சுதந்திரம், ஜனநாயகம் பற்றிய பிரகடனங்களின் பின்னால் அரங்கேறுவது ஆபாசங்களே
சுதந்திரம், ஜனநாயகம் பற்றி வாய்கிழிய பிரகடனம் செய்து எதைச் சாதிக்கின்றனர் என்பதைக் குறிப்பாகப் பார்ப்போம். உலகில் மிகப் பெரிய நிறுவனமான ஜெனரல் மோட்டார் நிறுவனம் சீனாவில் தனது விற்பனையை 2003இல் ஆறு மடங்காக்கியது. சந்தை உருவாக்கித் தரும் ஜனநாயகம், மக்களின் அடிப்படை வாழ்வுரிமையைச் சூறையாடுவதையே பிரகடனமாகின்றது. 2002இல் ஜெனரல் மோட்டார் நிறுவனம் 14.2 கோடி டாலரை லாபமாக பெற்ற இந்த நிறுவனம், 2003இல் 43.7 கோடி டாலர் லாபத்தைப் பெற்றது. சீனாவின் ஜனநாயகம் மக்களின் வாழ்வை சூறையாடி விட, அதுவே லாபங்களை அள்ளிக் கொடுத்தது.