Language Selection

விருந்தினர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெங்களூர் சாலையொன்றில் காலை பதினோரு மணியளவில் நடந்து கொண்டிருந்தேன், வழக்கமான நெரிசல் மிகுந்த நாள், நடைபாதை மேடையில் வேலை நடந்து கொண்டிருந்தது, சிதிலமடைந்த நடைபாதை மேடைகளைச் சீரமைக்கும் பணி வேகமாக நடந்து கொண்டிருந்தது,

 

 

ஒரு பெயர்ப்பலகையின் பின்புறமாக இரண்டு பெண்கள் உடலைக் குறுக்கி ஒளிந்தது போல அமர்ந்திருந்தார்கள், ஒரு பெண்ணின் கையில் குழந்தை, அருகில் இருக்கும் மரத்தின் தாழ்வான கிளையில் தொட்டிலொன்று, நின்று கவனித்தேன், அவர்கள் உரையாடலை உள்வாங்கிய போது, காலை ஆறு மணியில் இருந்து தொடர்ந்து வேலை செய்கிறார்கள் என்பதும், பதினோரு மணிவரை அவர்கள் ஓய்வெடுப்பதை மேற்பார்வையாளர் அனுமதிக்கவில்லை என்பதும், குழந்தைக்குப் பாலூட்ட அந்தப் பெண் பெயர்ப்பலகைக்குப் பின்புறம் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்பதும் எனக்கு உரைத்த போது கடும் மன உளைச்சல் பற்றிக் கொண்டது மட்டுமின்றி பெண்ணியம் குறித்த சிந்தனைகளில், செயல்பாடுகளில் எந்த அளவிற்கு சமூகம் பின் தங்கி இருக்கிறது என்ற குற்ற உணர்வும் சேர்ந்து கொண்டு விட்டது. 

பெண்ணியம் குறித்த கட்டுரை எழுதும் அளவிற்கு எனக்குத் தகுதி இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை? ஏனெனில் குடும்பத்தில், அலுவலகத்தில், இன்னும் வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் எனக்குள் விதைக்கப் பட்டிருக்கிற ஆணாதிக்க மனப்போக்கு இன்னும் முழுமையாக என்னிலிருந்து விடை பெறவில்லை என்பதையும், என்னையும் அறியாமல் வாழ்வின் பல தருணங்களில் ஆணாதிக்க மனப்போக்கினை நான் வெளிப்படுத்தி இருக்கிறேன் என்பதை நான் உணர்ந்து தலை குனிகிறேன், ஆனால், இந்த மனநிலையில் இருந்து விடுபட வேண்டும் என்கிற எண்ணமும், குற்ற உணர்வும் இருப்பதையே பெண்ணியம் குறித்து எழுதுவதற்கான தகுதியாகவும் உணர்கிறேன். 

நான் சந்தித்த முதல் பெண்ணியவாதி என்னுடைய தாயார், இரண்டு ஆண் குழந்தைகளுக்கு இடையே ஒரு பெண் குழந்தையை முழுமையான வாய்ப்புகளோடு அவர் வளர்த்தார், ஆண் குழந்தைகளுக்குக் கிடைக்கும் அத்தனை வாய்ப்புகளும் பெண் குழந்தைக்கும் கிடைக்க வேண்டும் என்ற பரந்து பட்ட புரிதலோடு அவர் இருந்தது எனக்குள் வளரும் காலத்தில் வியப்பைக் கொடுத்தாலும், ஒரு வெற்றிகரமான பெண்ணாக எனது சகோதரியை மாற்றியதில் அவருடைய பங்கு முழுமையாக இருந்தது. பெண்ணியம் குறித்த எனது சிந்தனைகளை மீள்பார்வை செய்யவும், மாற்றிக் கொள்ளவும் அவரது அந்த அடிப்படைச் செயல்களே இன்றளவும் காரணமாக இருக்கிறது. 

பெண்ணியம் குறித்த விவாதங்களிலும், பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருக்கிறேன், பல்வேறு தளங்களில் இயங்கும் பெண்ணியவாதிகளுடன் உரையாடி இருக்கிறேன், அவர்களின் நிலைப்பாடுகளை அவதானித்திருக்கிறேன், ஆனால், பெண்ணியம் குறித்த சரியான பார்வையோடும், முதிர்ந்த கருத்தோடும் இயங்குகிறவர்கள் என்று ஒரு சிலரை மட்டுமே என்னால் அடையாளம் காண முடிகிறது. ஏனைய பெண்ணியவாதிகள் ஒரு போலியான கற்பிதம் செய்யப்பட்ட பெண்ணிய நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தார்கள். அல்லது உடலியல் ரீதியிலான குறியீட்டு விமர்சனங்களில் மூழ்கிப் போயிருந்தார்கள், தங்கள் உடலமைப்பு தங்கள் வளர்ச்சியை முற்றிலும் தடுக்கும் ஒரு புறக்காரணி என்று சுய அனுதாபம் தேடினார்கள்.

உடலியல் பெண்ணியத்தோடு எந்த வகையில் தொடர்பு கொள்கிறது என்று பார்ப்பதற்கு முன்னாள், பெண்ணியம் குறித்த எனது புரிதலை நான் உங்களுக்குச் சொல்லி விட வேண்டும், " வாழும் காலத்தில் எனக்குக் கிடைக்கிற அல்லது கிடைக்க வேண்டும் என்று நான் நினைக்கிற எந்த வாய்ப்பும் என் சக தோழிக்கும் கிடைக்க வேண்டும்" இது தான் பெண்ணுரிமை குறித்து நான் உள்வாங்கியிருக்கிற புரிந்துணர்வு. இந்த அடைப்புக்குள் நீங்கள் எந்த ஒரு சமூகக் கூறுகளையும் இட்டு நிரப்பலாம், உணவுமுறை, உடைகள், மொழி, கல்வி, வேலை வாய்ப்புகள், அரசியல் உரிமைகள், சமூக மதிப்பீடுகள், காதல், திருமணம், குழந்தைப்பேறு, இலக்கியம், பொழுது போக்குகள், நண்பர்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகலாம்.

சரி, உடலியலுக்கும், பெண்ணியத்திற்கும் என்ன தொடர்பு என்று பார்த்தால்,உடலியலுக்கும், பெண்ணியத்திற்குமான தொடர்பு என்பது பிறப்பிற்கும் சாதிக்கும் இடையிலான தொடர்பைப் போல அருவருப்பானது. பாலின வேறுபாடுகளைக் கொண்டு அறிவையும், ஆற்றலையும் அளப்பது என்பது பிறப்பை வைத்து மனிதனை அளப்பது போலவே வெகு நுட்பமாக மதங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வேதங்களால் வழி நடத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, மத நம்பிக்கை கொண்டவர்கள் அல்லது மத அடிப்படைவாதிகள் பெண்ணியம் குறித்துப் பேசுவதற்கும், எழுதுவதற்கும் தகுதியற்றவர்கள்என்பதை நாம் புரிந்து கொண்டே ஆக வேண்டும். இன்று பெண்ணியம் குறித்துப் பேசுபவர்களில், எழுதுபவர்களில் பலர் அசைக்க முடியாத மத நம்பிக்கைகள் கொண்டிருப்பதை மேட்டுக்குடியின் பொழுதுபோக்குப் பெண்ணியமாகத் தான் பார்க்க முடிகிறதே தவிர உண்மையில் பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு எள்ளளவும் பயனற்ற ஒன்றாகவே என்னால் காண முடிகிறது. 
பெண்ணியம் குறித்த சிந்தனைகள் இரண்டு வெவ்வேறு வடிவங்களில் இன்று நிலை கொண்டிருக்கிறது, ஒன்று மேட்டுக்குடியினரின் பொழுதுபோக்குப் பெண்ணியம், இன்னொன்று சாலையோரங்களில், வயற்காடுகளில், குடும்ப அடுப்புகளில் வெந்து கருகி, அழுவதற்கும் வாய்ப்பற்ற அடிமை நிலைகளில் வாழும் பெண்களின் நிலை குறித்த பெண்ணியம்,

இந்த இரண்டாம் நிலைப் பெண்ணியம் முறையான உணவுத் தேவைகள், ஊட்டச்சத்து, குழந்தை வளர்ப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் விழிப்புணர்வு, சமூக மதிப்பீடுகள் ஆகியவற்றில் உறைந்து கிடக்கிறது. இவற்றை தவிர்த்து கலை, இலக்கியத் தளங்களில் பெண்ணியம் சார்ந்து இயங்கும் பல்வேறு படைப்பாளிகள், பாலினக் குறியீட்டு இலக்கியங்களை எழுதிக் குவிக்கிறார்கள், அது தான் பெண்ணியம் என்று சிற்றிதழ்களும், இலக்கிய முதலாளிகளும் அவர்களுக்கு முத்திரை வேறு குத்தி விடுகிறார்கள், உடல் நமக்கு இயற்கையால் வழங்கப்பட்டிருக்கிற கொடை, இந்த உடலை அடிப்படையாக வைத்தே உளவியல் இயக்கம் துவங்குகிறது, பாலின வேறுபாடு என்கிற அடிப்படையில் இருக்கும் உறுப்புகளை மையமாக வைத்து அல்லது காட்சிப்பொருளாக்கி படைக்கப்படும் படைப்புகள் உண்மையில் கடும் மனச் சோர்வையும், உளவியல் ரீதியிலான அழுத்தங்களையும் வளரும் இளைய தலைமுறைப் பெண்களிடையே உருவாக்கி விடுமோ என்கிற அச்சம் பிறக்கிறது. சமீப காலங்களில் இது மாதிரியான காட்சிப் பொருளாக்கப்படும் கவிதைகள் அதிகரித்துக் காணப்படுவது பெண்ணியத்தின் பாதையை திசை திருப்பும் அல்லது முடக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். 

அப்படியென்றால், உடலியல் ரீதியிலான அழுத்தங்கள் அல்லது குறியீட்டு அடையாளங்கள் பெண்களின் மீது வாரி இறைக்கப்படுவதும், நாள்தோறும் உடலியல் ரீதியிலான பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் பெண்களைப் பற்றி உங்களுக்கு அக்கறை இல்லையா என்று நீங்கள் எழுப்பும் கேள்விகள் எனக்குக் கேட்கிறது, உங்களோடு முழுமையாக நான் உடன்படுகிறேன், உலகின் அத்தனை பகுதிகளிலும் பெண்கள் உடலியல் ரீதியாக அழுத்தப்படுகிறார்கள், புவிப்பந்தின் அத்தனை திசைகளிலும் ஆண்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்ட வேண்டும் என்கிற வெறியில் பெண்களின் மீதான அடக்குமுறை நோக்கி இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன், அதற்காக ஒரு ஆண் என்கிற வகையில் வெட்கம் அடைகிறேன்.

இவற்றிற்கான மூல காரணங்களை அழிப்பதில் வெற்றி கொண்டால் மட்டுமே இத்தகைய உடலியல் சார்ந்த அழுத்தங்களில் இருந்து பெண்களைக் காக்க இயலுமே தவிர, குறியீட்டு இலக்கியங்களைப் படைப்பதனால் அல்ல என்று கருதுகிறேன்.

பெண்களைப் பற்றிய எண்ணங்களை, அடிப்படை வடிவங்களை இன்றைக்கு நிர்ணயம் செய்யும் காரணிகள் இரண்டு மட்டுமே, ஒன்று மதங்கள், இன்னொன்று ஊடகங்கள். மதங்களில் காணப்படும் அடிப்படைத் தத்துவங்களை அழித்தொழிக்காமல் பெண் விடுதலை பற்றிப் பேசுவது நகைப்புக்குரியது, இன்றும் இந்தியாவின் பல்வேறு ஆலயங்களில் பெண்கள் நுழையக் கூடாது என்று அறிவிப்புப் பலகை வைத்திருக்கிறார்கள், இவற்றை அகற்றக் கோரும் பெண்ணிய அமைப்புகளையோ, எதிர்ப்புக் காட்டும் பெண்ணியவாதிகளையோ அரிதாகவே காண முடிவது பெண்ணியத்தின் மிகப் பெரிய குறைபாடு.

அடுத்தது ஊடகங்கள், அச்சு ஊடகமாகட்டும், காட்சி ஊடகமாகட்டும் இன்று பெண்களை இழிவு செய்யும் பல்வேறு வழக்கங்களை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள், இந்தக் கூட்டங்களில் இணைந்து பணியாற்றும் பெண்களும் எதிர்ப்புகள் இன்றி அமைதியாகவே காலம் கழிக்கிறார்கள்.பெண்ணிய இயக்கங்கள் இதுபோன்ற சமூகத் தாக்கம் உருவாக்கும் எல்லைகளில் இயங்க மறுக்கின்றன, “ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்வதோடு இவர்களின் இயங்கு எல்லை முடிந்து போய் விடுகிறதா?” என்ற கேள்வியும் தொடர்ந்து வருகிறது.

பெண்ணியம் தனது இயங்கு எல்லைகளை அடைய முடியாத இந்தியக் கிராமங்களின் எல்லைக் கோடுகளை அடையும் வரையில் அழுகிப் போன மதக் குப்பைகளில் வாழ்ந்து கொண்டு ஆரோக்கிய வாழ்வைப் பற்றி வகுப்பெடுப்பது போலவே பெண்ணியம் இந்தியாவில் இருக்கும் போலத் தெரிகிறது. 

இத்துடன் ஒரு கவிதையை இணைக்கிறேன், இந்தக் கவிதை எனக்குள் மிகுந்த தாக்கம் விளைவித்தது என்பதில் மாற்றமில்லை, தோழி லீனா மணிமேகலையின் கவிதை அது, “இத்தகைய இலக்கிய வடிவங்கள், தன்னெழுச்சியான நேர்மறை எண்ணங்களை வளர்ப்பதற்கு மாறாக எதிர்மறை அழுத்தங்களை பெண்களிடத்தில் உருவாக்குமோ என்று அஞ்சுகிறேன்”,இந்தக் கவிதையில் தெறிக்கும் ஒருவித அச்சம் கலந்த அழுத்தம் என் தலைமுறைப் பெண்களுக்கு வரக்கூடாது என்பதிலும், இந்த அழுத்தத்தைப் பெண்கள் மீது திணிப்பதும் கூட ஒரு வகையில் முறைகேடான வன்முறை என்றும் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?????

“என் முலைகளைப் 
பிரித்து வைத்தவளைத் 
தேடி கொண்டிருக்கிறேன் 
நீ தானா அவள் 
உன் இரண்டு கைகளுக்கும் 
வேலை வேண்டுமென்றா செய்தாய் 
இல்லை வாய் கொள்ளவில்லையென்றா 
இரு குன்றுகளுக்கிடையே 
தூளி கட்டி விளையாடுவது 
உன் சிறுவயது கனவு 
என் பிள்ளை பால் குடிப்பது கண்டு 
பொறுக்காமல் தானே பாகம் பிரித்தாய்? 
உன் பிள்ளைக்கு அறிவில்லை, 
அது பால் அல்ல, தேன் 
என்று வேறு சொல்கிறாய் 
வாகை, சித்திரக்கனி, ஊமத்தை, 
தாழம்பூ, தாமரை, அல்லி, கத்திரி 
என்று தினம் ஒரு பெயரிட்டு 
அழைத்து மயக்குகிறாய் 
விரட்டவும் முடியவில்லை 
உன் நாக்கின் வெப்பத்திற்கு 
என் காம்புகள் கருவாச்சி தளிர்கள் 
போல துளிர்க்கின்றன. 
பல் தடங்கள் இணைத்து நீ வரையும் 
சித்திரங்கள் பருவந்தோறும் 
உயிர் பெறுகின்றன 
அவற்றை ஒவ்வொரு நாளும் 
ஒரு அகழ்வாராய்ச்சியாளன் வந்து 
வாங்கி செல்கிறான். 
நீ கிழித்து வைத்திருக்கும் 
ரவிக்கைகளை என்னடி செய்வது?

* * * * * * * * * * *

http://ow.ly/Uz2G

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது