Language Selection

விருந்தினர்

வீட்டுவேலை மட்டுமே விதிக்கப்பட்ட வாழ்வு என்ற மாயைக்குள் வைக்கப்பட்ட பெண்கள் எண்பதுகளில் ஏற்பட்ட அரசியல் சமூக விழிப்புணர்வு, மொழி, இன ரீதியாக ஏற்பட்ட அரசியல் எதிர்ப்புணர்வு ஆகியனவற்றின் தூண்டுதலால் தமிழ் பெண்கள் போராளிகளாக வீட்டை விட்டு வெளியேறி விடுதலைப் போராட்டத்தில் இணைந்தனர். 

தமிழ் மக்கள் மத்தியில் புதுவகை அரசியல் நடவடிக்கையாக நோர்வே ஈழத்தமிழர் அவை எனும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. எல்லாத்தமிழரையும் பிரதிநிதித்துவம் செய்வதாக, தமிழீழ மக்கள் துயர் நீக்கப் போவதாய் இந்த அமைப்பு அறிக்கையிட்டு வருகின்றது.

அவதூறுகளின் குப்பைகளால்
மூடப்பட்டு கிடக்கின்றன
வரலாற்றின் பக்கங்கள்.
கண்களை திசை திருப்பலாம்,
காதுகளை செவிடாக்கலாம்.
காற்றை என்ன செய்வாய்?

ஒவ்வொருவ‌ருடைய‌ வாழ்வும் அவ‌ர‌வ‌ர்க‌ள் வாழ்கின்ற‌ கால‌த்தையும், இருக்கின்ற‌ ச‌மூக‌ங்க‌ளையும் பொறுத்து வேறுப‌ட‌க்கூடிய‌து. எல்லா நில‌ப்ப‌ர‌ப்புக‌ளுக்கும் ந‌ம்மால் எப்ப‌டி ப‌ய‌ணிக்க‌ முடியாதோ, அவ்வாறே ந‌ம்மால் எல்லோருடைய‌ வாழ்வையும் வாழ்ந்து பார்க்க‌வும் முடியாது.

புலம் பெயர் நாடுகளில் தமிழ் பேசும் மக்களின் ஆதரவைக் கோரும் நோக்குடன் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஆட்சியிலுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன தமது பிரச்சார முன்னெடுப்புகளை ஆரம்பித்துள்ளன. புலிகளின் அழிவிற்குப் பின்னான அரசியல் வெற்றித்தை நிரப்பும் முயற்சியில் பேரின வாதக் கட்சிகளும் கூட ஈடுபட்டுள்ளமை என்பது ஆச்சரியமானதே.

கடந்த 23 வருடங்களாக பிரித்தானியாவில் கிங்ஸ்டன் என்ற புற நகர்ப் பகுதியில் எந்த தடங்கலும் அச்சுறுத்தலுமின்றி, அனைத்து அரசியல் அதிர்வுகளுக்கும் முகம் கொடுத்து இயங்கி வருவதுதான் கிங்ஸ்டன் தமிழ் பாடசாலை. ரொல்வத் பெண்கள் கல்லூரியின் கட்டட வசதிகளைப் பயன்படுத்தி, கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம் போன்ற கலை சார் பயிற்சி வகுப்புக்களையும், தமிழ் வகுப்புகளையும் நடத்திவரும் கின்ஸ்டன் தமிழ் பாடசாலையின் துணை அமைப்பான பெற்றோர் வேலையாளர் நண்பர்கள் சங்கம்(PSFA) 2004ம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு பண உதவி வழங்கியதிலிருந்து பிரித்தானிய தமிழ் போரம்(BTF) சட்டரீதியான பல வகையான தொல்லைகளை வழங்க ஆரம்பித்தது.

சர்வதேச அறிவுஜீவிகள், மனித உரிமையாளர்களின் அறைகூவல்
(இந்திய பிரதமருக்கு அனுப்பப்பட்ட வெளிப்படையான கடிதம்)

ஆதிவாசி மக்கள் (மரபின மக்கள்) தொகை நிறைந்துள்ள ஆந்திர மாநிலம்.
சட்டீஸ்கர். ஜார்க்கண்ட். மகாராட்டிரம். ஒரிசா மற்றும் மேற்கு வங்களாத்தில்
முன்னெப்போதும் காண இயலாத வகையில் ராணுவ படையும் ,துணை ராணுவ
படையினரும் குவிக்கப்பட்டு , பெரும் ராணுவ தாக்குதல் நடத்த இந்திய
அரசாங்கம் திட்டமிட்டிருப்பதை அறிந்து நாங்கள் பெரிதும் கவலை
கொண்டுள்ளோம்.

இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள பாரிய அரசியல் மாற்றத்தினைத் தொடர்ந்து பல்வேறு சமூகப் பிரிவினர் குறித்த விடயங்கள் அரசியல் அரங்கில் ஓங்கி ஒலித்துவரும் இந்த சூழலில் நம் பெண்களின் நலன்கள் குறித்த விடயங்களும் இன்று கூர்மையாக கவனிப்புக்குள்ளாக வேண்டியுள்ளது.

ஐரோப்பா, லண்டன்  சுவிஸ் ஆகிய இடங்களில் தொடர்ந்து  நடைபெற்று வருகின்ற  புகலிடப் பெண்கள் சந்திப்பின் 28வது தொடர் ஒக்ரோபர் 10ஆம் திகதி சுவிஸ் உஸ்ணாக்கில் நடைபெற்றது.

கவிஞனே !

கோவணமும்,எழுதுகோலுமாய்- நீ

தேடிய செல்வத்தைக்,

கறையான் புற்றிற்குள்.......

 
தொலைத்தாயிற்று.

கடலோர மக்களின் வாழ்வு என்றாலே போராட்டங்களை எதிர்கொள்வதாகவே அமைந்துவிடும்போல! இலங்கை கடற்படையின் தாக்குதல், மீனவர்களுக்குத் தடை விதிக்கும் அறிவிப்பாணை, மீனவர்களைக் கடற்கரையில் இருந்து வெளியேற்றும் சட்டங்கள் என அச்சுறுத்தல்கள் ஒருபுறம் இருக்க, இயற்கைப் பேரிடர்களால் பாதிப்புகளில் தத்தளித்து மீளமுடியாமல் இருப்போருக்கு இன்னோர் அதிர்ச்சியாக வந்துள்ளது கடலரிப்பு.

கல்லூரிப் பாலைவனத்தில்
கற்பகத் தருக்களைத்
தேடியலையும்
கலாமின் கனவு வாரிசுகள்
நாங்கள்

 

எங்களின் புனித வரலாறு
வெளியாகும் போதெல்லாம்
“கூவம்” கூட
முகம் சுளிக்கும்

 

தமிழீழ விடுதலைப் போராட்டமும், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டமும் இன்று இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகதோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழர்களின் நியாயமான உரிமைக்கான போராட்டம் குறித்தான ஆரோக்கியமான விமர்சனங்கள் எதும் எழாமலும்,இலங்கைத் தமிழரின் எதிர்காலம் குறித்துபரந்துபட்ட ஆய்வுகளுக்கும் விமர்சனங்களுக்குமான சுதந்திர தளம் எழாமையும் எதிர்காலம் குறித்த ஒரு புதியபாதைக்கு தகுந்த அடிப்படையின்மையையும் வெறுமையும் இன்னும்தொடர்கிறது.

யாழ்ப்பாண சமூகத்தின் ஆதிக்க சக்தியாகக் கொள்ளப் படும் வேளாள குழுமத்தின் உருவாக்கம், ஆட்சி மாற்றங்களுக்கு ஏற்ப தமது அதிகாரத்துவத்தைத் தக்க வைக்கும் தன்மை, அதற்கான பொருளாதார, கலாச்சார, கருத்தியல் கட்டுமானங்கள் பற்றிய தேடலே இக்கட்டுரையாகும்.

கடந்த காலங்களில் புலத்தில் முன்னணியில் நின்று தமிழ் தேசியம் ஐனநாயகம் பாட்டாளி வர்க்கத் தலைமை மற்றும் அந்நிய ஏகாதிபத்திய எதிர்ப்பு பேசிய தமிழ் ஈழ விடுதலை இயக்கங்களுக்கு வேலை செய்த புத்திஜீவிகளில் பலர் இன்று இலங்கை பாசிச அரசை போற்றுவோராகவும் ஒட்டுக் குழுக்களின் பிரமுகர்களாகவும் மேடைகளில் பவனி வருகின்றனர்.

(இலங்கையில் இருந்து வெளிவந்த அமுது சஞ்சிகையில் வெளியாகிய கட்டுரை கீழே) என் சத்தியப்பதிவு 21 - 09 - 2005

எங்கள் மெடம் ராஜனி ஒரு கலங்கரை விளக்கு!

1989 ம் ஆண்டு செப்டெம்பர் 21ம் திகதி, எங்கள் அன்புக்குரிய மெடம் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் தன் கடமையை முடித்து விட்டு வீட்டிற்கு போகும்போது வீதியில் வைத்து கோழைத்தனமாகசுட்டுக் கொல்லப்பட்டார்.

தமிழ் அரங்கத்தால் நடாத்தப்பட்ட இச் சந்திப்பு என்பது ஒரு மிக முக்கியமானதாகவே கருதுகின்றேன். இன்றைய சூழலில் மக்களை புலிகளின் பெயரால் ஏமாற்றிப் பிழைப்பை நடத்தும் பிழைப்புவாதக்கோஸ்டி ஒருபுறமிருக்க தம்மை புலி எதிர்பாளர்கள் என்றும் தற்போது புலிகள் இல்லாது ஒழிக்கப்பட்டதனால் தாமே இன்றைய சமூக சிந்தனையாளர்கள் என்றும் தம்மை காட்டியபடி இலங்கை அரசுக்குப் பின்னால் நிற்கும் மாற்றுக்கருத்தைக் கொண்ட கோஸ்டி என்பவர்கள் மறுபுறமிருக்க மக்களை தனித்தனியாக ஏமாற்றி மக்களின் கருத்துக்களையும், மனங்களையும் மாற்றி அலையவிடும் ஒரு சில சாரார்களுக்கிடையே தொடர்ந்தும் எந்தவித விட்டுக் கொடுப்பும் இல்லாமல் தவறை தவறு என்று விமர்சித்து, ஒரு கருத்தை அடையக்கூடியவர்களை ஒன்றிணைத்து அவர்களை ஒரு மேடைக்கு அழைத்தது என்பது தமிழரங்கத்தின் வெற்றி என்றே கூறவேண்டும்.

மலையக மக்களின் வாழ்க்கைப் பயணம் ஆரம்பம் முதலே போராட்டமாகத்தான் இருந்துவருகிறது. மலைகளில் கொழுந்துக்கூடையும் மண்வெட்டியும் சுமக்கும் இவர்கள் மனிதில் அதற்கும் மேலான சுமைகளைத் தாங்கியவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

பேசுபவர்கள்: அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் ஈராக் நாட்டைச் சேர்ந்த பெண்கள்

இவர்கள் அமெரிக்காவுக்குச் சென்று அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்களின் முன்பு தங்கள் நிலைபற்றிக் கூறி, தங்களுக்கு நடக்கின்ற அநீதி குறித்துக் கேள்வி எழுப்புமாறு அவர்களிடம் வேண்டுதல் விடுக்கிறார்கள்.