புதிய கலாச்சாரம்

உண்மையில் இது ஒரு பொற்காலம்தான். சாயிபாபா உயிரோடு இருந்தபோது கக்கிய தங்க லிங்கங்களைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமான தங்கத்தை பாபா இறந்தபின் அவருடைய தனியறையான யஜுர்வேத மந்திரம் கக்கிக் கொண்டே இருக்கிறது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் நிலவறையிலிருந்து இதுவரை எடுக்கப்பட்ட தங்கம், வைரங்களின் மதிப்பு ஒரு இலட்சம் கோடி ரூபாய் என்கிறார்கள். இல்லை, 5 இலட்சம் கோடி என்கிறார்கள். இன்னும் இரண்டு நிலவறைகள் திறக்கப்படக் காத்திருக்கின்றன.

மேலும் படிக்க …

தி.மு.க அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்விப் பொதுப்பாடத் திட்டம் தரமற்றது என்பது அதனை முடக்குவதற்கு ஜெயலலிதா அரசு கூறியுள்ள காரணம். பொதுப்பாடத்திட்டத்தின் தரத்தை சோதித்துப் பார்த்து உயர்நீதி மன்றத்துக்கு அறிக்கை கொடுப்பதற்கு ஜெயலலிதா நியமித்த குழுவில் தயானந்தா ஆங்கிலோ வேதிக்ஸ்கூல் எனப்படும் டி.ஏ.வி பள்ளியின் தாளாளர் ஒரு உறுப்பினர். இன்னொருவர் பத்மா சேஷாத்ரி பள்ளியின் உரிமையாளர் திருமதி பார்த்தசாரதி. அரசுப்பள்ளிசார்ந்த ஒருவர் கூட  இக்குழுவில் கிடையாது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஒரு கோடி ஏழு இலட்சம் பேர். 2,72,000 மாணவர்கள் மட்டுமே மெட்ரிக் பள்ளிகளில் படிக்கிறார்கள், என்ற போதிலும் 98சதவீத மாணவர்களின் பாடத்திட்டத்தின் தரத்தை நிர்ணயம் செய்யும் அதிகாரம் 2 சதவீத மெட்ரிக் பள்ளி முதலாளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க …

துனிசியா, எகிப்து, லிபியா போன்ற நாடுகளில், இராணுவக் கொடுங்கோன்மை ஆட்சிகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் நடத்தும் போராட்டங்களை  ஆதரிப்பது போல அமெரிக்க ஐரோப்பிய அரசுகள் நடிக்கின்றன. மக்கள் விருப்பப்படி  ஜனநாயக ஆட்சி அமையாவிட்டால், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக அமெரிக்கப் படைகள் லிபியாவில் தலையிட வேண்டியிருக்கும் என்றும் ஒபாமா மிரட்டுகிறார். ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் பொருளாதாரத் தடை விதிக்கிறது. இந்த நாடகங்களின் நோக்கம் ஒன்றுதான். மக்கள் எழுச்சியால் தூக்கியெறியப்பட்ட சர்வாதிகாரியின் நாற்காலியில் அமரப்போகும் "மக்கள் பிரதிநிதி', அமெரிக்க, ஐரோப்பிய எடுபிடியாக இருக்கவேண்டும் என்பதுதான் அவர்களது இலக்கு.

மேலும் படிக்க …

இது சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். நண்பர் ஒருவருடன் பெருநகரம் ஒன்றில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த ஓவியக் கண்காட்சி ஒன்றிற்கு செல்ல நேர்ந்தது. நகரின் மையப்பகுதியில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அரங்கு அது. அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தவை மாடர்ன் ஆர்ட்வகைப்பட்ட ஓவியங்கள்.

மேலும் படிக்க …

கடந்த வருடம் அமைதிக்கான நோபல் பரிசை ஒபாமா பெற்றார். இது நமக்கு மட்டுமல்ல, அவருக்கே கூட அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். இந்த வருடம் அந்த "அதிர்ச்சிக்குரிய' பரிசைப் பெற்றிருப்பவர் சீனத்தைச் சேர்ந்த லியு ஜியாபோ. இவ்விருதைப் பெறுவதற்கு முன் சீனாவிலேயே அவரைப் பற்றி அறிந்தவர்கள் மிகவும் குறைவு. இவ்விருதுக்குப் பின்னரே அவரைப் பெருமளவு மக்கள் தெரிந்துக் கொண்டார்கள். அதன்பின் அவரைப் பற்றிய நிறைய கட்டுரைகளும் செய்திகளும் வெளிவந்தன. மனித உரிமை போராளி என்று பத்திரிக்கைகள் அவருக்கு புகழாரம் சூட்டின. தற்போது அவர் அரசாங்கக் கைதியாக சீன நாட்டின்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நோபல் பரிசு பெற்ற விவரம் கூட அவருக்குத் தெரியாது என்றும், அவரை அவரது துணைவி கூட சந்திக்க அனுமதி மறுப்பு என்றும் பரபரப்பான செய்திகள் அப்போது வெளிவந்தன.

மேலும் படிக்க …

ஹைத்தியில் நடைபெற்ற இயற்கைப் பேரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றிய அவர்கள் தான் உண்மையான நாயகர்கள். தன் நாட்டுக்கு மிக அருகிலேயே நடைபெற்ற இந்த மனிதப் பேரழிவிலிருந்து மக்களைக் காப்பது தான் எங்கள் கடமை என்று வட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உறுதியேற்ற போதிலும், அவர்களைக் காப்பாற்றியது என்னவோ வட அமெரிக்கா எதிரியாக கருதும் கூபா (கியூபா) தான். ஆம் கூப மருத்துவர்களும், செவிலியர்களும் ஆற்றிய பணிகள் தான் வட அமெரிக்காவின் உண்மையான முகத்தை மக்களுக்குத் தோலுரித்துக் காட்டியது என்றால் அது மிகையன்று.

மேலும் படிக்க …

"யார்ரா இது? புதுக்கட்சியா இருக்கு. கடத்தெருவுல தெரண்டு நிக்கு றானுவ! நம்ம முருகேசன் மவன் மாதிரி இருக்கு!'

"அவன் தாண்ணே இதுல மும்முரமா இருக்கான்! அவனுவ சிவப்பு சட்டையென்ன, கொடியென்ன, மூலைக்கு மூலை முசுன்னு முசுன்னு பேசிப்பேசியே வர வர கூட்டத்த சேக்குறாண்ணே!'

"என்னவாம் இப்ப?'

"ஆரலூரு, மோசுனூரு, செறுகுடி இப்படி அஞ்சு கிராமத்துக்கு அடிப்படை வசதி செஞ்சு கொடுன்னு ஆர்ப்பாட்டம் பண்றானுவ!'

"அதுவும் காருக்குள்ள என்னையயே பாத்தோடன்ன வேகமாகக் கத்றாண்டா அவன்!'

மேலும் படிக்க …

சென்ற ஆண்டு இறுதி மாதத்தில் தில்லி தீஸ் ஹசாரி மேஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் ஐம்பத்தி ஒன்பது வயது நிரம்பிய அந்தச் சாமியார் கொடுத்த வாக்குமூலம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயங்கரவாத முகத்தை நாட்டு மக்களின் முன் தௌ;ளத்தெளிவாய் அம்பலப்படுத்தியது. இதற்கு முன் இந்த பார்ப்பன பயங்கரவாத அமைப்பின் நாசகாரச் செயல்கள் அம்பலமாகி மக்கள் முன் நாறியிருந்தாலும், இந்த முறை அவ்வமைப்பின் மிக முக்கியமான பிரச்சாரக்குகள் என்று சொல்லப்படும் முழு நேர ஊழியர் ஒருவரே நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு இருந்த நேரடிப் பங்கேற்பை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க …

பதிவுலகிலும் பத்திரிகையுலகிலும் அதிகம் புழங்கும் வார்த்தைகளுள் ஒன்று ராயல் சல்யூட்! செயற்கரிய செயலைப் போற்றுவதற்கு மக்கள் இந்த வணக்கத்தைப் பயன்படுத்துகின்றனர். இதை விட்டால் ராயல் சல்யூட் என்ற பெயரில் ஒரு புகழ் பெற்ற மதுபானக் கம்பெனி ஸ்காட்லாந்தில் இருக்கிறது. சரக்குகளெல்லாம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேற்பட்டவை. ராயல் சரக்குகள் என்றால் அதன் அதி உயர் தரத்தை குறிக்கிறதாம். 21 பீரங்கி குண்டுகளால் வணக்கம் செலுத்தும் முறை கூட இங்கிலாந்தில் உருவானதுதான். அதையும் ராயல் சல்யூட் என்று தான் அழைக்கிறார்கள்.

மேலும் படிக்க …

நீரா ராடியாவின் உரையாடற் பதிவுகள் இந்திய அரசியல் அரங்கில் காலம் காலமாக நிலவி வந்த தரகுத்தனத்தின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை அம்பலப்படுத்தியது என்றால், இன்னொரு பக்கம் முதலாளித்துவ ஊடகங்களின் உண்மையான மறுபக்கத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டியது. பன்னாட்டுக் கம்பெனிகள் மற்றும் தரகு முதலாளிகளுக்குச் சாதகமாய் அரசு இயந்திரத்தின் அச்சினைச் சுழற்றும் தரகு வேலை பார்த்து வந்த நீரா ராடியாவுடன் பர்க்கா தத், வீர் சங்வி போன்ற பத்திரிகையாளர்கள் நடத்திய பேச்சுக்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க …

கோத்ரா வழக்கில், கரசேவகர்கள் பயணம் செய்த ரயில்பெட்டியை தீ வைத்துக் கொளுத்துவது என்று கோத்ரா நகரைச் சேர்ந்த முஸ்லீம்கள் முதல்நாளே சதித்திட்டம் தீட்டி, மறுநாள் அதனை நிறைவேற்றியிருக்கின்றனர்' என்று கூறி 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்திருக்கிறது குஜராத் சிறப்பு நீதிமன்றம். எனினும் குற்றம் சாட்டப்பட்ட 94 பேரில் 63 பேருக்கு எதிரான சாட்சியங்கள் இல்லை என்பதால், அவர்களை விடுதலையும் செய்திருக்கிறது.

மேலும் படிக்க …

மற்ற கட்டுரைகள் …

Load More