வலதுசாரிகளின் நினைவுத் தூபிகளும், இனவாதிகளின் சுரண்டல் அரசியலும்
யாழ் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட நினைவுத் தூபி, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை குறிக்கின்றதா எனின் இல்லை. அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் முரணற்ற ஜனநாயக அரசியலையோ, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலையோ, முரணற்ற சுயநிர்ணயத்தை முன்னிறுத்தும் முரணற்ற ஜனநாயக அரசியலையோ.. எந்த நினைவுத் தூபியும் குறிக்கவில்லை. மாறாக நிறுவப்பட்ட நினைவுத் தூபி, ஒடுக்கும் வலதுசாரிய இனவாத அரசியலின் உள்ளடக்கத்தைக் கொண்டது. அது மக்களையே பிளக்கின்றது.