Language Selection

சமர் - 24 : 10 -1998
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அண்மையில் இந்திய நீதிமன்றம் சிறுபான்மை ஆளும்வர்க்கத்தின் நீதியின் பெயரால், உன்னதமான ஜனநாயகத்தின் பெயரால் அப்பாவிகள் இருபத்தியாறு பேருக்கு வழங்கப்பட்ட தீர்ப்புகள் உலகுக்கு புதியனவா? ஜனநாயகத்தைப் பற்றிய பிரமைக்குள் நீடிக்கும் நம்பும் பிரிவுக்கு இவை ஆச்சரியமான அதீசயமான அதிர்ச்சியான விடையங்களாக மாறிவிடுகின்றது. இந்த தீர்ப்பையொட்டி, இந்தியாவிலும் புலம்பெயர் நாடுகளிலும், நாட்டிலும் வெளியிடப்பட்ட அறிக்கைகள் தனிவெளியீடுகள் இந்தியா ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வெளியிட்டதுடன், தீர்ப்புக்குள் தமது அதிப்தியை வெளியிட்டு இந்த சிறுபான்மை ஆளும் வர்க்க ஜனநாயகம் அதிராமல் இருக்க கருத்துரைத்துள்ளனர்.

 

 

இந்தியா என்ற பிராந்திய வல்லரசு பற்றி மௌனத்துடன் அதன் ஆக்கிரமிப்பு பற்றி அலட்டிக் கொள்ளாது கருத்துரைத்துள்ளனர். இந்த முதலாளித்துவ அரசு அமைப்பு என்பது சிறுபான்மை சுரண்டும் வர்க்க நலன்களை மட்டும் பேசுவது என்பதை காணமறுத்து, கருத்து வெளியிட்ட நிகழ்வு, இந்திய மற்றும் முதலாளித்துவ ஜனநாயக அரசுகள் தொடர்பான நம்பிக்கைகளை நீடிக்க வைக்கும் முயற்சியாக உள்ளது.

இன்று இருக்கக் கூடிய அரசுகள் மக்களுக்கானதோ, அவர்களின் ஜனநாயகத்தினை அடிப்படையாக கொண்டதல்ல. சிறுபான்மை ஆளும்வர்க்க சுரண்டல் பிரிவுக்கானதாக, அதன் ஜனநாயகத்துக்கானதாக நீடிக்கின்றது நீடிக்கமுடியும். இருக்கும் சட்டம் இந்த வர்க்க அமைப்பு நீடிக்கவைக்கும் எல்லைக்குள் மட்டும் ஜனநாயகத்தை வழங்குகின்றது. இது சிறுபான்மை பிரிவின் நலனுக்காக மட்டும் உருவாக்கப்பட்டது. இச்சிறுபான்மை மீதான தாக்குதல் வன்முறைகளை இந்த ஜனநாயகமும் அதன் ஆளும் அமைப்பும் அதன் சட்டமும் ஈவிரக்கமின்றி ஒடுக்கும்.

இது வரலாறு முழுக்க நீடித்தன நீடிக்கின்றன. இதன் தொடர்ச்சியில் கொலையாளியின் மூச்சுப்பட்டவர்கள் முதல் எதோ ஒரு தொடர்பைக் கூட குற்றமாக காட்டி மரணதண்டனை விதிக்க இந்த சிறுபான்மை ஆளும்வர்க்கம் பின்நிற்க்கவில்லை. பார்ப்பானிய ஆளும் சுரண்டல் வர்க்கத் தலைவன் ராஜீவ்காந்தி மீதான விசுவாசம், அதன் அருவருடித்தனம், அரசியல் பிழைப்புத்தனமாக எல்லாம் சேர்ந்துதான் மரணதண்டனையை விதித்த போக்கு வரலாறு முழுக்க ஆளும்வர்க்க குணாம்சமாக உள்ளது.

அநியாயமான வகையில் அப்பாவிகள் மீது மரணதண்டனை தீர்பு வழங்கிய பின் வெளியாகிய எதிர்ப்பு அறிக்கைகள் முதலாளித்துவ அரசு அமைப்பையோ, இந்திய ஜனநாயகத்தையோ கேள்விக்குள்ளாக்கவில்லை மாறாக விமர்சிக்க முற்ப்பட்டனர். இதன் மூலம் இந்திய ஜனநாயகத்தை தூக்கி எறியாத வகையில் சீர்திருத்த மனிதாபிமான ஜனநாயகத்தை, நீதிபதி கண்டுகொள்ளாத உண்மை மீது அதிர்ப்த்தி மீதான, ஜனநாயகத்தைக் கோருவதாகவேயிருந்தது.

இந்த தீர்ப்பு மூலம, இத்தீர்ப்பு எப்படி அ.மார்க்ஸ் கும்பலின் பின்நவீனத்துவம் சிறுபான்மை ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்வதன் மூலம் இந்த மரணதண்டனையை எப்படி நியாயப்படுத்துகிறது என்பதை பின்நவீனத்துவ கோட்பாட்டு மூலம் பார்ப்போம்.

அ.மார்க்ஸ் நந்தன் இதழுக்கு (15 மாசி 1998) "காத்திகேயன் கண்டுபிடித்த உண்மைகளும் கண்டு கொள்ளாத உண்மைகளும்" எனத் தலைப்பிட்ட கட்டுரையை "ஏது செய்தோம் நாம்" என்று தலைப்பிட்ட இவ் மரணதண்டனை தொடர்பான வெளியீட்டில் மறுபிரசுரம் செய்திருந்தனர். இத்தலைப்பிலேயே பின்நவீனத்துவ மோசடி தொடங்கிறது. காத்திகேயன் கண்டுபிடித்த உண்மைகள் என அ.மா எதைச் சொல்கிறார். குற்றவாளிகள் என மரணதண்டனை வழங்க சோடித்தவைகளையே காத்திகேயன் கண்டுபிடித்த உண்மையாக அ.மார்க்ஸ் எடுத்து முன்வைக்கின்றார். இந்த உண்மை என்பது ஆளும் வர்க்க உண்மையும், அதைப் பாதுகாக்கும் உண்மையே ஒழிய  ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மைகளல்ல அ.மா உண்மை என்கிறார். உண்மை என்பது பின்நவீனத்துவம் கூறுவது போல் குறித்ததுக்குள் காணமுடியாது. காணமுடியும் என்பது சிறுபான்மை பிரிவின் உண்மையாக ஆளும் வர்க்க உண்மையாகத்தான் இருக்கிறது. மாறாக உண்மை என்பது முழுமையில் மட்டும்தான் சாத்தியம். இதை மறுக்கும் பின்நவீனத்துவம் சிறுபான்மை உண்மைமீது (குறித்ததில்) உண்மையை போற்றுகிறது இதனால் பொதுமையை மறுக்கின்றது.

பின்நவீனத்துவ கோட்பாட்டில் கொலையாளியுடன் தொடர்பு  குற்றவாளியாக்க காரணமாகிவிடுகிறது. மறுவாசிப்பு, வேறுபட்ட பார்வை பார்க்க முடியுமென்றால், பொதுவான உண்மை என்று ஒன்று இல்லை என்றபின் பின்நவீனத்துவ கோட்பாட்டின் பிரதிநிதி காத்திகேயன் போன்ற ஆளும்வர்க்க சிறுபன்மை பிரிவு அப்பாவிகளை குற்றவாளியாக்கிவிடுகிறது.

கண்டுகொண்ட உண்மையும் கண்டு கொள்ளாத உண்மையும் நேர்எதிரானவை ஒன்றுடன் ஓன்று இணங்க முடியாதவையாகும். ராஜீவ் ஏன் கொல்லப்பட்டான்?, அவனின் குற்றம் என்ன?, அவனின் அரசியல் என்ன?, அவன் சிறுபான்மையின் பிரதிநிதியா? அல்லது பெரும்பான்மையின் பிரதிநிதியா?, கொலையாளி ஏன் கொன்றான்?, கொலையாளியின் அரசியல் என்ன?, எனவிரிந்த தளத்தில் மட்டும்தான் முழுமையான  ஆய்வும் உண்மையான தீர்வும் பிறக்கிறது. இது எல்லாவற்றுக்கும் எல்லாப் போராட்டங்களுக்கம் பொருந்தும். இதைப் பின்நவீனத்துவம் மறுத்து சிறுபான்மைக்காக குரல் கொடுக்கும்போது பகுதியில் தீர்வுகாண கோரும்போது கர்த்திகேயன் பின்நவீனத்துவ வாரிசாக இருப்பதுடன் மரணதண்டனையை கோட்பாட்டுரீதியில் பின்நவீனத்துவம் அங்கீகரிக்கின்றது.

"அவன் ஒரு ஈழத்துப்பையன். பெற்றோர் இராணுவத்தாக்குதலில் செத்துப்போயிட்டாங்களாம். அகதி. அவன் பேசுகிற தமிழ் எனக்கு ரொம்பப்பிடிக்கும். என் மகனுக்கு நண்பன். இந்த வயதில் இத்தனை இழப்புகளைச் சந்தித்த அவனுடைய சோகமான முகம் என்னை எப்போதும் வாட்டும். வீட்டுக்கு வரும் நேரங்களில் ஒரு வேளை சோறு போடுவதில் எனக்கொரு ஆறதல். அன்றும் அவன் வந்தான். முகமெல்லாம் வேர்த்திருந்தது. பரபரப்பாக இருந்தான். சப்பிடச் சொன்னேன். படுக்கச் சொன்னேன். மாத்திரை வங்கி வந்து கொடுத்தேன். இரண்டு நாள் கழித்து ஊருக்குப் போகிறேன் என்றான். பெங்க@ருக்கு ஒரு டிக்கட் வேண்டுமென்றான் அவனிடம் காசு இல்லை என்பது எனக்குத்தெரியும். நான் டிக்கட் வாங்கி வந்து கொடுத்தேன். அவன் போய்விட்டான்."

இந்தச் சொற்குவியலை ஒரு "கலிடாஸ் கோப்பு"க்கு ஒப்பிடலாம். வௌவேறு கோணங்களில் சாய்க்கும் போது வௌவேறு அர்த்தங்கள். மனிதநேய எழுத்தாளர் ஒருவருக்கு இது ஒரு பாசமுள்ள அன்னையின் பரிவு மிக்க சொற்கள். இந்தச் சொற் குவியல் அவருக்கு ஒரு மனிதநேயக் கதையாடலுக்கான கச்சாப்பொருள். ஓரு புலனாய்வுக் குழுத்தலைவருக்கோ இது ஒரு சட்ட ஒழுங்குக் கதையாடலுக்கான கச்சாப்பொருள்! ஏற்கனவே "குற்றச்செயல்" என வரையறுக்கப்பட்ட ஒரு நிகழ்வுதொடர்பான உண்மை! சொற்கூட்டத்தில் அதன் வௌவேறு அர்த்தங்களுக்குமான உறவில் ஒன்றை மட்டும் உருவி எடுத்து "சட்டபூர்வமான உண்மை" இங்கே கட்டமைக்கப்படுகிறது." எனத் தொடர்ரும் அ.மார்க்சின் வாதம் அவரின்  பின்நவீனத்துவ வழியில் மரணதண்டனையை மறைமுகமாக அங்கீகரிக்கின்றது.

இதை அவரின் "பின்நவீனத்துவம் இலக்கியம் அரசியல்" என்ற நூலில் உள்ள கோட்பாட்டில் ஆராய்வோம். அந்த நூலின் 68ம் பக்கத்தில் "உண்மை, நீதி, அறம் எதையும் பின்நவீத்துவம் மறுக்கவில்லை.------------ இவற்றை எல்லாம் தீர்மானிப்பதற்கான அடிப்படையான பொது ஆதாரம் ஏதுமில்லை என்பதை பின்நவீனத்துவம் சொல்கிறது. பேருண்மை, பெருநீதி, பேரறம் என எதுவும் இருக்கமுடியாது." என்கிறார் அந்தோணிசாமி மார்க்ஸ்.

அதாவது  பின்நவீனத்துவ கோட்பாட்டின்படி உண்மை, நீதி, அறம், பெருநீதி, பேரறம், பேருண்மை என்பன இருபத்தியாறு மரணதண்டனை கைதிகளின் பக்கத்தில் பொது ஆதாரத்தில் இருக்கமுடியாது. இதன் மூலம் மரணதண்டனை வழங்கிய சிறுபான்மையின் பக்கம் நீதி, அறம், உண்மை இருக்கும் என மறைமுகமாக  அங்கீகரிக்கின்றார்.

இதை மேலும் எப்படி பின்நவீனத்தவ சாக்கடையால் அங்கீகரிக்கின்றார் என்பதை அ.மார்க்ஸ்சின் அதே நூலில் பக்கம் 56இல் " பெரும்பான்மைக்கு எதிரான தனிநபரின் கருத்துரிமை என்கிற தாராளவாதக் கோட்பாட்டு மீண்டும் அழுத்தம் கொடுத்து பரிசீலிக்க வேண்டிய ஒன்று" என்கிறார். குற்றவாளிகளாக மாற்றப்பட்ட கைதிகள் தொடர்பாக பெருண்பான்மை மக்களின் நீதியின்பாலான கருத்துரிமையை அ.மார்க்ஸ் பின்நவீனத்துவ சாக்கடையால் மறுத்து தனிநபர் உரிமையின் பெயரில் காத்திகேசனினதும் மற்றும் இந்தியா ஆளும்வர்க்க கருத்துகளை அழுத்தம் கொடுத்து பரிசீலிக்க வேண்டும் என்பதன் மூலம், அப்பாவிகள் மீது வழங்கிய மரணதண்டனையை எதிர்த்த மக்களின் அபிப்பிராயத்தை அ.மார்க்ஸ் பின்நவீனத்துவ வழியில் மறுத்து கர்த்திகேசனின் தீர்ப்புதான் நீதியை விட முக்கியமானது என்கிறார்.

உண்மையில் பின்நவீனத்துவம் சிறுபான்மையின் பெயரால் சிறுபான்மை ஆளும்வர்க்கம் சார்பாக பெரும்பான்மை மக்களுக்கு எதிராக உள்ளது. அதே நேரம் பொது ஆதாரம் எதுவும் இல்லை என்பதன் ஊடாக குற்றவாளிகளாக மாற்றப்பட்டவர்களின் பொது உண்மையை மறுத்து, இந்தியா நீதிமன்றம் பின்நவீனத்துவ வழியில் பொது உண்மை எதுவும் இருக்க முடியாது என மறுத்து வழங்கிய தீர்ப்பு தான், இருபத்தியாறு அப்பாவிகளுக்கான மரணதண்டனை. உண்மையின் பொது ஆதாரங்களை மறுப்பது என்பது பின்நவீனத்துவ அடிப்படைக் கோட்பாடுயாகும். இந்திய நீதிதுறையும், ஆளும்வர்க்கமும், அதன் ஐனநாயக அமைப்பும் பொது ஆதாரத்தை மறுத்து நிற்பதற்கான அடிப்படைக் கோட்பாட்டை பின்நவீனத்துவம் வழங்கி பாதுகாக்கின்றது. பின்நவீனத்துவத்தின் சிறப்பான பிரதிநிதிகளாக முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ பிரதிநிதிகள் மட்டும்தான் உலகில் இருக்கமுடியும் என்பதை ஆதாரமாக நாம் நிர்வாணமாக காணமுடிகின்றது. இதன் சிறப்பான பிரதிநிதியாக அ.மார்க்ஸ் அளவெடுத்து வெட்டினால் போல் உள்ளார்.

இதை மேலும் அதே நூலில் பக்கம் 61 இல் "....... கருத்தொருமிப்பு என்பதைக் காட்டிலும் கருத்து வேறுபாடு (னுளைளநளெழைn) உரிமையை சனநாயகம் எனப் பின்நவீனத்துவம் வற்புறுத்துகின்றது." என்கிறார். சனநாயகம் என்பது மரணதன்டனை வழங்குவதன் மூலம் அதற்க்கு எதிரான போராட்டத்தில் இருக்க முடியும் என்கிறார். இதுமட்டும்தான் சனநாயகத்தின் அடிப்பைக் கூறு என்கிறார். மரணதண்டனை இருக்கும்வரை தான் சனநாயகம் நீடிக்கமுடியும் என்கிறார். அதாவது இதில் கருத்து முரண்பாடு நீடிக்கும்வரைதான் சனநாயகம் நீடிக்க அடிப்படையானவையாக உள்ளது என்கிறார். எனவே மரணதண்டனை நீக்க கோருவது கருத்துமுரண்பாட்டை நீடிக்க வைக்கும் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டது. மரணதண்டனை நீக்காதவரைதான் சனநாயகம் நீடிக்கும் என்பதே பின்நவீனத்துவ கோட்பாட்டு விளக்கம். ஏனவே சனநாயகம் நீடிக்க வேண்டின் மரணதண்டனை நீக்கக்கூடாது என்பதும் பொது உண்மையில் விசாரனை நடக்க கூடாது என்பதும், இந்த கனவானின் பின்நவீனத்துவ விளக்கமாகும். மரணதண்டனை நீடிக்கும் வரைதான் கருத்துமுரண்பாடு கொண்ட சனநாயகம் நீடிக்கும் எனவே சனநாயகம் நீடிக்க வேண்டுமாயின் மரணதண்டனை நீக்கக்கூடாது இதுதான் பின்நவீனத்துவ கோட்பாட்டு விளக்கமாகும். இதை மேலும் அதே  பின்நவீனத்துவ நூல் பக்கம் 85 உள்ளபடி பார்ப்போம்.

".......'உண்மை" எல்லாக் காலத்திற்கும் எல்லா இடத்தற்கும் எல்லா மக்களுக்கும் ஒன்றாகவே இருக்க முடியும் என்றும் நம்பினோம்." எனக் கூறி மறுத்ததன் மூலம் உண்மை என எதுவுமில்லை எனப் பின்நவீனத்துவ வழியில் கூறுகின்றார். அப்பாவிக் கைதிகள் குற்றவாளிகள் அல்ல என்பது உண்மை இல்லை என்கிறார். இங்கு உண்மை இடத்துகும், எல்லா மக்களுக்கும், காலத்துக்கும் ஒன்றாக இருக்கமுடியாது என்கிறார்.

தமிழர்க்கு உண்மையானது சிங்களவர்க்கு உண்மையாக இருக்க வேண்டியதில்லை என்கிறார். இந்தியா ஆளும் வர்க்கத்துக்கு உண்மையானது மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டியதில்லை என்கிறார். மரணதண்டனையை கேட்டு கொதித்த மக்களின் உண்மை மற்றவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டியாதில்லை என்கிறர். ஏன்எனின்  உண்மை என்ற ஒன்று எல்லோருக்கும் இருக்காது என்பதன் மூலம் ஆளும் வர்க்க ஓடுக்குமுறைக்கு எதிரான பொது உண்மையல்ல என்பதால் நாம் அதை எதிர்க்கமுடியாது என்கிறார். ஆணால் இது சனநாயகத்தின் உயிர் மூச்சு என்பதால் இதை எதிர்ப்பதாக கூறுவோம். ஆணால் உண்மையின் அடிப்படையில் அல்ல. இங்கு உண்மை உயிர் வாழ வேண்டும் என்பது எமது நோக்கமல்ல. நாம் கதைப்போம் சனநாயகம் உயிர்வாழ வேண்டும் என்பதற்காக மட்டும். இது நீடிக்கும்வரைதான் முதலாளித்துவ சுரண்டல் நீடிக்கும். அது உள்ளவரைதான் சனநாயகமும் உயிர் வாழும் எனவே சுரண்டலை பாதுகாப்போம். ஆணால் எதிர்ப்பதாக பாசாங்கு செய்வது சனநாயகத்தின் பின்நவீனத்துவ வழியாகும்.

உண்மை என்ற ஒன்று மரணதண்டனைக்கு எதிராக இருக்கமுடியாது என்பதால் பின்நவீனத்துவ வாதிகள் எப்படி குரல் கொடுப்பார். இதனால்தான் ஆளும் வர்க்கம் சார்பாக இந்தியா ரூடே, துக்களக்........போன்ற பத்திரிகைகள் சிறுபான்மையின் சனநாயகத்தைப் பாதுகாக்க பின்நவீனத்துவ வழியில் மரணதண்டனை சரியானது எனவாதிடுகின்றன. இவ்மரணதண்டனை சனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி எனப்பிரகடனம் செய்து, பின்நவீனத்துவ வாதிகளின் கோரிக்கைக்காக யதார்த்தமாக உண்மையாக விசுவாசமாக குரல் கொடுக்கின்றனர். அதாவது மாறுபட்ட இன்றைய சனநாயகத்தில் மட்டும்தான் மாறுபட்டகருத்து, மாறுபட்ட மக்கள் என அனைத்தும் நீடிக்கும் என்பதால் இந்த சமூதாய இருப்புக்காக நனவாக விசுவாசமாக பின்நவீனத்துவவாதிகள் செயல்பாடுகின்றனர்.

இருபத்தியாறு பேரின் மரணதண்டனை மாறுபட்ட கருத்தில், மாறுபட்ட மக்களில், மாறுபட்ட இடத்தில் சனநாயமாக மையமிடுவதால் இதுபோன்றவை நீடிக்க பாதுகாக்க நனவாக போராடவேண்டும் என்கிறார். சனநாயகத்தை ஒழித்துக் கட்ட கோரும் பட்டாளிவர்க்க சமுதாய கோரிக்கையை எதிர்த்து இன்றைய உலக ஒழுங்கு மட்டும்தான் சனநாயகத்தின் ஒரேயொரு பாதுகாப்பான பாதை என்பதால் அப்பாவிகள் மீதான மரணதண்டனை போன்றவை அவசியமானது, இது சனநாயகத்தை உயர்த்த, குரல் கொடுக்க உள்ள இறுதியான உள்ள ஒரே மார்க்கம் என்பதால் மரணதண்டனையை பாதுகாக்க வேண்டும், அதே நேரம் எதிர்ப்பதாக சனநாயகவழியில் பின்நவீனத்துவ வழியில் பேசுவோம் என்கின்றார். தொடர்ந்தும் அதே நூல் பக்கம் 55 இல் கூறுவதைப் பார்ப்போம்.

"பெரும்பான்மையின் கருத்துக்கு எதிராகச் சிறுபான்மை அல்லது ஒரு தனி மனிதர் தனது கருத்தை முன்வைப்பதற்கும் காப்பாற்றுவதற்கும் பிரச்சாரம் செய்வதற்க்குமான உரிமையே சனநாயகம்." என அ.மார்க்ஸ் பின்நவீனத்துவ வழியால் எடுத்து முன்வைக்கின்றார்.

இதற்க்கு அண்மையில் துக்ளக் (27.5.98) இதழில் சிறுபான்மை  தனிநபர் சனநாயகத்துக்காக குரல்கொடுத்ததைப் பார்ப்போம். "நினைத்ததை எழுதுகிறேன்" பகுதியில் " போக வேண்டிய சட்டம்" எனப்போட்டு "நில உச்சவரம்புச் சட்டத்தை மத்திய அரசு நீக்கியிருக்கிறது........... கம்யூனிஸ ஆட்சியில் ஒரு சர்வாதிகாரத்தின் கீழ் வேண்டுமானால் இம்மாதிரி சட்டம் செல்லுபடியாகக் கூடுமே தவிர, ஒரு ஐனநாயக நாட்டில் நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய சட்டம் அல்ல இது............ பொது உடமை என்ற பெயரில், பொதுக் குழப்பத்தை மட்டும் விளைவித்துக் கொண்டிருந்த இந்தச் சட்டம், போக வேண்டிய சட்டம்தான்." இந்த வாதம் எப்படி  ஐனநாயகத்தை வரையறுக்கின்றது என்றதற்க்கு நல்ல உதாரணம். சிறுபான்மை , தனிநபர் ஐனநாயகம் என்பது பெரும்பான்மை ஐனநாயகத்துக்கு எதிரானது என்பதை நிலஉச்சவரம்பு சட்டநீக்கம் தெளிவாக காட்டுவதையே அ.மார்க்ஸ் பின்நவீனத்துவ கோட்பாட்டால் கோருகின்றார். மக்களுக்கு சொத்துரிமை இருப்பது ஐனநாயக விரோதம் இது கம்யூனிச சர்வாதிகாரம் எனக் கூறுவதையே அ.மார்க்ஸ் தனிமனித உரிமையாகவும், சிறுபான்மை உரிமையாகவும் முன்வைக்கின்றார். இதையே லண்டனில் இருந்து எழுதும் யமுனாவும் எழுதுகின்றனர்.

இந்த சிறுபான்மை ஐனநாயகத்தை அமுல்படுத்தக் கோரி இந்தியா ரூடே (மே 27 98) ஆசிரியர் குறிப்பில் "வெடித்தது குண்டு அடுத்தது?" எனத்தலைப்பிட்ட செய்தியில் அணுகுண்டு வெற்றி போலி மயக்கத்தில் பெரும்பான்மை மக்கள் தங்களை மறந்து கூத்தாடிக் கொண்டிருந்த நிலையை சிறுபான்மை பிரிவுக்கு சாதகமாக மாற்றும்படி எழுதுவதைப் பார்ப்போம்.

"முதல் வாக்குறிதியை நிறைவேற்றியாகி விட்டது. இரண்டாவது வாக்குறிதியையும் நிறைவேற்ற இதுவே சரியான தருணம். இதற்க்கு சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். ஆனால் இப்போது உள்ள மனநிலை வெகு சாதகம்" என்கிற போது  ஐனநாயகம் எதுஎன்பதையும், சிறுபான்மை ஐனநாயகத்தின் மறுகாலணியாக்கத்துக்காக போராடும் இந்தியா ரூடே, துக்களக் போன்றவற்றின் குரல்களுக்கும், அ.மாhக்ஸ்சின் குரலுக்கும் எந்த வேறுபாடும் இருக்கவில்லை. சிறுபான்மை நலனுக்காக பாரதியஐனதா அரசு அணுக்குண்டை வெடிக்க வைத்தது. குண்டுவெடிக்க முன் அ.மார்க்ஸ்சின் சிறுபான்மை ஐனநாயகத்துக்காக இறககுகமதி தீர்வையை ஏப்பிரல் 13 இல் 340 பொருளுக்கும், ஏப்பிரல் கடைசியில் 300 பொருளுக்கும் (இதில் வேடிக்கை என்னவென்றால் சிலஅடிப்படை நுகர்வுப் பொருளுக்கும் நீக்கி மக்களின் வயிற்றில் அடித்த சுதேசி வேடம் போட்டு குண்டு போட்டதுதான்) இறக்குமதி தீர்வை நீக்கி சிறுபான்மைக்காக சேவை செய்த அரசு, தமது சுதேசி வேடம் கிழியாது இருக்கவும், மக்களை திசைதிருப்பவும் அணுக்குண்டு போட்டு திசைதிருப்பியது என்பது அ.மார்க்ஸ்சின் அதே தொழிலாக ஏகாதிபத்திய நலன்களான சிறுபான்மையை திருப்திசெய்யத்தான்.

இதைப் போல் கத்திகேசனினதும் இந்திய ஆளும் வர்க்க சிறுபான்மையும் தனது ஐனநாயக விரோத தீர்ப்பை வழங்கவும், நடைமுறைப்படுத்தவும் உள்ள உரிமையை மறுப்பது உள்ளவரை அது ஐனநாயக விரோதமானது, எனவே அதைப் பாதுகாக்கும் உரிமைதான் ஐனநாயகம் என்கிறார். மரணதண்டனை வழங்கும் உரிமை ஐனநாயகம் என்பதால் அதைப் பாதுகாத்தபடி அதை எதிர்க்கும் உரிமையும் ஐனநாயகம் என்பதால்  எதிர்த்தபடி இரண்டையும் பாதுகாப்போம் என்கிறார். மரணதண்டனையை எதிர்த்த இவரின் அறிக்கை மரணதண்டனையை பாதுகாக்கும் உரிமையினை எதிர்த்தல்ல. இரண்டின் மேலாக மட்டும்தான் பின்நவீனத்துவம் உள்ளதால் நனவாக இருக்கும் சமுதாய அமைப்பை நனவாக பாதுகாக்க பின்நிற்காத அறிக்கைகளை விடுவது அவசியமாகிவிடுகின்றது. மரணதண்டனையை எதிர்த்தல்ல ஐனநாயகத்தைப் பேசிக் கொள்ள மட்டும் பேசுகின்றனர்.

பின்நவீனத்துவம் பொது உண்மையை மறுத்து, சிறுபான்மையினதும், தனிநபரினது உரிமையை பாதுகாத்தும் பெரும்பான்மை மக்களையும், பெரும்பான்மை பொது உண்மையையும் மறுத்து நிற்பதால் பெரும்தத்துவத்தை மறுத்த நனவாக சிறுபான்மை ஆளும் வர்க்கத்துக்கும் அதன்தனிநபர் பிரதிநிதிகளுக்கும் ஐனநாயகத்தின் பெயரில் முண்டுகொடுக்கின்றது. எல்லா மனிதர்க்கும் ஐனநாயகம் இருந்தால் எப்படி ஐனநாயகக் கோரிக்கை எழமுடியும்?. ஐனநாயகம் என்பது குறித்த பிரிவுக்கு  மட்டுமானதாகவே எப்போதும் வர்க்க சமுதாயத்தில் நீடிக்கும். எல்லோருக்கும் ஐனநாயகம் இருப்பின் ஐனநாயகம் மறைந்துவிடும். அ.மார்க்ஸ்சின் ஐனநாயகம் என்பது உண்மையில் சிறுபான்மை சுரண்டும் ஐனநாயகத்தைப் பாதுகாப்பதில் எழும் குரலாக மட்டும் உள்ளது.