தூசுதட்டி எழும் துகள்கள் நாசிக்குள் ஏறி
முச்சுத்திணறல் வருகி;றதாம்
அடித்துவீசும் காற்ரே அடங்கிப்போ
வானில் கலக்கட்டும்
வருங்காலத்தலைமுறையின் சுவாசத்துள் படியட்டும்
முப்புதாயிரத்துடன் முடிவதாயில்லை
மெல்லக்கொல்லும் வழிமுறை
புதியஅண்ணன்மார் வரவுக்காய்
மீண்டும் புரளிகள்

 

நெற்ரிக்கண்திறப்பினும் குற்ரமென
மாற்றுக் கருத்தாளரை போட்டுத்தாக்கும் போது
புதுமாத்தளனில் மனிதகேடயமானபோது
புலத்தில் புலியைகாக்க மட்டும் அணிதிரட்டியபோது
மௌனமாய் போன மர்மம்தான் என்னவோ
 
பண்டையஇனம் பழத்தமிழர் கொண்டைகட்டல் இருக்கட்டும்
அன்றே தெரிந்ததெனின் அடிவருடிக்கிடந்ததேனோ
அழிவின் இறுதிவரை ஆலவட்டம் பிடித்ததேனோ
கொட்டிக்கொடுத்தவர்கள் குமுறியெழ
நொந்துபோகிறதோ மனசு
வளர்த்த கடாக்கள்தான் தாங்கிக்கொள்ழுங்கள்
ஏகப்பிரதிநிதிகளாய் மானுடக்கருத்தெல்லாம் அடித்துநொருக்கி
மமதையில் ஊடகமெல்லாம் திரிப்பும் திணிப்புமாய்
காசுபார்க்கும் களமாய் கிடந்தது
வெறிபிடித்து உணர்ச்சியின் உச்சத்தில்
வசையும் தூசணமும் தாயைப்பழிக்கும் தறிகெட்ட மிருகமாய்
பேடித்தனத்தை வளர்த்துவிட்ட பெரும்பங்கு
புலத்து ஆய்வாளப்புலிகள் அனைவரையும் சாரும்
 
வீழ்வோமெனத்தெரிந்தும் வீழ்ந்தது மடமை
கண்ணீரும் எதிர்காலகனவு ஏக்கங்களுடன்
மண்ணில் தலைமுறையே தவிக்கிறது
இனஜக்கியத்தில் மட்டுமே
இனவெறிஅரசை நொருக்குதல் முடியும்
எடுக்கும் ஒவ்வொரு அடியையும்
மக்கள் நலனுக்கு உட்படுத்து
கருத்தை கருத்தால் மோது
கற்றுக்கொண்டு முன்னேறு
இனியும் வீழ்ந்தெழ தமிழினம் தாங்காது