Mon10142019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் புலிகளின் வீழ்ச்சியில் பேரினவாதத்தின் திமிரான எழுச்சி!

புலிகளின் வீழ்ச்சியில் பேரினவாதத்தின் திமிரான எழுச்சி!

  • PDF

விடுதலைப் புலிகளின் அரசியல் போராட்டத்திற்கு ஓர் சுனாமியே எற்பட்டது!  புலிகளின் 30 ஆண்டு காலமாக வீங்கி வெம்பிய இராணுவ வளர்ச்சியும் வீழ்ச்சியும், மதிலில் எறிந்த பந்துபோல் ஆகியது! எதிலும் விரலுக்கேற்ற வீக்கம் இருக்கவில்லை! ஆயுதம், படைப்பலம், பணத்தில், பாசிச சரவாதிகாரத்தில், புலிகள் போன்ற ஓரு அமைப்பு உலகில் உருவாகவில்லை என்றே சொல்லலாம்! இவைகளின்; ஊடாக புலிகள் வடகிழக்கின் தம்மை ஓரு மாற்று அரசாக அமைந்தனர்! அதன் பரினாம வளர்ச்சி அவர்களை ஓர் பாசிச சர்வாதிகார அமைப்பாக கட்டமைத்தது!


பாசிச சர்வாதிகாரப் பித்து தலைக்கேறியதில், சுத்த இராணுவக் கண்ணோட்ததிலேயே சகலதையும் மேற்கொணடனர்! மக்களை போராடும் சக்தியாக கணிக்காது, அவர்களே வரலாற்றைப் படைப்பவர்கள் என்பதை புரியாது, அவர்களை அடக்கி ஒடுக்கியதன் விளைவே, புலிகளின் அழிவிற்கான முதல் முக்கிய காரணியாகும்!


மே 18ல் புலிகளின் அழிவை மக்களை மீட்ட யுத்தமென அரசு அறிவித்தது! வெளிநாடு சென்ற மகிந்தா, பிரயாணத்தை இடைநடுவில் நிறுத்தி அவசர அவசரமாக நாடு திரும்பினார்! விமானத்தில் இருந்து இறங்கியபோது தாயக மண்ணையும் வணங்கினார்! இவ்வணக்கம் தாயக வணக்கம் அல்ல, சிங்களப் பேரினவாத வெறிப்பித்து தலைக்கேறியதன் தலைச்சாய்ப்பே!


புலிகள் ஓர் விடுதலை இயக்கமல்ல, மக்கள் விரோத இயக்கமே! ஆனால் மகிந்தப் பேரினவாதம் புலிகளை கொன்றொழித்த விதம் அரக்கத்தனமானது! பிரபாகரனதும் ஏனைய புலிகளதும் சரணடைவும், அவர்களை மிக இலேசாக கொன்றொழித்த குதூகலமும், மகிந்தாவிற்கு போரினவாதத் திமிராக மாறியுள்ளது!


புலிகளுடான போர் உச்சகட்டத்தில் இருந்தபோது "பயங்கரவாதத்தை" ஒழித்தவுடன் தமிழ் மக்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்றர் மகிந்தா! 13-வது திருத்த்ததை விட கூடுதலாக வழங்குவேன் என்றான்! ஆனால் தற்போது தமிழ்மக்கள் விரும்புவதை பெறமுடியாது, நான் கொடுப்பதை மட்டும் ஏற்றுக்கொள்ளவேண்டும் எனகின்றான்! அதுவும் ஐனாதிபதித் தேர்தலுக்குப் பிறகே என்கின்ற, இன்னொரு புதுக்கதை!


அத்தோடு மகிந்தாவின் கூட்டாளிகளான இனவாதக் கட்சிகள் தமிழ் மக்களுக்கு சாப்பாடு உடுப்பு, உறைவிடம் கொடுத்தாலே போதும்! அதுவே அவர்கள் பிரச்சினைகள் வேறொன்றுமே இல்லையென்கின்றனர்! இனவாதம் பேசும் பௌத்த துறவிகள் கூட்டம் 13-வது திருத்தத்தை அமுல்ப்படுத்தினால், வரலாறு காணாத யுத்தம் நாட்டில் நடைபெறும் என்கின்றனர்! இதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் பச்சைக்கொடி காட்டியுள்ளார் மகிந்தர்!


இதைவிட யாழ்ப்பாணத்தில ஐந்து லட்சம் மக்கள் திறந்வெளிச் சிறையிலும், வன்னியில் மூன்று லட்சம் மக்கள் முட்கம்பி வேலிக்குள்ளும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்! முன்பு இம்மக்களை பிரபாகரப் புலிகள் கேடயமாக வைத்த சாகடித்தது! இப்போ மகிந்தப் புலி முட்கம்பி வேலிக்குள் வைத்து சாகடிக்கின்றது! இம்மக்கள் தமது சொந்த பந்த இரத்த உறவுகளை பிரிந்து, உளரீதியாக தவிக்கின்றனர்! இவர்களுக்கு சர்வதேச தொண்டர் நிறுவனங்களின் பராமரிப்போ உதவிகளோ இல்லை! இம்மக்களை மகிந்தாவை தொழுதுண்டு வாழும் (டக்கிளசு ஆனந்தசங்கரி கருணா) கூட்டமே போய்ப் பார்க்கலாம்! இம்மக்கள வாக்களித்த அவர்களின் பிதிநிதிகளே பார்க்க முடியாது!


இத்தோடு இம்மக்கள் காலம்காலமாக வாழ்ந்த வன்னிப் பிரதேசம் திட்டமிட்ட சிங்கள  இராணுவ குடியேற்றங்கள ஆக்கப்படுகின்றன! மக்களை மீளக் குடியமர்த்துவதில் அக்கறை கொள்ளாது, முகாம்களில் மக்களை நிரந்தரமாக வைத்திருக்கும்; நோக்கில் பல குள்ளநரி வேலைகள் செய்யப்படுகின்றன! மகிந்தா இந்நாட்டில் சிறுபான்மை என்ற ஒன்றே இல்லை எனச் சொல்லி, சகலதையும் சிங்கள பௌத்த பெரும்பான்மை ஆக்குகின்றான்! அந்நோக்கில் இனச்சுத்திகரிப்பைச் செய்கின்றான்! அதன் ஓர் அங்கமே தற்போது வன்னியில் நடைபெறவிருக்கும் திட்டமிட்ட சிங்கள இராணுவக் குடியேறற்றம்!


மகிந்தா பேரினவாதத் திமிர் கொண்டு செய்து வருகின்ற இந்நடவடிக்கைகளை, டக்கிளசு கருணா அடிமைக் கூட்டம் எவ்வித சுயசிந்தனையோ ஆய்N;வா இன்றி ஆமாம் போடுகின்றது! சிங்களப் பகுதிகளில் தமிழர்கள் குடியேறலாம்! தமிழ்ப்பகுதிகளில் குடியேற்றம் நடந்தால் என்னவென்று அங்கலாய்க்கிதுகள்! சாதாரண சிங்கள தமிழ் மக்களின் இயல்பான குடியேற்ற வாழ்விற்கும், திட்டமிட்ட குடியேற்றத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் தடுமாறுகின்றது! இத்தொழுதுண்டு வாழும் கூட்டத்தின்;! "புலன் பெயர்வுகள்"!


83 யூலைக் கலவரத்திற்கு முன்னபாhக யாழ்ப்பாணம் மன்னார் வவுனியா முல்லைத்தீவு போன்ற இடங்களில் கிட்டத்தட்ட 35,000 சிங்கள மக்கள் தமிழ் மக்களோடு இரண்டறக் கலந்து வாழ்ந்துள்ளார்கள்! பல முதலீடுகளை இட்டு தொழில்களைக் கூட நடாத்தியிருகின்றார்கள்! இது தமிழ் மக்கள் சிங்களப் பிரதேசங்களில் வாழவது போல, அவர்கள் தமிழ் பிரதேசங்களில் இயல்பாகவே குடுயேறி வாழ்ந்தார்கள்! ஆனால் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் கிட்டதட்ட 2,40,00ற்கு மேற்பட்ட சிங்கள மக்கள் (1981வரை) பேரினவாத அரசுகளினால் திட்டமிட்டு குடியேற்றபபட்டுள்ளனர்! வடகிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள்! அதுவும் சிறுபான்மை இனமக்களின் பிரதேசங்களில் பேரினவாத நோக்கிலான திட்டமிட்ட குடியேற்றங்கள். இவை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையே! இலங்கையில தேசிய இனப்பிரச்சினை கூர்மையடைந்ததிற்கு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றமும் ஓர் பிரதான காரணியே!


இலங்கையில் சிங்கள இனவெறி பேரினவாதமாகி 60 வருடங்களாகிவிட்டது! அதன் உச்சகட்ட வடிவமே மகிந்தப் பேரினவாதம்! இது சொல்லில் ஐனநாயகம் சமத்துவம் சகோரத்துவம் என் உச்சாடனம் செய்யும், நடைமுறை பாசிச சர்வாதிகாரமே!


இப்பாசிச சர்வாதிகாரத்தின் காலடியில் வீழ்ந்து கிடக்கும் ஐனநாயக நீரோட்டக் கூட்டம், வடக்கின் "வசந்தம்" கிழக்கின் "விடிவு" என அலம்புகின்றது! யாழ் மாநகரசபைத் தேர்தல் தமிழ்மக்கள் பிரச்சினைக்கு ஓர் திருப்புமுனை என்குது டக்கிளசு! "மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில சுயாட்சி" என்கின்றது! தன் கட்சிக்கு வாக்களித்தால் தமிழ்மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் என்கின்றது! மறுபுறத்தில் கிழக்கின் விடிவெள்ளியென பிள்ளையான் கருணா கூட்டம் ஊளையிடுகின்றது! ஆனால் இலங்கையின் சமகால அரசியல் யதார்த்த நிலைதான் என்ன?


இன்றைய உலகமயமாதல் பொருளியல் அமைப்பு உலகை உள்ளங்கைக்குள் கொண்டுவந்துள்ளது! இதன் தொழிற்;பாடு உலகில் தேசம் தேசியம் இறைமை சுயாதிபத்தியம் போன்றவற்றை இல்லாததாக்க முனைகின்றுது! ஏகாதிபத்தியம் காலனித்துவம் நவகாலனித்துவம் போன்றவற்றிற்கு எதிரான போராட்டங்களை இல்லாதொழிக்கின்றது! உள்நாட்டில் அரசுக்கெதிரான போராட்டங்களை, இன மத சாதிய ரீதியிலான தேசியப் போராட்ங்களை அடக்கி ஒடுக்குகின்றது! இதன் தொழிற்பாட்டை இலங்கையிலும் நாம் கண்ணாரக் காண்கின்றோம்!  


மகிந்தாவின் இன்றைய வேதவாக்கு "இலங்கையில் சிறுபான்மை என்ற ஒன்றில்லை" இதன் அர்த்தம் எல்லாம் பெரும்பான்மையே!  இதன் ஊடாக இனச்சுத்திகரிப்பை மகிந்தப் பேரினவாதம் வலு கற்சிதமாகச் செய்கினறது! அத்துடன் தென் இலங்கையிலும் ஐனநாயக விரோத நடவடிக்கைகளையே செய்து வருகின்றுது! மாற்றுக் கருத்துக் கொண்டோhர் ஊடகவியலாளர்கள் சுதந்திமாக அரசை விமர்சிக்க முடியாது! விமர்சிப்பவர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்! அத்துடன் நாடு வரலாறு காணாத பொருளியல் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது! அந்நிய நலன்கள் பிரந்திய வல்லரசு மற்றும் ஏகாதிபத்தியங்களுடன் பிணைக்கப்பட்டு, இலங்கை (அரசியல் பொருளாதார ரீதியல்) விபச்சார விடுதியாக்கப்பட்டுள்து! அத்தோடு நாடு தனிநபர் தனிக்கட்சி அரசியல் ஊடாக பாசிச சர்வாதிகாரத்தை நோக்கி செல்லுகின்றது! இதன்மூலம் அரசு முழுநாட்டு மக்களினதும் பிரதான எதிரியாகியுள்ளது!


சமகால இலங்கையில் அரசியல் பொருளாதார ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருபுறமாகவம், அரசும் அதனுடைய உள்நாட்டு வெளிநாட்டு அதிகார வர்க்கங்கள் மறுபுறமாகவும் உள்ளனர்! அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கும் இவ் அடக்கும் அதிகார வர்க்கங்களுக்கும் இடையிலான முரண்பாடே பிரதான முரண்பாடாகும்! அரசு இவ்வளவு காலமும் "புலிப் பயங்கரவாதம்" என்ற ஒன்றை வைத்து சிங்கள மக்களுக்கு பூச்சாண்டி காட்டி வந்தது! தமிழ்மக்களுக்கு அர்த்தமுள்ள நியாயமான அரசியல் தீர்வை முன்பே வைத்திருந்தால் புலியை எப்போவோ இல்லாதாக்கியிருக்க முடியும்! இதை உலகமயமாதல் விரும்பவில்லை! இருந்தபோதிலும் இன்றையநிலை தமிழ்-சிங்கள ஓடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்தை நோக்கியே செல்கின்றது!


இந்த நல்ல நிலையை தேசபக்த ஐனநாயக சக்திகள், முற்போக்கு புரட்சிகர சக்திகள்,  கவனத்தில் கொள்ளவேண்டும்! இதை நோக்கிய எம்மால் செய்யக்கூடிய வேலைகள் அனைத்தையும் நாம் செய்யவேண்டும்! இவ்வேலைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியம், இவர்களின் அரசியல் பலம் வாய்ந்த வெகுஐனப் போராட்ட அமைப்புக்களை நோக்கியதாக இருக்கவேண்டும்.

Last Updated on Wednesday, 29 July 2009 06:37