண்டோ, மனிதத் தன்மை கொண்டோ அணுக முடியாத மதம் சார்ந்த குறுகிய வட்டத்தில் நின்று மதக் கற்பனையில் நின்று, எதிராக இதை அணுகினர். மதம் சார்ந்த சமூகமாக காத்தான்குடி சமூகத்தைக் குறுக்கி தங்கள் மதம் சார்ந்த கற்பனையால் தாக்கினர். மனித உழைப்புடன் சம்மந்தப்படாத மதக் கற்பனை மூலம் இதை திரிக்க முற்பட்ட நிலையில் மதக் கற்பனைகளை அம்பலப்படுத்திய செங்கொடியின் தொடர் கட்டுரையை அறிவுபூர்வமாக மதத்தை பகுத்தறிய விரும்பும் அனைவர் முன்னும் தொகுத்து வைக்கின்றோம். இஸ்லாம் மதம் மட்டுமல்ல இந்து, யூத, புத்த, கிறிஸ்தவம் என அனைத்தம் கற்பனைக் கோட்டையால் ஆனது.

தமிழ் அரங்கம்.

மேலும் படிக்க …

யாழ்ப்பாணம் மக்கள் வங்கிக்கிளையிலிருந்து கைப்பற்றப்பட்ட ஒருபகுதி துப்பாக்கிகளுடன் முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் சிறிய இராணுவப் பயிற்சி முகாம் ஒன்று தள நிர்வாகத்தை தற்காலிகமாக கவனித்துவந்த கண்ணாடிச் சந்திரனால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த முகாம் அமைக்கப்பட்டதன் நோக்கம் புளொட் உறுப்பினர்களுக்கு தளத்திலேயே பயிற்சி அளிப்பதும், இந்த முகாமை மையமாகக் கொண்டு வன்னிப்பகுதியில் இராணுவத் தாக்குதல் நிகழ்த்துவதுமாகும். இராணுவ பயிற்சி முகாமுக்குப் பொறுப்பாக மல்லாவிச் சந்திரன் நியமிக்கப்பட்டார். மல்லாவிச் சந்திரனுடன் சுகுணன், நேரு போன்றோர் உட்பட பலர் அந்தப் பயிற்சி முகாமில் இராணுவப் பயிற்சி பெற்று வந்தனர்.

 

மேலும் படிக்க …

கருத்தை கருத்தல் வெல்ல முடியாதவர்களின் சர்ந்தர்ப்பவாத அரசியலை தோலுரித்துக் காட்டும் வண்ணம் அண்மையில் எனக்கு நடந்த தாக்குதலை மையாமாக வைத்து ஒரு சில இணயங்கள் தமக்கு வேண்டிய அரசியலை எனது பெயரை பாவித்து செய்கின்றனர். இவ்வாறான அரசியல் போக்கையும் அனாகரீகனமான செய்றபாட்டையும் நான் கண்டிப்பதுடன் அவர்களது செய்திகள் அறிக்கைகள் மீதான மறுப்பறிக்கையை முன்வைக்கின்றேன்.

மேலும் படிக்க …

சரவணபாபா மடம் முரளிகிருஸ்ண சுவாமிகள் எனப்படும் ஜிலேபி (தேன்குழல்) சாமியார் மீது கேரளாவில் பொது மக்களாலும் மக்கள் பொது அமைப்புக்களாலும் பண மோசடி பாலியல் வன்முறை என்பன குறித்து பல புகார்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த சாமியார் தற்போது UK Head Office, Saravanababa Matham 269A, Preston Road, Preston Waye, Harrow, Middlesex. HA3 0PS என்னும் முகவரியில் தங்கி இருந்து கொண்டு தனது வழக்கமான மோசடிச் செயல்கள் மூலம் மத நம்பிக்கை கொண்ட அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றான்.

மேலும் படிக்க …

புளொட்டின் மக்களமைப்பை பலமாகக் கட்டியெழுப்பும் முகமாக தொடர்ச்சியாக கிராமங்கள் தோறும் அரசியல் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. யாழ் மாவட்டத்தில் செயற்பட்ட அனைத்து உதவி அரசாங்க அதிபர் பிரிவு அமைப்பாளர்களுமே இதற்காக கடுமையாக உழைத்து வந்தனர். புதிய அங்கத்தவர்களை அமைப்புடன் இணைத்தல், கிராமங்கள் தோறும் அமைப்பு கமிட்டிகளை உருவாக்குதல் என்று தொடர்ச்சியாக செயல்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. இத்தகைய அமைப்புக்களை உருவாக்குவதென்பது அவ்வளவு இலகுவாக நடைபெற்றிருக்கவில்லை. அரச படைகளின் தேடுதல் வேட்டைகளும், கெடுபிடிகளும், அன்றாட நிகழ்வாக இருந்த காலகட்டம் அது. அத்துடன் ஏனைய விடுதலை போராட்ட அமைப்புகளின் எதிர்ப்புகளும், சவால்களும் நாம் செல்லும் கிராமங்கள் தோறும் இருந்து வந்தது. இவற்றுக்கெல்லாம் முகம் கொடுத்த அதேவேளை, இத்தகைய எதிர்ப்புக்களையும், சவால்களையும் முறியடித்தே மக்கள் அமைப்பை உருவாக்க முடிந்தது.

 

மேலும் படிக்க …

கோபமும், ஆவேசமும், அவமானமும், இயலாமையுமாக அப்பெண் பதிவர் எம்மை தொடர்பு கொண்டார். 21 வயதே உடைய சிறுபெண். கவிதை எழுதும் ஆர்வமும் புனைவுகளை பகிரும் தளமுமாகவும் தனக்காக ஒரு வலைத்தளத்தை உருவாக்கிக் கொண்டு வீட்டுக்குள் முடங்கி கிடந்தாலும் இணையம் வாயிலாக உலகை வலம் வந்த சராசரி தமிழ் பெண். அவரது கவிதைகளையும் மற்ற படைப்புகளையும் குடும்பத்தினர் அனுமதி கொடுத்தால் மட்டுமே பிரசுரிக்கபடும் அளவே அவரது சுதந்திரம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. நண்பர்களுக்காகவும் விவாதங்களில் கலந்து கொள்ளவும் புதிய நட்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் பேஸ்புக் தளத்தையும் உபயோகத்தில் வைத்திருந்தார் அவர். அவையும் அவரது குடும்பத்தினரின் கண்காணிப்பிலேயே இருந்திருக்கிறது. இப்படி 6 மாதங்களாத்தான் இணையத்தின் மூலமாக வெளி உலக தொடர்புகளோடு இயங்கிக் கொண்டிருந்தார் அவர்

 

மேலும் படிக்க …

மு.தளையசிங்கமும் முற்போக்கு இலக்கியமும்

எனக்கு இந்த முற்போக்கு என்ற அடைமொழியே பிடிக்கவில்லை. அது ஒரு திருகப்பட்ட அர்த்தத்தைத் தான் கொடுக்கிறது. மனிதனின் பிரச்சினைகளை மிக அக்கறையோடு அணுகும் கலை நிறைந்த இலக்கியங்கள் எல்லாம் முற்போக்கு இலக்கியங்கள் தான். இலக்கியத்தை முற்போக்கு இலக்கியம், பிற்போக்கும் இலக்கியம் என்று பிரிக்க முடியுமானால்; முற்போக்கு இலக்கியத்தையும் அதி முற்போக்கு இலக்கியம், அதி அதி முற்போக்கு இலக்கியம் என்று உலகத்தில் எத்தனை தரமான எழுத்தாளர்கள் இருக்கிறார்களோ அத்தனை பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டே போகலாமே!

மேலும் படிக்க …

இன்று லிபியாவில் நேற்று ஈராக்கில், ஆப்கானிஸ்தானில் என எல்லாவற்றிலிலும் “சர்வதேசச் சமூகம்” எவ்வாறு நடந்துகொள்கிறது என்பதைப் பற்றி வியப்பதற்கு எதுவுமில்லை. அது எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அப்படித்தான் நடந்து கொள்கிறது. இதற்கிடையில் லிபியாவில் பொதுமக்களைக் காப்பாற்ற தலையிட்ட ஐ.நாவும் சர்வதேசச் சமூகமும் இலங்கைத் தமிழர் விடயத்தில் அவ்வாறு நடந்துகொள்ளாமல் தமிழர்களை ஏமாற்றிவிட்டதாகப் பத்திரிகைகள் எழுதுகின்றன. நாங்கள் வரலாற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இற்றைக்குப் பதினேழு ஆண்டுகளுக்கு முன் ருவாண்டாவில் நூறு நாட்களில் எட்டு இலட்சம் டுட்சி சிறுபான்மையினர் படுகொலை செய்யப்பட்ட போது ஐ.நாவும் சர்வதேசச் சமூகமும் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. இக் காலப்பகுதியில் ஐ.நாவின் அமைதிகாக்கும் படைகளுக்கு தலைமை தாங்கிய ஜெனரல் ரோமியோ டிலார் (Romeo Delaire) தனது ‘பிசாசுடன் கை குலுக்குதல்” (Shaking Hands with the Devil) என்ற நூலிற் பின்வருமாறு எழுதுகிறார்:

மேலும் படிக்க …

எங்கேயப்பா போட்டு வாறையள்….

எத்தனை தரம் ரெலிபோன் எடுத்தனான். என்னத்துக்குத் தான் இந்தக் கண்டறியாத ரெலிபோனைக் கொண்டு திரியிறையளோ. ஒரு அந்தர ஆபத்துக்கு தொடர்புகொள்ள முடியாமல் கிடக்கு…

வரவேற்பு நல்ல அமர்களமாய் இருந்தது. எத்தனை தரம் சொல்லியிருப்பேன் வேலையால் களைச்சு வரும் போது உடனே ஒன்றும் கதைக்காதையுங்கோ என்று. யாரும் கேட்டால் தானே…

ஒருவாறு கோபத்தை அடக்கிய படியே சோபாவில் அமர்ந்து கொண்டேன்.

மேலும் படிக்க …

இராணுவப் பொறுப்பாளர் பார்த்தனின் மரணத்தினையடுத்து, தளத்தில் குமரன்(பொன்னுத்துரை), கண்ணாடிச் சந்திரன் ஆகிய இரு மத்தியகுழு உறுப்பினர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். செயலதிபர் உமா மகேஸ்வரன், அரசியல் செயலர் சந்ததியார் உட்பட வாசுதேவா, பெரியமுரளி, ஈஸ்வரன், டொமினிக் (நோபர்ட்) ஆனந்தி(எஸ்.எல்.சதானந்தம்), பரந்தன் ராஜன், ராமதாஸ் போன்ற மத்தியகுழு உறுப்பினர்கள் இந்தியாவில் இருந்தனர். கண்ணன் (ஜோதீஸ்வரன்), காந்தன்(ரகுமான் ஜான்) மற்றும் சில மத்தியகுழு உறுப்பினர்கள் மத்திய கிழக்கில் இராணுவப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தனர். தளத்தில் செயற்பட்டுக்கொண்டிருந்த மத்தியகுழு உறுப்பினர்களான குமரனும் கண்ணாடிச் சந்திரனும், தளத்தில் புளொட்டின் செயற்பாடுகளை நெறிப்படுத்தி வந்தனர். இதில் குமரன் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் போக்குவரத்து சம்பந்தமான வேலைகளில் தனது பெரும்பகுதி நேரத்தை செலவிட்டு வந்ததால் கண்ணாடிச் சந்திரனே தள நிர்வாக செயற்பாடுகளை கவனித்து வந்தார்.

 

மேலும் படிக்க …

அம்மாவின் வாய்வழி ஈழச்சொல் விழுமென
காவடியாட காத்துக் கிடக்கிறாங்கள்
இருப்பாய் புழைப்புவாதிகளே
முதல்வர் அம்மாவின் செருப்பாய்
நெருப்பாய் நிமிரும்
தமிழக உணர்வை அணைப்பாய்
சட்டசபை சரித்திரம் படைத்ததாய்
மக்கள் எழுச்சியைத் தடுப்பாய்…..

மேலும் படிக்க …

சமீபத்தில் பணக் கொடுக்கல் வாங்கல்களினால் புலிகளின் தலைமை தாங்களே என்று கூறிக் கொள்ளும் கூட்டத்தைச் சேர்ந்த நெடியவன் நோர்வேயில் நெதர்லாந்து பொலிசாரின் கோரிக்கையின் பேரில் கைது செய்யப்பட்ட செய்தி நம் அனைவரும் அறிந்ததே!

மேலும் படிக்க …

கேதீஸ்வரனின் மரணத்தின் பின் அவர் கவனித்து வந்த அனைத்து வேலைகளையும் தற்காலிகமாக நானே கவனிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. உமாமகேஸ்வரனின் அழைப்பின் பேரில் மத்தியகுழு உறுப்பினரான கண்ணாடிச் சந்திரன் இந்தியா சென்றிருந்தார். மத்தியகுழு உறுப்பினர்களான பெரியமுரளியும் ஈஸ்வரனும் கூட அப்பொழுது இந்தியாவிலேயே தங்கியிருந்தனர். இதனால் அமைப்புச் சம்பந்தமான அனைத்துவிடயங்களையும் முடிவுகளையும் தளத்திலிருந்த மத்தியகுழு உறுப்பினர்களான குமரன் (பொன்னுத்துரை) மற்றும் பார்த்தனுடன் கலந்து பேசியே எடுத்து வந்தேன்.

 

மேலும் படிக்க …

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More