வயது வந்த ஆண், பெண் இரு பாலாரில் 9 கோடி பேர் சுமார் 50 சதவீதத்தினர் தாய்மொழியை ஆங்கிலத்தில் தெளிவாக உச்சரிப்புப் பிழையின்றி தொடர்ச்சியாக படிக்க இயலாது.

 

இவர்களில் 40 சதவீதத்தினருக்கு கூட்டல், கழித்தல் கணக்குகளைப் போடமுடியாது. ஆரம்ப நிலை தொழில் நுட்ப அறிவு கூட இவர்களில் பெரும்பான்மையோர்க்கு கிடையாது. ஆனால் இவர்களில் கல்வித்தகுதியோ பள்ளி இறுதியாண்டு முதல் பட்டப்படிப்பு வரை. இந்த 9 கோடிப் பேரில் 40சத வீதமானோர் வம்சாவழியாக வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்கள். பிறர் அமெரிக்காவிலே பிறந்து வளர்பவர்கள். இவை யாவும் தனது நாட்டு மக்களின் கல்வி மற்றும் அறிவுத்தரம் பற்றி அமெரிக்க அரசின் ஆய்வு முடிவுகள். அமெரிக்காவின் வெளிப்பகட்டில் மயங்கிப் போயுள்ளவர்களுக்கு நிச்சயமாக அதிர்ச்சி அளிக்கக் கூடிய ஒன்றிது.