Language Selection

சமூகவியலாளர்கள்

நாடாளுமன்ற அவைத் தலைவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட உறுப்பினரைக் கேள்வி கேட்க ஒருவேளை பெருந்தன்மையாக அனுமதித்து விட்டாலும், அது அவைக் குறிப்பில் இடம் பெறுவதற்கு முன்பே காங்கிரஸ் கட்சியின் தலைமைக் கொறடா அந்த உறுப்பினரிடம் பேசி, அக்கேள்வியைத் திரும்பப் பெற வலியுறுத்துவார். அதையும் மீறி ஒருவேளை அந்தக் கேள்வி பதிவாகிவிட்டால், அக்கட்சியின் கொறடா அந்த உறுப்பினரை அன்று மட்டும் ஊரைவிட்டே வெளியேறச் சொல்லி விடுவார். இக்கேள்விக்கான பதில் தேவைப்பட்டாலும், கேள்வி எழுப்பிய உறுப்பினர் இல்லாததால், நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடைபெறாது. இப்பிரச்சினை அத்துடன் முடிவுக்கு வந்துவிடும்.

Ambedkar நாடாளுமன்றத்தில் நிதிநிலை தொடர்பான விவாதங்கள் நடைபெறும்போது, எந்த உறுப்பினர் வேண்டுமானாலும் நிதிநிலை குறித்துப் பேசலாம். தாங்கள் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும், கட்சிக்கும் எத்தகைய சிறப்பு உரிமைகள் வேண்டும் என்று கோரலாம். தேவையற்ற திட்டங்களுக்காக நிதியை வீணடிப்பதற்குப் பதில் முக்கியத் தேவைகளுக்கான கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதைச் சுட்டிக் காட்டலாம். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில், ஒரே ஒரு உறுப்பினர்கூட வெட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றியதை நான் பார்த்ததில்லை. இதற்கெல்லாம் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாடுகளே காரணம். கட்சி உறுப்பினர்கள் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் எனில், முன்கூட்டியே அவர்கள் கட்சிக் கொறடாவிடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால், இந்த நான்கு ஆண்டுகளில் காங்கிரசில் உள்ள தாழ்த்தப்பட்ட உறுப்பினர்கள் எவரும் எந்த சட்டவரைவையும் முன்மொழிந்ததில்லை.

 

தீண்டத்தகாத மக்கள், இந்தியக் கிறித்துவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் ஆகியோருக்கான சட்டரீதியான சிறப்புரிமைகளை / அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை அவர்களுடைய எதிரிகள் காங்கிரஸ் மூலம் ஆக்கிரமித்துக் கொண்டால் அவர்கள் எப்படி அதை அனுபவிக்க முடியும்?

 

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருந்தபோது நம்முடைய சமூகத்திற்கான நலத்திட்டங்களை செயல்படுத்த விரும்பியிருந்தால் செய்திருக்கலாம். ஆனால், அவர்களும் நம்மை ஏமாற்றி விட்டனர். அந்தக் காலம் கடந்து விட்டது. ஆனால், இன்றைய காலகட்டத்திலும் நாம் கவனமாக இல்லாமல், நம் கண்களை மூடிக்கொண்டிருந்தால், நாம் அழிந்து விடுவோம். இனிவரும் தலைமுறையினரும் நம்மைப்போல துன்பப்படக்கூடாது என நினைத்தால், நீங்கள் இப்பொழுது ஏதாவது செய்தாக வேண்டும்.

 

நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் இடஒதுக்கீடு இன்னும் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்கும் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இந்தியாவில் தீண்டாமை நீடித்திருக்கும்வரை, இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தியபோது, காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் என்னை எதிர்த்தனர். எனவே, ஒன்றும் இல்லாமல் இருப்பதற்குப் பதில் ஏதாவது கிடைக்கட்டுமே என்ற வகையில், நான் 10 ஆண்டுகளுக்கு இடஒதுக்கீடு என்ற திட்டத்திற்கு ஒப்புக் கொண்டேன். இந்த இடஒதுக்கீடு இரண்டு தேர்தலுக்கு மட்டும்தான் இருக்கப் போகிறது. அதுவரை மட்டுமே காங்கிரஸ் போன்ற கட்சிகள், உங்களிடம் வாக்குகளுக்காகக் கையேந்தி நிற்கும்.

 

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இடஒதுக்கீட்டை நீட்டிக்கும்படி உங்களுக்காக யாரும் கேட்கப் போவதில்லை. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? அதற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி, நீங்கள் அவர்களின் சார்பில் தேர்தலில் நிற்க வேண்டும் என்று உங்களிடம் வேண்டுகோள் வைக்குமா? கண்டிப்பாக வைக்காது. அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அவர்கள் உங்களைத்தான் முட்டாள்களாக்குவார்கள். எனவே, நீங்கள் இப்பிரச்சினை குறித்து சிந்தித்து, எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்யுங்கள்.

 

ஒவ்வொரு கட்சிக்கும் பணமோ, அதிகாரமோ இருக்க வேண்டும். நம் சமூகத்திடம் பணமோ, அதிகாரமோ இல்லை. ஆதிக்கச் சாதியினரின் கருணையால் நாம் கிராமங்களில் குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பனியாக்கள் மற்றும் மார்வாரி போன்றவர்களிடம் அதிகாரம் இல்லை; ஆனால், அவர்களிடம் பணம் இருக்கிறது. பணத்தால் எதையும் வாங்க முடியும். எனவே, நீங்கள் உங்களுக்காக எதையாவது செய்து தீர வேண்டிய தருணம் இது. நீங்கள் ஒற்றுமையாக இருந்தால், உங்கள் நலன்களைப் பாதுகாக்க நீங்கள் உங்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் அனுப்பலாம். இல்லையெனில் நீங்கள் அழிந்துவிடுவீர்கள். எனவே, நீங்கள் ‘பட்டியல் சாதியினர் கூட்டமைப்பின்’ கீழ் ஒன்றிணைந்து, நம் சமூகத்தை குழப்பத்தின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும். ஒவ்வொருவரும் நம்முடைய உண்மையான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க உதவி செய்ய வேண்டும். பல்வேறு கட்சிகளும் உங்களிடம் வந்து ‘எங்களுக்கு வாக்களியுங்கள்’ என்று கேட்பார்கள். ஆனால், அவர்கள் காட்டும் தவறான பாதைக்கு நீங்கள் சென்றுவிடக் கூடாது.

 

தொடரும்

28.10.1951 அன்று, லூதியானாவில் ஆற்றிய உரை

நன்றி:தலித்முரசு

நான் காங்கிரஸ் அரசில் ‘காபினட்’ அமைச்சராகப் பதவி வகிக்க ஒப்புக் கொண்டதால், காங்கிரஸ் கட்சியிலேயே நான் சேர்ந்து விட்டதாகப் பெரும்பாலான மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ‘அம்பேத்கரே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்ட பிறகு, பட்டியல் சாதியினர், இன்னும் ஏன் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பில் இருக்கின்றனர்’ என்று சில விமர்சகர்கள் பிரச்சாரம் செய்யத் தொடங்கிவிட்டனர். இத்தகைய விமர்சனங்கள் குறித்து நான் லக்னோவில் தெளிவுபடுத்தினேன். பூமியும் பாறையும் இருவேறு பொருட்கள். அவை இரண்டும் ஒன்று சேராது. பாறை, பாறையாகவும்; பூமி, பூமியாகவுமே இருக்கும். நான் பாறையைப் போன்று உறுதியானவன். நான் யாருடன் இருந்தாலும், என்னுடைய தனித்த அடையாளத்தை ஒருபோதும் இழக்க மாட்டேன்.

Ambedkar எந்தவொரு நற்பணிக்காக, யார் என்னுடைய ஒத்துழைப்பை நல்கினாலும், நான் அவர்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன். என்னுடைய நாட்டுக்காக என்னுடைய ஆற்றலை உண்மையுடன் பங்களிக்க, காங்கிரஸ் அரசுடன் நான்கு ஆண்டுகள் ஒத்துழைத்தேன். ஆனால், இந்த நான்கு ஆண்டுகளில் நான் காங்கிரஸ் கட்சியில் சங்கமமாகிவிட என்னை அனுமதித்தது இல்லை. சிந்தனையிலும் செயலிலும் என்னுடைய மக்களின் நலன்களுக்கு எதிராக இல்லாத அனைவருடனும் நான் ஒத்துழைத்தேன்.

 

வரவிருக்கும் பொதுத் தேர்தலைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தலை பட்டியல் சாதியினர் வாழ்வா சாவா என்று எண்ணி செயல்பட வேண்டும். நம்டைய வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய, நம்டைய அத்தனை திறமைகளையும் நாம் பயன்படுத்த வேண்டும். ஒரு மனிதனுக்குப் பின்னால் நிற்கும் மக்களின் எண்ணிக்கையை வைத்தும், அவர்கள் கொண்டிருக்கும் வளத்தை வைத்துமே அவன் ஆற்றலைப் பெறுகிறான். நாம் சிறுபான்மையினர், நம்மிடம் பொருள்வளம் இல்லை. நீக்கமற நிறைந்திருக்கும் சாதி இந்து போலிஸ்கள், நாம் முன்வைக்கும் உண்மையான குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால் இதற்கு மாறாக, குற்றம் சுமத்திய ஒரே காரணத்திற்காக நம்மை ஒடுக்குகிறார்கள். வறுமையில் உழலும் நம்மால், அரசு எந்திரத்தை நமக்குச் சாதகமாக செயல்பட வைக்க முடியவில்லை.

 

இருப்பினும், நம்மிடம் ஓர் அதிகாரம் இருக்கிறது. அதுதான் அரசியல் அதிகாரம். இதை நாம் வென்றெடுக்க வேண்டும். இந்த அதிகாரத்தின் உதவியுடன் நாம் நம் மக்களின் நலன்களைப் பாதுகாக்க முடியும். விடுதலை பெற்ற இந்தியாவில், நம்டைய அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்த முடியும் என்று எண்ணுகின்றீர்களா? நம்டைய நாடு விடுதலை பெறுவதை நாம் எப்போதும் எதிர்த்ததில்லை. ஆனால், ஒரே ஒரு கேள்விக்கான நேரடியான பதிலையே நாம் எதிர்பார்த்தோம். விடுதலை பெற்ற இந்தியாவில் நம்டைய நிலை என்ன? காந்தியிடம் நான் இக்கேள்வியைத்தான் முன்வைத்தேன்.

 

சுயராச்சியத்தில் என் மக்களின் நிலை என்னவாக இருக்கும்? நாங்கள் தற்பொழுது இருப்பது போல ‘பாங்கி’களாக, ‘சமார்’களாக நீடித்து இருப்போமா? இப்போது இருப்பது போலவே எங்களுடைய குழந்தைகள், பள்ளிகளில் நுழைய அனுமதி மறுக்கப்படுமா? கிராமங்களில் தற்பொழுது எங்கள் மக்கள் துன்புறுத்துதலுக்கு ஆளாவது தொடர்ந்து நடைபெறுமா? வட்டமேசை மாநாட்டிலும் நான் காந்தியாரிடம் இதே கேள்வியைத்தான் எழுப்பினேன்.

 

முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க ஒப்புக் கொண்டதைப் போல, எங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படுமா? ஆனால், பட்டியல் சாதியினருக்குத் தனிவாக்காளர் தொகுதி உரிமைகள் 1932 இல் அளிக்கப்பட்டபோது, இந்த உரிமைகளை திரும்பப் பெறும்வரை, காந்தி சாகும்வரை பட்டினிப் போராட்டத்தைத் தொடர்ந்தார். அந்த நேரத்தில் எங்களிடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், இன்று என்ன நடக்கிறதோ, அது ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட செயல்திட்டத்திற்கு நேர் எதிரானது. பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு எதிராக, காங்கிரஸ் சார்பில் எந்த வேட்பாளரும் நிறுத்தப்பட மாட்டார்கள் என்று அவர் அப்போது உறுதியளித்தார்.

 

நம்டைய மக்களை தனித்தொகுதி மூலம் அனுப்ப நாம் விரும்பும்போது, அதற்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போடுகிறது. சுயநலன்களுக்காக செயல்படும் மூடர்களையும், காங்கிரசுக்கு ‘ஆமாம் சாமி’ போடும் நபர்களையும் காங்கிரஸ் தனித்தொகுதியில் வேட்பாளர்களாக்க முயல்கிறது.

 

தற்பொழுது நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் சார்பில், 30 பட்டியல் சாதி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்த முப்பது பேரும் அங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? அங்கு அவர்கள் எந்தக் கேள்வியையும் கேட்பதில்லை; எந்தத் தீர்மானத்தையும் முன்மொழிவதில்லை; நாடாளுமன்றத்தின் முன்பு எந்தச் சட்டவரைவையும் முன்வைப்பதில்லை. எனவேதான், நாம் நம்டைய உண்மையான பிரதிநிதியை அனுப்ப விரும்புகிறோம். அவர்கள்தான் சட்டப் பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் நம்டைய கோரிக்கைகளை முன்வைத்து, அதைத் தீர்க்க முயல்வார்கள்.

 

(27.10.1951 அன்று, ஜலந்தரில் ஆற்றிய உரை)

நன்றி:தலித்முரசு

 




ஆட்சி செய்யும் வகுப்பாரின் மனப்பாங்கு என்ன? அதனுடைய மரபு என்ன? அதனுடைய சமுதாயச் சிந்தனை என்ன?

பார்ப்பனர்களை முதலில் எடுத்துக்கொள்ளுங்கள், சரித்திர அடிப்படையில் பார்த்தால் அவர்கள் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் (சூத்திரர்கள்,தீண்டப்படாதவர்கள்) ஜென்ம விரோதிகளாக இருந்து வருபவர்கள். இந்து சமுதாய மக்கள் தொகையில் இந்த இருவரும் 80 சதவிகிதத்தில் உள்ளனர் . இன்று இந்தியாவிலேயே, அடிமைப் படுத்தப்பட்ட வகுப்பைச்சார்ந்த சாதாரண மனிதன் ஒருவன் இவ்வளவு தாழ்த்தப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கை யோ, அபிலாஷையோ இல்லாது. இருப்பதற்கு முழுமையான காரணம், பார்ப்பனர்களும் அவர்களுடைய சித்தாந்தமுமேயாகும்.

பார்ப்பனியத்தின் தலையாய கொள்கைகள் அய்ந்து

(1) பலதரப்பட்ட வகுப்புகளுக்குள்ளே படிப்படியான சமத்துவமில்லாத உயர்வு தாழ்வு நிலைகள்

(2) சூத்திரர்கள் , தீண்டத்தகாதார்களுடைய மோசமான வலிவற்ற தன்மை

(3) சூத்திரர்களும், தீண்டத்தகாதவர்களும் என்றைக்கும் படிக்கக் கூடாது என்று தடை

(4) சூத்திரர்களும் , தீண்டப் படாதவர்களும் உயர்நிலையோ , ஆற்றலோ பெறுவதற்குத் தடை

(5) சூத்திரர்களும் தீண்டப்படாதவர்களும் பொரும் சேர்ப்பதற்குத் தடை பெண்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்துவது .


பார்ப்பனியத்தின் அங்கீகரிக்கப் பட்ட சித்தாந்தம் உயர்வு-தாழ்வு நிலை, கீழ்த் தளத்தில் உள்ள வகுப்புகள் சமத்துவத் தன்மை அடைய விரும்புவதை ஈவு இரக்கமின்றி அழித்து வைப்பதே பார்ப்பனியத்தின் இன்றியமையாத கடமையாகும். ஒரு சிலர் மட்டும் படித்துள்ள நாடுகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் மட்டும் படித்த வகுப்பார் அதாவது பார்ப்பனர் கள் கல்வியைத் தங்களது ஏக போகமாக்கியுள்ளார்கள் . அது மட்டும் அல்லாது அடித்தளத்தில் உள்ள வகுப்புகள் கல்வியறிவு பெறுவது ஒரு பெரிய குற்றமாக வைத்துள்ளார்கள். அந்தக் குற்றத்திற்குத் தண்டனை நாக்கை வெட்டுவது அல்லது காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது. மக்களை நிர்க்கதியாக்கிப் பிரிட்டிஷார் இந்தியாவை ஆளுகிறார்கள் என்ற காங்கிரஸ் அரசியல்வாதிகள் புகார் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றை மட்டும் மறந்து விடுகிறார்கள். சூத்திரர் களையும் , தீண்டத்தகாதவர்களையும் பராரிகளாக கதியற்றவர்களாக இருக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் பிரகடனப்படுத்தப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் ஆண்ட ஒரு ஆட்சியை மறந்து விடுகிறார்கள். உண்மையிலேயே சூத்திரர்களும், தீண்டப்படாத வர்களும் வலிமையற்ற நிலையில் இருக்கவேண்டும் என்பதில் பார்ப்பனர்கள் மிகவும் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஏனென்றால் தாங்கள் வலிமையுற்றவர்களாக ஆக வேண்டும் என்றும், தாங்கள் அனுபவிக்கும் சலுகைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் எண்ணிச் சட்டத்தை மாற்றும் பொழுது ஒன்றை மாத்திரம் அவர்கள் மாற்றாது விட்டு விட்டார்கள் . எதை அவர்கள் நிலை குலையாமல் காப்பாற்றினார்கள்? சூத்திரர்கள் , தீண்டப்பாடதவர்களாக, வலிமை யற்றவர்களாகவே இருக்க வேண்டும் என்ற தடையை அவர்கள் நீக்காமல் விட்டு விட்டார்கள். இன்றைக்கு இந்தியாவிலேயே பெரும்பான்மை மக்கள் முற்றிலும் கோழையாக, உணர்ச்சியற்றும் , ஆண்மையற்றும் இருப்பதற்குக் காரணம் என்ன? அவர்கள் வலிமையற்று இருக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் நீண்ட நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வந்த தந்திரக் கொம்கையின் பலனேயாகும்.


பார்ப்பனர்கள் ஆதரவு பெறாத சமுதாயக் கெடுதியோ அல்லது சமுதாயக் குற்றமோ இல்லை. ஒரு மனிதனைக் கண்டால் அவனிடத்தில் மனிதத் தன்மையே காட்டக்கூடாது என்பதுதான் பார்ப்பனர்களின் மதம். அதாவது சாதி உணர்ச்சியுடன் பார்க்கக் கூடாது என்பது பார்ப்பனர்களின் மதமாகும். மனிதன் செய்யக்கூடிய தவறுகள் தான் அவனுக்கு மதமாகிறது என்று ஊகிப்பது தவறான அடிப் படையில் அமைந்த எண்ணமாகும். ஏனென்றால் உலகத்தில் எந்த பாகத்திலாவது பெண்கள் மோசமாகக் கொடுமைப்படுத்தப்பட்டு அதனால் அவதியுறுகிறார்கள் என்றால் அந்தக் கொடுமைகளுக்குப் பார்ப்பான் தன்னுடைய ஆதரவைத் தந்திருக்கிறான். விதவைகள் `உடன்கட்டை ஏறுதல்' என்ற பழக்கத்தினால் உயிருடன் கொளுத்தப் பட்டார்கள். `உடன்கட்டை ஏறுதல்' என்ற தீய பழக்கத்திற்குப் பிராமணர்கள் தங்களுடைய முழு ஆதரவையும் தந்திருக்கிறார்கள். விதவைகள் மறுமணம் செய்து கொள்ள அனுமதிக் கப்படவில்லை . இந்தக் கோட்பாட்டிற்கும் பார்ப்பான் தன்னுடைய முழு ஆதரவைத் தந்திருக்கிறான். பெண் 8 வயது அடைவதற்கு முன்னேயே திருமணம் செய்து கொடுத்தாக வேண்டும். கணவன் அந்தப் பெண்ணுடன் அதற்குப் பிறகு பாலுறவு செய்கின்ற உரிமையே பெற்றுள்ளான். அந்தப் பெண் பருவ பக்குவம் அடைந்தாளா இல்லையா என்பது பற்றிப் பொருட்படுத்தவில்லை. அந்தக் கோட்பாட்டுக்கும் பார்ப்பான் தன்னுடைய முழு ஆதரவையும் தந்திருக்கிறான். பார்ப்பனர்கள் , சூத்திரர்களுக்கும், தீண்டப்படாதவர்களுக்கும் சட்டம் இயற்றும் கர்த்தாக்களாக இருந்திருக்கிறார்கள். இப்படி அவர்கள் சட்டம் இயற்றிய தன்மையையும், உலகத்தில் மற்றப் பாகங்களில் உள்ள படித்த வகுப்பைச் சேர்ந்த மக்கள் சட்டம் இயற்றிய தன்மையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பார்ப்பனர்களுடைய தன்மை மிகமிகக் கொடியதாகும். ஒரு படித்த வகுப்பார், தம்முடைய அறிவுத் திறனை, தம்முடைய நாட்டில் உள்ள கல்வி அறிவு இல்லாத மக்களை எப்பொழுதுமே அறியாமையிலும், வறுமையிலும்,ஆழ்த்தி வைக்க வேண்டும் என்ற கோட்பாடு அமைந்த தத்துவத்தைக் கண்டுபிடிக்கும் முறையில் அறிவை இழிசெயலுக்குப் பயன்படுத்தவில்லை. யாரைப்போல? இந்தியாவில்உள்ள பார்ப்பனர்கள் செய்தது போல் .

தம்முடைய மூதாதைகள் உருவாக்கிய இந்தப் பார்ப்பனீயத் தத்துவத்தை இன்று ஒவ்வொரு பார்ப்பனனும் நம்புகிறான். இந்தச் சமுதாயத்திலேயே அவன் ஒரு அந்நியனாக இருக்கிறான். பார்ப்பானை ஒரு பக்கம் நிறுத்தி மற்றொரு பக்கம் சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று கருதுபவர்களையும் நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த இரண்டு பிரிவினரும் அயல் நாட்டினரைப்போல் தான் தோன்றும். ஒரு ஜெர்மானியனுக்கு ஒரு பிரஞ்சுக்காரன் எப்படி அன்னியனோ ஒரு யூதனுக்கு யூதன் அல்லாதவன் எப்படி அன்னியனோ, ஒரு வெள்ளைக் காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அன்னியனோ அதுபோலவே பார்ப்பான் சூத்திரர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் அன்னியனாவான்.

தாழ்ந்த வகுப்பில் சூத்திர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும், பார்ப்பனர்களுக்குமிடையே உண்மையிலேயே ஒரு பெருத்த பிளவு இருக்கத்தான் செய்கிறது. பார்ப்பான், சூத்திரர்களுக்கும் தீண்டப் படாதவர்களுக்கும் அன்னியனாக மட்டும் இல்லை. அவர்களுக்கு விரோதியாகவும் இருக்கிறான். இவர்களுடைய தொடர்பை நினைக்கும் பொழுது மனச்சாட்சிக்கோ, நியாயத்திற்குகோ சிறிதும் இடமில்லை.

----------------டாக்டர் அம்பேத்கர் அவர்களால் எழுதப்பட்ட "காந்தியும், காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்ததென்ன?" என்ற நூலிலிருந்து - பக்கம் 215-216) (நூல்: "பெரியாரும் அம்பேத்கரும்" பக்கம் -12-15)

http://thamizhoviya.blogspot.com/2008/09/blog-post_7943.html

1895ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதியன்று பிரெடெரிக் எங்கெல்ஸ் லண்டன் மாநகரில் காலமானார். (1883ஆம் ஆண்டில் மறைந்த) அவருடைய நண்பர் கார்ல் மார்க்சுக்கு அடுத்தபடி நாகரிக உலகெங்கும் நவீன கால பாட்டாளி வர்க்கத்தின் தலைசிறந்த அறிஞராகவும் ஆசானாகவும் விளங்கியவர் எங்கெல்ஸ் ஆவார். கார்ல் மார்க்சையும் பிரெடெரிக் எங்கெல்சையும் சமூகவிதி ஒன்று சேர்த்து வைத்த காலத்திலிருந்து அவ்விரு நண்பர்களும் தமது வாழ்வை இருவருக்கும் பொதுவான இலட்சியத்துக்குப் பணித்துக் கொண்டனர்.

 

ஆகவே, பாட்டாளி வர்க்கத்திற்கு பிரெடெரிக் எங்கெல்ஸ் ஆற்றிய பணியைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் தற்காலத்தியத் தொழிலாளர் இயக்கத்தின் வளர்ச்சியில் மார்க்சின் போதனையும் பணியும் வகிக்கும் முக்கியத்துவத்தைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். தொழிலாளி வர்க்கமும் அதன் கோரிக்கைகளும் இன்றையப் பொருளாதார அமைப்பு முறையிலிருந்து விளைந்த அவசியமான விளைவே என்றும், இப்பொருளாதார அமைப்புமுறையும் முதலாளி வர்க்கமும் சேர்ந்து தவிர்க்க முடியாத வகையிலே பாட்டாளி வர்க்கத்தைப் படைத்து, அதனை அமைப்பு ரீதியில் அணிதிரட்டுகின்றன என்றும் முதன்முதலாக எடுத்துக் காட்டியவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருமே. இன்று மனிதகுலத்தை ஒடுக்கி வதைத்து வரும் தீமைகளிலிருந்து அதை விடுவிக்க வல்லது அமைப்பு ரீதியில் அணிதிரண்டு நிற்கும் பாட்டாளி மக்களின் வர்க்கப் போராட்டமே தவிர உயர்ந்த சிந்தனை படைத்த தனிநபர்கள் சிலரின் நல்லெண்ணமிக்க முயற்சிகள் அல்ல என்று அவ்விருவரும் எடுத்துக்காட்டினார்கள். சோசலிசம் என்பது ஏதோ கனவு காண்பவர்கள் உருவாக்கிய ஒரு கற்பனைப் பொருள் அல்ல; நவீன சமுதாயத்தில் உற்பத்திச் சக்திகளுடைய வளர்ச்சியின் கடைசிக் குறிக்கோளும், தவிர்க்க முடியாத விளைவும் ஆகும் அது என்று தங்கள் விஞ்ஞானபூர்வமான நூல்களிலே முதன்முதலாக விளக்கியவர்கள் மார்க்சும் எங்கெல்சும். இதுவரை ஏட்டிலேறியுள்ள வரலாறெல்லாம் வர்க்கப் போராட்டத்தின் வரலாறுதான், ஒன்றன் பின்னொன்றாய்த் தொடர்ந்து சில சமுதாய வர்க்கங்கள் மற்ற வர்க்கங்களின் மீது வெற்றி கொண்டு ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளதின் வரலாறுதான். வர்க்கப் போராட்டத்துக்கும், வர்க்கரீதியான ஆதிக்கத்துக்கும் அடைப்படைகளாயுள்ள தனிச்சொத்தும், அராஜகமான சமுதாய உற்பத்தியும் மறைந்தொழிகிற வரையில் இது நீடித்தே தீரும். இந்த அடிப்படைகளை அழித்துவிட வேண்டும் என்று பாட்டாளி வர்க்கத்தின் நலன்கள் கோருகின்றன. எனவே, ஒரே அணியில் திரண்ட தொழிலாளிகளின் உணர்வுபூர்வமான வர்க்கப் போராட்டம் இவ்வடிப்படைகளுக்கு எதிராகச் செலுத்தப்பட வேண்டும். மேலும், ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் அரசியல் போராட்டமேயாகும்.


இவை மார்க்ஸ், எங்கெல்சின் கருத்துக்களாகும். பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காகப் போராடும் பாட்டாளிகள் அனைவரும் இந்தக் கருத்துக்களை ஏற்றுத் தங்களதாக்கிக் கொண்டுள்ளனர். ஆனால், 184050ஆம் ஆண்டுகளில், இவ்விரு நண்பர்களும் அந்தக் காலத்திய சோசலிச இலக்கியத்திலும் சமுதாய இயக்கங்களிலும் பங்கு கொண்ட பொழுது இப்படிப்பட்ட கருத்துக்கள் முற்றிலும் புதியனவாயிருந்தன. அந்தக் காலத்தில் திறனுள்ளவர்களாயும் திறனற்றவர்களாயும், நேர்மையுள்ளவர்களாயும் நேர்மையற்றவர்களாயும் இருந்த பல பேர் அரசியல் விடுதலைப் போராட்டத்தில், சக்கரவர்த்திகளின், போலீசின், பாதிரிமார்களின் எதேச்சதிகாரத்தை எதிர்க்கும் போராட்டத்தில் முழுக்க ஈடுபட்டிருந்த போதிலும் முதலாளி வர்க்கத்தின் நலன்களுக்கும் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கும் இடையேயுள்ள விரோத நிலையைப் பார்க்கத் தவறினார்கள். சுதந்திரமான சமுதாய சக்தியாகத் தொழிலாளர்கள் செயல் புரிவதென்ற கருத்துக்கு அவர்கள் இடங்கொடுக்க மறுத்தார்கள். மற்றொரு பக்கத்தில் கனவு காண்போர் பலர் இருந்தார்கள்; அவர்களில் சிலர் மேதைகளும்கூட; நவீன சமுதாய அமைப்பு முறை அநியாயமானது என்று ஆட்சியாளர்களுக்கும் ஆட்சி செலுத்தும் வர்க்கங்களுக்கும் புரிய வைப்பது ஒன்றுதான் வேலை, அதைச் செய்துவிட்டால் பிறகு இந்த மண்ணுலகில் சமாதானத்தையும் பொதுவான நல்வாழ்வையும் நிறுவுவது சுலபம் என்று அவர்கள் எண்ணினார்கள். போராட்டமில்லாமலே சோசலிசம் வரும் என்று அவர்கள் கனவு கண்டார்கள். கடைசியாக ஒன்று, அந்தக் காலத்தைச் சேர்ந்த அநேகமாக எல்லா சோசலிஸ்டுகளும், தொழிலாளி வர்க்கத்தின் நண்பர்களும், பாட்டாளி வர்க்கம் ஒரு புண் என்றே பொதுவாகக் கருதினர்; இயந்திரத் தொழிலின் வளர்ச்சிக்கு ஏற்ப இந்தப் புண்ணும் வளர்ந்து கொண்டே போவதை அவர்கள் பீதியுடன் கவனித்தார்கள்.


ஆகவே, இயந்திரத் தொழிலின் வளர்ச்சியையும் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சியையும் எப்படித் தடுத்து நிறுத்துவது, "சரித்திரத்தின் சக்கரத்தை'' எப்படித் தடுத்து நிறுத்துவது என்பதிலேயே அவர்கள் அனைவரின் கவனமும் சென்றது. பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சியைப் பற்றிப் பொதுவாக நிலவிய பீதிக்கு ஆளாவதற்குப் பதிலாக மார்க்சும் எங்கெல்சும் பாட்டாளி வர்க்கத்தின் இடைவிடாத வளர்ச்சியின்மீதே தங்கள் சகல நம்பிக்கைகளையும் வைத்தார்கள். பாட்டாளிகளின் எண்ணிக்கை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு புரட்சிகரமான வர்க்கம் என்ற வகையிலே அவர்களின் வலிமை அதிகமாகும், அவ்வளவுக்கவ்வளவு சோசலிசம் அருகே நெருங்கி சாத்தியமாகும். தொழிலாளி வர்க்கத்துக்கு மார்க்சும் எங்கெல்சும் ஆற்றிய பணியைப் பற்றி ஒரு சில சொற்களிலே பின்வருமாறு சொல்லி விடலாம்; தொழிலாளி வர்க்கம் தன்னைத்தானே அறிந்து கொள்ளுமாறு, தன்னைப் பற்றிய உணர்வு கொள்ளுமாறு அவர்கள் போதித்தார்கள்; மேலும், கனவுகள் இருந்த இடத்தில் விஞ்ஞானத்தை நிலைநாட்டினார்கள்.


ஆகவேதான் எங்கெல்சின் பெயரும் வாழ்க்கையும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தெரிந்திருக்க வேண்டும். நமது எல்லாப் பிரசுரங்களையும் போலவே இந்தக் கட்டுரைத் தொகுப்பின் நோக்கமும் ரசியத் தொழிலாளர்களிடையே வர்க்க உணர்வைத் தூண்டுவதேயாகும். அதனால்தான் இக்கட்டுரைத் தொகுப்பில் நவீன காலப் பாட்டாளி வர்க்கத்தின் மகத்தான இரு ஆசான்களில் ஒருவராகிய பிரெடெரிக் எங்கெல்சின் வாழ்க்கையையும் பணியையும் நாம் சித்தரித்துக் காட்ட வேண்டும்.


எங்கெல்ஸ் பிரஷ்ய முடியரசில் ரைன் மாகாணத்தைச் சேர்ந்த பார்மென் என்ற ஊரில் 1820ஆம் ஆண்டில் பிறந்தார். அவருடைய தந்தை ஓர் ஆலைச் சொந்தக்காரர். உயர்நிலைப் பள்ளியில் தமது கல்வியை முடிக்காமலே குடும்ப நிலைமைகளின் நிர்ப்பந்தம் காரணமாக 1838இல் எங்கெல்ஸ் பிரெமனில் ஒரு வர்த்தக நிலையத்தில் எழுத்தராகச் சேர்ந்தார். வர்த்தக விவகாரங்கள் விஞ்ஞானஅரசியல் கல்வியைப் பயில்வதினின்று எங்கெல்சைத் தடுத்துவிடவில்லை. உயர்நிலைப் பள்ளியில் இருந்த காலத்திலேயே எதேச்சதிகாரத்தையும் அதிகார வர்க்கத்தினரின் தான்தோன்றித் தனத்தையும் எங்கெல்ஸ் வெறுக்கலானார். தத்துவ ஞானப் பயற்சி அவரை மேலும் முன்னுக்குக் கொண்டு சென்றது. அக்காலத்தில் ஜெர்மன் தத்துவ ஞானத்தில் ஹெகலின் போதனை ஆதிக்கம் வகித்தது. எங்கெல்ஸ் ஹெகலைப் பின்பற்றிச் சென்றார். பிரெஷ்ய அரசின் சேவகத்தில் பெர்லின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த ஹெகல் எதேச்சதிகாரத்தனமான பிரஷ்ய அரசை நடப்பில் மெச்சிக் கொண்டாடி வந்தபோதிலும் ஹெகலின் போதனை புரட்சிகரமானது. மனித அறிவின் மீதும் மனித உரிமைகள் மீதும் ஹெகல் நம்பிக்கை கொண்டிருந்தார். பிரபஞ்சம் இடையறாத மாறுதலுக்கும் வளர்ச்சிக்கும் உட்பட்டது என்பது ஹெகலியத் தத்துவஞானத்தின் அடிப்படையான ஆய்வுரையாகும்.


இந்த பெர்லின் தத்துவஞானியின் சீடர்களிலே, நடப்புநிலைமையை ஏற்க மறுத்தவர்கள் இருந்தார்கள். நடப்பு நிலைமையை எதிர்த்துப் போராட வேண்டும். நடப்பிலிருந்த அநீதியையும் மேலோங்கியிருந்த தீமையையும் எதிர்த்துப் போராட வேண்டும், என்பதும் முடிவின்றி நிரந்தரமாய் வளர்ந்து செல்வதென்ற அனைத்துப் பிரபஞ்சத்துக்கும் பொதுவான விதியிலே வேர் கொண்டுள்ளது என்ற கருத்தை ஹெகலின் மேற்கூறிய நம்பிக்கையும் ஹெகலியத் தத்துவஞானத்தின் மேற்கூறிய அடிப்படை ஆய்வுரையும் இச்சீடர்களின் மனத்திலே உருவாகச் செய்தன. எல்லாமே வளர்ச்சியுறுகின்றன என்றால், சில அமைப்புகள் மறைந்து அவையிருந்த இடத்தில் வேறு அமைப்புகள் தோன்றுகின்றன என்றால் பிரஷ்ய மன்னனின் எதேச்சதிகாரமோ, ரசிய ஜார் மன்னனின் எதேச்சதிகாரமோ, மிகப் பெரும்பான்மையோராயுள்ளவர்களைச் சுரண்டி அற்பசொற்பமான ஒரு சிறுபான்மைக் கூட்டத்தார் செல்வர்களாவதோ, மக்களின் மீது முதலாளித்துவ வர்க்கம் ஆதிக்கம் வகிப்பதோ ஏன் நிரந்தரமாக நீடிக்க வேண்டும்? ஹெகலுடைய தத்துவஞானம் ஆன்மாவின் வளர்ச்சியைப்பற்றி, கருத்துக்களின் வளர்ச்சியைப் பற்றிப் பேசிற்று. இந்தத் தத்துவஞானம் கருத்து முதல்வாதரீதியானது. ஆன்மாவின் வளர்ச்சியிலிருந்து அது இயற்கையின் வளர்ச்சியையும், மனிதனின் வளர்ச்சியையும், மனித, சமுதாய உறவுகளின் வளர்ச்சியையும் அனுமானித்தது. மார்க்சும், எங்கெல்சும் வளர்ச்சியின் நிரந்தரமான இயக்கப் போக்கு பற்றிய ஹெகலின் கருத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு2 முன் சிந்தனைப்படி அமைந்த கருத்துமுதல்வாதரீதியான கருத்தை நிராகரித்து ஒதுக்கி விட்டார்கள். வாழ்வின் உண்மைகளை ஆராய்ந்து, இயற்கையின் வளர்ச்சியை விளக்குவது மனத்தின் வளர்ச்சியல்ல என்றும், அதற்கு மாறாக மனத்தைப் பற்றிய விளக்கமே இயற்கையிலிருந்துதான், பருப்பொருளிலிருந்துதான் பெறப்பட வேண்டும் என்றும் அவர்கள் கண்டார்கள்... ஹெகலையும், ஹெகலைப் பின்பற்றும் மற்றவர்களையும் போலல்லாமல், மார்க்சும், எங்கெல்சும் பொருள் முதல்வாதிகள். உலகத்தையும் மனிதகுலத்தையும் அவர்கள் பொருள்முதல்வாத ரீதியிலே பார்த்து இயற்கையின் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அடிப்படையாகப் பொருளாயதக் காரணங்கள் எப்படி அமைந்துள்ளனவோ, அதேபோல் மனித சமுதாயத்தின் வளர்ச்சியும் பொருளாயத வகைப்பட்ட உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியினால் வரையறுக்கப்படுகிறது என்று அறிந்து கொண்டனர்.


மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குரிய பொருட்களை உற்பத்தி செய்வதிலே மனிதர்கள் ஒருவருக்கொருவர் ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைப் பொறுத்திருக்கின்றன. சமுதாய வாழ்வின் சகல தோற்றங்களுக்கும், மனித விருப்பங்களுக்கும், கருத்துக்களுக்கும், சட்டங்களுக்கும் உரிய விளக்கம் இந்த உறவுகளிலேதான் பொதிந்திருக்கிறது. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியானது தனிச் சொத்தின் அடிப்படையில் அமைந்த சமுதாய உறவுகளைப் படைக்கின்றது. ஆனால், உற்பத்திச் சக்திகளின் அதே வளர்ச்சி பெரும்பான்மையானவர்களின் சொத்தைப் பறித்து அற்பசொற்பமான சிறுபான்மையோரிடம் அதைச் சேர்த்துக் குவித்து வைக்கிறதை நாம் இன்று காண்கிறோம்.


நவீனகாலத்திய சமுதாய அமைப்பு முறைக்கு அஸ்திவாரமாக உள்ள சொத்து என்பதை அது அழிக்கிறது; சோசலிஸ்டுகள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட அதே லட்சியத்தை நோக்கி அதுவும் தானாகச் செல்ல முயற்சிக்கிறது. சோசலிஸ்டுகள் செய்ய வேண்டியிருப்பதெல்லாம் சமுதாயச் சக்திகளில் எது நவீன சமுதாயத்தில் தான் வகிக்கும் இடத்தின் காரணமாக, சோசலிசத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் அக்கறை கொண்டிருக்கின்றது என்பதை அறிந்து கொண்டு அந்தச் சக்திக்கு அதன் நலன்களைப் பற்றிய உணர்வையும், அதன் வரலாற்றுப்பூர்வமான கடமையைப் பற்றிய உணர்வையும் ஊட்டுவதேயாகும். இந்தச் சக்திதான் பாட்டாளி வர்க்கம். அதை இங்கிலாந்தில், பிரிட்டிஷ் இயந்திரத் தொழிலுக்குக கேந்திரமாயிருந்த மான்செஸ்டரில், எங்கெல்ஸ் அறியலானார். மான்செஸ்டரில் அவர் 1842ஆம் ஆண்டில் குடியேறி, தமது தந்தை பங்குதாரராகச் சேர்ந்திருந்த வர்த்தக நிலையத்தில் வேலையில் அமர்ந்தார். அங்கே வெறுமனே பாக்டரி அலுவலகத்தில் எங்கெல்ஸ் உட்கார்ந்து விடவில்லை. தொழிலளர்கள் அடைந்து கிடந்த ஆபாசமான சேரிகளில் சுற்றி அலைந்தார். அவர்களின் வறுமையையும், துன்ப துயரங்களையும் கண்கூடாகக் கண்டார். ஆனால் சுயமாகக் கண்டறிவதோடு அவர் நின்று விடவில்லை. பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை பற்றித் தமக்கு முன்பே வெளியாகியிருந்த விசயங்களையெல்லாம் அவர் படித்தார்; கைக்கு அகப்பட்ட அதிகாரபூர்வமான எல்லா ஆவணங்களையும் அவர் கவனமாகப் பரிசீலித்துப் படித்தார். இப்படிப் பார்த்தறிந்தவற்றின், படித்தறிந்தவற்றின் பலனாக விளைந்ததுதான் 1845ஆம் ஆண்டில் வெளியான "இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை'' என்ற நூல் ஆகும். "இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை'' என்னும் நூலின் ஆசிரியர் என்ற முறையில் எங்கெல்ஸ் ஆற்றிய முக்கியமான பணியைப் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம்.


எங்கெல்ஸ்க்கு முன்பே மிகப் பலர் பாட்டாளி வர்க்கத்தின் துன்ப துயரங்களை வர்ணித்து, அதற்கு உதவி புரிய வேண்டியதின் அவசியத்தை எடுத்துச் சொல்லியுள்ளனர். பாட்டாளி வர்க்கம் துன்பதுயரங்களை அனுபவிக்கும் வர்க்கம் மட்டுமல்ல, உண்மையிலே பாட்டாளி வர்க்கத்தின் வெட்கக்கேடான பொருளாதார நிலைமை தடுக்க முடியாத வகையில் அதை முன்தள்ளிச் செல்கிறது, தனது இறுதி விடுதலைக்காகப் போராடும்படி நிர்ப்பந்திக்கிறது என்று எங்கெல்சுதான் முதன்முதலாகச் சொன்னவர். மேலும், போராடும் பாட்டாளி வர்க்கம் தன் கையையே தனக்குதவியாகக் கொள்ளும். தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் இயக்கம் தங்களது விடுதலை சோசலிசத்தில் மட்டுமே உள்ளது என்று தொழிலாளர்கள் அறியும் நிலைக்குத் தவிர்க்க முடியாதபடி கொண்டு போய்விடும். மறுபக்கத்தில், தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் போராட்டத்தின் இலட்சியமாக ஆகும்போதுதான், சோசலிசம் ஒரு சக்தியாக ஆகும். இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை பற்றிய எங்கெல்ஸ் நூலிலுள்ள பிரதான கருத்துக்கள் இவைதான். சிந்தனையுள்ள, போராடிக் கொண்டிருக்கிற பாட்டாளிகள் எல்லோரும் இந்தக் கருத்துக்களை இப்போது ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தக் காலத்தில் அவை முழுக்க முழுக்கப் புதியனவாயிருந்தன. சிந்தனையைக் கவரும் நடையில் எழுதப்பட்ட இந்நூலில் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. பிரிட்டிஷ் பாட்டாளி வர்க்கத்தின் துன்பதுயரங்களைப் பற்றிய முற்றிலும் உண்மையான, அதிர்ச்சியுண்டாக்கத்தக்க சித்திரங்கள் இந்நூலிலே நிறைந்துள்ளன. இந்த நூல் முதலாளித்துவத்தின்மீதும் முதலாளி வர்க்கத்தினர் மீதும் மிகப் பயங்கரமான குற்றச்சாட்டாக விளங்கியது. மக்களின் மனத்தில் அது பசுமரத்தாணி போல் பதிந்தது. எங்கெல்சின் நூல் நவீனகாலப் பாட்டாளி வர்க்கத்தின் நிலைமையைப் பற்றிய மிகச் சிறந்த சித்திரத்தை வழங்குகிறது என்று இதிலிருந்து எங்கும் மேற்கோள் காட்டத் தொடங்கினார்கள். உண்மையிலே பார்த்தால், 1845ஆம் ஆண்டுக்கு முன்னரும் சரி, பின்னரும் சரி, தொழிலாளி வர்க்கத்தின் துன்ப துயரங்களைப் பற்றி இவ்வளவு வியக்கத்தக்க உண்மையான சித்திரம் வெளிவந்தது கிடையாது.


இங்கிலாந்துக்கு வந்த பிறகுதான் எங்கெல்ஸ் சோசலிஸ்ட் ஆனார். அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கத்தில் தீவிரமாக வேலை செய்து வந்த நபர்களுடன் மான்செஸ்டரில் எங்கெல்ஸ் தொடர்பு கொண்டார்; பிரிட்டிஷ் சோசலிஸ்ட் பத்திரிகைகளில் எழுதத் துவங்கினார். 1844ஆம் ஆண்டில், ஜெர்மனிக்குத் திரும்பி வரும் வழியில், பாரிஸ் நகரில் அவர் மார்க்சைச் சந்தித்துப் பழகினார். மார்க்சுடன் ஏற்கெனவே அவர் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டிருந்தவர்தான். பாரிசில் பிரெஞ்சு சோசலிஸ்டுகளின், பிரெஞ்சு வாழ்க்கையின் செல்வாக்கின்கீழ் மார்க்சும் சோசலிஸ்ட் ஆகிவிட்டார். இங்கே அவ்விரு நண்பர்களும் சேர்ந்து "புனிதக் குடும்பம் அல்லது விமர்சன வகைப்பட்ட விமர்சனத்தின் விமர்சனம்'' என்று தலைப்பிட்ட ஒரு நூலை எழுதினார்கள். "இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை'' என்ற நூல் வெளியாவதற்கு ஒரு வருடத்துக்கு முன்பே இது வெளிவந்தது. இதன் பெரும் பகுதியை மார்க்ஸ்தான் எழுதினார். இந்நூலில் புரட்சிகரமான பொருள்முதல்வாத சோசலிசத்தின் அடிப்படைகள் அதன் பிரதான கருத்துக்களை மேலே விளக்கிச் சொல்லியிருக்கிறோம் அடங்கியுள்ளன. "புனிதக் குடும்பம்'' என்பது தத்துவஞானிகளான பௌவர் சகோதரர்களையும், அவர்களைப் பின்பற்றியோரையும் குறிக்கும் கேலிப் பெயராகும். எல்லா வகையான எதார்த்தத்திற்கும் அப்பாற்பட்ட, கட்சிகளுக்கும் அரசியலுக்கும் அப்பாற்பட்ட ஒரு விமர்சனத்தை இந்தக் கனவான்கள் பிரச்சாரம் செய்தார்கள். எல்லாவிதமான நடைமுறை நடவடிக்கைகளையும் அது நிராகரித்தது; நம்மைச் சூழ்ந்துள்ள உலகையும், அதில் நடந்து வரும் நிகழ்ச்சிகளையும் பற்றி அந்த விமர்சனம் வெறுமே "விமர்சனரீதியாக''ச் சிந்தனை செய்வதோடு நின்று விட்டது. இக்கனவான்கள் பௌவர் சகோதரர்கள் பாட்டாளி வர்க்கம் விமர்சனப் பார்வையற்ற கும்பல் என்று அதை இழிவுபடுத்தினார்கள். சுத்த அபத்தமான, தீங்கு விளைவிக்கக் கூடிய இந்தப் போக்கை மார்க்சும், எங்கெல்சும் தீவிரமாக எதிர்த்தார்கள். ஆளும் வர்க்கங்களாலும் அரசாலும் மிதித்து நசுக்கப்பட்டு வரும் தொழிலாளி என்ற அசல் மனிதத்தின் சார்பாக வீண் சிந்தனை அல்ல, மேம்பட்ட சமுதாய அமைப்பு முறைக்காகப் போராட்டம் நடத்த வேண்டும் என்று மார்க்சும், எங்கெல்சும் கோரினார்கள். இந்தப் போராட்டத்தை நடத்துவதில் அக்கறை கொண்டுள்ள சக்தியாக, இந்தப் போராட்டத்தை நடத்துவதற்குத் திறன் பெற்றுள்ள சக்தியாக, பாட்டாளி வர்க்கத்தை அவர்கள் கருதினார்கள் என்பதில் ஐயமில்லை. "புனிதக் குடும்பம்'' வெளிவருவதற்கு முன்பே, மார்க்சும், ரூகேயும் நடத்திய ஈஞுதtண்ஞிட ஊணூச்ணத்ணிண்டிண்ஞிடஞு ஒச்டணூஞதஞிடஞுணூ என்ற பத்திரிக்கையில், "அரசியல் பொருளாதாரம் சம்பந்தமான விமர்சனக் கட்டுரைகள்'' என்ற தொடரை எங்கெல்ஸ் வெளியிட்டார். அக்கட்டுரைகளில் தனிச்சொத்தின் ஆதிக்கத்தால் ஏற்பட்டுத் தீரும் விளைவுகள் என்ற முறையில், நவீன காலப் பொருளாதார அமைப்புமுறையின் பிரதானமான தோற்றங்களை சோசலிச நோக்குநிலையிலிருந்து பரிசீலித்தார். அரசியல் பொருளாதாரத்தைப் பயில்வதென்று மார்க்ஸ் முடிவு செய்ததற்கு அவர் எங்கெல்சுடன் தொடர்பு கொண்டிருந்தது ஒரு காரணம் என்பதில் சந்தேகமேயில்லை. அரசியல் பொருளாதாரம் என்ற விஞ்ஞானத் துறையில் மார்க்ஸ் அசல் புரட்சியையே உண்டாக்கி விட்டார்.


1845லிருந்து 1847 வரை எங்கெல்ஸ் பிரஸ்ஸெல்ஸிலும் பாரிசிலும் வாழ்ந்தார். விஞ்ஞானப் பயிற்சியோடு கூடவே பிரஸ்ஸெல்ஸ், பாரிஸ் நகரங்களிலுள்ள ஜெர்மன் தொழிலாளர்களிடையே நடைமுறை நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார். இங்கே இரகசியமாயிருந்த ஜெர்மன் "கம்யூனிஸ்ட் லீக்'' என்ற சங்கத்துடன் மார்க்சும், எங்கெல்சும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் வரையறுத்து விவரித்துள்ள சோசலிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கும்படி அந்தச் சங்கம் அவர்களைப் பணித்தது. இவ்வழியேதான் மார்க்சும் எங்கெல்சும் எழுதிய "கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை'' என்ற புகழ்பெற்ற நூல் 1848இல் வெளிவந்தது. இந்தச் சிறு பிரசுரம் மிகப் பெரிய நூல் தொகுதிகளுக்குச் சமமானது. அதன் உணர்ச்சி நாகரிக உலகில் அமைப்பு ரீதியாக அணி திரண்டு போராடி வரும் பாட்டாளி வர்க்கம் முழுவதையும் இன்றைக்கும்கூட ஊக்குவித்து இயக்கிச் செல்கிறது.


முதன்முதலாக பிரான்சில் தோன்றி, பின்னர் மற்ற மேலைய ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவிய 1848ஆம் ஆண்டுப் புரட்சி மார்கசையும், எங்கெல்சையும் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்பி வரச் செய்தது. இங்கே, ரெனிஷ் பிரஷ்யாவில், கொலோன் நகரிலிருந்து வெளிவந்த ஜனநாயகத் தன்மையுள்ள Nஞுதஞு கீடஞுடிணடிண்ஞிடஞு ஙூஞுடிtதணஞ் என்ற பத்திரிகையை அவர்கள் தங்கள் பொறுப்பில் எடுத்து நடத்தினார்கள். ரெனிஷ் பிரஷ்யாவில் எல்லாப் புரட்சிகர ஜனநாயக விருப்பங்களின் இதயமாக, ஆன்மாவாக இவ்விரு நண்பர்களும் விளங்கினர். மக்களின், சுதந்திரத்தின் நலன்களைப் பாதுகாத்து அவர்கள் பிற்போக்குச் சக்திகளைக் கடைசிவரை எதிர்த்துப் போராடினர். பிற்போக்குச் சக்திகளின் கை மேலோங்கியது என்பது நாமறிந்ததே. Nஞுதஞு கீடஞுடிணடிண்ஞிடஞு ஙூஞுடிtதணஞ் தடை செய்யப்பட்டது. நாடு கடத்தப்பட்ட காலத்தில் தமது பிரஷ்யக் குடியுரிமையை இழந்து விட்டிருந்த மார்க்ஸ் பிரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஆயுதந்தாங்கிய மக்கள் எழுச்சியில் எங்கெல்ஸ் பங்கு கொண்டார். சுதந்திரத்துக்காக மூன்று முனைகளில் சமர் புரிந்தார். எழுச்சியாளர்கள் தோல்வியுற்ற பிறகு சுவிட்சர்லாந்து வழியே லண்டனுக்கு வந்து சேர்ந்தார்.


மார்க்சும் அங்கேயே குடியமைத்துக் கொண்டார். எங்கெல்ஸ் மீண்டும் ஒரு எழுத்தர் ஆகிவிட்டார். கொஞ்ச காலம் கழித்து, தாம் 18401850 ஆம் ஆண்டுகளில் வேலை பார்த்த அதே மான்செஸ்டர் வர்த்தக நிலையத்திலேயே பங்குதாரராக ஆனார். 1870 வரை அவர் மான்செஸ்டரிலேயே வாழ்ந்து வர, மார்க்ஸ் லண்டனில் வாழ்ந்து வந்தார். இருந்த போதிலும் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் உற்சாகம் பொங்கும் அறிவுத் தொடர் ஏற்படுத்திக் கொள்வதை அது தடுக்கவில்லை. அநேகமாக தினந்தோறும் ஒருவருக்கொருவர் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கடிதப் போக்குவரத்து மூலம் இவ்விரு நண்பர்களும் தங்கள் அபிப்பிராயங்களையும் ஞானத்தையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டார்கள். விஞ்ஞானபூர்வமான சோசலிசத்தை வகுத்துக் கொடுப்பதில் இணைந்து பணிபுரிவதைத் தொடர்ந்தார்கள். 1870ஆம் ஆண்டில் எங்கெல்ஸ் லண்டனுக்கு வந்து அங்கேயே தங்கிவிட்டார். கடும் உழைப்பு நிறைந்த அவர்களுடைய பொதுவான அறிவுத்துறை வாழ்க்கை, மார்க்ஸ் காலமான 1883ஆம் ஆண்டு வரை நீடித்தது. இந்தப் பொது அறிவுத்துறை வாழ்க்கையின் பலன் மார்க்ஸ் பங்குக்கு "மூலதனம்'' என்ற நூலாகும். நமது யுகத்திலேயே அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய எல்லாவற்றிலும் சிறந்த நூல் இதுதான். எங்கெல்சைப் பொறுத்தமட்டில் அதன் பலன், பல பெரிய, சிறிய நூல்கள் எழுதியதுதான். முதலாளித்துவப் பொருளாதாரத்தின் சிக்கல் நிறைந்த தோற்றங்களைப் பற்றி பகுப்பாராய்ச்சியிலே மார்க்ஸ் ஈடுபட்டார். எங்கெல்ஸ் எளிய நடையில், அடிக்கடி தர்க்கவாதமிக்கதாய் எழுதிய நூல்களில் வரலாறு பற்றிய பொருள் முதல்வாதக் கருத்தோட்டத்தையும் மார்க்சின் பொருளாதாரத் தத்துவத்தையும் அனுசரித்த ரீதியிலே, மிகப் பொதுவான விஞ்ஞானப் பிரச்சினைகளையும், பல வகைப்பட்ட கடந்தகால, நிகழ்கால நிகழ்ச்சிகளையும் விளக்கினார். எங்கெல்சின் இந்நூல்களில் பின்வருவனவற்றைக் குறிப்பிடுவோம்: டூரிங்குக்கு மறுப்பாக எழுதிய விவாதகரமான நூல் (இந்நூலில் தத்துவஞானம், இயற்கை விஞ்ஞானம், சமுதாய விஞ்ஞானங்கள் ஆகிய துறைகள் சம்பந்தப்பட்ட மாபெரும் பிரச்சினைகள் ஆராயப்பட்டுள்ளன)3; "குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்'' என்ற நூல் (இது ரசிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் வெளியிடப்பட்டது. மொழிபெயர்ப்பின் மூன்றாம் பதிப்பு 1895இல் வெளி வந்தது); "லுத்விக் பாயர்பாக்'' என்ற நூல் (இதன் ரசிய மொழிபெயர்ப்பு கி.பிளெகானவ் குறிப்புகளுடன் ஜினீவாவில் 1892இல் வெளிவந்தது); ரசிய அரசின் வெளிநாட்டுக் கொள்கை பற்றிய ஒரு கட்டுரை (ஜினீவாவில் வெளிவந்த குணிtண்டிச்டூஈஞுட்ணிடுணூச்t4 என்ற பத்திரிகையின் 1,2 இதழ்களில் ரசிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது);


குடியிருப்புப் பிரச்சினையைப் பற்றிய சில குறிப்பிடத்தக்க கட்டுரைகள்; கடைசியாக, ரசியாவின் பொருளாதார வளர்ச்சியைப் பற்றி எழுதப்பட்ட இரண்டு சிறிய, ஆனால் மதிப்பு மிகுந்த கட்டுரைகள் ("ரசியாவைப் பற்றி பிரெடெரிக் எங்கெல்ஸ்'' என்ற நூல், ரசிய மொழியில் வேரா ஸஸூலிச் மொழிபெயர்த்தது, ஜினீவா, 1894). மூலதனத்தைப் பற்றிய தமது விரிவான வேலையை முடிக்கு முன்னர் மார்க்ஸ் காலமானார். இருந்தாலும், நகல் குறிப்புகள் வடிவத்தில் அது ஏற்கெனவே முழுவதுமாக முடிந்திருந்தது. தமது நண்பர் மறைந்த பிறகு "மூலதனத்''தின் இரண்டாவது, மூன்றாவது தொகுதிகளைத் தயாரித்து வெளியிடும் சிரமமிக்க வேலையை எங்கெல்ஸ் மேற்கொண்டார். அதன் இரண்டாம் தொகுதியை 1885ஆம் ஆண்டிலும் மூன்றாம் தொகுதியை 1894ஆம் ஆண்டிலும் அவர் வெளியிட்டார். (அவரது மரணம் நான்காம் தொகுதியைத் தயாரிப்பதைத் தடுத்துவிட்டது). இவ்விரு தொகுதிகள் விசயத்தில் எங்கெல்ஸ் அபாரமாக உழைக்க வேண்டியிருந்தது. "மூலதனத்''தின் இரண்டாவது, மூன்றாவது தொகுதிகளை வெளியிட்டதன் மூலம் எங்கெல்ஸ் தமது நண்பராகிய மேதைக்கு மாண்புமிக்க நினைவுச் சின்னம் நிறுவினார்; அந்த நினைவுச் சின்னத்தில் தம்மையறியாமலேயே தமது பெயரையும் அழியாத வகையில் பொறித்துவிட்டார் என்று ஆஸ்திரிய சோஷல் டெமாக்ராட் ஆட்லெர் குறிப்பிட்டது மிகவும் சரி. உண்மையிலே "மூலதனத்''தின் இவ்விரு தொகுதிகளும் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருடைய பணியேயாகும். மனத்தையுருக்கும் நட்பைக் குறித்துப் பல உதாரணங்கள் காட்டும் பழங்கதைகள் உண்டு. ஐரோப்பியப் பாட்டாளி வர்க்கம் தனது விஞ்ஞானத்தைப் படைத்தவர்கள் இரண்டு அறிஞர்கள் இரண்டு போராட்ட வீரர்கள் என்று, அவர்களிடையே நிலவிய உறவு முன்னோர்கள் மனித நட்பு பற்றி எழுதியுள்ள நெஞ்சையள்ளும் கதைகளையெல்லாம் மிஞ்சக் கூடியதாயிருந்தது என்று சொல்லிக் கொள்ளலாம். எங்கெல்ஸ் எப்பொழுதுமே மொத்தத்தில், நியாயமாகத்தான் மார்க்ஸ்க்கு முதன்மை கொடுத்தார். பழைய நண்பர் ஒருவருக்கு எழுதுகையில், "மார்க்ஸ் வாழ்ந்திருந்த காலத்தில் நான் அவருக்குப் பக்க வாத்தியம் வாசித்துக் கொண்டிருந்தவன்தான்'' என்று எங்கெல்ஸ் குறிப்பிட்டார். மார்க்ஸ் உயிரோடிருக்கும் போது அவர்மீது எங்கெல்ஸ் வைத்திருந்த பாசத்துக்கும், மறைந்த மார்க்சின் நினைவு பற்றி அவர் வைத்திருந்த தூய மதிப்புக்கும் எல்லையே கிடையாது. இந்தக் கடினசித்தமுள்ள போராட்ட வீரருக்கு, கட்டுப்பாடு மிகுந்த சிந்தனையாளருக்கு, ஆழ்ந்த அன்பு செலுத்தும் இதயம் இருந்தது.


18481849ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இயக்கத்துக்குப் பிறகு நாடு கடத்தப்பட்ட காலத்தில் மார்க்சும், எங்கெல்சும் விஞ்ஞானத்தைப் பயில்வதோடு நின்றுவிடவில்லை. 1864இல் மார்க்ஸ் "சர்வதேச தொழிலாளர் சங்கத்தை'' நிறுவினார். அதைப் பத்தாண்டு காலத்துக்கு அவர் தலைமை வகித்து நடத்தினார். அதன் விவகாரங்களில் எங்கெல்சும் தீவிரமாகப் பங்கு கொண்டார். மார்க்சின் கருத்துப்படி அந்தச் சர்வதேச சங்கம் எல்லா நாட்டுப் பாட்டாளிகளையும் ஒன்றுபடுத்தியது; தொழிலாளர் இயக்கத்தை வளர்த்ததில் அது ஆற்றிய பணி பிரம்மாண்டமான முக்கியத்துவம் கொண்டது. 187080ஆம் ஆண்டுகளில் அந்தச் சங்கம் மூடப்பட்ட பின்னரும்கூட மார்க்சும் எங்கெல்சும் ஆற்றிய, ஒற்றுமை ஏற்படுத்தும் பணி முடிந்துவிடவில்லை. மாறாக, தொழிலாளர் இயக்கத்தின் அறிவுத்துறைத் தலைவர்கள் என்ற வகையிலே அவர்களின் முக்கியத்துவம், இயக்கம் இடையறாது எந்த அளவுக்கு வளர்ந்ததோ, அந்த அளவுக்கு மேலும் மேலும் வளர்ந்தது. மார்க்ஸ் மறைந்த பிறகு எங்கெல்ஸ் தனியே நின்று ஐரோப்பிய சோசலிஸ்டுகளின் ஆலோசகராகவும் தலைவராகவும் விளங்கினார். ஜெர்மன் அரசின் அடக்குமுறையிருந்த போதிலும் வேகமாகவும் இடையறாதும் அதிக வலுவடைந்த ஜெர்மன் சோசலிஸ்டுகளும், அதேபோல தமது முதல் நடவடிக்கைகளைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து எடைபோட்டுத் தீரவேண்டியிருந்த ஸ்பெயின், ருமேனியா, ரசியா போன்ற பிற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் அவரது ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் நாடினர். வயது முதிர்ந்த எங்கெல்சின் வளமான அறிவு, அனுபவக் களஞ்சியத்தை அவர்கள் எல்லோரும் பயன்படுத்தினர்.


மார்க்சு, எங்கெல்ஸ் இருவருக்கும் ரசிய மொழி தெரியும்; ரசிய நூல்களைப் படித்தார்கள். இருவருமே ரசியா விசயத்தில் உற்சாகத்துடன் அக்கறை காட்டி வந்தார்கள். ரசியப் புரட்சி இயக்கத்தை அனுதாபத்துடன் கவனித்து வந்தார்கள். ரசியப் புரட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள். சோசலிஸ்டுகளாக ஆவதற்குமுன் அவ்விருவரும் ஜனநாயகவாதிகளாக இருந்தவர்கள். எனவே, அரசியல் கொடுங்கோன்மையின் மீது வெறுப்பு கொள்ளும் ஜனநாயக உணர்ச்சி அவ்விருவரிடமும் மிகவும் பலமாக இருந்தது. இந்த நேரடியான அரசியல் உணர்ச்சியும் அரசியல் கொடுங்கோன்மைக்கும் பொருளாதார ஒடுக்குமுறைக்குமிடையேயுள்ள தொடர்பு பற்றிய ஆழ்ந்த தத்துவரீதியான அறிவும், அதோடு வாழ்க்கையில் அவர்கள் பெற்றிருந்த வளமிக்க அனுபவமும் சேர்ந்து மார்க்சையும் எங்கெல்சையும் குறிப்பாக அரசியல் வழியில் அசாதாரண நுண்ணுணர்வுடன் செயல்படுவோராக்கின. அதனால்தான், மிகப் பலம் வாய்ந்த ஜாரிஸ்ட் அரசை எதிர்த்து விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில ரசியப் புரட்சியாளர்கள் நடத்திய வீரமிக்க போராட்டம் இவ்விரு முதிர்ந்த அனுபவம் வாய்ந்த புரட்சியாளர்களின் இதயத்திலே அனுதாபமிக்க எதிரொலியைக் கிளப்பியது.


மறுபுறத்தில், கானல்நீர் போன்ற பொருளாதார அனுகூலங்களை உத்தேசித்து, அரசியல் சுதந்திரம் போராடிப் பெறுவது என்ற ரசிய சோசலிஸ்டுகளின் மிக உடனடியான, முக்கியமான லட்சியத்தைக் கைவிட்டு விலகிச் செல்லும் போக்கு அவர்களுக்குச் சந்தேகங்களை உண்டாக்கியது இயல்புதான்; அது சமுதாயப் புரட்சி என்ற மகத்தான லட்சியத்துக்கு நேரடியாகத் துரோகம் புரிவதாகும் என்று கூட அவர்கள் கருதினார்கள். "பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை பாட்டாளி வர்க்கத்தின் பணியாகவே இருக்க வேண்டும்'' என்று மார்க்சும் எங்கெல்சும் இடையறாது போதித்து வந்தார்கள். மேலும் பாட்டாளி வர்க்கம் தனது பொருளாதார விடுதலைக்குப் போராட வேண்டுமென்றால் தனக்கென்று சில அரசியல் உரிமைகளைப் பெற வேண்டும். தவிரவும் ரசியாவில் ஏற்படும் அரசியல் புரட்சி மேற்கு ஐரோப்பியத் தொழிலாளர் இயக்கத்துக்கும் பிரம்மாண்டமான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மார்க்சும் எங்கெல்சும் தெளிவாகக் கண்டார்கள். எதேச்சதிகார ரசியா ஐரோப்பியப் பிற்போக்குக்கெல்லாம் எப்போதும் ஓர் அரணாக இருந்து வந்தது. 1870இல் நடந்த போர் ஜெர்மனிக்கும் பிரான்சுக்குமிடையே நீண்ட காலத்துக்குப் பிணக்கு ஏற்படுத்திவிட்டது. அந்தப் போரின் விளைவாக ரசியா ஒரு மிக அனுகூலமான சர்வதேச அந்தஸ்தை வகித்து வந்தது. அதனால் பிற்போக்கான சக்தி என்ற வகையில் எதேச்சதிகார ரசியாவின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கவே செய்தது. சுதந்திரமான ரசியாதான், போலிஷ் மக்களையும், பின்னிஷ் மக்களையும், ஜெர்மானியர்களையும், ஆர்மீனியர்களையும், பிற சிறிய இனத்தவர்களையும் ஒடுக்க வேண்டிய தேவையில்லாத ரசியாதான், அல்லது பிரான்சையும் ஜெர்மனியையும் பரஸ்பரம் சண்டையிட்டுக் கொள்ளும்படி எப்பொழுதும் தூண்டிக் கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லாத ரசியாதான், நவீன ஐரோப்பா தன்னை யுத்தச் சுமைகளிலிருந்து விடுவித்துக் கொள்வதைச் சாத்தியமாக்கும், ஐரோப்பாவிலுள்ள எல்லாப் பிற்போக்கு அம்சங்களையும் பலவீனப்படுத்தும், ஐரோப்பியத் தொழிலாளி வர்க்கத்தின் சக்தியை அதிகரிக்கச் செய்யும். எனவேதான், மேற்கத்தியத் தொழிலாளர் இயக்கத்தின் வெற்றிக்காக ரசியாவில் அரசியல் சுதந்திரம் நிறுவப்படுவதை எங்கெல்ஸ் தீவிரமாக விரும்பினார். அவரது மறைவால் ரசியப் புரட்சியாளர்கள் தமது மிகச் சிறந்த நண்பரை இழந்து விட்டனர்.


பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் போராட்ட வீரரும் ஆசானும் ஆகிய பிரெடெரிக் எங்கெல்சின் நினைவு என்றென்றும் பசுமையாய் நிலைத்திடுக!


1895 இலையுதிர்காலத்தில் எழுதப்பட்டது.1896இல், "ரபோத்னிக்'' ("உழைப்பாளி'') என்ற திரட்டு, எண் 12 இல் முதன்முதலாகப் பதிப்பிக்கப்பட்டது.
*
1 வி.இ. லெனின் கொடுத்திருக்கும் சொற்கள் ரசியக் கவிஞர்
நி.அ. நெக்ராஸவின் "தோப்ரலியூபோவின் நினைவு'' என்ற கவிதையிலிருந்து எடுக்கப்பட்டவை (ப.ர்).


2 தங்களுடைய அறிவு வளர்ந்து விசாமடைவதிலே மகத்தான ஜெர்மன் தத்துவஞானிகளுக்கு ஹெகலுக்கு, குறிப்பாக தாங்கள் மிகவும் கடன்பட்டிருப்பதாக மார்க்சும், எங்கெல்சும் அடிக்கடி குறிப்பிட்டுள்ளனர். "ஜெர்மன் தத்துவஞானம் இல்லாமல் விஞ்ஞானரீதியான சோசலிசம் தோன்றியேயிருக்காது'' என்கிறார் எங்கெல்ஸ்.


3 இது அற்புதமான முறையில் கருத்துமிக்க, படிப்பினை நிறைந்த நூலாகும். துரதிர்ஷ்டவசமாக, அதன் ஒரு சிறு பகுதிதான் ரசிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது ("விஞ்ஞானபூர்வமான சோசலிசத்தின் வளர்ச்சி'', 2ஆம் பதிப்பு, ஜினீவா, 1892). அந்தப் பகுதியில் சோசலிசத்தின் வளர்ச்சி பற்றிய ஒரு வரலாற்றுக் கட்டுரை தரப்பட்டுள்ளது.


Sotsial-Demokrat  ("சோஷல்டெமாக்ராட்'') "உழைப்பு விடுதலைக் குழு''வால் 1890 முதல் 1892 வரை ரசியாவுக்கு வெளியே பிரசுரிக்கப்பட்ட இலக்கிய, அரசியல் பத்திரிகை மொத்தம் நான்கு தொகுதிகள் வெளியாயின. "ரசிய ஜாரிசத்தின் அயல்நாட்டு கொள்கை'' என்ற
எங்கெல்சின் கட்டுரையை லெனின் இங்கே குறிப்பிடுகிறார் (ப.ர்.). 

முதலில் உண்டானது தமிழ்

புனல்சூழ்ந்து வடிந்து போன
நிலத்திலே "புதிய நாளை"
மனிதப்பைங் கூழ்மு ளைத்தே
வகுத்தது! மனித வாழ்வை,
இனியநற் றமிழே நீதான்
எழுப்பினை! தமிழன் கண்ட
கனவுதான், இந்நாள் வையக்
கவின்வாழ்வாய் மலர்ந்த தன்றோ?

இசை கூத்தின் முளை

பழந்தமிழ் மக்கள் அந்நாள்
பறவைகள் விலங்கு, வண்டு,
தழைமுங்கில் இசைத்ததைத், தாம்
தழுவியே இசைத்த தாலே
எழும்இசைத் தமிழே! இன்பம்
எய்தியே குதித்த தாலே
விழியுண்ணப் பிறந்த கூத்துத்
தமிழே! என் வியப்பின் வைப்பே!

இயற்றமிழ் எழல்

அம்மா என் றழைத்தல், காகா
எனச்சொல்லல், அஃகென் றொன்றைச்
செம்மையிற் சுட்டல் என்னும்
இயற்கையின் செறிவி னாலே
இம்மா நிலத்தை ஆண்ட
இயற்றமி ழேஎன் அன்பே!
சும்மாதான் சொன்னார் உன்னை
ஒருவன்பால் துளிர்த்தாய் என்றே!

தமிழர்க்குத் தமிழ் உயிர்

வளர்பிறை போல் வளர்ந்த
தமிழரில் அறிஞர் தங்கள்,
உளத்தையும், உலகில் ஆர்ந்த
வளத்தையும் எழுத்துச் சொல்லால்,
விளக்கிடும் இயல்மு திர்ந்தும்,
வீறுகொள் இசை யடைந்தும்,
அளவிலா உவகை அடற்
றமிழேநீ என்றன் ஆவி!

சாகாத்தமிழ்

படுப்பினும் பாடது, தீயர்
பன்னாரும் முன்னேற் றத்தைத்
தடுப்பினும், தமிழர் தங்கள்
தலைமுறை தலைமு றைவந்
தடுக்கின்ற தமிழே! பின்னர்
அகத்தியர் காப்பி யர்கள்
கெடுப்பினும் கெடாமல் நெஞ்சக்
கிளைதொத்தும் கிளியே வாழி!

கலைகள் தந்த தமிழ்

இசையினைக் காணு கின்றேன்;
எண்நுட்பம் காணு கின்றேன்;
அசைக்கொணாக் கல்தச் சர்கள்
ஆக்கிய பொருள்காண் கின்றேன்;
பசைப்பொருட் பாடல் ஆடல்
பார்க் கின்றேன்; ஓவியங்கள்,
நசையுள்ள மருந்து வன்மை
பலபல நான்காண் கின்றேன்.

முன்னூலில் அயலார் நஞ்சம்

பன்னு஡று நூற்றாண் டாகப்
பழந்தமிழ் மலையின் ஊற்றாய்
மன்னரின் காப்பி னாலே,
வழிவழி வழாது வந்த
அன்னவை காணு கின்றேன்.
ஆயினும் அவற்றைத் தந்த
முன்னூலை, அயலான, நஞ்சால்
முறித்ததும் காணு கின்றேன்!

பகைக்கஞ்சாத் தமிழ்

வடக்கினில் தமிழர் வாழ்வை
வதக்கிப், பின் தெற்கில் வந்தே
இடக்கினச் செயநினைத்த
எதிரியை, அந்நாள் தொட்டே
"அடக்கடா" என்று ரைத்த
அறங்காக்கும் தமிழே! இங்குத்
தடைக்கற்கள் உண்டென் றாலும்
தடந்தோளுண் டெனச் சிரித்தாய்!

வெற்றித் தமிழ்

ஆளுவோர்க் காட்பட் டேனும்,
அரசியல் தலைமை கொள்ள
நாளுமே முயன்றார் தீயோர்;
தமிழேநீ நடுங்க வில்லை!
"வாளினை எடுங்கள் சாதி
மதம்இல்லை! தமிழர் பெற்ற
காளைகாள்" என்றாய்; காதில்
கடல்முழக் கத்தைக் கேட்பாய்!

படைத் தமிழ்

இருளினை வறுமை நோயை
இடறுவேன்; என்னு டல்மேல்
உருள்கின்ற பகைக்குன்றை நான்
ஒருவனே மிதிப்பேன்; நீயோ
கருமான்செய் படையின் வீடு!
நான் அங்கோர் மறவன்! கன்னற்
பொருள்தரும் தமிழே நீ ஓர்
பூக்காடு; நானோர் தும்பி!


http://www.tamilnation.org/literature/bharathidasan/mp037.htm

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE