மனிதர்களை விட, மனிதர்களின் கடவுள்களை விட, மனிதர்கள் கண்டு பிடித்த ஆயுதங்களை விட, மனிதர்களின் கோடிக் கணக்கான சொத்துக்களை விட வலிமை வாய்ந்ததே இயற்கை. இந்த இயற்கையின் சீற்றமானது இந்தப் பூமியில் பெரும் அழிவுகளை ஏற்படுத்திய போதெல்லாம் அது பூமியின் எங்கோ ஒரு முலையில் தானே என அதை நாம் மௌனமாக தாண்டி சென்று விடுகிறோம். மக்கள் அழிவும் மரணங்களும் நமது நெஞ்சினை பாதித்தாலும் நமக்கு இல்லைத் தானே என்று அமைதியடைந்து விடுகிறோம். இன்று மரணம் ஒவ்வொருவருடைய வீட்டுக் கதவினை தட்டும் சூழ்நிலையில், கதவினை திறந்து வெளியில் கால் வைத்து விட்டால் மரணம் நம்மை பற்றிக் கொண்டு விடுமென்ற பயத்தில் மாதக் கணக்கில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம். மனிதர்கள் மட்டுமல்ல மனிதர்களோடு வாகனங்கள், விமானங்கள், தொழிற்சாலைகள்.., இப்படி அனைத்தும் முடக்கப்பட்டு விட்டது. இந்த ஓர் மாதகாலம் தான் இயற்கை சுதந்திரமாக குளிர்மையான சுத்தக்காற்றினை சுவாசித்து சுகத்தினை மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறது. இயற்கையின் நீண்ட கால வேதனை இன்று சற்று தணிக்கப்பட்டுள்ளது. இயற்கை வெப்பத்தின் கொடூரத்தினை தாங்க முடியாமல் ஒவ்வொரு நாட்டு வாசலிலும் கையேந்தி நின்ற போது எதுவும் பண்ண முடியாது என்று திமிரோடு கதவை மூடிவிட்ட அமெரிக்காவும், ஏதோ பிச்சை போடுவது போல் சில்லறையினை காட்டி காதுகளை இறுகப் பொத்திக் கொண்ட உலக நாடுகளும் இன்று தன் காலில் வீழ்ந்து கிடப்பதை பார்த்து இயற்கை கம்பீரமாக நெஞ்சினை நிமிர்த்தி நிற்கிறது. இது இயற்கையின் நியாயமான உணர்வு தான்.
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
கொரோனா வைரஸ்சை பணமாக்குவது எப்படி!?-9
சமூகம் குறித்த அக்கறையோ, மனிதாபிமானம் குறித்த சிந்தனைமுறையோ அரசுகளிடம் கிடையாது. சுயநலமாகச் சிந்தி, கொள்ளையிடு, இதைத்தான் மனித நடத்தையாக – மனிதப் பண்பாக அரசு முன்வைக்கின்றது. இதற்கு எதிராக தான் மருத்துவமனைகளில் மருத்துவத்துறைச் சேர்ந்தவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடுகின்றனர்.
இப்படி உண்மைகள் இருக்க, பதுக்கல் வியாபாரிகளையும், விலையைக் கூட்டி விற்கும் முதலாளிகளையும் இனம் கண்டு கொதிக்கும் மனம், அரசுகளும் பன்னாட்டு முதலாளிகளும் கூட்டாக தொடங்கியுள்ள பகல் கொள்ளையைக் கண்டுகொள்ள முடிவதில்லை.
வைரஸ்சை அடுத்து மதவாதிகள் தங்கள் முகமூடிக்கே செயற்கை முகமூடியை அணிந்தபடி, மூலதனத்தைப் பாதுகாக்கும் தங்கள் மதப் பணியை மீளத் தொடங்கியிருப்பது போல், அரசுகள் மற்றும் பன்நாட்டு முதலாளிகளை பாதுகாக்க துடியாத் துடித்து களத்தில் இறங்கியுள்ளனர்.
அமெரிக்கா ஒரு டிரிலியன் (100000 கோடி) டொலரை முதலாளிகளுக்கு வாரி வழங்கவுள்ள அறிவித்தலை விடுத்துள்ளது. இது பிரிட்டன் வருடாந்த வரவு செலவு தொகைக்குச் சமமானது. பிரான்ஸ் அரை டிரிலியன் (50000 கோடி) டாலரை முதலாளிகளுக்கு கொடுக்கவுள்ள அறிவித்தலை விடுத்துள்ளது. வைரஸ்சைக் காட்டி எல்லா அரசுகளும் பெரும் பன்னாட்டு முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து, மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் திட்டத்தை தொடங்கி இருக்கின்றது.
ஜனாதிபதி நந்தசேனவின் இந்தியப் பயணமும் - எம் உரிமைகளும்
கீழ்வரும் வரிகள், அதிமேதகு மாட்சிமைக்குரிய ஜனாதிபதி நந்ததேச கோ. ராஜபக்ஸ அவர்கள், பதவியேற்றபின் இந்திய ஊடகமான பாரத் சக்தி Shakti.in மற்றும் SNI -இக்கு வழங்கிய பேட்டியிலிருந்து எடுக்கப்பட்டவை.
இவ்வசனங்கள் இலங்கையின் தேசியப்பிரச்சனை பற்றி அவரிடம் ஊடகவியலாளர் நிதின் கோக்கல Nitin A.Gokhale வினவியபோது உதிர்த்தவை.
தன்னை இனவாதி அல்ல என்று குறிப்பிடும் அவர், தேசியப்பிரச்னைக்கு ஒரே தீர்வு பொருளாதார அபிவிருத்தி மட்டுமே என திட்டவட்டமாகக் கூறுகிறார்.
எனக் கூறும் நந்தசேன ராஜபக்ஷ, உண்மையிலே இனவாத சிந்தனை அற்றவரென்றால் பின்வருமாறு கூறியிருக்க மாட்டார்.
//"நாங்கள் பவுத்தர்கள். எமது நாடு சமாதானமானது. நாங்கள் மிகவும் அமைதியான சமாதானமான தேசத்தவர். எமது வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. எமக்கேயான சமூகப் பெறுமானங்களும் மதிப்புகளும், வளமான கலாச்சாரமும் உள்ளது."//
அதாவது : அவருக்கு இனவாதம் இல்லை என்றால், இலங்கையை பவுத்த நாடு என்று அவர் கூறியிருக்க மாட்டார். இலங்கையை ஒரு பல்லின -பல மத - தேசமென்று கூறியிருப்பார். இங்கு அவர் இலங்கையை ஒரு பவுத்த சிங்கள தேசமென்றே வரையறுக்கின்றார். இது தான் சிங்கள-பவுத்த பேரகங்கார வாதத்தின் அடிப்படை. நந்தசேன கோ. ராஜபக்ஷவைப் பொறுத்தளவில், இலங்கை அல்லது ஸ்ரீ லங்கா பவுத்த- சிங்களவரின் நாடு. மற்ற இனங்கள் இங்கு சீவிக்க விரும்பினால், சிங்களவர்களை சீண்டாது, எந்த வித உரிமைகளையும் கோராது, சாப்பிடுவதற்கு மட்டும் வாயை திறந்தால் போதுமெனக் கூறுகிறார்.
கோத்தபாய நல்லவராம்
தற்போது, இலங்கையின் அரசஅதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள கோத்தபாய ராஜபக்ச அவர்களையும், ராஜபக்ச குடும்பத்தையும் எவ்வாறு புரிந்து கொள்வது,- என்பது பற்றி கட்டுரைகளும் கருத்துக்களும் இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் எழுதி குவிக்கப்படுகிறது. இக்கட்டுரைகளை - கருத்துக்களை பெரும்பாலும் எழுதுவோர், தற்போது வடக்கு -கிழக்கு தமிழ் சமூகத்தில் கருத்தியல்ரீதியாக சமூகத்தை சென்றடையக்கூடிய எழுத்தாளர்களாகவும், பிரபலமான "அரசியல்" ஆய்வாளராகவும் இருக்கின்றனர்.
இவர்களில் மிகவும் பிரபலமானவர்கள் கடந்த காலத்தில் புலிகளுக்கும் பிரச்சார பீரங்கிகளாகவும், அவர்களின் அதிகாரத் துஷ்பிரயோகம், படுகொலைகள், பாசிச நடவடிக்கைகளை நியாயப்படுத்துபவர்களாகவும் ஆகவும் விளங்கியவர்கள்.
இவர்கள் தற்போது வேறு, வேறு கட்சிகளை பின்கதவால் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், தங்களுக்குள் அரசியல்ரீதியான சில முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். இருந்தாலும், கோத்தபாய ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அவரின் அரசியல் போக்குகள் பற்றி மிகவும் நேர்மறையான கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர். தம்மை அதிகாரத்துக்கு எதிரான சக்திகள் என கூறிக்கொள்வதில் இன்பமடையும் இவர்கள், அடிக்கடி பாவிக்குமோர் சொல் "அரசியல் அறம்". புலிகளுக்கு காவடி தூக்குவதற்கு முன், இவர்கள் உறுப்பினராகவிருந்த இயக்கங்களுக்காகச் செய்த கொலைகள், கொள்ளைகள் தொடக்கம் இன்று அதிகாரத்தில் இருக்கும் மஹிந்த குடும்பத்துக்கு பல்லக்கு தூக்கிக்கொண்டிருப்பது வரையான இந்த காலத்தில் - இவர்களின் "அரசியல் அறம்" எங்கு போனதென்று இவர்களால் பதில் கூற முடியாது. "ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி" என்பது தான் இவர்களில் அரசியல் அறம்.
தமிழ் தேசத்துக்கு தீர்வு கிடைக்கப் போகிறதாம்! கோத்தாவுடன், மோடி பேச்சாம்!
கோத்தபாய இலங்கை சனாதிபதியாக பதவியேற்று 24 மணி நேரத்துக்குள்ளேயே(19.11.2019), இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சிவசுப்ரமணியம் ஜெயசங்கர், மற்றும் ஐம்பது பேர் கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளும் கொழும்புக்கு வருகை தந்தனர். சிலமணிநேரங்கள் கொழும்பில் தரித்து நின்ற இவர்கள் கோத்தபாய, அவரின் அண்ணனார் மஹிந்த உட்பட ரணில் மற்றும் சில முக்கியஸ்தர்களை சந்தித்து விட்டுச் சென்றனர்.
"மரியாதையின் நிமித்தம் அரச அதிபர் கோத்தபாயவை சந்தித்தேன். இரண்டு நாடுகளுக்குமிடையில் உள்ள பிணைப்பை இறுக்கமடையச் செய்யும் விதத்தில், நாம் அவரை இந்தியாவுக்கு, பிரதமர் மோடியுடனான சந்திப்பு ஒன்றிற்கு வருமாறும் அழைப்பு விடுத்தேன்" என அறிவித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சிவசுப்ரமணியம் ஜெயசங்கர்.
ஒடுக்கப்பட்ட தமிழ் தேசத்தின் இன்றைய தேவை .... .
2009-போர் முடிவின் பின், எமது தேசத்தின் விடுதலை பாராளுமன்றவாதிகளினாலும், அமெரிக்க, ஐரோப்பிய, இந்திய அரசுகளினாலும் பெற்றுத்தரப்படும் எனும் நம்பிக்கை மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் முன்னணி, புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கும் புலிகளின் அமைப்புகள் என கூறிக்கொண்டவர்கள் எனப் பலர் இந்த நம்பிக்கையை மக்கள் மத்தியில் வளர்த்தனர். இவர்களின் இந்த நம்பிக்கையூட்டல், அவர்களின் சொந்த இருப்பை தக்க வைத்துக்கொள்ள மட்டுமே பயன்பட்டுள்ளதென்பது இங்கு கூறித்தான், அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விடையமல்ல.
அதேவேளை, புலிகளுக்குப் பின்னான காலத்தில் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் எனத் தம்மை கூறிக்கொண்டவர்களுக்கு அரசியல்ரீதியாக வேறு எந்த வழியும்-தெரிவும் இருக்கவில்லை. போருக்குப் பின், போரை நடத்தி முடித்த மஹிந்த அரசின் ஒடுக்குமுறைக் கருவிகளின் பார்வையிலேயே இவர்களும் அரசியல் செய்யும் சூழல் இருந்தது. அந்த நிலையானது 2015 இல் மைத்ரி பதவி ஏற்கும் வரை தொடர்ந்தது.
குடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்
தமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா?, எப்போது சாதி உருவாக்கப்பட்டது?, ஆதியில் யார் ஆண்ட சாதி?, இராசராச சோழன் எந்தச் சாதி?, சாதியைக் கொண்டு யார் தமிழர் எனக் கண்டுபிடிக்கமுடியுமா? என்பன போன்ற பல கேள்விகள் அண்மைக் காலத்தில் பரவலாக எழுப்பப்படும் கேள்விகளாகக் காணப்படுகின்றன.
அத்தகைய கேள்விகளிற்குப் பதில் காணுமுகமாக தமிழர்களிடம் சாதியின் தோற்றம் பற்றிய ஒரு சுருக்கமான விளக்கமாகவே இக் கட்டுரை அமையும். இதனை முழுமையாகப் பார்ப்பதற்கு தமிழர்களின் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளிலான எழுத்திலுள்ள வரலாற்றினைப் பார்க்கவேண்டும்.
கார்த்திகேசனின் நூற்றாண்டு
ஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019
தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி, 2010 ஆம் ஆண்டு அவரது 33வது நினைவுதினத்தின் போது தோழர் சண்முகம் சுப்பிரமணியம் அவர்களால் எழுதப்பட்டு, 02.09.2010 இல் தினகரனில் வெளிவந்த கட்டுரை நன்றியுடன் மறுபிரசுரம் செய்யப்படுகின்றது.
வடக்கில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வேரூன்ற வைத்தவர்
‘கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்’ என இலங்கையின் வடபுலத்து மக்களாலும், ‘காத்தார்’ என யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர் சமூகத்தாலும் அன்புடனும், அர்த்தத்துடனும் அழைக்கப்பட்டு வந்த முருகுப்பிள்ளை கார்த்திகேசன் (மு.கா) அமரத்துவமடைந்து, இவ்வருடம் செப்ரெம்பர் மாதம் 10ம் திகதியுடன் 33 வருடங்கள் உருண்டோடிவிட்டன.
மனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி
என்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப் பதிவையிடுகிறேன் .
எனக்கு உடுப்பு கழுவி தந்து என்னைக் குளிக்கவைத்து எனது கால் கைகளைத் தடவிப்பிடித்து விட்டு 70வயதிலும் என்னைப் பார்த்துக்கொள்ளுமளவுக்கு ஆரோக்கியமாக இன்னும் எந்தவித நோயுமில்லாமல் உடல் பலத்துடன் இருக்கும் எனது தாய்...
ஆரோக்கியமான ஒரு தாய்க்குப் பிறந்த மகள் நான்.. எனது சகோதரர்கள் அனைவரும் இன்னும் ஆரோக்கியமாகவே உள்ளனர்... வீட்டில் கடைசிப்பெண்... பிள்ளை பெற்ற அந்நாளே எழுந்து வீட்டு வேலைகளை களைப்பின்றி செய்யுமளவுக்கு தேகாரோக்கியத்துடன் இருந்த நான்தான் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்றால்.. அதற்கான பரம்பரைக்காரணம் எதுவுமில்லை!
மனம் திறந்து பேசுகிறேன்....
இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்
கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர் தங்கும் விடுதிகளை குறிவைத்தும் இஸ்லாம் மதவெறியர்களால் பாரியளவிலான மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழர்,சிங்களவர், வெளிநாட்டவர் என நூற்றுக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இலங்கை நாட்டை பொறுத்தவரை படுகொலைகள் புதிதான நிகழ்வாக இல்லாத போதும், பத்து வருடங்களாக வெடிகுண்டு சத்தமின்றி இருந்த காலத்தின் பின் நிகழ்ந்திருக்கும் நிகழ்வு என்னும் வகையிலும்; இந்த தாக்குதலின் உண்மையான நோக்கம்,இலக்கு, ஈடுபட்ட சக்திகள், தாக்குதலை நிகழ்த்திய கூட்டத்தின் நம்பிக்கை, அது சார்ந்த மக்கள் கூட்டத்தின் எதிர்காலம் என்னும் பல கேள்விகளுக்குள் இருக்கும் குழப்பமான சூழ்நிலை காரணமாக இச்சம்பவம் இலங்கையில் வாழும் சமூகங்களுக்கிடையிலான உறவின் எதிர்காலம் தொடர்பான ஒரு முக்கிய புள்ளியாக அமையப்போகிறது.
இப்போது வெள்ளம் தலைக்கு மேல்! -Sharmila Seyyid-216
2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி பார்ப்பது ”ஹராம்” என்று பிரச்சாரம் செய்யத்தொடங்கியது. இந்தச் செயல்பாடு பிரச்சாரத்தோடு நின்றுவிடவில்லை. வீடு வீடாகச் சென்று அன்டனாக்களை உடைப்பது, சீடி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்களை எச்சரிக்கை செய்து, கடைகளை எரிப்பது என்று வன்முறையாக மாறியது.
கறுப்பு அபாயாக்களையும், நீண்ட அங்கிகளையும் கொண்டுவந்து இதுதான் இஸ்லாமிய உடை என்று யாரோ சில வியாபாரிகள் அறிமுகம் செய்தார்கள். எங்கள் இறுதித் தூதர் முஹம்மத் நபி அவர்கள் வாழ்ந்த மண்ணில் பெண்கள் எல்லாம் இதைத்தான் அணிகின்றார்கள். இது எங்கள் கலாசாரம் என்று ஏற்பதற்கு பெண்களையும் பிள்ளைகளையும் பழக்கப்படுத்தினார்கள். இது பெண்களுக்குப் பாதுகாப்பான கௌரவமான உடை என்பதான உணர்வை வலிந்து உருவாக்கிப் பெண்கள் வாயாலேயே சொல்லும்படி மூளைச்சலவை நடந்தது. பாடசாலை மாணவிகளும், பல்கலைக்கழகம் செல்லும் மாணவிகளும் கறுப்பு அங்கியை மட்டுந்தான் கட்டாயமாக அணியவேண்டும் என்று வெள்ளிக்கிழமை ஜூம்மாக்களில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்துப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இது எங்கள் ஊரில் மட்டும் நிகழ்ந்த சம்பவமில்லை. பெரும்பாலாக முஸ்லிம்கள் வாழும் எல்லா ஊரிலும் இப்படித்தான் நடந்தது.
ஏதோ Aesthetic அல்லது அழகியல் பற்றி விவாதம் நடக்குதாம். அதன் அடிப்படை என்ன ?
தமிழ் மொழியை எடுத்துக் கொண்டால் அதற்கு, மண் தோன்றிக் கல் தோன்றாக் காலத்திலிருந்தே கலை - இலக்கிய வரலாறு உள்ளதென கூறப்படுகிறது. ஆனாலும், "பல்லாயிர " வரலாற்றுக்கு வெளியில் அம் மொழிக்கு Aesthetic -அழகியல் பற்றிய தத்துவப் பார்வை-ஆய்வுமுறை இருந்ததா என்றால் ....... எனக்குப் பதில் தெரியாது.
வளர்ச்சியடைந்த மொழிகள் எல்லாவற்றினதும் கலை -இலக்கிய உருவாக்கமென்பது, பெரும்பாலும் ஐரோப்பிய கலை -இலக்கிய கோட்பாடுகளின் அடிப்படையையே இன்று அடித்தளமாகக் கொண்டவை.
ஆதலால், இன்றய தமிழின் Aesthetic -அழகியல் பற்றிய கோட்ப்பாடுகளும் ஐரோப்பிய மெய்யியல் சார்ந்தவையாகவே கருதுகிறேன்.
Aesthetic (-அழகியல் ) என்ற ஆங்கில வார்த்தையின் தாய் வார்த்தை கிரேக்க மொழியிலான aesthetica என்பதாகும். இதன் அர்த்தம், புலன்களினூடு வெளிப்படும் அறிவு என மொழிபெயர்க்கலாம்.
கலை -இலக்கியம் உருவாக்கப்படும் எந்த மொழியாக இருப்பினும், அம் மொழி பேசப்படும் -உபயோகிக்கப்படும் சமூகம் சார்ந்த ஆதிக்க சிந்தையே - அச் சமுகத்தில் உருவாகும் கலை -இலக்கியத்தின் உள்ளடக்கத்தை, அழகியலை தீர்மானிக்கிறது. ஆதிக்க சிந்தனையின் அடித்தளமானது அரசியல்-பொருளாதாரத்தின் வெளிப்பாடு-உற்பத்திப்பொருள்.
தமிழ் மக்களே - உங்களுக்காக வலதுசாரிய யாழ். சைவ வேளாள தமிழ் மக்கள் கூட்டணி
நல்ல நாள் பார்த்து, சுப முகூர்த்தத்தில், முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். இக்கட்சியின் ஆரம்ப விழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. விக்னேஸ்வரன் அவர்கள் வடமாகாண முதலமைச்சராக பதவியேற்ற போது அவர் ஒரு பொதுவான - ஒரு தமிழ் மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராக பிரச்சாரப்படுத்தப்பட்டார். அரசியல் பின்னணி எதுவுமற்ற- அதேவேளை வலதுசாரிய யாழ். சைவ வேளாள சிந்தனையை பின்பற்றுபவராகவும், தானுண்டு - தன் குடும்பமுண்டு என சுயநலமாக இருந்தவரை, கூட்டமைப்பு அரசியலுக்கு கொண்டு வந்தது. ஐந்து ஆண்டுகால பதவியின் அதிகாரம் முடிவதற்கு 12 மணிதியாலங்களுக்கு முன்னரே விக்கினேஸ்வரன் ஒரு கட்சியை ஆரம்பித்துள்ளார். அதற்குப் பெயர் தமிழ் மக்கள் கூட்டணி.
தமிழ் மக்கள் கூட்டணியை ஆரம்பிப்பதற்கு அவருக்கு ஏற்பாடு செய்து கொடுத்தது- ஆதரவாக இருப்பது தமிழ் மக்கள் பேரவை என்று கூறப்படும் அமைப்பாகும். இந்த அமைப்பானது, சில வருடங்களுக்கு முன்பு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக செயற்பட்டு, தமிழ் மக்களின் தேசிய விடுதலையை பெற்றுக் கொள்வதற்கான ஒரு அழுத்தம் கொடுக்கும் முன்னணியாக ஆரம்பிக்கப்பட்டது. இவ் அமைப்பில் இணைந்து கொள்ள நான் அன்று அங்கம் வகித்த இடதுசாரிக் கட்சிகள், மார்க்சிச அடிப்படையிலான முன்னணி அமைப்புகள் கூட சேர்ந்து செயற்பட அழைக்கப்பட்டன. (கோட்பாடுகள், மற்றும் சில கருத்து வித்தியாசங்களால் இடதுசாரிகள் இணையவில்லை)
இதன் பின்னணியில் இலங்கை தமிழ் காங்கிரஸ் - பொன்னம்பலம், குதிரை கஜேந்திரன் போன்றவர்கள் உழைத்தார்கள். அவர்களுடன் சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்களும் அவசர அவசரமாக ஓடிப் போய் சேர்ந்தார்கள். புளொட் சித்தார்த்தன் பேரவையில் இணையா விட்டாலும், தானும் அதில் அங்கம் வகிப்பது போல காட்டிக் கொண்டார். ஏன், ஈபிடிபி கூட இணைய முயற்சித்ததாக கதைகள் உண்டு.
மீ ரூ - புலம்பெயர்ந்தவர் கதைகளும், ஆணாதிக்க இரட்டை வேடங்களும்
சில வருடங்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டில் இலங்கை-இந்திய "இலக்கிய -அரசியல்" வெளியில் இரு மீ ரூ - பிரச்சனைகள் கிளப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரில் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் மற்றவர் இந்தியாவை சேர்ந்தவர். பாதிப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆண்களும் முறையே ஒருவர் இந்தியர் மற்றவர் இலங்கைத் தமிழன்.
இந்த பிரான்ஸ் மீ ரூ-க்கள் சந்திக்கு வந்த வேளையில், இலங்கை-இந்திய "இலக்கிய -அரசியல்" மாற்று சக்திகள் தாங்கள் தான் என மார்தட்டிக் கொண்ட பாரிய குழுவொன்று அந்த இரு ஆண்களுக்காகவும் குரல் கொடுத்தது.
அண்ணாக்களைக் காப்பாற்ற, பெண்கள் இருவர் மீதும் அவதூறுகள் இவர்களால் பரப்பப்பட்டது. குறிப்பாக, இந்தியாவை சேர்ந்த பெரியாரிசம் கதைக்கும் பெண் மீது படுகேவலமாக பாலியல் அவதூறுகள் கொட்டப்பட்டது. அவதூறுகளை, அப் பெண்ணை பாலியல்ரீதியில் சுரண்ட முற்பட்ட ஆண் எழுத்தாளரே, "soft porn" அல்லது ஆபாசக் கதை வகை எழுத்தாக எழுதி வெளியிட்டார். அவர் எழுதியதை "அவர் பக்க கருத்து" எனும் போர்வையில் அவரின் தொண்டரடிப்பொடிகள் பரப்பினார்கள். அக்காலத்தில், புலிகளுக்கு அடுத்ததாக இந்த எழுத்தாளர் சார்ந்த குழுவிடமே இணையங்கள் பல இருந்தன. Facebook அப்போது தான் அறிமுகமான காலம் என நினைக்கிறன். .......
மேற்படி இரு மீ ரூ-க்கள் சார்ந்து பெண்களுக்காக வெகு சிலரே குரல் கொடுத்தார்கள். இந்தியரால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக, அந்தக் காலத்தில் மிகவும் எழுச்சியுடன் இருந்த பெண்கள் சந்திப்பு சார்ந்த பெண்கள், சக்தி சஞ்சிகை, ஊடறு, பெண்கள் சந்திப்பு மலர் வெளியீட்டுக் குழு போன்றவர்கள் குரல்கொடுத்தார்கள். பகிரங்க நோட்டீஸ் இவர்களால் வெளியிடப்பட்டது. இந்தியாவை சேர்ந்த பெரியாரிஸம் கதைக்கும் பெண்மீது நடத்தப்பட்ட வன்முறைக்கு எதிராக தனிநபர்கள் பலர் குரல் கொடுத்தார்கள். பெண்ணியம் பேசும் பெண்கள் குழுக்கள் குரல் கொடுத்ததாக எனக்கு நினைவில் இல்லை.
DEMONS IN PARADISE திரைப்படமும் - தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளும்.
இங்கு யாழ்ப்பாணத்தில, சில வருடங்களாக யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. சில சிங்கள NGO - முதலாளிகள் மேற்குநாடுகளின் நிதியில் இதை நடத்துகிறார்கள். கடந்தவருடம் கூட இதை பற்றி விரிவாக எழுதியிருந்தேன். இப்போ, நான் இங்கு பதியப்போவது இந்த பட விழாவில் திரையிட மறுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு படத்தைப்பற்றி. புலம்பெயர் நாடுகள் உட்பட இலங்கையில் தம்மை அதிதீவிர ஜனநாயகவாதிகள், எழுத்தாளர்கள், சமுகப் போராளிகள், மார்க்சிசவாதிகள், இடதுசாரிகள் என கூறிக்கொள்வோர் சிலர் DEMONS IN PARADISE என்ற படம், மேற்படி படவிழாவில் திரையிட தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறி - அதற்கு எதிராக குரல்கொடுக்கின்றனர். ஆத்திரப்படுகின்றனர். போராட்டத்துக்கு அறிவித்தல் விடுகின்றனர். டெமோன் இன் பரடைஸ் என்ற படத்தின் இயக்குனர் ஜூட் ரத்தினத்தின் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக ஆக்ரோஷத்துடன் கூக்குரலிடுகின்றனர்.
ஆனால், இதே நபர்கள் ஆண்டாண்டு காலமாக புலியெதிர்ப்பை முன்னிறுத்தி ஒடுக்கப்பட்ட தமிழ் தேசிய இன மக்களின் ஜனநாயக உரிமைக்கு எதிராகவே செயற்படுபவர்கள். இன்று மேற்படி படத்தை திரையிட வேண்டுமென இவர்கள் கூப்பாடுபோடுவதன் காரணமே, அந்தப் படத்தின் அடித்தளம் - பிரச்சார வீச்சு எல்லாம் தமிழ் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்துக்கான மறுமுனைவுக்கு எதிராக இருப்பதுதான் என்பது எனது கருத்து !
ஆள அதிகாரமா? வாழ ஆதாரமா? எது வேண்டும் எமக்கு?
இலங்கைத் தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்றில் அந்நிய ஆட்சியாளர்கள் முதல் இன்றைய ஆட்சியாளர்கள் வரை ஒரு குறிப்பிட்ட “மேற்குடி மக்கள்” கூட்டத்தினரே அவர்களை அரசியல் பிரதிநிதித்துவம் செய்து வருகின்றனர்.
1931ல் அந்நியர்கள் அமுலாக்க முயன்ற ‘சர்வஜன வாக்குரிமையை’ சாதியையும், படிப்பையும், பெண்(பால்)களையும் முன்னிறுத்தி எதிர்த்து நின்றவர்கள்-அவர்களின் வழித்தோன்றல்கள்-வாரிசுகள்-சீடர்கள் தான் இன்றும் எமது தலைவிதியை நிர்ணயிக்கும் ஆதிக்க அரசியல் பிரதிநிதிகளாக எம்மால் தெரிவு செய்யப்பட்டு ராஜ(தந்திர அந்தஸ்து) பவனி வந்தபடி உள்ளனர்.
ஆங்கிலேயரிடம் பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கு ஐம்பதுக்கு ஐம்பது (50மூ) வீதப் பிரதிநிதித்துவம் கோரிய ஜி.ஜி.பொன்னம்பலம் 1939ல் நாவலப்பிட்டியில் இடம்பெற்ற சட்டசபைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சிங்கள மக்களின் பிறப்பையும் பௌத்த மதத்தையும் பற்றி மிகவும் இழிவுபடுத்தி பேசியதால் நாவலப்பிட்டி, பாசற, மஸ்கெலிய ஆகிய ஊர்களில் தமிழ் மக்கள் மீது வன்முறைத் தாக்குல்கள் இடம்பெற்றன. அது யாழ்ப்பாணத்திலும் எதிரொலித்தது. அக் காலப்பகுதியில் ‘சிங்கள மகா சபையை’ ஆரம்பித்து இயக்கி வந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க இனவாதப் பேச்சு மூலம் தனது ‘சபை’யின் வளர்ச்சியை அதிகரித்தமைக்காக திரு பொன்னம்பலத்திற்கு நன்றி தெரிவித்திருந்தார்.(பொன்னம்பலத்தின் பேச்சு ‘சிங்கள மகா சபை’க்கு புதிய பல கிளைகளை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அமைப்பதற்கு வழி வகுத்தது).