பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொன்ற பேரினவாதப் பாசிட்டுகள் (படம் இணைப்பு) – மூடிமறைக்கப்படும் போர் குற்றங்கள்

மனிதப் படுகொலைகள் தான், சிங்களப் பேரினவாதத்தின் மொழி. பச்சிளம் குழந்தையை நிலத்தில் அடித்தும், பின் ரி-56 துப்பாக்கியால் சுட்டும் கொன்றதாக லங்கா இணையம் இராணுவத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படத்தையும் வெளியிட்டுள்ளது.

குற்றங்கள் இங்கு மேல் இருந்து நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது. அதனால் இன்று குற்றங்களை மூடிமறைக்க, பாசிச சட்டங்களை மக்கள் மேல் ஏவுகின்றது. பத்திரிகை சுதந்திரத்தை மறுதலிக்கின்றது. தொடர்ந்து குற்றத்தை மூடிமறைக்க படுகொலைகளைச் செய்கின்றது, கடத்துகின்றது.

prabhaBalachandran.jpg

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலைக் குற்றத்தை, யாழ் பல்கலைக்கழக மனிதவுரிமைக்கான ஆசிரியர் சங்க அறிக்கை முன்பு உறுதி செய்தது.

இப்படி இறுதியாக இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் அனைவரினதும் கதி இதுதான். பேரினவாதம் இந்தியாவின் பக்கத் துணையுடன், அவர்களின் மேற்பார்வையில், வக்கிரமான வழிகாட்டலில் இதைத்தான் செய்து முடித்தது. சமாதானம் பேசிய வேஷதாரிகளின் பக்கத் துணையுடன் தான், இப்படுகொலைகள்  அரங்கேறியது. அதாவது சரணடைய வைத்து கொல்லப்பட்டனர்.  இப்படி யுத்தமும், சமாதானமும், சரணடைவும், தமிழ்மக்களுக்கு தந்த பரிசுகளில் இதுவும் ஒன்று. இன அழிப்பாக, இனக் களையெடுப்பாக அரங்கேற்றிய பாசிச  வக்கிரத்தைத் தான், இங்கு குழந்தையின் பிணமாக காண்கின்றீர்கள்.

prabhaBalachandran2.jpg

சிறுவர் போராளிகள் பற்றி மூச்சுக்கு மூச்சு கட்டுரைகள் எழுதி, புலியெதிர்ப்பு பிரச்சாரம்  செய்தவர்கள் எங்கே? இவர்களின் துணையுடன் 12 வயதே நிரம்பியிராத இந்தக் குழந்தையை கொன்று போட்டவர்கள் தான், இந்த பாசிச இனவெறி பிடித்த பாசிச "ஜனநாயகம்" பேசுவோர்கள். இதற்கு மகிந்த சிந்தனை என்னும் பேரினவாத பாசிசம் தான் தலைமை தாங்கியது. இதற்கு துணை நிற்கும் "ஜனநாயக" நாய்கள், "ஜனநாயகத்தின்" பெயரில் புலத்து (இலக்கியச்) சந்திப்புகளில் கூட ஊளையிட முடிகின்றது. எதையும் அரசியல் ரீதியாக பகுத்தாராய முடியாத "ஜனநாயக" மாயைகள்; கண்ணை மறைக்க, பாசிசம் "ஜனநாயக" கூத்தாக அரங்கேறுகின்றது.

இந்த படுகொலைகளைச் செய்த இந்த அரசின் பின்னால் ஜனநாயகம் பேசி, அதை முண்டு கொடுக்கும் மனித விரோதிகளின் துணையின்றி எந்த மனிதக் கோராங்களும் நடக்கவில்லை.

இறுதி யுத்தத்தில் வன்னியில் சரணடைந்தவர்கள் பெரும் தொகையானவர்கள், இப்படித்தான் கொல்லப்பட்டனர். பாலியல் ரீதியாக பெண்கள் தொடர்ச்சியாக புணரப்பட்டனர். இன்றும் இதுதான் அங்கு தொடருகின்றது.

PrabhaharanFam.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 

இது போன்ற பாரிய யுத்த குற்றங்களை மூடிமறைக்க, பேரினவாதம், குற்றம் நிகழ்ந்த இடத்தை இன்று சூனியப் பிரதேசமாக்கியுள்ளது. யுத்தக் குற்றங்களை அழிக்கின்றது. இதை மூடிமறைக்க, உலக நாடுகளுடன் முரண்படுகின்றது. இதற்காக தன்னார்வ நிறுவனங்களை வெளியேற்றுகின்றது. இதை புலியெதிர்ப்பு பேசிய நாய்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பாக காட்டியும், தென்னாசிய பொருளாதார வளர்ச்சியாகக் காட்டியும், போர்க்குற்றத்தை வாலாட்டி நக்குகின்றனர்.

மறுபக்கத்தில் தலைவர் இறக்கவில்லை என்று கூறி;, புலத்தில் பினாமிச் சொத்துக்கு பின்னால் நக்கும் புலிகள், இது போன்ற குற்றங்களையே மூடிமறைக்கின்றனர். சொத்தைக் கைப்பற்ற முனையும் புலத்து தமிழீழக்காரர்கள், புலித்தலைவர் வீரமரணமடைந்ததாக கூறி இந்தக் குற்றத்தை நடக்கவில்லை என்கின்றது. அதற்கு தான் காட்டிக் கொடுத்தது அம்பலமாகக் கூடாது என்ற மற்றொரு கவலை.

இப்படி அனைத்து குற்றவாளிகளும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றனர். பரஸ்பரம் தங்கள் குற்றங்களை மூடிமறைக்க, ஒருவரையொருவர் மூடிமறைக்கின்றனர்.

இன்னறய நிலையில் இதற்கு எதிராக மக்கள் மட்டும்தான், உண்மையாகவும் நேர்மையாகவும்  போராட முடியும். (புலத்து) புலிகளுக்கும் சரி, புலியெதிர்ப்புக்கும் சரி, அந்த தகுதியும், அரசியல் நேர்மையும் கிடையாது. குற்றங்களை மூடிமறைப்பது, அதை பூசி மெழுகுவது, எதுவும் நடவாத மாதிரி நடிப்பது, குற்றத்தை அரசியலாக கொண்டவர்களின் இன்றைய அரசியல் நிலையாகும்.

இதற்கு வெளியில், மக்கள் தமக்காக தாம் போராட வேண்டிய நிலையில் இன்று உள்ளனர். தம் மீது இழைத்த, இழைக்கின்ற குற்றங்களுக்கு எதிராக போராட வேண்டியவராக உள்ளனர். இந்த எல்லைக்கு வெளியில், மக்களுக்கான உண்மையான போராட்டம் கிடையாது.

பி.இரயாகரன்

11.07.2009