ரீட்டா விவகாரம் : புளட் அலுகோசுகளும் - கோயபல்ஸ்சுகளும் - கோமாளிகளும்
ரீட்டா குறித்த சம்பவமானது கற்பனையானதாக இருந்தாலும் அல்லது உண்மைச் சம்பவமாக இருந்தாலும், இதை வெளியுலகுக்கு முன்வைத்தவர் ஜென்னி மட்டும் தான். அவரைத் தவிர வேறு யாரும் ரீட்டாவிடம், சம்பவம் குறித்த கதையைக் கேட்க அனுமதிக்கவில்லை. சம்பவம் நடந்த பின் அவரை அங்கிருந்து மன்னாருக்கும், இறுதியில் பிரான்சுக்கும் முன்னின்று அனுப்பி வைத்தவர் ஜென்னி. இதை நான் கூறவில்லை, இதை ஜென்னிதான் உலகறிய தேசம்நெற்றில் கூறி இருக்கின்றார். அதில் அவர் மட்டும் கேட்டுத் தெரிந்த விடையத்தை (ஜென்னியின் கூற்று) அசோக் தனது வழமையான அவதூறுகளுக்கு ஏற்ப திரித்துப் புரட்டி கூறியிருக்கும் பின்னணியில், புளட் அலுகோசுகளும் - கோயபல்ஸ்சுகளும் - கோமாளிகளும் மேடையேறி இருக்கின்றனர்.
இங்கு எதுவும் கற்பனையல்ல. அவதூறல்ல. புளட் அலுக்கோசுகள் கூறியவற்றில் இருந்து உண்மையைக் கண்டடைதலே.