Language Selection

புதிய ஜனநாயகம்

10_2005.jpgகடந்த ஆகஸ்டு 29 அன்று கடுமையான ஐந்தாம் ரக, தீவிரச் சூறாவளி புயல் கத்ரீனா தென்கிழக்கு லூசியானா நியூ ஆர்லீன்ஸ், தெற்கு மிஸிஸிபி ஆகிய இரண்டு அமெரிக்க மாகாணப் பகுதிகளை மோதித் தாக்கியது. கடந்த ஏழாண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் இந்த அளவு இயற்கைச் சீற்றம் கடுமையாக இருந்திருக்கிறது.

 

புயலின்போது கடலின் அலைகள் இருபது அடி உயரம் எழும்பி ஆர்ப்பரித்தது; கரையோரம் பழமையில் எழுப்பப்பட்ட அரண்கள் தவிடு பொடியாக்கப்பட்டன் நியூ ஆர்லீன்சின் எண்ணெய்க் கிணறுகள் ஸ்தம்பித்தன் இரண்டு அணு உலைகள் முடங்கின. ஊருக்குள் பாய்ந்த கடலலை வீடுகளை மூழ்கடித்தது; நகரத்தை நாலாபுறமும் சூறையாடியது.

10_2005.jpgமன்மோகன் சிங் இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு முதன்முறையாக அமெரிக்காவுக்குப் போயிருந்தபோது அறிவித்தார்: 'இந்தியாவை விற்பதற்காக வந்திருக்கிறேன்!" அப்போது யாரும் அந்தச் சொற்களை நேரடிப் பொருளில் எடுத்துக் கொள்ளவில்லை. பன்னாட்டுத் தொழிற்கழகங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சியைத்தான் அப்படிச் சொல்கிறார் என்றே பலரும் நம்பினார்கள். ஈரானுடனான இந்தியாவின் இயற்கை எரிவாயு இறக்குமதி ஒப்பந்தத்தை அமெரிக்கா எதிர்த்தபோது, அதே மன்மோகன் சிங் தனது போலி கம்யூனிஸ்டு கூட்டாளிகளுக்கு வாக்குறுதி கொடுத்துச் சொன்னார், 'இந்தியா விற்பனைக்கு

10_2005.jpgஅரியானா மாநிலத்தில் ஜாட் சாதிவெறிக் கும்பல் தாழ்த்தப்பட்டோரின் குடியிருப்பு பகுதியில் புகுந்து பகற் கொள்ளையில் ஈடுபட்டதோடு, அப்பகுதியையே கொளுத்திச் சாம்பல் மேடாக்கியது.

 

அரியானா மாநிலத்தின் பாணிபட் மாவட்டத்தில் உள்ள நகரம், கோஹனா. அந்நகரத்தின் நெரிசல் மிகுந்த வர்த்தகப் பகுதியில் உள்ளது தாழ்த்தப்பட்டவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வால்மீகி மற்றும் ஆர்யா என்ற இரு குடியிருப்புப் பகுதிகள். கடந்த ஆகஸ்ட் மாதம் 31ந் தேதி மதியம் பட்டப்பகலில் 1500க்கும் மேற்பட்ட ஜாட் சாதிவெறிக் கும்பல் ஒவ்வொரு வீடாகச் சென்று கொள்ளையடித்தது. முடிவில், குடியிருப்புகளின் மீது பெட்ரோல் டின்களை வீசி மொத்தமாகக் கொளுத்தியது.

09_2005.jpgகுர்கானில் ஹோண்டா தொழிலாளர்கள் மீது அரியானா போலீசார் நடத்தியுள்ள கொலைவெறியாட்டத்தைக் கண்டித்தும், தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டத்தை ஆதரித்தும் மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராகப் போராட தொழிலாளி வர்க்கத்துக்கு அறைகூவல் விடுத்தும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

09_2005.jpg கோவை மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டை, பஞ்சாலைத் தொழிலுக்கு பெயர் பெற்ற நகரம். இந்நகராட்சியின் ஆணையாளரான திரு.கே.ஆர். செல்வராசு அவர்கள் இலஞ்ச, ஊழல், அதிகார முறைகேடுகளுக்கும் பெயர் பெற்ற நகராட்சியாக, இதை மாற்றிய "பெருமை'க்குரியவர் என்றால் மிகையல்ல.

 

நகராட்சி ஊழியர்கள், தனது வீட்டின் எல்லா வேலைகளையும் செய்வதற்காகவே நியமிக்கப்பட்டவர்கள்! நகராட்சி வாகனங்கள், தனது குழந்தைகள் பள்ளி சென்று வரவும் தனது மனைவிஉறவினர்கள் கோயில் குளங்களுக்குச் சென்று வருவதற்காக மட்டுமே வாங்கப்பட்டவை! வீட்டு வரியா?