Language Selection

பி.இரயாகரன் 2004-2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

book _4.jpgசி ங்கள மக்களின் சார்பாக இனவாதிகள் கட்டமைத்து உருவாக்கிய இன  ஒடுக்குமுறை, தமிழ் மக்களுக்கு எதிரான இனத் தேசியமாகியது. அதே இனவாதிகளால் இன்று திட்டமிடப்பட்டுக் கட்டமைக்கும் சமாதானம், அமைதி பற்றி, ஆளுக்கொரு அறிக்கைகள்  மற்றும் பேரங்களையும் முன்வைக்கின்றனர். இந்தச் சமாதான நாடகத்தை சிறுபான்மைத் தமிழ் மக்கள் சார்பாக, புலிகள் தமது தரப்பில் நின்று முன் வைத்ததாக உரிமை கோரினார்கள்.  சமாதானம் - அமைதியின் பிறப்பு ஏகாதிபத்திய நாடுகளால் சிங்கள இனவாதிகளின் ஆசியுடன் திட்டமிடப்பட்டது. இவை அனைத்தும் ஏகாதிபத்திய நலன்களில் இருந்தே திணிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இனவாதிகள் தமக்கு இடையிலான ஆளும் வர்க்க நலன்களைத் தக்கவைக்கவும், கொள்ளை இடவுமே அமைதி மற்றும் சமாதானத்தை இழிவாகவும் கேவலமாகவும் பயன்படுத்துகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல் குறுந்தேசியமாகி, அதுவே குழு நலனாகிப் போன நிலையில், அதன் சொந்த பலவீனங்களையும் கையாலாத்தனத்தையும் மிகக் கேடாகவே சிங்கள இனவாதிகள் பயன்படுத்துகின்றனர்.

 குழந்தைகளின் நலன் பற்றியும், மனித உரிமை பற்றியும், பயங்கரவாதம் பற்றியும் கிளிப்பின்ளை போல் பசப்புகின்றனர். இரண்டு வருடமாக நீடிக்கும் நேரடி யுத்தமற்ற மயான அமைதியை, தமிழ் மக்களுக்கு எதிராக மிகவும் நுட்பமாகவே சிங்கள இனவாதிகள் நகர்த்தியுள்ளனர். இதை அவர்கள் நேரடியாகவும், தமிழ்க் குறுந்தேசியவாதிகள் மூலமும், தமிழ் மக்களைப் பேச்சு மூச்சு அற்ற கோமா நிலைக்குள் அடித்துப் போடுகின்றனர். தமிழ் மண்ணில் என்றும் இல்லாத அளவுக்குப் புலிக்கு எதிரான உணர்வை, அவர்களின் சொந்த அனுபவங்கள் மூலம் உணர வைப்பதில் அரசு வெற்றி பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான குண்டுகளை மேல் இருந்து மக்களின் தலைக்குப் போடுவதை விட, குண்டுகள் இன்றி யுத்தநிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உயர்ந்தபட்சம் கடைப்பிடிப்பதன் மூலம் இதைச் சாதிக்கின்றனர்.  


 மறுதளத்தில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆளுக்கொரு விளக்கத்துடன், உரிமை பறிப்பை அரசியல் ரீதியான அங்கீகாரத்துக்குள்ளாக்கி அதில் வெற்றியும் பெற்று வருகின்றனர். இந்த நலன்களை அடைவதில் ஆளும் பெருந் தேசிய சிங்கள வெறியர்களிடையே இழுபறிகளும் கவிழ்ப்புகளும் களம் கண்டுள்ளது. எப்படி தமிழனை அடக்கி ஒடுக்கி, இலங்கையையே சுரண்டிக் கொழுப்பது என்பதில் பிரதான பெரும் சிங்கள கட்சிகளும், சிறு கட்சிகளும் இரு அணியாகப் பிளவுண்டு நிற்கின்றன. அதேநேரம் இந்த  முரண்பட்ட நிலையிலும் என்றும் இல்லாத ஐக்கியத்தை தமிழ் மக்களுக்கு எதிராகப் பேணுகின்றனர். தமிழ் மக்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறையை ஒன்றாக ஒருமித்த முடிவில் கையாள்வதில், ஒத்த கருத்தையும் ஐக்கியத்தையும் இந்த சமாதான அமைதி ஏற்படுத்தியுள்ளது. இதை பயன்படுத்துவதில் நடக்கும் பேரங்கள், போராட்டங்கள், முரண்பாடுகளைக் காட்டி, இதுவே சமாதானத்துக்கு தடையாக இருப்பதாக கூறப்படுவது எதார்த்தத்தில் உண்மையானதல்ல. மாறாக பெருந்தேசிய இனவாதிகள் ஒன்றுபட்ட முடிவை தமிழ் மக்களுக்குத் திணிப்பதன் மூலம், தமிழன் நிமிர்ந்து வாழ முடியாத, உலக அங்கீகாரம் கொண்ட முடிவை (அமைதி - சமாதானம்) திணிப்பதில் ஐக்கியப்படடே நிற்கின்றனர்.


 ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு விசுவாசமாக சேவை செய்யவும், இலங்கை மக்களைக் கொள்ளையிடவும் உள்ள உரிமையை யார் செய்வது என்பதில் போட்டியிடும் ஆளும் இனவாதக் கட்சிகள் ஒருவரையொருவர் அதிகாரப் போட்டியில் காலைப்பிடித்து இழுக்கின்றனர். ஆனால் தமிழ் மக்களின் தலைவிதியை நிலைநாட்ட, ஏகாதிபத்திய ஒழுங்கு முறையைப் பற்றி ஒரேவிதமாக ஒப்புவிக்கின்றனர். இதற்குப் பல்லவி பாடும் புலிகளும் கூட  தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகள் பற்றி வாய்திறப்பதில்லை. உண்மையில் பார்த்தால் இலங்கையும் சரி, இந்த சமாதானத்தை நிலைநாட்டத் தலையிடும் எந்த நாடும் சரி, தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றி அக்கறைப்படவில்லை. மாறாக ஒரு தமிழன், தமிழ் மக்களை அடக்கி ஆளும் ஒரு ஆட்சி அமைப்பை ஏற்படுத்திக் கொடுப்பதின் மூலம் ஏகாதிபத்திய நலன்களைத் தக்கவைக்க முனைகின்றனர். தமிழனின் உரிமைகளை அடக்கி ஒடுக்குவதில், சிங்களவனுக்கு பதில் தமிழனே அதைச் செய்யும் உரிமையைத் தான் அமைதி சமாதானம் உடாக அடைய முனைகின்றனர். இந்த நோக்கத்தில்தான் ஏகப்பிரதிநிதிகள் என்ற பெயரில் புலிகளும் அடைய நினைக்கின்றனர். இதற்கு வெளியில் தமிழ் மக்களின் உரிமை பற்றி, சமாதானம் அமைதியின் பின்னால் யாரும் பேசவுமில்ல, பேசப் போவதுமில்லை. தமிழ் மக்களை அடக்கி ஆளும் உரிமையை, எப்படி எதன் மூலம் வந்தடைவது என்பதில் இழுபறிகள் எதார்த்தமாகியுள்ளது. இது தமிழ்த் தரப்பு, முஸ்லீம் தரப்பு மற்றும் சிங்களத் தரப்பு இடையிலும், அவர்களுக்குள்ளும் கூட ஏற்பட்டுள்ளது. புலிகள் ஆயுதங்களைக் கைவிடும் பட்சத்தில், தமிழனை அடக்கியாளும் ஒரு உரிமையை தங்கத் தட்டில் வைத்து வழங்கும் ஒரு வடிவத்தை இரண்டு பிரதான கட்சிகளும், ஏகாதிபத்திய ஆசியுடன் நிபந்தனை இன்றி வழங்கத் தயாராகவே உள்ளனர் என்பதே உண்மை.


 நம்பிக்கையும், நம்பகத் தன்மையும் அந்தரத்தில் தொங்கும் ஒரு கத்தியாக உள்ளதால், இழுபறிகளும் பேரங்களும் தமிழ் சிங்கள ஆளும் வர்க்கங்களிடையேயான வாதப் பிரதிவாதமாக மாறியுள்ளது. இதனால் ஒன்றை ஒன்று கவிழ்ப்பதும், அதிகாரங்களைக் கைப்பற்றுவதும் குறுகிய அரசியலாகியுள்ளது. யூ.என்.பி அரசின் சில மந்திரிப் பதவிகளை பறித்த பொ.ச.ஐ. முன்னணி சரி, தமிழர் விடுதலைக் கூட்டணியை வெறும் ரப்பர் முத்திரையாக்கி கூட்டணியின் தலைமை முதல் அதன் அடிப்படை அமைப்பை சிதைக்கும் புலிகளும் சரி, முஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் நடக்கும் குத்து வெட்டுகளும் சரி, இவை அனைத்தும் அமைதி சமாதானம் பற்றிய பொழிப்புரைகளில் இருந்து நடத்தும் அரசியல் கவிழ்ப்புகளே. யாரும் மக்களின் அடிப்படை நலன்களில் இருந்து இதை பேசவுமில்லை, செய்யவுமில்லை. மக்கள் பற்றிய வெற்று பொழிப்புரைகள் உச்சரித்தாலும், மக்களின் நலன்கள் என்ன என்பதைப் பற்றி இவர்கள் யாரும் வாய் திறப்பதில்லை. சிங்களவனோ, தமிழனோ, முஸ்லீமோ, மலையக மக்களோ யாராக அவர்கள் இருந்தாலும், எதையும் இந்த ஆளும் வர்க்கத்திடம் இருந்து பெற்றுவிடவில்லை. எதையும் பெற்றுவிடப் போவதில்லை. மக்கள் தமது அற்ப வாழ்க்கையையும் பறிகொடுத்ததற்கு அப்பால், வாழ்க்கை முன்னேறிவிடவில்லை. இது Nஐ.வி.பி முதல் புலிகள் வரை விதிவிலக்கற்ற ஒரே அரசியலாக, மக்களை ஏய்த்து ஏமாற்றி மோசடி செய்கின்றனர். இனங்களைப் பிளப்பதும் சரி, ஐக்கியத்தைப் பற்றி பேசுவதும் சரி, தத்தம் குறுகிய சொந்த நலன்களைத் தாண்டி, எதையும் எந்த மக்களுக்காகவும் இவர்கள் தியாகம் செய்துவிடவில்லை.


 ஆனால் இரண்டு வருடமாக சமாதானம் பற்றி பேசப்படுகின்றது. யுத்தம் நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு மயான அமைதி மிரண்டு கிடக்கின்றது. உலகம் காணாத வரிக் கொடுமைகளுக்குள், தமிழ்ச் சமூகம் சிக்கிவிட்டது. எங்கும் எதிலும் வரி. மூத்திரம் பெய்தாலும், மூச்சு விட்டாலும் வரிதான்;. சமுதாயத்தின் உயர் வர்க்கத்தில் இருந்து நலிந்து போய் கையேந்தி பிச்சை எடுப்பவர்கள் என விதிவிலக்கற்ற வகையில், நேரடி மற்றும் மறைமுக வரி தமிழ்த் தேசியத்தின் தலை விதியாகியுள்ளது. வசதியாக மேலே இருந்து தேசிய வீரர்களுக்கு வரிச் சலுகை கொடுப்பதை, கீழ் உள்ளவனிடம் இருந்து மீளவும் மறைமுக வரியாக விலை மூலம் அறவிடுகின்றனர். இதனால் மேல் உள்ள வர்க்கம் திடீர் பணக்காரக் கொள்ளைக் கூட்டமாக மாறியுள்ள நிலையில், சமூகம் ஏற்றத்தாழ்வாகவே பிளந்து விட்டது. சமாதானம், அமைதி தலைவிரித்தாடும் எமது மண்ணில், வரிகளால் எமது மக்களின் தலைவிதி இப்படி தலைவிரிகோலமாகியுள்ளது. இந்த நிலையில் எம் மண்ணில் எதைப் பற்றியும் வாய் விட்டு சொல்லவோ, புலம்பவோ முடியாத துயரம், தமிழ் மக்களின் தலைவிதியாகத் தொடர்ந்து நீடிக்கின்றது.


 வெளிநாட்டு ராஜதந்திரிகள், மூலதனத்தின் சொந்தக்காரர்கள் அனைவரும் இலங்கைத் தீவில் சமாதானத்தின் நலன்களை அடைய அங்கும் இங்குமாக ஆலாய்ப் பறக்கின்றனர். ஆயிரக்கணக்கான விமானப் பறப்புகளை அங்கும் இங்குமாக நடத்துகின்றனர். நளினமாகவும், பண்பாகவும் அறிக்கைகளை விடுகின்றனர். இந்தச் சுரண்டும் அமைதியைப் பாதுகாக்கத் தேவைப்படும் போது, நேரடியாகவும் மறைமுகமாகவும் பண்பான வார்த்தைகளில் மிரட்டுகின்றனர். ஜனநாயகம் பற்றியும், பயங்காரவாதம் பற்றியும், மனித உரிமைபற்றியும் கூட நீண்ட நெடிய கருத்துகளை அடிக்கடி உரைக்கின்றனர்.


 உலகம் எப்படி இயங்குகிறது என்பதைப் பார்வையிடவும், அதைப்பற்றி கலந்துரையாடவும், ஏகாதிபத்திய விரிவுரைகளைக் கேட்கவும், பேச்சு வார்த்தை மற்றும் அமைதி - சமாதானம் என்ற பெயரில் வெளிநாட்டு சுற்றுலாக்களை ஏகாதிபத்தியம் சொந்த நிதியை செலவு செய்து புலிகளின் தலைமை மட்டங்களுக்கு உலகைச் சுற்றிக் காட்டுகின்றனர். இந்தச் சுற்றுலாவுக்கான செலவை, மக்களின் வரிப்பணத்தில் இருந்து புலிகள் செலவு செய்வதை ஏகாதிபத்தியம் பண்போடு அனுமதிக்கவில்லை. புலிகள் தமது பண்பு கருதிய நன்றியையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்த, ஒருபடி அவர்களுக்கு மேலே சென்றனர். காட்டில் அணிந்திருந்த வரி உடுப்புகளை களைந்தெறிந்து கோட்டும், சூட்டும், டையுமாக மாறி நவீன தேசியப் பொம்மையாகி உலகெங்கும் பவனி வருகின்றனர். பெண்கள் அதே போல் பக்குவமாக ஏகாதிபத்திய எல்லைக்குள் தம்மை மாற்றி, ஆண்களின் பின்னால் வீர நடைபோடுகின்றனர். தேசியம், தேசியப் பண்பாடு அதில் ஒரு அங்கமான உடுப்புகளைக் கூட துறந்து, நவீன தேசிய வீரர்களாகி உலங்கெங்கும் பறக்கின்றனர். சில நாடுகளில் அவர்கள் பறக்க தடை இருந்த போதும், அங்கும் பறந்து விடுவோம் என்ற நம்பிக்கை மிளிர வீரநடை போடுகின்றனர்.


 இந்த அமைதியுடன் கூடிய சமாதானத்தைப் புலம் பெயர்ந்த நாட்டில் இருந்து, சென்று மீளத் திரும்பும் தேசப்பற்றுள்ள தமிழர்கள்(!) சொகுசான வக்கிரமாக அனுபவிக்கின்றனர். தனி மனிதர்களே பல லட்சம் ரூபாவை, இந்த சொகுசு மற்றும் நுகர்வுக்காக வாரி இறைக்கின்றனர். இலங்கையில் பணத் திமிர் பிடித்த வக்கிரமே, சமாதானத்தின் பெயரில் கரைபுரண்டோடுகின்றது. போலியான வரட்டு கௌரவங்கள் கட்டமைக்கப்பட்டு, பண நோட்டுகள் டொலரிலும் ஈரோவிலும் இருந்து 100 மடங்காகி, அதே வேகத்தில் தமிழ் இனத்தையே அழிக்கின்றது. தமிழினம் மேலும் ஆழமாகப் பண்பாடு ரீதியாக, கலாச்சார ரீதியாகச் சீரழிந்து கொண்டிருக்கின்றது. அத்துடன் சமூகத்தில் பொருளாதார ரீதியான பிளவு ஆழமான வெடிப்பாகி, ஏற்றத்தாழ்வு, தமிழினத்தை நிரந்தரமாகவே பிளந்துவிட்டது. தொடருகின்ற சொகுசு வாழ்வும், மறுதளத்தில் ஏழைகளின் உருவாக்கமும் அமைதி சமாதானம் என்ற பெயரில் உலகமயமாகின்றது. இது யாழ்குடாவில் வாழும் மக்களின் பெரும்பான்மையானோர் வறுமைக்குள் சிக்கியுள்ளதைக் காட்டுகின்றது. மேற்கில் அடிமட்டக் கூலிகளாக வாழும் புலம்பெயர் சமூகம், மண்ணில் நடத்தும் பகட்டான ஆடம்பரமான திமிர் கொண்ட வாழ்க்கையும், அதை அண்டித் திமிரெடுக்கும் ஒரு பிரிவும், யுத்தத்தை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் கும்பலையும் தவிர, அங்கு வாழும் மக்களோ உழைப்பு ஆதாரங்களை இழந்து வறுமைக்குள் சிக்கியுள்ளனர். சமூகப் பிளவுடன் கூடிய சீரழிவும், வன்முறையும் வக்கிரமும் தமிழ்த் தேசியமாகிவிட்டது.


 அண்ணளவாக தியாகத்தின் பெயரில் 20 ஆயிரம் உயிர்களைப் பலி கொண்டு உருவான தேசியம், துரோகத்தின் பெயரில் 10 ஆயிரம் பேரை பலியெடுத்தது. இந்தப் போராட்டம் ஒரு லட்சம் அப்பாவி மக்களை இடையில் நிறுத்தி கொன்று ஒழித்தது. பல ஆயிரம் கோடி சொத்துகளை தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம அழித்துள்ளது. எதிரியாக 25 ஆயிரம் பேரின் உயிரை வைத்து பலியெடுத்த எமது போராட்டம், சிங்கள அப்பாவி முஸ்லீம் மக்கள் மேலான தாக்குதலில் 10 ஆயிரம் பேரைப் படுகொலை செய்ததன் மூலமே தமிழ்த் தேசிய உணர்வு பெற்றனர். இப்படித் தான் தமிழ்த் தேசியம் இன்று தன்னை நிலைநிறுத்தியுள்ளது. இப்படி தொடரும் அவலத்தின் முடிவில், எதைத் தான் தமிழ் சமூகத்துக்குப் பெற்றுத் தரப் போகின்றார்கள் எனின், யாருக்கும் எதுவும் தெரியாது. ஒரு குழுவின் ஆட்சி, அந்த குழுத் தலைவரின் ஆட்சி என்ற எல்லையைத் தாண்டி எந்த அரசியல் விளக்கமும் அற்றுப் போய்விட்டது.


 அன்னிய ஏகாதிபத்தியத்தின் தயவில் பொருளாதார முன்னேற்றத்தைச் சாதிக்க முடியும் என்று பகட்டாக நம்ப வைக்கப்படுகின்றது. ஏகாதிபத்தியம் வட்டிக்குத் தரும் பணத்தைக் கொண்டு, மக்களை முன்னேற்ற முடியும் என்று புலிகள் ஒப்பாரி வைக்கின்றனர். இதன் மூலம் உலகமயமாதல் உள்ளடகத்தை தேசியமயமாக்குகின்றனர். ஏகாதிபத்தியக் கைக்கூலிகளாக இருப்பது எப்படி என்பதை, தமது சொந்த நடைமுறை அனுபவங்கள் மற்றும் நடத்தைகள் மூலம் உலகுக்கு எடுத்துக் காட்டுகின்றனர். உலகமயமாதல் ஒழுங்கை மீறாத, தேசியம் பற்றி பாடம் எடுக்கின்றனர். அதை மக்களின் முதுகில் சுமக்கவேண்டிய அவசியம் பற்றி அறிக்கைகளையும், சொந்த நடைமுறை எடுத்துக் காட்டுகள் மூலமும் உணர்த்தி வருகின்றனர். அண்மையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்ததை, தமிழ்ப் பகுதிகளில் புலிகள் பலாத்காரமாக முறியடித்து, சிங்கள அரசுக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் விசுவாசமாக செயல்பட்ட போது, சுரண்டல் உலகம் அவர்களைப் பாராட்டியது. தேசியம் என்பது சிங்கள ஆட்சியாளனுக்கு பதில் தமிழ் ஆட்சியாளன் என்றாகி, அதுவே தேசிய சுயநிர்ணயமாக நவீன விளக்கம் பெற்றுள்ளது. சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் எதை எதையெல்லாம் செய்கின்றனரோ, சட்டப்பூர்வமானத் தமது ஆட்சி அதிகாரத்தில் அதை எல்லாம் தாம் செய்யும் உரிமையை, செய்யும் அங்கீகாரத்தைப் பெறுவதே தமிழ் தேசியமாகியுள்ளது. தமிழ்ச் சமூகத்தின் அனைத்துத் தியாகமும் இதற்காகவே என்ற எல்லையைத் தாண்டி, இன்றைய தமிழ் தேசிய விளக்கம் ஒரு அடி கூட முன்னேறி விடவில்லை. இதுவே புலிகளின் தேசியத் தாகமாகி, அதைத் தமிழ் மக்களின் முதுகிலும் அறைகின்றனர்.

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது