Language Selection

பி.இரயாகரன் 1990-1995
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

1980களின் பின் எம் தேசவிடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளுடன் 2 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் பல்;வேறு மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்துள்ளனர். இதைவிட 1 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இந்தியாவில் புலம் பெயர்ந்துள்ளனர். மேற்கு நாடுகளில்புலம் பெயர்ந்தோர்களில் 80 வீதமானோர் யாழ் குடாநாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மத்திய மற்றும் மேற்தட்டு வர்க்கப் பிரிவினராகவுள்ளனர். மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்தோரில் 98 வீதமானோர் பொருளாதார அகதியாகவே புலம் பெயர்ந்தவர்கள். இன்று மேற்கு நாடுகளில் இருந்து திரும்பிச் செல்லல் என்பது 5வீதம் அல்லது  10வீதமாக மட்டுமே இருக்கும்.

அந்நிலையில் எம்மவர்கள் மேற்கு நாடுகளில் கைக்கொள்ளும் கலாச்சாரப்பேணல்; என்பது பல கேலிக்குரியவையாக உள்ளது. எம் நாட்டில் பிற்போக்கு நிலப்பிரபுத்துவ கலாச்சாரப் பழக்க வழக்கத்துடன் ஒன்றிப்போன பார்ப்பன திணிப்புக் கலாச்சாரம் இணைந்து இங்கு அர்த்தம் அற்ற பல கேலிக்கூத்துகளை கலாச்சாரத்தின் பெயரால் நிகழ்த்துப்படுகின்றது. கலாச்சாரம் என்ற பெயரால் பெண்கள் மீதான அடக்கு முறையும், கலாச்சாரம் என்ற பெயரால் பெண்களை இறுக கட்டிப்போடும் முயற்சிகளையும் காணக் கூடியதாகவுள்ளது. நாம் புலம்பெயர்ந்துள்ள நாடுகள் முதலாளித்துவ நாடுகளாக இருந்த போதும் இடது சாரிகளின் போராட்டத்தினால் மக்கள் சில பல சலுகைகளைப் பெற்றுள்ளனர். தற்போது ஏகாதிபத்தியமாக வளர்ச்சி அடைந்த நாடுகளின் மக்கள் மத்தியில் ஏகாதிபத்தியக் கலாச்சாரம் புரையோடிப்பேயுள்ளது.

இந்நாடுகளுக்கு காலடி எடுத்து வைத்த, பின்தங்கிய சமூக பொருளாதார கலாச்சாரம், கொண்ட எம்மக்களை இச்சமூக அமைப்புக்கள் ஒருகணம் திகைக்க வைத்து விடுகிறது. இங்கு வந்த எம்மவர்கள் இச்சமூகத்தின் முற்போக்கான அம்சங்களை கற்றுக் கொள்வதற்கு பதில் தாங்களே சமூகம் பற்றி ஒரு கொச்சைத்தனமான பார்வையை உருவாக்கிக் கொண்டனர்.

தமிழ்; கலாச்சாரம் என்றால் என்ன? இக்கேள்வியை ஒரு தமிழரிடம் கேட்பின் விழியைப் பிதுக்கியபடி அப்படி ஒன்று உண்டா என கேட்பார். அதேவேளை கலாச்சாரம் என்ற பெயரால் பல கேலிக் கூத்துக்களை தமிழர்கள் நடத்துகின்றனர்.

1) சாமத்தியசடங்கு செய்தல்

2) தாலி கட்டல்

3) ஐயரைக் கொண்டு திருமணம், அந்திரட்டி, துடக்குக் கழித்தல், ............. போன்ற சடங்குகள்.

4) மணவறை மற்றும் ஆடம்பர வைககளில் நிகழ்ச்சிகன்.

5) பிறந்ததின விழா பெரிதாகக் கொண்டாடல்.

6) பணம் பரிசுப் பொருட்களை கொடுத்தல், வாங்கல் (செய்கடன் செய்தல்;).

7) சாதிபார்த்தல்.

இவைகள் தான் எமது கலாச்சாரம் என்று சொல்லப்படுபவை. இதை விட பெண் குழந்தை என்றால் அதை வீட்டுக்குள் பூட்டி வைத்து வளர்க்கும் கலாச்சாரம். இது தமிழ் மக்களின் கலாச்சாரமா? நிச்சயமாக இல்லை.

சாமத்தியச் சடங்கு

சாமத்தியச் சடங்கு என்பது பல நூறு வருடங்களுக்கு முன்பு சமுதாயத்தில் மிகக் குறைந்த மக்கள் வாழ்ந்த காலத்தில் ஒரு பெண் திருமணத்திற்கு தயார் என்ற நிலையை அறிவிக்க செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியே சாமத்தியச் சடங்கு. இச் சடங்கு இப் பெண்ணை ஆண் திருமணம் செய்வதுடன் அப்பெண்ணை அடையப் போட்டிகள் வைக்கப்படுவது உண்டு. அதில் வெல்பவன் அப்பெண்ணைக் கைபிடிப்பான். இன்று அப்படி அல்ல. ஒரு பெண் பூப்பெய்தியவுடன் திருமணம் செய்வது இல்லை. பெண் கேட்பதும் இல்லை. ஆனால் இன்று இந்நிகழ்ச்சி செய்வது என்பது அப்பெண்ணை அவமானப் படுத்துவதுடன் அப்பெண் காட்சிக்கு வைக்கப்படுகிறாள். அங்கு யாரும் பெண் கேட்பின் அங்கு கொலையே நடக்கும், என்ற இன்றைய நிலையில் இதை ஏன் செய்ய வேண்டும்? இங்கு இதைச் செய்யும் பெற்றோர் பலர் தமது மூடநம்பிக்கையுடன் கூடிய அறியாமையையுடன், ஒரு பணம் சேர்க்கும் நிகழ்ச்சியாகவே நடத்துகின்றனர். இன்று பெண் விளம்பரப் படுத்தப்பட்டு பணம் பண்ணும் ஒரு சந்தையாக இந்த சாமத்திய சடங்கு நிகழ்ச்சி மாறியுள்ளது.

தாலிகட்டல்

தாலிகட்டல், மற்றும் அதை ஒட்டிய சம்பிரதாயங்கள் அதன் உண்மையான நோக்கில் யாரும் செய்வதும் இல்லை கடைப்பிடிப்பதும் இல்லை. தாலி என்பது உண்மையில் மஞ்சல், கொடி என்பது மஞ்சல் கயிறு என்பது ஒரு பாரம்பரியம். ஆனால் அதை இன்று நாம் ஏற்றுக்கொள்வது இல்லை. ஆனால் தாலி, கொடி இன்று தங்கமாக மாறிவிடுகின்றது. இங்கு தாலி என்பது ஒரு பொருள், சந்தையாக அத்திருமணம் வளர்ச்சி பெறுகின்றது.

தாலி என்பதும் அதன் மூன்று முடிச்சும் (தற்போது மூன்று முடிச்சு போட முடியாது என யாரும் கேட்கவேண்டாம்) ஆணின் அடிமை பெண் என்பதை நிறுவுவதேயாகும். ஆனால் யதார்த்தத்தில் இதை ஏற்கும் பெண்கள் கொள்கை அளவில் இதை ஏற்கத் தயாராக இல்லை. மாறாக தாலி வேண்டும் எனக் கோரும் பெண் அதன் உண்மையான அர்த்தத்தை அல்ல. தங்கத்தையே கோருகின்றாள். இங்கு ஆண்கள் இத்தாலியை தங்கம் என்ற நோக்கு இருந்தாலும் பெண் தனது அடிமை என்ற நோக்கில் தான் தாலியைக் கட்டுகிறான். ஒரு பெண் ஆணின் அடிமை என்ற நோக்கில் இதை ஏற்பது இன்று இல்லை. ஆனால் ஒரு ஆண் தனக்கு பெண் ஆடிமை என்ற நோக்கில் தான் இதை அணிவிக்கின்றான்.

இதைவிட கால்விரலுக்கு மெட்டி அணியும் பழக்கம் என்பது ஒரு ஆணை நிமிர்ந்து பார்க்கக் கூடாது என்ற அர்த்தம் கொண்டது. எந்த நேரமும் தனது கால்விரலைப் பார்த்தபடியே இருக்க வேண்டும் என ஒரு பெண்ணைக் கோருகின்றது. இதே நேரம் ஒரு முஸ்லீம் பெண் தனது முகத்துக்கு கறுப்புத் துணியைப் போடுவது என்பது முன்னேற்றமானது. ஏனெனின் அப்பெண் அத்துணியின் கண்வழியாக உலகைப் பாக்கலாம். ஆனால் இந்து சமயப் பெண் உலகை பார்ப்பது குனிந்த நிலையில் விரல்களையே பார்க்க அனுமதிக்கின்றது. (இன்று இங்கு பெண்கள் அதைக் கண்டு பிடிப்பார்களா? இல்லை. இதைச் செல்லின் அங்க மோதல்கள் ஏற்படுகின்றன.) உலகைப் பார்க்காத வகையில் கால்விரல்களைப் பார்க்கக் கோரும் இந்த அணிகலத்தை ஏன்தான் அணிய வேண்டும். இது ஒன்றும் கலாச்சாரம் இல்லை. செம்மறிகள் மட்டுமே தலையைக் குனிந்தபடி மேய்ந்து செல்லும். ஆனால் ஏன் மனிதர்கள் இதைக் கண்டு பிடிக்க வேண்டும். இது போன்று திருமணத்தில் உள்ள பல நடைமுறைகள் செய்பவர்களுக்கே கேலியாக உள்ள அதே நேரத்தில், அதைக் கலாச்சாரம் என்று கடைப்பிடிப்பவர்களாக் உள்ளனர்.

சாதிபார்த்தல்

சாதிபார்த்தல் என்பது எமது கலாச்சாரம என எம்மவர்கள் நினைக்கின்றனர். சாதி எப்படி உருவாகியது. கடந்த 1500 ஆண்டுகளுக்கு முன்பு சாதியே இருக்கவில்லை. இந்தியாவில் ஆரியரனா பார்ப்பனர்கள் இந்திய மக்கள் மீதும், அதன் கலாச்சாரத்தின் மீதும் ஆளுமை பெற்ற போது சாதிகள் உருவாக்கப்பட்டன. சாதி என்பது இந்தியா, அதைச் சுற்றிய நாடுகளுக்கு மட்டும் ஒரு படைப்பா என நிங்கள் யாரும் இதுவரை இறைவனிடம் கேட்டிருந்தால் அதன் உண்மை புரிந்திருக்கும். வேதம் என்ற ஒன்றை உருவாக்கிய பார்ப்பனர்கள் தான் அங்கு சாதிக்கும் விளக்கம் கொடுத்தனர். பார்ப்பான் பிரமனின் தலையிலும், பள்ளர், பறையர் பிரமனின் காலிலும் பிறந்ததாக விளக்கம். வேதம் பிரமனின் 4 இடத்தில் பிறந்தவர்களை வேவ்வேறு சாதிப்பிரிவினர் என்கின்றது.

இது எவ்வளவு கற்பனையானது என புரிந்து கொள்ள முடியும். அத்துடன் ஒரு உயிர் எப்படி தோன்றியது. இதற்கு பார்பணிய வேதம் பிரம்மனின் வியர்வைத் துளி இரண்டு மண்ணில் விழுந்தது எனவும் அதில் தான் மனிதன் உதித்தான் என வேறு கற்பனை. கொஞ்சம் அறிவிருப்பின் இதன் கபடத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஐரோப்பிய சமூகத்தில் பணக்காரன் ஏழை என்ற வேற்றுமை உள்ளதே ஒழிய சாதி வேற்றுமை இல்லை. இங்கு மட்டும் இல்லாத ஒன்று எப்படி இந்தியச் சமூக அமைப்பில் உருவானது.

சாதி அடிப்படையில் எம் சக மனிதர்களை அடக்கி ஒடுக்கும் எம்மவர், வெள்ளையன் அடிக்கும் போது மட்டும் நாசிகள் அடிக்கிறார்கள், ஒடுக்கிறார்கள் எனக் கத்துவது எந்தவகையில் நியாயம். சாதிஎன்பது தமிழ் மக்களின் கலாச்சாரம் அல்ல. அது பார்ப்பனிய ஆக்கிரமிப்புடன் எம்மீது திணித்தவைகளே. பார்ப்பணிய சடங்குகள் அனைத்தும் எமது கலாச்சாரத் தொடர்ச்சியல்ல. ஆக்கிரமிப்பு செய்தவன் எம்மீது காலம் காலமாக திணித்து ஒடுக்கி ஆள்வதாகும். புலம் பெயர்ந்த நாடுகளில் சாதி கூடிய, சாதி குறைந்தவர்களுக்கிடையில் பொருளாதார ரீதியில் வேறுபாடு இல்லாத நிலை அவர்களைத் தணித்து இனம் காண முடியாத நிலை உள்ளது. அவர்கள் எல்லோரும் போல் உள்ள மனிதர்களாகவே உள்ளனர். கடந்த எமது சமய சரித்திர வரலாறுகளில் வேறுபாடு உண்டு என்ற கூற்றுகள் இவ்விடத்தில் பெய்த்துப் பேகின்றன. சாதி கலாச்சாரம் அல்ல அதை எறியுங்கள்.

பணம், பரிசுப் பொருட்கள் கொடுக்கலும் வாங்கலும்

பணம் கொடுக்கலும வாங்கலும் ஒரு நிகழ்ச்சியை சந்தையாக மாற்றி விடுகின்றன. ஒரு விழாவை சொந்த சந்தோசத்துக்காக கொண்டாடுவதற்குப் பதில், அதை வியாபாரமாக்கி, மாடு மாதிரி உழைத்த ஒவ்வேரு சதத்தையும் ஒரே நொடியில் தண்ணீராக மாற்றி விடுகின்றனர். உழைப்பின் கடுமையை, துன்பத்தை புரிய முடியாத மாடுகள் வேண்டும் என்றால் இப்படி இருக்க முடியும். ஆனால் மனிதராக இப்படி பல ஆயிரம் ஐரோப்பிய நாணையத்தை ஒரே நொடியில் எந்தப் பிரயோசனத்தையும் பெற்றுத் தராத நிகழ்ச்சிகளில் செலவிடுகின்றனர். இதை ஊக்கிவிக்கவோ சில புரோக்கர்கள், கொள்ளை அடிப்போர், பூசாரிகள் என எல்லோரும் கடைதிறந்து வைத்துள்ளனர். இவர்கள் 8 மணிநேரம் உழைக்க முடியாத பண்றிகளாக உள்ள அதே நேரம் ஒரே நெடியில் சில வருடம் மாடாக உழைத்த பணத்தை சுருட்டிச் செல்கின்றனர். சடங்கு பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் என்ற பெயரில் பணம் பண்ணும் இந்நிகழ்ச்சிகள் அர்த்தமற்றவை. பணத்தை கொடுத்தல் வாங்கல் என்று ஒரு நிகழ்ச்சியின் சந்தோசத்தையே வியாபாரமாக்கி,; பணம் பண்ணும் இந்நிகழ்ச்சிகளை கலாச்சாரம் என்ற பெயரில் நிகழ்த்தப்படுகிறது.

அடுத்து எம்மவர்கள் மேற்க நாடுகளில் இருப்பின் ஒரே ஒரு விடையம் மட்டுமே மிகுந்த கட்டுப்பாடாகவும், கவனத்துடனும் உள்ளனர். அதாவது இங்கு பிறக்கும் குழந்தை அதுவும் பெண்குழந்தை என்றல் அப்பெண் குழந்தையின் கற்பைக் காக்க படாதபாடுபடுகின்றனர். இதுவே இவர்களை நாட்டுக்குப் போக வேண்டும் என பெயரளவில் செல்ல வைக்கின்றது. ஒரு பெண்ணுக்கு கற்பு உண்டு என்றும், அது ஒரு ஆணுக்குமட்டும் செந்தமானது என்ற ஆணாதிக்கக் கண்ணோட்டம் இங்கு பிறக்கும் பெண்குழந்தைகளை மனநோய்க்கு இட்டுச் செல்கின்றது.

ஒரு ஆணும் பெண்ணும் தாம் விரும்பி வாழ உரிமை உள்ள அதே நேரம் பிரிந்து செல்லவும் உரிமையுண்டு. ஒரு ஆண் அல்லது பெண் தாம் விரும்பியவருடன் வாழும் உரிமை மறுக்கும் எம் சமூகம் ஒரு ஆணுடன் தான் ஒரு பெண் வாழ்நாள் முழுவதும் எவ்வளவு பலாத்காரம் இருந்தாலும் வாழவேண்டும் எனக் கோருகின்றனர். இது ஆணுக்கு விதிவிலக்கம் கூட. ஒரு பெண் தன் வாழ்வைத் தீர்மானிக்கும் உரிமையை இச்சமூகம் வழங்க மறுக்கின்றது. பெண் ஒரு மனிதப் பிறவியாகவே மதிக்கப்படுவதில்லை. இந்தவகையில் புலம் பெயர்ந்த எமது பெற்றோர் பெண் குழந்தைகள் மீது திணிக்கும் இம் முயற்சி பலத்த பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றது.

பெண்குழந்தை இங்கு பாடசாலைக்கு செல்லும் போது இச்சமூகக் கலாச்சாரத்தையே பெற்றுக் கொள்கின்றது. இங்குள்ள முற்போக்கு மற்றும் ஏகாதிபத்திய சீரழிவுக் கலாச்சாரத்தையும் பெறுகின்றது. ஒரு சில பெற்றோர் இதைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாத நிலைக்கு வருகின்றனர். தமது பிற்போக்கு நிலையில் நின்று அக்குழந்தை பெறும் முற்போக்கு மற்றும் சீரழிவுக் கலாச்சாரத்தை எதிர் கொண்டு பெண் அடிமை நிலப்பிரபுத்துவ கலாச்சார வழிகளில் தீர்வைத் திணிக்கின்றனர். இது அக்குழந்தையை மேலும் சீரழிவுக் கலாச்சாரத்தை நோக்கி நகர்த்துகின்றது. முதலில் பெற்றோர்கள் எமது நிலப்பிரபுத்துவ பெண் அடிமை கருத்தில் உள்ள பிற்போக்கை, அது கலாச்சாரம் என்ற நோக்கு நிலையில் இருந்து கைவிடவேண்டும். அதே நேரம் இங்குள்ள முற்போக்கு அம்சங்களை ஏற்றுக் கொண்டு பிற்போக்கு அம்சங்களை விமர்சிக்க வேண்டும். இதை குழந்தைக்கும் படிப்படியாக விழங்கப்படுத்த வேண்டும்.

இங்குள்ளவர்கள் ஒன்றை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இங்குள்ள வெள்ளைப் பெண்களை வேசையாகப் பார்க்கும் எம் குறுட்டுத் தனத்தை, முட்டாள் தனத்தை ஒழித்துக் கட்ட வேண்டும். இங்குள்ள பெண்கள் வேசையாடுவதாக எமது நிலப்பிரபுத்துவ பெண்ணடிமை ஆணாதிக்க நோக்கில் இதைக் காணும் போக்கு ஒரு புலம் பெயர்ந்த எமது சமூகக் கருத்தாக பயிற்றுவிக்கப்படுகின்றது. இது தவறு. உண்மையில் இங்கள்ள ஒவ்வேரு பெண்ணும் இச்சமூக அமைப்பில் ஒரு ஒழுக்க நெறியைக் கைக்கொள்கின்றனர். இது ஆணுக்கும் பொருந்தும். இங்கு ஒரு ஆண், பெண் விரும்பியவருடன் வாழும் உரிமை உள்ளதால் அது விபச்சாரமாகவோ, வேசைத்தனமாகவே இருப்பதில்லை. இது ஒரு மனிதனின் ஜனநாயக உரிமையாகும்.வாழ்ந்து வரவும், முடியாவிடில் பிரிவும், மீள புதிய வாழ்வும் வாழ உரிமை உண்டு.

இங்கு பிறக்கும் குழந்தைகள் இந்நாட்டுக் குழந்தையாகவே வாழத் துடிக்கும். இன்று பெற்றோர்கள் அவர்கள் மீதான கடும் கட்டுப்பாடுகள் இயல்பில் அக்குழந்தையை பெற்றோரை விட்டு விலகுவதில் இட்டுச் செல்லும். நாடு திரும்பும் எண்ணம் இல்லாத 90 வீதமானோர் ஏன் குழந்தைகளுக்கு எமது கலாச்சாரம் என்று நிலப்பிரபுத்துவ பிற்போக்குச் சிந்தனைகளை திணிக்க வேண்டும். அதற்காக மற்றவர்கள் திணிக்கலாம் என்பதல்ல. உங்கள் சந்ததி தாண்டி அடுத்த சந்ததி அதை அதுவும் ஒரு முதலாளித்துவ நாட்டில் கடைப்பிடிக்கப் போவதில்லை. கலாச்சாரம் என்ற பெயரால் கைகொள்ளும் எல்லாப் பிற்போக்குத் தனத்தையும் கைவிட்டு இங்குள்ள முற்போக்கை பெற்றுக் கொள்ளவும் வேண்டும். இதுதான் நாம் நாடுதிரும்பினாலும் சரி, இங்கு வாழ்ந்தாலும்  ஒரு முன்னோக்கிய ஒரே பாதையாகும்.

1980களின் பின் எம்

தேசவிடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளுடன் 2 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் பல்;வேறு மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்துள்ளனர். இதைவிட 1 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இந்தியாவில் புலம் பெயர்ந்துள்ளனர். மேற்கு நாடுகளில்புலம் பெயர்ந்தோர்களில் 80 வீதமானோர் யாழ் குடாநாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மத்திய மற்றும் மேற்தட்டு வர்க்கப் பிரிவினராகவுள்ளனர். மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்தோரில் 98 வீதமானோர் பொருளாதார அகதியாகவே புலம் பெயர்ந்தவர்கள். இன்று மேற்கு நாடுகளில் இருந்து திரும்பிச் செல்லல் என்பது 5வீதம் அல்லது  10வீதமாக மட்டுமே இருக்கும்.

சுமைகள்-14 புரட்டாசி, ஐப்பசி 1995

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது