இப்படி கூறுபவர்கள், ஒரு வர்க்கப் போராட்டத்தை நடத்தவா, இப்படிக் கூறுகின்றனர்!? வர்க்கப் போராட்டத்தை நடத்தத்தான், அவர்கள் இதைக் கூறுகின்றனர் என்றால், எப்படி? அவர்கள் என்ன செய்ய முனைகின்றனர்? இந்த வகையில்தான் இதை நாம் ஆராய முடியும்.
அரசியல்ரீதியாக உயிரிலுள்ள மார்க்சியத்தை உயிரற்ற மார்க்சியமாக்கிவர்களின் அரசியல் யோக்கியத்தை நாம் அம்பலப்படுத்தும் போது, அதை எதிர்கொள்ள முடியாத கூட்டம் தான் இதை எமக்கு எதிராக கூறுகின்றது. இந்த வகையில் தேசியத்தை புலிக்கு பின் அழித்த தமிழ்தேசியவாதிகளும், இதைத்தான் எமக்கு எதிராக கூறுகின்றனர்.