Language Selection

வே. மதிமாறன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

‘யாராஇருக்கும்அது?’ என்றஉங்களது, கட்டுரையில்எல்லாவற்றையும்குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், சுப்பிரமணியன்சுவாமியைத்தாக்கியதைப்பற்றிகுறிப்பிடவில்லையே? அதுதானேஎல்லாவற்றிற்கும்காரணம்?
-கே. குமார்

 

சுப்பிரமணய சுவாமி, மீது நடத்தப்பட்டதாக சொல்லப்பட்டத் தாக்குதலை மட்டுமல்ல, முதல்வரின் தலையை வெட்ட சொன்ன வேதாந்திக்கு கண்டனம் தெரிவித்து, திமுகவில் இருந்த சில உண்மையான உணர்வாளர்கள், சென்னையில் பா.ஜ.க., அலுவலகத்தைத் தாக்கியதையும் நான் குறிப்பிடவில்லை.

 

தங்கள் தலைவரின் தலையை வெட்ட சொன்னதற்காக, தங்களின் கோபத்தை, திமுககாரர்கள் வெளிப்படுத்தியதற்கு என்ன நியாயம் இருந்ததோ, அதே நியாயம் ஈழத்தமிழர்கள் கொலையை நியாயப்படுத்தி பேசிய சுப்பிரமணிய சுவாமியை அடித்திருந்தால் அதிலும் இருப்பதாக சில நண்பர்கள், சொன்னார்கள்.

 

அவர்கள் மேலும் சொன்னார்கள், `அப்போது எப்படி சட்டம் ஒழுங்கு கெடவில்லையோ,அதுபோல் சு. சுவாமி தாக்கப்பட்டதாக சொல்லப்பட்டபோதும் சட்டம் ஒழுங்கு கெடவில்லை` எனறு.

 

அது மட்டுமல்ல, பெரியவர் ஆறுமுகசாமியின் கையை அடித்து உடைத்த, தீட்சிதர்களின் கையையும் அடித்து உடைத்திருந்தால் அதுவும் நியாயம்தான், என்றும் சிலர் சொன்னார்கள்.

 
dmk

நியாயமா இருக்கா? நீங்கதான் சொல்லணும்.

குறிப்பு:

இந்த தீட்சிதர்கள், சுப்பிரமணிய சுவாமியைப் பார்த்தற்குப் பதில், தமிழக முதல்வரை போய் பார்த்து,
‘அய்யா, சிதம்பரம் கோயில் அறநிலையத் துறைக்கு கைமாறியது, நல்ல அறிகுறியல்ல. அது உங்கள் ஆட்சிக்கே ஆபத்து. பாருங்கள் கை மாறியவுடன் எவ்வளவு கெடுதல்கள், உங்கள் ஆட்சிக்கு ஏற்படுகிறது. உங்கள் ஆட்சி கவிழ்வதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது’ என்று சொன்னால் போதும், தடியடி செஞ்சி, தமிழக அரசே, கோயிலை மீட்டு தீட்சிதர்களிடம் ஒப்படைத்துவிடும், என்றும் சிலர் சொன்னார்கள்.
« யாரா இருக்கும் அது?