நீண்டபொழுதெனினும் மீண்டெழுவர்

தர்மச்சக்கரத்தில் உலகைச் சுழற்ற..புதிதாய்
தலைவர் வருகிறார்
புலத்து தமிழா தெருவில் இறங்கு
கொடியைத் தூக்கு
விடியலைத்தரும் சூரியதேவன்

படத்தைத் தாங்கு
உலகை வெல்ல கருத்தே கேட்கிறார்
அடங்கிப்போன ஆய்வாளர்களே
எழுதுகோல்களை எடுங்கள்
புதிய உலக ஒழுங்கின் இராஜதந்திரமாம்
வென்;று காட்டுங்கள்
வீழ்ந்து கிடக்கும் மக்கள்மேல்
ஏறிமிதியுங்கள்

 

குண்டுகக்கிய பீரங்கிகள்
வென்ற வீராப்பில் வீதி உலாவருகிறது
தமிழில் உரை தாய் பிள்ளை பேச்சு
கொன்றுதின்ற மக்கள்தொகை நூறாச்சு
புத்தரின் புதிய அவதாரம் ராஜபக்ச
போhர்க்காலம் போனதுவோ
நாற்காலி காலமிது             
வன்னிமக்கள் முகாம் மேலாய் வடமிழுங்கள்

 VanniDisplaced.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பாசிசம் வென்றதும் தோற்றதும்..
ஆயுதவலுவே
இரண்டும் தோற்றுப்போனது
தேசத்து மக்களிடமே…………
நீணடபொழுதெனினும் மீணடெழுவர்
சிங்களமும் தமிழும் சேர்ந்தெழும் கைகோர்த்து
உழைப்போர்கரம் இணைய
ஒலிக்கட்டும் குரல்கள்

Last Updated on Monday, 08 June 2009 05:51