Language Selection

விருந்தினர்

//எவ்வாறாயினும் தேசிய வாதிகளும்,தலித்தியவாதிகளும் பெண்ணியவாதிகளும் பிரிந்து நின்று எல்லாரையும் பிளவு படுத்திச் சாதிக்க இயலாத விடயங்கள் பலவற்றை எல்லா முரண்பாடுகளையும் ஒரு முழுமையின் பகுதியாகவர்க்கப் போராட்டத்தினுடன் தொடர்பு படுத்திய ஒரு போராட்டப் பாதை பத்தே ஆண்டுகளிற்
சாதித்துள்ளது. அதன் பாடங்கள் உன்னதமானவை. //

"வர்க்கப் பகைவர்களைக் கொன்றொழித்து அவர்களின் இரத்தத்தில் கை நனைப்பவர்களே இறுதியில் புரட்சியாளர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவார்கள்.ஆகவே நீங்கள் கிராமங்களுக்குச் செல்லுங்கள் கிராமங்களில் ரகசிய குழுக்களை அமைத்து ஏழை எளிய மக்களிடம் அதிக வட்டிக்கு பணம் கொடுத்து சொத்தைப் பறிப்பவர்கள்,மோசமான நிலப்பிரபுக்கள்,பள்ளி,கோவில் நிலம் உள்ளிட்ட பொதுச் சொத்துக்களை அபகரிப்பவர்களை அழித்தொழிக்க வேண்டும்.அழித்தொழிப்பு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்."

இலங்கையில் தொடரும் போரும் இனத்துவ முரண்பாடுகளும் இலங்கை வாழ் மக்களின் வாழ்வை மிக மோசமான அவலத்திற்குள் தள்ளிஉள்ளது. இதன் விளைவால் தினமும் மக்கள் படுகின்ற துயரங்கள் இங்கு "மனித இருப்பை" பெரிதும் கேள்விக்குட்படுத்தி விட்டுள்ளது.

 

"மூதூர் வெளியேற்றம்" தொடர்பான இச் சிறு நூலைத் தொகுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், வாகரையிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுடன் மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றத்தை அண்மித்து நிகழ்ந்த சம்பூர் பிரதேச மக்களின் வெளியேற்றமும், அவர்கள் மீளவும் சம்பூர் பிரதேசத்திற்கு திரும்பிச்செல்ல முடியாமல், தற்போதும் நலன்புரி நிலையங்களில் தங்கி வாழ்ந்து வருவதும் பெரும் மனித இடப்பெயர்வுத் துயரங்களாகவே உள்ளன.