கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம்) முன்வைக்கும் நவீன மனுதர்மம்
"நான் சாதி பார்ப்பதில்லை!", "எங்கே சாதி இருக்கின்றது!!?" "யார் சாதி பார்க்கின்றனர்!!!" என்று இலங்கையில் நவீன வெள்ளாளியம் எப்படி தன்னை தகவமைக்கின்றதோ, அதேபோல் தான் கமல் எங்கே மனுதர்ம நூல் நடைமுறையில் இருக்கின்றது என்று கேட்கின்றார். பார்ப்பனியத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ப மறுவார்ப்புச் செய்வது தான், கமலின் பகுத்தறிவுவாதம்.