புதிய கலாச்சாரம்

“இந்தியாவின் ஐம்பது ஆண்டுகளில் தோன்றிய நடிகர்களில் தலை சிறந்தவர்; நடிப்புக் கலையின் பல்கலைக் கழகம்; இன்றைய நடிகர்கள் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் பாதித்தவர்; அவர் ஏற்று நடிக்காத பாத்திரங்கள் ஏதுமில்லை; தமிழ் மொழியின் ஆகச்சிறந்த உச்சரிப்புக் கலைஞர்; அவரது திரைப்படங்களைப் பார்க்காத எவரும் சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழகத்தைப் புரிந்து கொள்ள இயலாது; தேசியமும் தெய்வீகமும் கண்களென வாழ்ந்த ஒரு சிறந்த குடிமகன்” என்று அனைத்துப் பிரிவினராலும் போற்றப்படுகிறார், நடிகர் திலகம் என்றழைக்கப்படும் சிவாஜி கணேசன்.

மேலும் படிக்க …

சமீபத்தில் சாதி மறுப்பு மறுமணம் ஒன்றை ம.க.இ.க.வின் சார்பில் நடத்தி வைத்தோம். இரு வீட்டாருக்கும் இதில் உடன்பாடு இல்லை. எனினும் நண்பர்களும், தோழர்களும், ஆதரவு காட்டும் ஒரு சில உறவினர்களும் திரண்டிருக்க மணவிழா இனிதே நடந்தேறியது.

மேலும் படிக்க …

திருச்சி – பெல் (BHEL)   அக்கிரகாரத்தைச் சேர்ந்த குழுவொன்று பாலே நடன நிகழ்ச்சிக்கு சிம்பனி இசைத் துணுக்குகளைச் சேகரித்துத் தொகுக்க (திருட) ஒரு பாடல் பதிவுக் கூடத்திற்கு வந்தது. ஆங்கிலப் படங்களில் சிம்பனி இசை ஒலிக்கத் தொடங்கியவுடனே ஒரு பிராணி வாய் திறந்தது. ”ஆகா… என்ன இமாஜினேஷன்! (கற்பனை). என்னமோ இளையராஜா இளையராஜாங்கறாளே. அவனால இப்படி யோசிக்க முடியுமா?”எல்லாம் சரிதான், ஒரு சிம்பனி இசை அமைக்க முடியவில்லையே ஏன்? செம்மங்குடியிடமும் பாலமுரளியிடமும் ‘நீங்கள் ஏன் இதுவரை சிம்பனி அமைக்கவில்லை’ என்று பேட்டி எடுத்திருக்கலாமே. ‘சரிகமபதநி’க்குள் சகலமும் அடக்கம் என்கிறீர்களே சிம்பனி அதற்குள் அடங்குமா? அடங்காதா? ”சிவபெருமான் அருளிய இசையில் சிம்பனி உண்டா” என்று ஆய்வுக் கட்டுரை எழுதியிருக்கலாமே. இவை எதையும் மேற்படி பத்திரிகைகள் செய்யவில்லை. தங்கள் சங்கீத கலாநிதிகளுக்கும் சிம்பனிக்கும் காததூரம் என்பது அவர்களுக்குத் தெரியும்.

மேலும் படிக்க …

உயிர் என்பதை பொருள்முதல்வாதத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட விடை காண முடியாத புதிராகச் சித்தரித்து வாதிட்டவர்களுக்கு இயற்கையின் இயக்கவியல் என்ற தனது நூலில் (1886) எங்கெல்ஸ் பதில் அளித்தார். இயங்கியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் இயற்கை விஞ்ஞானம் அன்று கண்டிருந்த முன்னேற்றங்களின் துணை கொண்டு "உயிர்' என்பதற்கு எங்கெல்ஸ் அளித்த அற்புதமான பொருள்முதல்வாத விளக்கம் அது.

மேலும் படிக்க …

ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு தோரணமும், கொடியுமாக தெருவே பளபளவென்று மின்னியது. ""உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை'' என்று இசைத்தட்டு வழியாக எம்.ஜி.ஆர் தெருவில் பாடிக்கொண்டிருந்தார். குரல் வந்த திசையை நெருங்கிப் போகப் போக தெருவோரத்தில் ஆங்காங்கே கரைவேட்டியுடன் அ.தி.மு.க. கட்சிக்காரர்கள் பளிச்சிட்டனர். சூழ்நிலையின் பரபரப்பும், தெருவின் புதுப்பொலிவும் அங்கு என்னதான் நடக்கிறது என்ற ஆவலைத் தூண்டியது.

மேலும் படிக்க …

1983 ஜூலையில் இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் 1984 போபால் நச்சுவாயு படுகொலைக்கும் நேரடித் தொடர்பு இல்லை. முள்ளிவாய்க்கால் முடிவுக்கும் போபால் நீதிமன்ற தீர்ப்புக்கும் இடையிலேயும் நேரடித் தொடர்பு இல்லை. விசவாயுப் படுகொலையை நடத்திய யூனியன் கார்பைடு தலைவர் ஆண்டர்சன் இந்தியாவிலிருந்து வழியனுப்பி வைக்கப்பட்டதற்கும், முள்ளிவாய்க்கால் படுகொலை நாயகன் ரோஜபக்சேவுக்கு இந்தியாவில் வரவேற்பு வழங்கப்பட்டதற்கும் கூட நேரடித் தொடர்பு இல்லைதான். எனினும் இவ்விரு பிரச்சினைகளிலும் இந்திய அரசும், ஆளும் வர்க்கமும் கடைப்பிடித்த அணுகுமுறைகளில் ஒரு தொடர்பு இருக்கத்தான் செய்கின்றது.

மேலும் படிக்க …

கோவையில் நடக்க இருக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தமிழ்நாட்டின் இப்போதைய முக்கியமான செய்திகளில் ஒன்று. துணை முதல்வரும் ஏனைய அமைச்சர்களும் தொடர்ந்து கோவையை பார்வையிட்டு வருகிறார்கள். இது கருணாநிதியின் வாழ்நாள் கனவு என்பது போன்ற ஒரு கருத்து எல்லா அச்சு ஊடகங்களாலும் உமிழப்படுகிறது.

மேலும் படிக்க …

அறுசுவைகளில் இனிப்பை மட்டும் ருசியாக கொண்டாடும் பேர்வழிகளைத் தவிர்த்த மற்றவர்களை அங்காடித் தெரு ஏதோ ஒருவிதமாய் பாதித்திருக்கிறது. தமிழகத்தின் புகழ்பெற்ற ஒரு பேரங்காடியில் குவிக்கப்பட்டிருக்கும் வண்ணமயமான பொருட்களோடு பொருளாக, ஆனால் சாயம் போய் வாடிப்போயிருக்கும் உயிருள்ள ஊழியர்களை காட்டுவதற்கு ஒரு தமிழ் சினிமா இயக்குநர் துணிந்திருப்பது பாராட்டத்தக்கதுதான். ஆனால் பாராட்டுபவர்களும், படத்தின் சோகத்தை அருந்தியவர்களும் ஒரு பொதுவான மனிதாபிமானம் என்பதைத் தாண்டி ஒரு அழுத்தமான பாதிப்பை அடைந்திருப்பார்களா என்பதில் நிறைய ஐயமிருக்கிறது.

மேலும் படிக்க …

பிள்ளத்தாச்சிப் பெண் மீது எல்லோருக்கும் ஒரு அனுதாபம் உண்டு. என்னைக்கேட்டால் பத்து மாதம் சுமக்கும் துன்பம் (அப்படி சொல்லக் கூடாதோ) ஒரு தடவை இரண்டு தடவையில் முடிந்து விடும். கருத்தரிக்காததனால் மாதம் தோறும் அனுபவிக்கும் துன்பம் இருக்கிறதே, அதுதான் ஆயுள்தண்டனை.

மேலும் படிக்க …

கொளுத்துகிற இந்தக் கோடை இரவை நிம்மதியாகக் கழிக்க குறைந்த பட்சம் நீங்கள் ஒரு நகரவாசியாக மட்டுமே இருக்க வேண்டும். அதுவும் சென்னை மாதிரியான பெரு நகரங்களில் பிறந்திருந்தால் மட்டுமே ஆறு மணி நேர உறக்கம் சாத்தியம். நகர்ப்புறங்களுக்கப்பால் கிரோமப்புறப் பகுதியில் நீங்கள் இருந்தால் ஓடிக் கொண்டிருக்கிற விசிறி பாதியிலேயே நின்று பல மணி நேரம் உங்கள் இரவுத் தூக்கத்தை பலிவாங்கி விடும். இப்படித்தான் கடந்த பல மாதங்களாக தமிழக மக்களின் வாழ்வை அன்றாடம் தாக்கி அதிர்ச்சி ஷாக் கொடுத்துக் கொண்டிருக்கிறது மின் தட்டுப்பாடு.

மேலும் படிக்க …

கிராமப்புறங்களில் எழும் கிளர்ச்சியை அடக்குவதற்கு இராணுவத்தையும் விமானப்படையையும் பயன்படுத்த எண்ணியிருக்கிறது இந்திய அரசு. நகர்ப்புறத்திலோ விசித்திரமான நிகழ்வுகள் நடந்து வருகின்றன.

ஜூன் 2ஆம் தேதியன்று ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் குழு மும்பையில் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியது. கவுதம் நவ்லகாவும் நானும் அதில் முக்கியப் பேச்சாளர்கள். அச்சு ஊடகங்களிலும் தொலைக்காட்சியிலும் கூட்டம் குறித்த செய்தி பரவலாக வெளிவந்திருந்தது. கூட்டத்தின் ஒளிப்பதிவு இணையத்தில் யுடியூபில் வெளியிடப்பட்டிருக்கிறது. மறுநாள் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (செய்தி நிறுவனம்) என்னுடைய பேச்சை அப்பட்டமாகத் திரித்து வெளியிட்டிருந்தது. பி.டி.ஐ இன் இந்தச் செய்தியை இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய இதழ் ஜூன் 3ஆம் தேதியன்று பிற்பகல் 1.35 மணியளவில் வெளியிட்டிருந்தது. அதன் தலைப்பு இதுதான்: ""மாவோயிஸ்டுகளுக்கு அருந்ததி ரோய் ஆதரவு! "முடிந்தால் என்னைக் கைது செய்து பார்' அரசுக்கு சவால்!!''

மேலும் படிக்க …

மற்ற கட்டுரைகள் …

Load More