Language Selection

பி.இரயாகரன் -2006

இதை சாரமாக கொண்டு, மற்றொரு புலியெதிர்ப்பு அணியும் குலைக்கின்றது. புலியெதிர்ப்பையே அரசியலாக கொண்டு, அதையும் மார்க்சியத்தின் பெயரில் திரித்து குலைக்கின்றது. இந்த புதிய அணி முதலாளித்துவம் என்ற சொற்களைக் கொண்டே மார்க்சியத்தை சாயம் அடித்தபடி தான், புலியெதிர்ப்பில் தன்னை வேறுபடுத்தி

கொலைகளையே தமது அரசியல் பரிகாரமாக சிந்திக்கின்ற எமது சொந்த மன உணர்வுகள், மனிதத்தின் சகல கூறுகளையும் மலடாக்கிவிடுகின்றது. எமது சிந்தனை முறையும், வாழ்வியல் முறையும், மற்றவனின் மரணம் மூலம் தீர்க்கப்படலாம் என்று நம்புகின்றது எமது அறிவு. அப்படித்தான் அதை விளக்குகின்றது. அப்படித்தான் அதை நடைமுறைப்படுத்துகின்றது. இப்படி சிந்திக்கின்ற காட்டுமிராண்டிகளைக் கொண்ட ஒரு சந்ததிகளின் காலத்தில், நாம் உயிருடன் வாழ்கின்றோம்.

குற்றவாளிகளும், கிரிமினல்களும், கொள்கைக்காரர்களும் கூட்டாக கொள்ளையடிக்க நடத்திய நாடகம் தான், சதாம்குசைன் மீதான நீதி விசாரணை. அமெரிக்காவின் பாசிச கேலிக் கூத்தே, சதாமின் மீதான மரணதண்டனை. முன்கூட்டியே தண்டனை தீர்மானிக்கப்பட்டு,

அரசியல் தீர்வையும் உடனடிப் பிரச்னையையும் ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்தி, பேச்சுவார்த்தைக்கே குழிவெட்டியவர்கள், இதன் மூலம் தமிழ் மக்களின் எதிரிகள் என்பதையே தமது சொந்த அணுகுமுறை மூலம் மறுபடியும் புலிகள் உலகறிய நிறுவிக் காட்டினர்.

* மக்களின் இயல்பான ஐக்கியத்துக்கு பதிலாக, வடக்குகிழக்கு இணைப்பை யாழ் மேலாதிக்கமும், ஏகாதிபத்திய துணையுடன் செயல்படும் பேரினவாதத்தின் மிதவாத பிரிவும் கோருகின்றது.


* மக்களின் ஐக்கியத்தை மறுதலித்து, வடக்குகிழக்கின் பிளவை புலியெதிர்ப்பு கும்பலும், பேரினவாதத்தின் தீவீரமான பகுதியும் கோருகின்றது.

புலிகளின் காட்டுப்பிரதேசங்கள் மீதான பேரினவாதிகளின் பொருளாதார தடை, புலிகளையே நித்திரையில் இருந்து உலுப்பி எழுப்ப முனைகின்றது. அவர்களோ கனவு கண்டு எழுந்தவன் போல் புலம்புகின்றனர். உடனே புலிப் பொருளாதாரம் பற்றி பேசுகின்றனர்.

கனடா சென்ற போது பி.இரயாகரனிடம் எடுக்கப்பட்ட பேட்டி, நம்மொழி சஞ்சிகையில் வெளியாகியது.

 

எது சமூகத்துக்கு நடக்கக் கூடாதோ, அது நடக்கும். சமூகத்தின் சாரத்தை உறிஞ்சி, அதை தமது அலுக்கோசுத்தனத்துக்கு பயன்படுத்துவது நிகழும். சமூகத்தின் அறிவை நலமடித்து, அதையும் திண்டு செரிக்கின்ற வக்கிரத்தை அரங்கேற்றுகின்றது.

இலங்கையில் அன்றாடம் என்னதான் நடைபெறுகின்றது, நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. புலிகள் அன்றாடம் சிறுகச் சிறுக அழிந்து கொண்டிருக்கின்றார்கள். தாமே வலிந்து தேர்ந்த தமது சொந்த அழிவில், அவர்களே அரசியல் அனாதையாக மிதக்கின்றனர்.

உ ன்னதமானதாகக் காட்டப்படும் உலகமயமாதல் என்ற   சுதந்திரமான, ஜனநாயகமான, நாகரிக சமூக அமைப்பில்,   மனிதர்கள் சுயசிந்தனையற்ற நிலையில் அடைத்து வைக்கப்பட்ட மந்தைக் கூட்டமே. இங்கு பண்ணை அடிமைகளாக, பண்ணை மந்தைகளைப் போல் வாழவே கற்றுக் கொள்கின்றோம். சமூக அடிமைத்தனத்தையும், மிருகத்தனத்தையும் ஒருங்கே கொண்ட காட்டுமிராண்டிகளாக மனிதர்களை மாற்றுவதில்தான் உலகமயமாதலின் வெற்றி அடங்கியுள்ளது.

ம னித வரலாற்றில் தனிச்சொத்துரிமை அமைப்பு உருவானது  முதலே, சக மனிதர்களின் உழைப்பைச் சுரண்டுவது  தனிமனித உரிமையாகியது. இதுவே மனிதனின் ஜனநாயகமாகவும், சுதந்திரமாகவும் இருப்பதுடன், மனித நாகரிகத்தின் பண்பாட்டுச் சின்னமாகவும் கொழுவேற்றுள்ளது.  இது சட்டதிட்டங்களினால் மட்டும் சுரண்டல் அமைப்பை கட்டமைத்துவிடவில்லை. சட்டதிட்டங்களைச் சுற்றியுள்ள சமூக ஒழுக்கங்களும், சமூகப் பண்பாடுகளும், சமூக கலாச்சாரங்களும் கூட, இதற்குள்தான் கட்டமைக்கப்பட்டுள்ளன.

மனித சமூக சாரத்தை நாம் உள்ளது உள்ளபடி புரிந்து  கொள்வதற்கு, ஒட்டுமொத்தமாகவே இயற்கை சார்ந்து  முழுமையாக ஆராயவேண்டும். மாவோ கூறியது போல் ""ஒரு விசயத்தைப் பூர்த்தியாக அதன் முழுமையில் பிரதிபலிக்க வேண்டுமானால், அதன் சாராம்சத்தையும் அதில் உறைந்து கிடக்கும் விதிகளையும் பிரதிபலிக்க வேண்டுமானால், புலன் உணர்வுகளின் மூலம் கிடைக்கும் ஏராளமான விவரங்களில் கொச்சையானதைத் தள்ளி, சாராம்சத்தை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொண்டு பொய்யானதை அகற்றிவிட்டு உண்மையானதை வைத்துக் கொண்டு, ஒரு அம்சத்திலிருந்து இன்னொரு அம்சத்திற்குத் தொடர்பு கொண்டு, புறத்திலிருந்து உட்பொருளுக்குச் சென்று ஆராயவேண்டும்.

நா ம் எப்படி இருந்தோம், எப்படி இருக்கின்றோம்,  எப்படி இருக்கப் போகின்றோம் என்பதை உலகமயமாதல்  ஒவ்வொருவர் முன்னாலும் கேள்வி எழுப்புகின்றது. உலகமயமாதல் உலகில் உள்ள அனைத்தையும் ஒற்றைப் பரிணாமத்தில் கட்டமைக்கின்றது.

உலகளவில் மக்கள் கூட்டம் தமது வரலாற்று ரீதியான  சுயஅடையாளங்களையே, படிப்படியாக ஒரு சில பன்னாட்டு  நிறுவனங்களிடம் இழந்து வருகின்றன. மறுபக்கத்தில் உழைப்பு சார்ந்து உருவாகும் மனிதனுக்கேயுரிய சுயமான சிந்தனைத் திறனை, மூலதனம் மலடாக்குகின்றது. சுதந்திரமான ஜனநாயகமான தெரிவுகள் அனைத்தும், உலகளவில் பரந்துபட்ட மக்களுக்கு படிப்படியாக மறுக்கப்படுகின்றது. தேசங்கடந்த அந்நிய முதலீட்டினால், இயற்கையான மனித தேர்வுகள் எல்லாம் பாரிய அளவில் எல்லை கடந்து அழிக்கின்றது.

 எண்களுக்குரிய சர்வதேச அலகுகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன. நான் இந்த நூலை எழுதுவதற்காக வாசித்த நூற்றுக்கணக்கான நூல்களில், இந்த முறையை பலர் சரியாகக் கையாளவில்லை. எண்களைப் பல இடங்களில் எடுத்துக் கையாளும்போது குழப்பியடித்துள்ளனர். எந்த அலகைப் பயன்படுத்தினர் என்ற குறிப்பு தரப்படவில்லை. உதாரணமாகச் சர்வதேச ரீதியாகப் புள்ளி விபரங்களை எடுத்துக் கையாளும்போது டிரில்லியன், பில்லியன் எனப் பல்வேறு எண் அலகுகளை எடுத்துப் பயன்படுத்திய போது, புள்ளி விபரங்கள் ஒன்றுக்கு ஒன்று குழப்பமாகவே காணப்படுகின்றது. இயன்றவரை எனது நூலில் அவற்றைச் சரிபார்த்துப் பயன்படுத்தியுள்ளேன். சரிபார்க்க முடியாதவைகளை இந்த நூலில் பயன்படுத்தவில்லை. சில இடங்களில் அடைப்புக்குறியுடன் பயன்படுத்தியுள்ளேன்.  கீழே சர்வதேச அலகுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த நூலை எழுதப் பயன்படுத்தப்பட்ட புள்ளிவிபரங்கள், தரவுகளை தந்த நூல்கள், பத்திரிகைகள் மற்றும் கட்டுரைகளின் பட்டியல்.
1   நெல்சன் மண்டேலா            தியாகு
2   வேளாண்மை தொழிலா?  கலாச்சாரமா? வாழ்வுமுறையா? கோ.நம்மாழ்வார்
3 சிஐஏ குறியிலக்கு  நிக்கோலாய் யாகேவ்லெவ்
4   மூன்றாம் உலகம் வளர்ச்சியா,  மூன்றாம் உலக மாநாட்டின்   நெருக்கடியா? அறிக்கை 1984
5   தமிழக சுற்றுச்சூழல்பிரச்சனைகள் எஸ்.டி.மணா
6   சிலந்தி வலை பூவுலகின் நண்பர்கள் 
7   சரணாகதிப் பொருளாதாரம் டி.எம்.தாமஸ் ஐசக்,   கே.என்.ஹரிலால்
8   தடங்கல் பூவுலகின் நண்பர்கள்
9   உலக வங்கியின்  ஆரோக்கியமற்ற போக்குகள் பூவுலகின் நண்பர்கள் 
10 மூன்றாம் உலகப்போர்  தண்ணீருக்கா? சான்ட்ரா போஸ்டல்
11  அமெரிக்க மோகம் வி.வி.மு, பு.மா.இ.மு,   ம.க.இ.க, பு.ஜ.தொ.மு
12 நிதிகளின் உலகமயமாக்கம் கவால்ஜித் சிங்
13 வரும்முன் காக்கும்  டாக்டர் ஐ. சிவசுப்ரமணிய தடுப்பு மருத்துவம்    ஜெயசேகர்
15  தடைசெய்யப்பட்ட,  தடை செய்யப்பட வேண்டிய,  மற்றும் அவசியமான மருந்து  டாக்டர் ப.இக்பால்
17  வேண்டும் இந்த மருந்துகள்  டாக்டர் தி.சுந்தரராமன்
18  வேண்டாம் இந்த மருந்துகள்  டாக்டர் தி.சுந்தரராமன்
19  காட்டாட்சி புதிய  ஜனநாயகம் வெளியீடு
20  வஞ்சக வலை விரிக்கும்  தன்னார்வக் குழுக்கள் கீழைக்காற்று
21  தனியார்மயமாக்கம்  ஒரு தேசத்துரோகம் கே. அசோக்ராவ்
22  மண்ணை விற்று முன்னேற்றமா? வி.வி.மு, பு.மா.இ.மு, ம.க.இ.க
23 அமெரிக்க மான்சாண்டோ  விதைக் கம்பெனியை  விரட்டியடிப்போம்!  வி.வி.மு
25  விளைநிலங்களை  பாலையாக்கும்  இறால் பண்ணைகள் வி.வி.மு
26  நாட்டை மீண்டும் காலனியாக்காதே!  வி.வி.மு, பு.மா.இ.மு,  மரணக் குழியில் மக்களைத் தள்ளாதே! ம.க.இ.க
28  பெல்  ஐ அழிக்கும் தேசத்துரோக  காங்கிரசின் புதிய மின் கொள்கை பெல் தொழிற்சங்கங்கள்
30 நீலப்புரட்சியின் நெருக்கடி மு.பாலசுப்ரமணியன்
31 இந்தியாவின் ஏற்றுமதி
 உற்பத்தி வளாகங்கள் பூவுலகின் நண்பர்கள்
32 ஏகாதிபத்தியத்தின் உலகமயமாக்கல் ஃபிடல்காஸ்ட்ரோ
33  உலகமுதலாளித்துவ நெருக்கடியும்  நான்காம் அகிலத்தின் பணிகளும்    நான்காம் அகிலம்
34 உயிரியல் புரட்சியின் ஒடுக்குமுறை மு.பாலசுப்பிரமணியன்
35 உலகமயமாக்கல் சூழலும்
36 பொதுவுடைமை இயக்கத்தின்
 பிளவும்  பின்னடைவும்  எல்ஜியெஸ்
37  ஊழலும் ஊழலின் பரிமாணங்களும் பி.எஸ்.பன்னீர்செல்வம்
38 அணுவாற்றல்: ஓர் அறிமுகம் பூவுலகின் நண்பர்கள்
39  வாழ்வுக்கும் பிழைப்பிற்கும் இடையில்  ஆரோக்கியம் அடிப்படை உரிமையா?  பாதுகாப்பு வலையா? தி.சுந்தரராமன் 
41  பா.ஜ.க.வின் அணு ஆயுத  சோதனையும் விளைவுகளும் மொழி பெயர்ப்பு கட்டுரைகள்
42 புதிய உலக நிலைமைகளின் கீழ்  இந்தியப் பொதுவுடமைக்கட்சி
 சர்வதேசப் புரட்சிக் கடமைகள் (மாலெ) மாநில அமைப்புக் கமிட்டி   தமிழ்நாடு
44 நர்மதா ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டம்  ஓர் ஆய்வு பூவுலகின் நண்பர்கள்
45 இயற்கை வளங்களை பாதுகாப்போம் பிடல் காஸ்ட்ரோ
46 நம்மை பாதிக்கும் நச்சுக் கழிவுகள் பூவுலகின் நண்பர்கள்
47 பசுமைப் புரட்சியின் வன்முறை வந்தனா சிவா
48  அணுசக்தி பீட்டர் பன்யார்ட்
49 மக்கள் கலாசாரத்தை  மண்ணாக்கும் சக்திகள் வல்லிக்கண்ணன்
50 விதைகள் மொழி பெயர்ப்பு கட்டுரைகள்
51 லத்தீன் அமெரிக்காவில்
 ஏகாதிபத்திய நிகழ்ச்சிகள் கரீன் கச்சதுரோவ்
52  உலக வங்கி கடன் மீள முடியுமா? பகுதி 3 சூசன் ஜார்ஜ்
53  சூழலியல் பூவுலகின் நண்பர்கள்
54  புதிய மருந்துக் கொள்கை மக்கள் நலனா? 
 கொள்ளை லாபமா?  நீதிபதி சுப்ரமணியன் போத்தி 
55  புகையால் எங்களை புதைக்காதீர்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
56  விளைநிலத்தில் தேக்கு விவசாயிகளின்  கழுத்துக்கு தூக்கு விவசாயிகள் விடுதலை முன்னணி
57  டங்கல்திட்டம் ஒரு விமர்சனம் க.சந்தானம் எம்.ஏ.
58 குற்றவாளிக் கூண்டில் முதலாளித்துவம் ப.வி.கக்கிலாயா
59  வாழ்வே அறிவியல் கே.கே.கிரஷ்ணகுமார்.
60  ஆசிய சமாதானத்துக்கு யாரால் ஆபத்து? வி.வி.சுவாமிநாதன்
61 கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை மார்க்ஸ் ஏங்கெல்ஸ்
62  சட்டத்தை மதிக்காமல். இவான் அர்ட்சிபசோவ்
63 சமர் பாரிசில் இருந்து வெளிவரும்   மார்க்சிய பத்திரிகை 
64 தினக்குரல் இலங்கையில் வெளிவரும்   செய்திப் பத்திரிகை
65 ஆப்கன் வரலாறும் அமெரிக்க வல்லூறும் சு.பொ. அகத்தியலிங்கம்
66  நீதிக்குப் போராடும் பாலஸ்தீன மக்கள் என்.ராமகிருஷ்ணன்
67 சிஐஏ பாலி வி பாரக்கல்
68 பறை நோர்வை தமிழ் சஞ்சிகை
69 அதிகார ஆணவம் எவ்கெனி லுகவோய்
70 பயங்கர அமைப்பிலிருந்து  வரும் பயங்கரங்கள்  முன்னோடி வெளியீடு
71  மதவாத சக்திகளின்
 சவால்களை முறியடிப்போம்!  செங்கொடி வெளியீடு
72 உலகமயம் பண்பாடு சமூக மாற்றம்  கட்டுரைத் தொகுப்பு
73 மார்க்சிய சர்வதேசியம் எதிர் தீவிர இணைய மொழி பெயர்ப்பு  எதிர்ப்பு முன்னோக்கு  கட்டுரை
74 மூலதனம் மார்க்ஸ்
75 புதியஜனநாயகம்  இந்திய மார்க்சிய லெனினியப்   பத்திரிகை
76 சனநாயகப் புரட்சியின்  சமூக சனநாயகவாதத்தின்  இரண்டு போர்த்தந்திரங்கள் லெனின்

77

 

 

 

ECONOMIC RESEARCH DEPARTMENT

78

 

 

 

THE WORLD'S WOMEN 2000: TRENDS AND STATISTICS

79

 

 

 

HDRO homepage

80  உறவு12
81  திருத்தல்வாதம் எதிர்ப்போம்,  மார்க்சியம் காப்போம்.    லெனின்
82  மார்க்ஸ் எங்கெல்ஸ் மார்க்ஸியம்
83 புதிய கலாச்சாரம்  இந்திய மார்க்சிய பத்திரிகை
84 விதைகள்
85  சரணாகதிப் பொருளாதாரம்

86 

 

 

 

CHALLENGES

87

 

 

 

MARIANNE - 11.2000

88

 

 

 

LIBERATION

89 உயிரோடு உலாவ இந்தியப் பெண்களின்   வாழ்க்கைப் போராட்டமும்  சுற்றுச் சூழலும்.  வந்தனா சிவா
90 குற்றவாளிக் கூண்டில் சர்வதேச நிதி  நிறுவனமும் உலக வங்கியும்  பகுதி 2
91 ஏகாதிபத்தியம் முதலாலாளித்துவத்தின்  உச்சக்கட்டம்
92  புதிய உலக நிலைமைகளின் கீழ்  இ.பொ.க (மாலெ) மா.அ.க  சர்வதேச புரட்சிக் கடமைகள் தமிழ்நாடு
93  உலக வங்கி கடன் மீள முடியுமா?  சூசன் ஜார்ஜ்
94 இலங்கையில் மலையகத் தமிழர்
95 முன்னணிச் செய்தி இதழ் 5 1885 இல்  என்.எல்.எப்.டியின் பத்திரிகை

96

 

 

 

COURIER - INTERNATIONAL

97

 

 

 

LE FIGARO ECONOMIE

98

 

 

 

PARISIEN

99  சரிநிகர்
100  ஆதவன்

101

 

 

 

IMPERIALISM - Decadent; Parasitic, Moribund, Capitalism Harpal Brar

102 தொழிலாளர் பாதை

103

 

 

 

Challenges

104

 

 

 

ECONOMISTE

105

 

 

 

ALTERNATIVES ECONOMIQUES

106

 

 

 

ECONOMIA

107

 

 

 

COURIER

108

 

 

 

Banque Mondiale

109

 

 

 

L'Economie Mondiale 1820-1992

110

 

 

 

La dette dans le tiers monde

111

 

 

 

Peches, alimentation et development

112

 

 

 

Courier

113

 

 

 

Newsweek

114

 

 

 

L'Express

115

 

 

 

Jonas

116

 

 

 

OBSERVATEUR

117

 

 

 

Population Mondiale - 1997

118

 

 

 

Forbes.com

119 

 

 

 

la pauvrete des enfants - 2000

120  உலக வங்கி இணையம்
121  ஐ.நா இணையம்

122 

 

 

 

Faim Development

123  கூரியர்

124 

 

 

 

ILO

125 உலகமயமாக்கலும் தலித் மக்களும் சேது
126 உலகமயமாக்கலும் மார்க்சியமும்
127 இணையத்தளம் வாசு
128 திடீர் ஜனநாயகம்  அருந்ததிராய்
129 மூலதனம்  மார்க்ஸ் (ஜமதக்னி)

 

 

Courier International

உ லகமயமாதல் எப்படி மனித குலத்துக்கு எதிராகச்  செயல்படுகின்றது என்பதையே மேலே பார்த்தோம். மனித  வாழ்விற்கான சகல அடிப்படைக் கூறுகளையும், மனிதன் ஒரு சமூகக் கூறாக நெருங்க முடியாத வகையில், நலமடிப்பதே உலகமயமாதலின் அடிப்படை குறிக்கோளாகவே உள்ளது. இயங்கியலின் போக்கையே இது மறுதலிக்கின்றது. இயற்கையின் உள்ளடக்கத்தை, மனிதன் தனது சமூக இருப்பின் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்திய இயங்கியல் போக்கில் இருந்து, அவனைத் துண்டிக்கும் பணியை மூலதனம் செய்கின்றது. அதாவது மனிதர்களின் மிகப் பெரும் பகுதியை மந்தைக்குரிய நிலைக்குத் தரம் தாழ்த்தி, அடைத்து வளர்க்கும் ஒரு மந்தையின் பண்பின் நிலைக்கு இட்டுச் செல்வதே உலகமயமாதலாகும்.

 ஏற்றுமதிச் சந்தையைக் கட்டுப்படுத்திய ஏகாதிபத்தியம், மூன்றாம் உலக நாடுகளின் தலைவிதியை பலதுறையில் முடமாக்கியது. சர்வதேச சந்தையில் வர்த்தகப் பொருட்களுக்குத் தேவையான ஆதாரப் பொருட்கள், 1979இல் 40.5 சதவீதமாக இருந்து. இது 1987இல் 28.4 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. அதாவது மூலப் பொருட்களின் விலை வீழ்ந்து, அதனிடத்தில் விலை அதிகம் கொண்ட உற்பத்திப் பொருட்கள் ஆக்கிரமித்துக் கொண்டன. 1980க்கும் 1986க்கும் இடையில் ஆதாரப் பொருட்களின் விலை 30 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டது. சில மூலாதாரப் பொருட்களின் விலை கடந்த 50 ஆண்டுகளுக்கு முந்திய அடிமட்ட விலைக்கு வீழ்ச்சி கண்டது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பான தேசங்களின் வளர்ச்சியை, இதன் மூலம் ஏகாதிபத்தியம் பல்வேறு வழிகளில் தடுத்து நிறுத்தின. சொந்த மக்களைப் பற்றி அக்கறைப்படாத சந்தைப் பொருளாதாரம் என்ற தேசிய கூக்கூரலை, குரல் வளையில் நெறிக்கப்பட்ட நிலையில் ஏகாதிபத்தியங்களால் சிலுவையில் அறைப்பட்டன. உயிர்த்தெழும் அனைத்து வாய்ப்புகளையும், இந்தச் சமூக அமைப்பில் இல்லாது ஒழித்தன.

 

 மனித அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பிரதான உற்பத்திகளை ஒரு சில நிறுவனங்கள் கட்டுப்படுத்தும் போது, அவை பெரும்பாலான நாடுகள் மேலான ஆதிக்கத்தைப் பெற்று விடுகின்றன. குறித்த நாட்டின் பிரதான வருவாயாக குறித்த ஒரு பொருள் உள்ள போது, அதை அன்னிய ஒரு நிறுவனம் அல்லது ஒரு சில நிறுவனம் கட்டுப்படுத்தும் போது, நாடே குறித்த நிறுவனத்தின் அடிமையாகி விடுகின்றது. இதனடிப்படையில் தான் பன்மையான பொருளாதார உற்பத்திக் கூறுகளை அழித்து, ஒற்றைப் பொருளாதாரத்தில் தங்கி நிற்கும் நிலைமையை ஏகாதிபத்தியம் திணிக்கின்றது. குறித்த ஒரு பொருளின் ஏற்றுமதியே, நாட்டின் அனைத்துத் தேவைக்குமான இறக்குமதிக்கான வளத்தை வளங்கும் நிலைமையை ஏகாதிபத்தியம் உருவாக்கின்றது. ஒரு நாட்டின் திவாலை எப்படி அறிவிப்பது என்பதையே, ஏகாதிபத்தியமும் இறுதியாகப் பன்னாட்டு நிறுவனங்களும் தனது கையில் எடுத்துக் கொள்கின்றன. இந்தவகையில் பல நாடுகளின் ஒட்டுமொத்த ஏற்றுமதியே ஒற்றைப் பொருளாதாரமாகியதுடன், அது ஏகாதிபத்திய சந்தைத் தேவைகளை பூர்த்தி செய்வதாக மாறியுள்ளது. உதாரணமாக பார்ப்போம்.

 மனிதனின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யும் உணவு முதல் அனைத்துப் பொருட்களையும் மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளன. அத்துடன் ஒரு உற்பத்தியில் காணப்படும் இயற்கையின் பன்மையை அழித்து, ஒருமையான, ஒற்றை உற்பத்தியை நோக்கி மாற்றி அமைக்கின்றனர். ஒரு பொருளின் பன்மையான கூறுகள் சார்ந்த இயற்கைத் தெரிவை, மற்றவன் உபயோகிக்கக் கூடாது என்ற தனிமனித நலன் சார்ந்து இயற்கையிலேயே இருந்து ஒழித்துக் கட்டப்படுகின்றது. 1995இல் 15 பன்னாட்டு நிறுவனங்கள் உலகளவில் மனிதத் தேவையைப் பூர்த்தி செய்த 20 முக்கியமான அடிப்படை பொருளில், பெரும் பகுதியைக் கட்டுப்படுத்தின. இப்படிக் கட்டுப்படுத்திய சில பொருட்களையும், அதன் அளவையும் நாம் பார்ப்போம்

தேசங்களின் சுயேச்சையான வாழ்வு என்பது எங்கும்  எப்போதும், மக்களின் சொந்த உற்பத்தியில் தங்கிநிற்பதில்  சார்ந்துள்ளது. மக்களின் அடிப்படையான சமூகத் தேவையை சொந்த நாட்டில் உற்பத்தி செய்யும் போதே, தேசத்தின் உட்கூறுகள் நீடித்து நிலைத்து நிற்கமுடியும். இதுவே தேசியப் பண்பாடுகளையும், தேசியக் கலாச்சாரத்தையும், தேசத்தின் தனித்துவத்தையும் பாதுகாக்கத் தேவையான அடிப்படையாகும். சொந்த தேசிய பலத்தில், எந்த நெருக்கடியையும் எதிர்கொள்ளும் பலத்தை இது தேசங்களுக்கு வழங்குகின்றது. அனைத்து வகையான காலனிய வடிவங்களும் இந்தக் கூறுகள் வளர்ச்சியுறுவதை தடுத்து நிறுத்தியிருந்தன. மாறாக ஏகாதிபத்தியத்தின் தொங்கு சதை நாடகவும், ஏகாதிபத்தியத்தின் தேவைகளை உற்பத்தி செய்து வழங்கும் ஒரு இழிநிலை நாடுகளாக காலனிகள் நீடித்திருந்தன.

 முதலாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து சோவியத்தின் உருவாக்கம், உலகளவில் ஒரு அதிர்வை சர்வதேச வர்த்தகத்தில் ஏற்படுத்தியது. காலனிகளில் இருந்து செல்வங்களை அபகரித்து வந்த மேற்கின் நலன்களில், இது ஒரு அதிர்வை உருவாக்கியது. சோவியத் உலகில் மிகவும் தனித்துவமான, சுரண்டலுக்கு எதிரான, உழைக்கும்  வர்க்கத்தின் அதிகாரத்தில் இருந்தமையால், மேற்கின் காலனிகள் எங்கும் கடுமையான கொந்தளிப்பான சர்வதேச நிலைக்கு சென்றது. காலனிய மக்கள் தமது சொந்த விடுதலையில் புதிய நம்பிக்கைகளை பெற்று, போராடத் தொடங்கினர். உழைக்கும் மக்களின் சொந்த அதிகாரத்தை கோரும் சர்வதேச நிலைமை, உழைப்பையே சுரண்டி வாழ்ந்த மேற்கின் நவீன போக்கு பலத்த அடியாக இருந்தது.

 சீனாவில் இவை எதிர்மறையில் வறுமையைப் பன்மடங்காக்கு கின்றது. இது உள்ளூர் உற்பத்தியில் நடக்கும் மாற்றத்தில் இருந்தே பிரதிபலிக்கின்றது. மூலதனத்தின் ஜனநாயகம் மக்களின் வறுமையில் பறப்பதையே, சீனாவில் நாம் தெளிவாகக் காணமுடியும்.

 எதிர்மறையில் சீனச் சந்தை ஒரு மணி கூலி அடிப்படையில், ஜெர்மனியில் 128 பேரின் வேலையின்மையை உருவாக்குகின்றது. சம்பள விகிதங்களின் அடிப்படையில் வேலை இன்மையை உற்பத்தி செய்கின்றது. 128 பேரின் வேலைக்குரிய ஒரு ஜெர்மனிய தொழில்துறை தனது வேலை ஆட்களை நீக்கிவிட்டு சீனாவுக்குள் ஓடிவிடுவதையே விரும்பும். ஒரு ஜெர்மனியரின் கூலியைக் கொண்டு, சீனாவில் 128 பேரை வேலைக்கு அமர்த்த முடியும். அதாவது ஜெர்மனியில் 128 தொழிலாளிக்கு கொடுத்த கூலி மூலம் 16,384 சீனத் தொழிலாளர்களை கூலிக்கு அமர்த்த முடியும்.

 1750இல் உலக ஏற்றுமதியில் சீனா மூன்றில் ஒரு பங்கைக் கொண்டிருந்தது. இந்தியா நான்கில் ஒரு பங்கைக் கொண்டிருந்தது. மேற்கு ஐரோப்பா அண்ணளவாக நான்கில் ஒரு பகுதியை கொண்டிருந்தது. மிகுதியான 20 சதவீதத்தையே மற்றைய நாடுகள் கொண்டிருந்தன. இங்கு உழைப்பவரின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரு சமச்சீரான சர்வதேசப் போக்கு காணப்பட்டது. செல்வத்தைப் பகிர்வதில் இடைவெளிகள் குறைந்து காணப்பட்டது. இடைப்பட்ட மத்தியதர வர்க்கம் சமூகத்தின் பெரும் போக்காகக் காணப்பட்டது.

இயற்கைக்குப் புறம்பாக மனித வரலாற்றில் எதை சக  மனிதனுக்கு மறுக்கின்றனரோ, அதுவே வர்த்தகமாகின்றது.  மற்றொரு மனிதனுடன் தனது சொந்த உழைப்பிலான உற்பத்தியை பகிர்ந்து கொண்ட சமூக நிகழ்வை மறுப்பதே, இன்றைய நாகரீகமாகும். இதுவே வர்த்தகமாகும். எல்லாவிதமான இன்றைய சிந்தனைகளும், செயல்களும் இதற்குள் தான் கட்டமைக்கப்படுகின்றன. மற்றைய மனிதனுடன் தனது சொந்த உழைப்பை பகிர்ந்து கொள்வதை, இன்றைய ஜனநாயகமும் சுதந்திரமும் காட்டுமிராண்டித்தனமாகக் காண்கின்றது. இதையே ஜனநாயக மறுப்பாகவும், சுதந்திரமின்மையாகவும் கூட சித்தரிக்கின்றது. இதுவே அனைத்து அரசுக் கட்டமைப்பினதும் சித்தாந்த உள்ளடக்கமாகும்.

சீ ன உற்பத்திகள் உலகமயமாதலில் ஒரு அதிர்வை  உருவாக்குகின்றன. ஏகாதிபத்திய மூலதனங்களை அங்கும்  இங்குமாக ஓடவைக்கின்றன. இன்றைய நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த உலகச் சந்தையின் விலையையும், பல நிறுவனங்களின் திவாலையும் தீர்மானிக்கும் நாடாக சீனா மாறி விட்டது. உலக உற்பத்தி மற்றும் விற்பனைச் சந்தையின் விலைகள் பலவற்றை, சீன உற்பத்திகளே தீர்மானிக்கத் தொடங்கி விட்டன. சீன உற்பத்திகள் உலகச் சந்தையில் பல அதிர்வுகளை, தொடர்ச்சியாகவே நாள் தோறும் ஏற்படுத்துகின்றன. எதிர்மறையில் ஏகாதிபத்திய மூலதனங்கள், அதிக இலாபவெறி தலைக்கேற, போட்டி போட்டுக் கொண்டு சீனாவில் தனது மூலதனத்தைக் குவித்தது, குவித்து வருகின்றது. இதன் மூலம் மலிந்த கூலியில் அதிக நவீன உற்பத்தியும், உற்பத்திகளில் அராஜகத்தையும் உலகெங்கும் உருவாக்கியுள்ளது.

 2002இல் நடந்த ஏற்றுமதியை 2003உடன் ஒப்பிடும் போது மிகக் குறுகிய காலத்தில் உலக அளவிலான ஏகாதிபத்திய முரண்பாடுகளை தெளிவாக இனம் காணமுடியும். ஒப்பீட்டு அளவில் ஜெர்மனிய ஏற்றுமதியை எடுத்தால் 13,620 கோடி டாலரால் அதிகரித்தது. அமெரிக்கா ஏற்றுமதி 3050 கோடி டாலரால் அதிகரித்தது. சீனா ஏற்றுமதி 11,280 கோடி டாலரால் அதிகரித்தது. ஜப்பானிய ஏற்றுமதி 5,690 கோடி டாலரால் அதிகரித்து. ஏகாதிபத்தியத்துக்கு இடையில் ஒரு கடுமையான வீச்சான மோதல் நடக்கின்றது. சந்தையை யார் அதிகம் ஆக்கிரமிப்பு செய்வது என்பதில் கடுமையாகவே மோதுகின்றன. இது தேசங்கடந்த உள்நாட்டு இராணுவ மோதலாக, இராணுவ ஆக்கிரமிப்பாக மாறி வருகின்றது. 

மூலதனத்தின் ஆன்ம ஈடேற்றத்துக்குத் தடையான  அனைத்தையும் மூலதனம் தகர்த்தெறிகின்றது. இங்கு  ஈவு, இரக்கம் என்று எதையும் மூலதனம் காட்டுவதில்லை. இன்றைய இந்த நவீன சமூகக் கட்டமைப்பு மூலதனத்தின் ஈடேற்றத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்தியப் பார்ப்பனர்கள் தனது சொந்த நலன் சார்ந்த சமூக ஈடேற்றத்துக்காக எப்படி சாதிகளை உருவாக்கினாரோ, அதேபோல் தான் இன்றைய நவீன நாகரிகக் கட்டமைப்பை மூலதனம் உருவாக்கியது, உருவாக்கி வருகின்றது. இந்த பொதுஅம்சம், மற்றவனை அழிப்பதையே அடிப்படையாகக் கொண்டது. மூலதனக் குவிப்புக்கு எதிரான அனைத்து விதமான போட்டியாளர்களையும் ஈவிரக்கமின்றி ஒடுக்குகின்றது. இதன் போது எங்கும் சமூக அராஜகத்தை ஆணையில் வைக்கின்றது. இது ஜனநாயகம், சுதந்திரம் என்ற பெயரிலேயே அரங்கேறுகின்றது. இதன் மூலம் மூலதனம் தங்கு தடையற்ற வகையில் வீங்கிச்  செல்லுகின்றது.

மூலதனங்கள் உலகை முழுவீச்சில் சூறையாடவும்,  மூலதனங்கள் தமக்கு இடையிலான மோதலை தள்ளிப்  போடவும், தமக்கிடையில் ஒன்று சேருகின்றன. இது பிரமாண்டமான ஒப்பந்தத் திருமணமாக அரங்கேறுகின்றது. மனித இனம் தனித்தனி மனிதர்களாகப் பிளவுபடுத்தப்படும், ஒற்றைத் துருவங்களாக வெம்பவைக்கும் ஒரு சமூக அமைப்பில் தான், மூலதனங்கள் தமக்கு இடையில் ஒன்று சேர்வது ஒரு முரணான போக்காக உள்ளது. தனிமனிதர்களாக வெம்பவைத்துச் சிதைக்கும் மூலதனம், தமக்கு இடையில் இதற்காக ஒன்று சேர்கின்ற போக்கு உலகமயமாதல் நிகழ்ச்சிப் போக்கில் குறிப்பான மூலதனச் செயல்பாடாக உள்ளது. ஆனால் இணைவுகள் பிரதான ஏகாதிபத்திய, சர்வதேசப் போட்டி மூலதனத்துடன் நடப்பதில்லை. இதனால் இதற்கிடையில் முரண்பாடுகள் உண்டு.

 மக்களின் வாழ்வைச் சூறையாடும் தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் உலகில் எப்படி பெருக்கெடுத்து எப்படிக் கொழுக்கின்றது என்பதை சில நாடுகள் ரீதியாக விரிவாகவும் குறிப்பாகவும் ஆராய்வோம்.

 உலகமயமாதல் என்பது உலக மூலதனம் நடத்தும் வர்த்தகம் மற்றும் சுரண்டலின் தங்கு தடையற்ற கொள்ளையை அடிப்படையாகக் கொண்டது. தங்கு தடையற்ற வர்த்தகத்தையும், சுரண்டலையும் பாதுகாப்பதே உலகமயமாதலின் அடிப்படைக் கொள்கையாகும். மூலதனம் சுரண்டிக் கொழுக்கும் தனது உற்பத்தி மற்றும் வர்த்தக விரிவாக்கத்தை சுதந்திரமாகவும், ஜனநாயகப்பூர்வமாகவும் செயலாற்றும் வகையில், உலகளாவிய நாட்டு எல்லைகளையே தகர்ப்பதே உலகமயமாதலாகும். இதுவே தனிப்பட்ட பணக்காரக் கும்பலையும், மூலதனத்தில் அராஜகத்தையும், ஏகாதிபத்தியத்தின் அதிகாரத்தையும், தங்குதடையற்ற வகையில் உலகில் நிலைநிறுத்துகின்றது.

 இவை எதைத்தான் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. கட்டியிருக்கும் கோவணத்துக் கூட ஆபத்து என்பதைத் தான். உலக மக்களை ஒன்று அல்லது இரண்டு டாலரை நாள் வருமானமாக பெறும் நிலையைக் கூட இல்லாதாக்கி, அவர்களை அடிமைப்படுத்தி அடக்கியாளும் கொள்கையையே உலகமயமாதல் தனது இலட்சியமாகக் கொண்டுள்ளது. இதனடிப்படையில் உலக மக்கள் தொகையில் அரைவாசி மக்களை, இந்த அடிமை நிலைக்குத் தரம் தாழ்த்தியதுடன், கையேந்தும் நிலையை உலகமயமாதல் உருவாக்கி விட்டது. மேலும் மக்களை அடிமைப்படுத்தி, மக்களை பண்ணையில் வளர்க்கப்படும் மிருகங்களாக மாற்றுவதை நோக்கி, உலகமயமாதல் தேசிய வளங்களையும் சூறையாடுவது இன்றைய ஜனநாயகமாகி இதுவே சுதந்திரமாகிவிட்டது.

 சுதந்திரம், ஜனநாயகம் பற்றி வாய்கிழிய பிரகடனம் செய்து எதைச் சாதிக்கின்றனர் என்பதைக் குறிப்பாகப் பார்ப்போம். உலகில் மிகப் பெரிய நிறுவனமான ஜெனரல் மோட்டார் நிறுவனம் சீனாவில் தனது விற்பனையை 2003இல் ஆறு மடங்காக்கியது. சந்தை உருவாக்கித் தரும் ஜனநாயகம், மக்களின் அடிப்படை வாழ்வுரிமையைச் சூறையாடுவதையே பிரகடனமாகின்றது. 2002இல் ஜெனரல் மோட்டார் நிறுவனம் 14.2 கோடி டாலரை லாபமாக பெற்ற இந்த நிறுவனம், 2003இல் 43.7 கோடி டாலர் லாபத்தைப் பெற்றது. சீனாவின் ஜனநாயகம் மக்களின் வாழ்வை சூறையாடி விட, அதுவே லாபங்களை அள்ளிக் கொடுத்தது.

 இப்படி உருவாகும் பன்னாட்டு தேசங்கடந்த நிறுவனங்கள் பல கோடி மக்களின் வருடாந்தர கூலிகளை மிஞ்சியதாக காணப்படுகின்றது. உதாரணமாக உலகில் மென்பொருள் உற்பத்தியில் மிகப் பெரிய நிறுவனமான  மைக்ரோசாப்ட் (Mடிஞிணூணிண்ணிஞூt) நிறுவனத்தின் மொத்தச் சொத்து 1999இல் 50,000 கோடி டாலராக இருந்தது. இது பிரேசில் நாட்டில் உள்ள மக்களனைவரும் வருடாந்தரம் உழைத்து உருவாக்கும் மொத்த தேசிய வருமானத்துக்குச் சமனாக இருந்தது.

 உலகமயமாதல் என்ற வர்த்தகப் பண்பாடு, பண்பாட்டு ரீதியான வியாபாரச் சின்ன ("மார்க்') அடையாளத்துடன் உலகை அடிமைப் படுத்துகின்றது. மனிதன் பொருட்களின் அடிமையாக இருந்த காலகட்டம் என்பதை கடந்து, பொருட்கள் மேல் பொறிக்கப்பட்ட வியாபாரச் சின்ன ("மார்க்') அடையாளங்கள் சார்ந்த மந்தைகளாகி விடும், புதிய சமூக அடிமைத்தனமே உலகமயமாதலின் நவீனப் பண்பாடாகி வருகின்றது. அதுவே நவீன கலையுமாகியுள்ளது. இதன் மூலம் வியாபாரச் சின்னம் ("மார்க்') சார்ந்த பன்னாட்டு, தேசங்கடந்த நிறுவனங்களை வீங்கி வெம்பவைக்கின்றன.

 ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள ஒருசில பன்னாட்டு நிறுவனங்கள், உலகளாவிய மூலதனங்களையும் மனித உழைப்பையும் தமதாக்கி ஒன்று குவிப்பதே உலகமயமாதலாகும். இதன் மூலம் தனிப்பட்ட சிலரின் சொத்துக்கள் வரைமுறையின்றிக் குவிகின்றது. இப்படிக் குவியும் தனிப்பட்ட நபர்களின் சொத்துக்களே, ஆடம்பரமாகி மனிதனுக்கு எதிரான வக்கிரங்களாக வக்கரிக்கின்றன. இதுவே சமூகப் பண்பாடாகி உலகமயமாகின்றது. இன்றைய சமூக அமைப்பு என்பது, தனிப்பட்ட நபர்களின் செல்வக் குவிப்பை அடிப்படையாகக் கொண்டது.

 இப்படி உலகை ஜனநாயகத்தின் பெயரிலும், சுதந்திரத்தின் பெயரிலும் ஆளுகின்ற பலர் கோடீஸ்வரர்களாகவும், லட்சாதிபதிகளாகவும் இருக்கின்றனர். இந்த ஆளும் வர்க்கமும், அதைச் சுற்றி உள்ள அதிகாரவர்க்கமும் கூட பெரும் பணக்காரக் கும்பலானதே. இந்தக் கும்பல் ஏழை மக்களின் நலனையிட்டு ஒரு நாளும் ஒரு கணமும் சிந்திக்கப் போவதில்லை. மக்களின் நலனுக்காகச் செயல்பட வேண்டும் எனின், தமது சொந்தச் செல்வத்தின் இழப்பை அங்கீகரிக்க வேண்டும். எந்தப் பணக்காரனாவது தனது சொந்த சொத்து இழப்பை அங்கீகரிக்க போவதில்லை.

 இந்த அமைப்பைப் பாதுகாக்கும் சட்டதிட்டங்களும், அதைக் கையாளும் நீதிபதிகள் கூட பெரும் பணக்காரக் கும்பலே. 1997இல் புதிதாக நியமிக்கப்பட்ட 25 நீதிபதிகளின் சராசரியான தனிநபர் சொத்து, 18 லட்சம் டாலருக்கும் அதிகமாகும். அமெரிக்காவில் உள்ள நீதிபதிகளில் 34.1 சதவீதம் பேர் 10 லட்சம் டாலருக்கும் அதிகமான சொத்துடைய பணக்காரக் கும்பலே. பொதுச் சட்ட திட்டங்கள் பணக்கார நலன்களைத் தாண்டி, எதையும் மக்களுக்காக வழங்குவதில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.

 தனிமனித செல்வக் குவிப்பு, அமெரிக்காவில் உயர்ந்த கட்டத்தை அடைந்துள்ளது. 2004இல் அமெரிக்காவின் முதல் 500 மிகப் பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் வருடாந்தரம் குறைந்தபட்சம் ஒரு கோடி டாலருக்கு மேல் சம்பளமாக பெற்றனர். மிகப் பெரிய 25 நிறுவனங்களின் தலைவர்கள் குறைந்த பட்சம் 3.5 கோடி டாலரை சம்பளமாக பெற்றனர். இதை எங்கிருந்து எப்படி பெறுகின்றனர் என்றால் மக்களின் அன்றாட உழைப்பு தான்.

 1995இல் கம்ப்யூட்டர் துறையில் (தீடிணஞீணிதீண்) வின்டோஸ் 95யும், 98யும் ஏற்படுத்திய தாக்கம், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் எழுச்சியும் தொடர்ந்த வீழ்ச்சியும் தனிப்பட்ட முதல் பணக்காரனின் தனிப்பட்ட சொத்துக்களைக் குறைத்த போதும், தொடர்ந்து அது சீராகி வருகின்றது. அதைத் தொடர்ந்து தொலைபேசியும், நவீன சந்தைக் களத்தில் சதிராட்டம் போடுகின்றது. வக்கரித்த நுகர்வு வெறியும், கவர்ச்சியும் ஏற்படுத்தும் தாக்கம் சந்தையையே தலைகால் தெரியாது வீங்க வைக்கின்றது. இது பற்றாக்குறையையும், தேக்கத்தையும் அடுக்கடுக்காக கொண்டு வருகின்றது.

 2000இல் அமெரிக்காவைச் சேர்ந்த 400 முன்னணி பணக்காரக் கும்பல் அரசுக்கு கட்டிய வரி 7,000 கோடி டாலராக மட்டுமே  இருந்தது. இது 1992 உடன் ஒப்படும் போது இரண்டு மடங்காகியது. பணக்காரக் கும்பலுக்கு  ஏற்படும் வரி மூலமான இழப்பை குறைக்க கோரும் உள்ளடக்கம்தான், உலகெங்கும் வரி குறைப்பிற்கான நடைமுறை சார்ந்த சட்டத் திருத்தங்களை செய்கின்றனர். சிறப்பு வரிச்சலுகைகளை அமுல் செய்கின்றனர். அதாவது பணக்காரன் கட்டும் வரியின் அளவைக் குறைப்பதே, அடிப்படையான  ஜனநாயகமாகியுள்ளது. பணக்காரன் மேலும் பணக்காரனாவதை உறுதி செய்வதை அடிப்படையாகக் கொண்ட, வரி குறைப்பே இன்றைய உலகமயமாதல் வரிச் சட்டங்களாக உள்ளன.

 உலகமயமாதல் என்றால் என்ன என்ற பொருளை எதார்த்தம் நடைமுறையில் நிறுவுகின்றது. 1997க்கு பின் 100 கோடியை விட அதிக சொத்துடையவர்களின் சொத்து 66.4 சதவீதத்தால் அதிகரித்தது. இதன் மூலம் ஏழைகளின் அதிகரிப்பை உலகமயமாதல் இயல்பாகவே எடுப்பாக எடுத்து இயம்புகின்றது. ஏழைகளின் பிணங்களின் மேலான அஸ்த்திவாரத்தில்தான், நவீன உலகமயமாதல் சுதந்திரமாகவும், ஜனநாயகமாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்பின் வெட்டுமுகம் மிகவும் இழிவானது.

 செல்வங்கள் விரல்விட்டு எண்ணக் கூடிய தனிப்பட்ட நபர்களிடம் எப்படி எங்கிருந்து குவிகின்றது? உலகமயமாதல் பற்றிய அடிப்படைப் புரிதலுக்கு இது ஒரு அடிப்படையான கேள்வியாகும். இதை ஒவ்வொருவரும் கேட்காத வரை உலகமயமாதலைப் புரிந்து கொள்ளமுடியாது. பணம் தனிப்பட்ட ஒருவனிடம் குவிகின்ற போது, மற்றவன் நிச்சயமாக அதை இழக்கவேண்டும், இழந்தேயாக வேண்டும். இது பணம் குவிதலில் உள்ள அடிப்படையான ஒரு இயங்கியல் விதி. இதை எடுப்பாகவும் இயல்பாகவும் நாம் புரிந்து கொள்ளமுடியாதவகையில், சூட்சுமமாகவே உலகம் காட்சியளிக்கின்றது.

 இப்படி மக்களைக் கொன்று புதைத்து உருவாகியுள்ள பணக்காரக் கும்பலே, உலக நாகரிகத்தின் உயர் சின்னங்களாகப் பவனிவருகின்றனர். இப்படி 1998இல் உலகில் உருவானவர்களில் முதல் மூன்று செல்வந்தர்களின் சொத்து 48 நாடுகளின் தேசிய வருமானத்தைவிட அதிகமாக இருந்தது. 1999 ஐ.நா அறிக்கை ஒன்றின்படி அடிப்படை சுகாதாரம், சத்துணவு, அடிப்படைக் கல்வி, குடிநீர், இனப்பெருக்கம் சார்ந்த சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டை ஏற்படுத்த 4,000 கோடி டாலர் தேவை என்று கூறுகின்றது.

தனிமனிதர்களின் வாழ்வியல் பிளவுகளில் ஏற்பட்டுவரும்  இடைவெளிகளினால் ஏற்படும் மனிதஅவலம், சமூகப்   பிறழ்ச்சியாகி வக்கரிக்கின்றது. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் தொடர்ச்சியாகவே பிளவுறுவதுடன், இவை விரிந்து அகன்று வருகின்றது. இது பல்வேறு சமூகப் பிரிவுகளில் வேறுபட்டு பிரதிபலிக்கின்றது. குறைந்த வருமானம் உடைய பொருளாதாரத்துக்கும் உயர் வருமானமுடைய பொருளாதாரத்துக்கும் இடையிலான தனிமனித வருமான பகிர்வு வீதம், 1970இல் 1க்கு 28 யாக இருந்தது. இது 1990இல் 1க்கு 50 யாக அதிகரித்தது. கிடைக்கும் வருமானம் பகிரப்படும் வீதமே, முன்பை விடவும் அகலமாகி வருகின்றது. செல்வத்தை நோக்கி செல்வம், காதல் கொண்டு பறந்தோடுகின்றது. இவை எல்லாம் ஏகாதிபத்தியம் சார்ந்தே விரிவாகின்றது.

யுத்தத்தில் புலிகளுக்கு ஏற்படும் தோல்விகளுக்கு காரணம் என்ன? இது அரசியல் ரீதியானதே ஒழிய இராணுவ ரீதியானதல்ல. ஆனால் இதைக் காண மறுப்பதும், இதை இராணுவ ரீதியாக காண்பதும் புலி மற்றும் புலியல்லாத புலியெதிர்ப்பு தரப்பின் இன்றைய கண்ணோட்டமாகவே உள்ளது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அடிக்கடி, தமது இழிசெயலுக்கு துணைநின்ற மக்கள் விரோதிகளுக்கு "மாமனிதன்" என்ற பரிசு வழங்குகின்றார். அதேபோன்று தான் ஆனந்தசங்கரிக்கும் ஏகாதிபத்தியம் வழங்கியுள்ளது. "அகிம்சைக்கும் சகிப்புக்கும்" எடுத்துக்காட்டி, அதை ஊக்குவிக்க, இலங்கைப் பணத்தில் அண்ணளவாக ஒரு கோடிக்கு ஒரு பொன் முடிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனந்தசங்கரிக்கோ, அவரின் கூட்டணிக்கோ இன்று தனித்துவமான சொந்த அரசியல் கிடையாது. அதனால் தான் இந்தப் பரிசுக்கு சிறப்பாக அவரை தேர்வு செய்துள்ளது. ஏகாதிபத்தியத்தின் அரசியலை ஆனந்தசங்கரி தன்வசப்படுத்தி, அதை தன்னுடைய அரசியல் திட்டமாக உலகுமெங்கும் முன்வைத்து வாலாட்டித் திரிவதால் தான், பரிசுக்குரிய நபராக அவர் தெரிவு செய்யப்பட்டார்.

தமிழீழத்தின் பெயரில் நடந்தேறிய வலதுசாரிய பாசிசப் படுகொலைகளை, சாதியப் படுகொலையாக திரித்து சித்தரிக்கும் ஒரு அரசியல் நாவல் தான் 'மறைவில் ஐந்து முகங்கள்". தாழ்ந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள் உயர்சாதியினர் மீது நடத்துகின்ற சாதிப் படுகொலைகளே

எந்தளவுக்கு தமிழீழக் கனவின் சாத்தியப்பாடு கேள்விக்குள்ளாக்கி சிதைகின்றதோ, அந்தளவுக்கு அது வீங்கி வெம்புகின்றது. எங்கும் எதிலும் தொடர்ச்சியான நெருக்கடிகளும், சோகமான விளைவுகளும் தொடருகின்ற இன்றைய நிலையில்,

தமிழ்மக்கள் வினையை விதைத்து, விளைவித்த புலிகள் வீங்கி வெம்பிக் கொண்டிருக்கின்றார்கள். இதுதான் தமிழ்பேசும் மக்களின் தலைவிதி. அந்த தமிழ் மக்களுக்கு கூறுவதற்கு அவர்களிடம் பொய்யையும் புரட்டையும் தவிர, வேறு எதுவுமில்லை. தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கினால் புலிகளை அரசியல் அனாதையாக்கிவிடுவார்கள்

நீதியானதும் நியாயமானதுமான ஒரு மக்கள் யுத்தத்தை இனி ஒருநாளும் புலிகளால் நடத்தவே முடியாது. மாறாக அநியாயமான மக்கள் விரோத யுத்தத்தையே புலிகளால் நடத்த முடியும். எப்படி மக்களுக்கான ஒரு பேச்சுவார்த்தையை அவர்கள் நடத்த முடியாதோ,

இந்த கேள்வி இலங்கையின் இன்றைய சூழலில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தாக மாறிவிட்டது. அன்னிய தலையீடு தவிர்க்க முடியாத ஒன்றாகவே, இன்றைய அரசியல் போக்கு வலிந்திழுக்கின்றது. எப்படி யுத்த வெறியர்களின் யுத்தத்தை இன்று மக்களால் தடுத்து நிறுத்த முடியாதிருக்கின்றதோ, அதேபோல் இந்த அன்னிய தலையீட்டையும் தடுத்து நிறுத்தும் நிலையில் மக்கள் இல்லை.

புலிகள் மற்றும் புலிகள் அல்லாத அனைத்து தளத்திலும், யாழ் மேலாதிக்கம் தான் தமிழ் மக்களையே பிளந்து, அவர்களை தனக்குள் அடிமைப்படுத்துகின்றது. சமூகத்தில் காணப்படும் அனைத்து சமூக ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராட மறுக்கும் உள்ளடக்கம் தான், யாழ் மேலாதிக்கம். யாழ் மேலாதிக்கம் என்பது தனி நபர்கள் அல்லது குழுக்கள் சார்ந்ததல்ல.

இறுதி யுத்தத்துக்கான நாலாவது ஈழப்போர் தொடங்கிவிட்டது என்று, அடிக்கடி புலித்தரப்பாலும் புலிப் பினாமிகளாலும் மகிழ்ச்சியாகவே பரபரப்பூட்டப்படுகின்றது. ஆனால் யுத்த முனைப்புகள் அனைத்தும், அவர்கள் விரும்பும் கோரமான யுத்தமின்றி சப்பென்று பிசுபிசுத்து போகின்றது. இருந்தபோதும் பரந்த தளத்தில் பாரிய தாக்குதல்கள்,

ஐயோ அப்பாவிகளை கொன்று போட்டாங்கள் என்று புலிகள் ஓலமிடுகின்றனர். அவர்கள் அப்பாவிகள் அல்ல புலிகளே, எனவே கொன்றோம் என்று பேரினவாத அரசு திமிரெடுத்து கூச்சலிடுகின்றது. முல்லைத்தீவில் நடந்த குண்டுவீச்சில் கூட்டம் கூட்டமாக கொல்லபட்டவர்களையிட்டு,

அண்மையில் புலிக் காட்டுப்பிரதேசங்கள் மீதான பொருளாதார தடையையடுத்து ரி.ரி.என் தொலைக்காட்சியில் நிலவரம் என்ற பகுதியில் 'பொருளாதார தடைகளும் பொருண்மிய போராட்டமும்" என்ற தலைப்பில் ஒரு உப்புச்சப்பற்ற நடைமுறைக்கு உதவாத பரப்புரை ஒன்றைச் செய்தனர்.

அண்மையில் புலிக் காட்டுப்பிரதேசங்கள் மீதான பொருளாதார தடையையடுத்து ரி.ரி.என் தொலைக்காட்சியில் நிலவரம் என்ற பகுதியில் 'பொருளாதார தடைகளும் பொருண்மிய போராட்டமும்" என்ற தலைப்பில் ஒரு உப்புச்சப்பற்ற நடைமுறைக்கு உதவாத பரப்புரை ஒன்றைச் செய்தனர்.

யுத்தத்தின் பெயரில் நடந்தது இனவழிப்பே. இதைப் புலிகள் தொடங்கி வைக்க, பேரினவாதம் முடித்துவைக்க முனைகின்றது. உண்மையில் இரண்டு இராணுவங்கள் மோதவில்லை. திருகோணமலையில் இருந்து தமிழ்மொழி பேசும் மக்களை விரட்டியடிக்கும் பேரினவாத திட்டத்துக்கு இணங்க,

ஏகாதிபத்தியம் மக்களின் எதிரி என்பதையும், புலிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள் எப்படி ஏகாதிபத்தியத்துக்கு உதவுகின்றது என்பதையும் கண்டு கொள்ளும் போது இவை மக்களைச் சார்ந்து நிற்பதன் அவசியத்தையும் மீண்டும் எமக்கு உணர்த்துகின்றது. ஜனநாயகம்,

இது இராணுவம் மீதான தாக்குதல் அல்ல. முஸ்லீம்கள மீது மிகவும் திட்டமிட்டு நடத்திய ஒரு இனவெறி தாக்குதலே. இதன் போதே இராணுவம் தாக்கப்பட்டது. நூற்றுக் கணக்கான முஸ்லிம் மக்கள் திட்டமிட்ட வகையில் கொல்லப்பட்டுள்ளனர்.

1991 முதல் சமரில் எழுதிய சில கட்டுரைகள்

வாசகர்களும் நாங்களும்

 

சமர் 03

ஒரு தேசவிடுதலைப் போராட்ட காலகட்டத்தில் மக்கள் என்பவர்கள் யார் என்ற ஒரு மிகப்பெரும் தத்துவார்த்தப் பிரச்சனை தொடர்பாக "முரண்பாடு பற்றி" என்ற நூலில் மாவோ தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்.

புலித்தேசியம் ஜனநாயகத்தை மறுக்கின்றது. புலியெதிர்ப்பு ஜனநாயகம் தேசியத்தை மறுக்கின்றது. இதற்குள் நடுநிலை என்பதும் அல்லது இதில் ஒன்றை ஆதரிக்க கோருவதுமான விமர்சனங்கள் அர்த்தமற்றவை.

ஏகாதிபத்தியம் சார்ந்து செயற்படும் புலியெதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்து, மீண்டும் அசுரா அரசியலற்ற நிலையில் புலம்புகின்றார். மாற்று அரசியல் எதுவுமற்ற புலியெதிர்ப்பு தேனீயில் 'வெட்ட முளைக்கும் அசுராவின் தலை" என்று புலம்பி ஊளையிட்டபடி, தான் எதை சொல்ல முனைகின்றேன் என்று தெரியாது வெள்ளாடு போல்

தேனீ என்ற புலியெதிர்ப்பு இணையத்தில் 'தேசியம் என்றால் அது நான் தான்!" என்ற பெயரில், பிரபாகரனின் கற்பனைப் பேட்டி ஒன்றை தனது அரசியல் உள்ளடகத்தில் உளறியபடி இக்கும்பல் வெளியிட்டுள்ளது. இந்த பேட்டி யாழ் மேலாதிக்க சாதிய சன்னதங்களுடன்,

போக்கிரிகள் வேஷம் போடுவதில் தலை சிறந்தவர்கள். சமூக அக்கறையாளனாக தன்னை காட்டிக் கொண்டு நடிப்பதில் கூட, மிக மோசமான அற்பர்களாகவே உள்ளனர். சமூகத்தில் மோசமானதை தாம் ஏற்றுக் கொள்வதில்லை என்பார்கள்,

இது எம்மிடம் எமது இணையத்தின் ஊடாக கேட்கப்பட்ட கேள்வி. அதில் ஒரு ஈமெயில் தந்த போது, அவர்களுக்கான பதில் திரும்பிவிட்டது. இதே கேள்வியை சத்தியக்கடாதாசியிலும் பதிவிடப்பட்டுள்ளது. முழுமையான கேள்வி

யாழ்ப்பாணியம் என்பதாலோ, அதிகாரவாதிகள் என்பதாலோ, தலித்தியம் என்பதாலோ எதிர்புரட்சி அரசியல் புரட்சிகரமாகிவிடாது. புலி ஆதரவு போல், புலியெதிர்ப்பின் எதிர்புரட்சிகர செயற்பாடுகளும், உலகெங்கும் அம்மணமாகி வருகின்றது. இவர்கள் எல்லோரும் ஒட்டு மொத்தமாகவே மக்களின் எதிரிகள் தான் என்பதையும்,

18.05.2006 அன்று நான் எழுதிய 'சுத்திகரிப்பும் தூய்மையாக்கலும்" கட்டுரையில் இன்றைய படுகொலைக்குரிய அரசியல் நிலைமையை எடுத்துக் காட்டினோம்;. 'இந்த நிலையில் புலிகள் புதிய அரசியல் நெருக்கடியில் சிக்கிவருகின்றனர். மீள வழியற்ற சூறாவளிக்குள் சுழலுகின்றனர். வழமையாக அமைதி நிலவும் காலங்களில்

இதை ஒப்புக் கொண்டபடி தான் கொலையை பற்றி புலம்புகின்றனர். ஆயுதம் ஏந்தியுள்ள நாங்கள் செய்யவில்லை என்று சொல்லும் தகுதி, இன்று யாருக்கும் கிடையாது. மற்றவன் செய்தான் என்ற குற்றச்சாட்டுகள், கொலையை நிறுத்துவதற்காக அல்ல.

08.6.2006 அன்று புலியெதிர்ப்பு அரசியல் விவாதம் நடந்த கொண்டிருந்த நேரத்தில், ரி.பி.சி மீது மிகவும் திட்டமிட்ட வகையில் தாக்குதல் ஒன்றை புலிகள் நடத்தினர். நிகழ்ச்சிகள் அடிக்கடி தடைப்பட்ட நின்ற நிலையிலும், இது தொழில் நுட்பக் கோளாறல்ல,

சிறிரங்கனை அடிபணிய வைக்கவும், புலிகளின் ஏக பிரநிதித்துவத்தை பாதுகாக்கவும், விடப்படும் மிரட்டலின் ஒரு வடிவம் தான் இது. இது ஒன்று ஆச்சரியமானதல்ல. புலியின் தேசிய மொழியே, அவர்களின் பண்பாடே இது தான்.

(மயூரன் எழுதிய இணைய கட்டுரை மற்றும் செய்திகளின் எதிர்வினையில் இருந்து இது எழுதப்பட்டது.)

 

உங்கள் அச்சம் நேர்மையானது. புலிகளின் பதிலளித்த முறைமை எல்லாம் மேலும் சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. நேற்று பி.பி.சி தமிழ் சேவை நேரடியாக புலிகள் மற்றும் முஸ்லீம் பிரதிநிதிகளுக்கிடையிலான ஒரு கருத்து பரிமாற்றத்திலும் இதுவே பிரதிபலிக்கின்றது.

கொலைகார ரசிகர்களுக்கு என்று ஒரு இனம் உண்டு என்றால், அது தமிழ் இனம் தான். கொலைகள் ரசிக்கப்படுகின்றது. விதவிதமாக வக்கிரமாக கொல்லப்படுகின்றனர். அதையும் விதவிதமாகவே ரசிக்கின்றனர். கார்ல் மார்க்ஸ் இந்தியா பற்றிய தனது கட்டுரையில்

இது ஏகாதிபத்தியத்தால் தனது சொந்த பொருளாதார நலன் கருதி உருவாக்கப்பட்டது. இஸ்லாமியர் என்ற பொது அடையாளம், அங்கு வாழும் மக்களை, இஸ்லாமிய மதத்தில் பிறந்தவர்களை எல்லாம் உள்ளடக்கிவிடாது. மக்களை மதத்தின் ஊடாக அடையாளப்படுத்துவது மிகப் பெரியளவிலான அடிப்படைத் தவறாகும்.

எமது தேசிய வரலாறு என்பது இனத் தூய்மையாக்கலும், புலி சுத்திகரிப்பும் என்ற எல்லைக்குள்ளான கொலைகளால் ஆனாவை. அன்றாட அரசியல் என்பதே கொலைகளின் நிகழ்ச்சி நிரலாகிவிட்டது. பேரினவாதிகளும் புலிகளும் கூட்டாகவே நடத்தும் இந்த கொலை வெறியாட்டத்தில், ஒரு இனத்தின் இருப்பே அழிகின்றது. இதன் முடிவு தான் என்ன? முடிவின்றி தொடரும் இந்த எதிர்நிலைப் படுகொலைகள்,

மக்கள் பற்றி பேசமறுக்கும் கூட்டுச் சதி. தத்தம் நோக்கில் அரசியல் ரீதியாக இழிந்து போன தமது சமூக இருப்பில் இருந்து கொண்டு, புலம்புவதும் அலம்புவதும் நிகழ்கின்றது. மக்களின் நலன் பற்றி, அவர்களின் சமூக பொருளாதார அரசியல் உறவு பற்றி எந்த அக்கறையுமற்ற வாதங்களும், நியாயங்களும்.

மனிதவினம் தன்னைத்தான் கற்றுக் கொள்ளவும், தனக்காக போராடவும், அதை எப்படி போராடுவது என்பதையும், நேபாள மாவோயிஸ்டடுகள் (நேபாள கம்யூனிஸ்ட் கட்சி - மாவோயிஸ்ட்டுகள்) நடைமுறையில் உலகிற்கே நடைமுறைப்படுத்தி காட்டுகின்றனர். உலகமே அதிரும் வண்ணமும், ஏகாதிபத்தியங்களை பதைபதைக்க வைத்தும்,

நாம் 'மாமனிதன்" என்று பட்டம் கொடுத்தமைக்காக மன்னிக்க வேண்டும். பட்டம் பதவிக்காகவே அன்றாடம் குலைத்து வாழும் அவரை, இதற்காக நாம் அவரை பெருமைப்பட சிறப்பிப்பது தவறானதல்ல. அவர் ஆசைப்பட்டு கடந்தகாலம் ழுழுக்க கட்டிப் பாதுகாத்து வந்த இந்த அரசியல் இலட்சியக் கனவை,

இது ஒன்றும் உழைக்கும் வர்க்கத்தின் ஒய்வு நாள் அல்ல. இது பொழுது போக்கும் களியாட்ட நாள் அல்ல. இந்த நாள் முதலாளியின் இரக்க உணர்வில் உருவான நாளும் அல்ல. மாறாக மூலதனத்துக்கு எதிராக பாட்டாளி வாக்கம் இரத்தம் சிந்தி போராடிய நாள். இந்த நாளில் உலக தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காக போராடி பலர் மரணித்த நாள்.

தேசியத்தை எப்போதோ அழித்துவிட்ட புலிகள் இன்று செய்வது என்ன? தமது சொந்த இனத்தை அழிக்கின்றனர். ஒரு விடுதலை இயக்கமே அதை செய்து முடிக்கின்றது. இது ஒன்றும் கற்பனையான எனது தனிப்பட்ட முடிவல்ல. நடந்து கொண்டிருப்பதை அடிப்படையாக கொண்ட, ஒரு எதார்த்தமான சமூக உண்மை இது.

அண்மையில் மரணமடைந்த புஸ்பராஜா பற்றி, பலரும் எதிர்பார்த்தது போல் நான் எதையும் எழுதாமல் இருந்தேன். அவரின் 35 வருட அரசியல் சார்ந்த பொதுவாழ்வும், சில காலம் கடுமையான சித்திரவதையுடன் கூடிய சிறைவாழ்வும் என எதையும், அரசியல் ரீதியாக நியாயப்படுத்த முற்படாத ஒரு நிலையில் மரண நிகழ்வு நடந்தது.

(இக்கட்டுரை எழுதி முடித்து வெளியிட இருந்த அன்று, பிரஞ்சு அரசு தான் கொண்டு வந்த மக்கள் விரோதச் சட்டத்தை மீளப் பெற்று இருந்தது. இதனால் இதன் ஒரு பகுதி நிகழ்காலத்தில் இருந்து இறந்த காலத்துக்கு திருத்தப்பட்டுள்ளது.)

 

'டிமைகளுக்கான ஒப்பந்தம்" ( Contrat Pour Esclaves) என்று மாணவர்களால் சரியாகவே வருணிக்கப்பட்டு, இதற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் பிரஞ்சு சமூகத்தையே விழிப்புற வைத்தது.

மனித உரிமைக்கான கண்காணிப்பு அமைப்பு (HUMAN RIGHTS WATCH) கனடா மற்றும் இங்கிலாந்தை அடிப்படையாக கொண்டு புலம்பெயர் தமிழர்கள் மீதான புலிகளின் நிதி அறிவீடு பற்றிய ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

மீண்டும் மீண்டும் அமைதி, பேச்சுவார்த்தை என்று தொடரும் அரசியல் நாடகத்தில் பங்கேற்கும் அரசியல் கோமாளிகள், ஒட்டுமொத்த மக்களின் வாழ்வையும் மிக கேவலமாகவே இழிவாடுகின்றனர். அதேநேரம் இவர்களின் கோமாளித்தனம் உருவாக்கும் ஒவ்வொரு அமைதியும், மக்களின் நிம்மதி மூச்சாகவே எழுகின்றது. இவை எல்லாம் எதை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. யுத்தம் மக்களுக்கானதல்ல என்பதையும், யுத்தம் மக்களுக்கு எதிரானதாகவே நடத்தப்படுவதையும் எடுத்துக் காட்டுகின்றது. இதுவே தமிழ் தேசிய யுத்தம் பற்றிய மக்களின் மனப்பாங்காகும்.

எடுத்த எடுப்பில் அதன் உண்மை முகத்தை இலகுவாக புரிந்து கொள்ள முடியாத, மிகவும் சூக்குமமான ஒன்றாகவே உள்ளது. திரிந்து போன நிலையில், கற்பனையான போலியான பகட்டுத்தனத்தில் இது மிதக்கின்றது. பொதுவாக மனிதனின் உரிமை சார்ந்த ஒன்றாக புரிந்து கொள்வது நிகழ்கின்றது. ஆனால் அந்த உரிமை என்பது சூக்குமமாகிவிடுகின்றது. ஜனநாயகத்தின் அடிப்படையே சமூகத்துக்கு எதிரானதும், தனிமனிதனின் குறுகிய நலன்களுக்கும் உட்பட்டதே.

பிரான்சில் மாணவர் போராட்டம் மூலதனத்துக்கும் அதன் எடுபிடியாகவுள்ள அரசுக்கும், மீண்டும் தனது அரசியல் பாடத்தை புகட்டத் தொடங்கியுள்ளது. தன்னியல்பான இப் போராட்டம் இயல்பில் அனைத்துவிதமான அரசியல் துரோகங்களையும் அம்பலப்படுத்தி

தமிழ் மக்களின் பெயரில் "ஜனநாயக" கூத்து நடத்தப்படுகின்றது. "ஜனநாயகம்" என்ற பெயரில், ஜனநாயக மறுப்பு அரங்கேறுகின்றது. மாற்றுக் கருத்து என்ற பெயரில் பாசிசம் சித்தாந்தமாகின்றது. இதுவே புலியின் மாற்று என்று கூறிக்கொள்ளும் புலியெதிர்ப்புக் கும்பலின் நடைமுறை சார்ந்த அரசியலாகிவிட்டது.

அண்ணைமார்கள் எழுதுவதை நிறுத்தக் கோருகின்றனர். இதைத் தான் எனக்கு பிரஞ்சு ஏகாதிபத்தியம் உத்தியோகபூர்வமற்ற வகையில் கூறுகின்றது. அவர்கள் கூறியதற்கு பின்னால் எதிர்வினையின்றி, நிலைமை அமைதியாகவே உள்ளது.

சிலர் எமது விமர்சன மொழி பற்றியும், விமர்சனப் பண்பாடு பற்றியும், விமர்சன நாகரிகம் பற்றியும் கூட எம்முடன் முரண்படுகின்றனர். நாம் ஒருமையிலும் அஃறிணையிலும் (சிலரைக் குறித்து) விவாதிப்பதையும், மிருகங்களுடன் ஒப்பிட்டு எழுதுவது

இது தான் அண்மையில் சுவிஸ்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் சாரம். இப்படிக் குறிப்பிடுவதை இட்டு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இவ்வளவுதானா பேச்சுவார்த்தை? இவ்வளவு தான். 2001 இல் நடந்த பேச்சுவார்த்தையும், அதைத் தொடர்ந்த நடந்த நிகழ்வு இதைத்தான் எமக்கு கற்றுத் தந்துள்ளது. கருணா விவகாரத்துக்கு முன்னம் நடந்த தொடர் கொலைகள் அனைத்தும், யார் எதற்காக ஏன் செய்தார்கள்? இந்த தொடர் கொலைகள் மூலம் தமிழ் சமூகத்தையே அச்சுறுத்தி சாதித்தது என்ன?

எமது விமர்சனத்தின் தன்மையையொட்டி புலியெதிர்ப்பு அணியினர் எம்மீது ஆத்திரம் கொள்கின்றனர். தமது மோசடி அம்பலமாவதால், கண்ணை மூடி ஆதரித்த தமது அணிகள் விழிப்புற்று கேள்வி கேட்பதால் இது ஆத்திரத்தை உண்டாக்குகின்றது.

ஜனநாயகம் சார்புத் தன்மையானது என்பதை நிறுவும் முயற்சியில், புலியெதிர்ப்பு அணியின் முயற்சிகள் சந்தியில் தலை விரிகோலமாகி வருகின்றது. புலிகளிடம் ஜனநாயகத்தை கோரும் புலியெதிர்ப்பு அணி, தமக்கு அது பொருந்தாது என்பதையே ராம்ராஜ் விடையத்தில் மீண்டும் நிறுவிக் காட்டமுனைகின்றனர்.

பாசிசம் தனக்கு அரசியல் முலாம் ப+சக்கூடிய ஒருவர் மூலம் களத்தில் இறங்கியுள்ளது. எதிராளிக்கு எதிரான தமது பாசிச நடத்தையை, முதல் முதலாக ஜனநாயகத்தின் ஒரு கூறாகத் காட்டத் தொடங்கியுள்ளது. இதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாது திணறுவதும் புலம்புவதும் நிகழ்கின்றது. ஜெயதேவனுக்கு எதிராக ஈழம் வெப் இணையத்தில் வெளிவந்த ஒரு கட்டுரைக்கு எதிராக தேனீ இணையத்தளத்திலும், ரி.பி.சியிலும் விவாதிக்கப்பட்டது. சபேசன் என்பவரால் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை, அவரின் சொந்தப் பெயரில் சொந்த இணையத்தில் எழுதப்பட்டுள்ளது. ஒருபுறம் சபேசன் புலிப்பினாமியாக நாய் வேசம் போட்டுக் குலைக்க, ஜெயதேவன் கும்பல் பனங்காட்டு நரி வேஷம் போட்டு ஊளையிடுவதுமே விவாதமாகியது.

முட்டாள்கள் முட்டாளாகவே நீடிப்பார்கள். ஒரு தலைமையே முட்டாளாகிவிட்டால், முட்டாள்தனமே சமூகத்தை குரூரமாக்குகிறது. இதுவே போராட்ட அமைப்பில் ஏற்பட்டுவிட்டால், எங்கும் வேதனையும், துன்பமும், தீமையும் சமூகத்தின் தலைவிதியாகி விடுகின்றது. சமூகம் எதையும் சுயமாக ஆற்றும் சமூக ஆற்றலை இயல்பாகவே இழந்து விடுகின்றது. சமூகம் சுய உணர்வை இழந்து, சுதந்திரத்தையே இழந்து விடுகின்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் பெரு மூச்சுக்கள் எந்தவிதமான இரைச்சலுமின்றி போகின்றது. வாய்விட்டு அழவும் முடியாத, பீதி கலந்த அச்சவுணர்வே சமூக உறவாகிவிடுகின்றது.

தமிழ் சமூகம் சமூக சீரழிவுக்குள்ளாகி வரும் ஒரு வரலாற்று காலகட்டத்தில் நாம் எம்மை அறியாது பயணித்துக் கொண்டிருக்கின்றோம். தமிழ்மக்களின் படித்த சுயநலம் கொண்ட முட்டாள்தனத்தையே பயன்படுத்தி உருவான புலிப் பாசிச பயங்கரவாதம், மக்களிள் வாழ்வை உறுஞ்சிக் குடிப்போருக்கு இசைவானதாகவே உள்ளது. சிங்கள பேரினவாதம் தமிழ் மக்களையே எதிரியாக்கி ஒடுக்கி நிற்க, புலிகள் சிங்கள அரசை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு தமிழ்மக்களையே அரையடிமைகளாக்கியுள்ளர். இதன் மூலம் ஒரு கும்பல் உழைப்பின்றி உழைப்பை சூறையாடி வாழ்வதே தேசியமாகிவிட்டது. மனிதப் படுகொலைகளையே தேசியமாக கற்பிக்கும் புலிப் பினாமிகள் சொந்த உழைப்பின்றி, இவர்கள் கருதும் தேசியத்தையே உறிஞ்சி வாழ்வது எதார்த்தமாகிவிட்டது.

மனித நேயத்தை, மனிதத்துவத்தை விரும்பும் ஒருவனுக்கு இவை நிகழ்வது உண்டு. அற்பர்கள்  முதுகுக்கு பின்னால் மறைந்து நின்று கொண்டு எறியும் அவதூறுகள், வரலாற்றின் குப்பையில் தான் வீழ்கின்றன. சிறிரங்கன் பற்றிய பதிவொன்று, மிகவும் கேடுகெட்ட வகையில் பதிவிடப்பட்டு இருந்தது. திண்ணையில் பதிவிடப்பட்ட ஒரு கட்டுரை

பாரிசில் ஒரு பெண்ணை இணங்க வைக்கும் பாலியல் வன்முறை முயற்சி ஒன்று சந்திக்கு வந்துள்ளது. அதுவும் ஆணாதிக்கத்தை எதிர்த்து பெண்ணியம் பேசிய ஒருவரால், தலித்தியம் பேசிய ஒருவரால் இது நிகழ்த்தப்பட்டுள்ளது. அதுவும் புலம்பெயர் இலக்கிய வட்டத்தில் இது நிகழ்ந்துள்ளது.

பொதுவாக இன்றைய பாசிச சூழலிலும், சீரழிந்த மாற்றுக் கருத்து தளத்தையும் எதிர் கொள்ளமுடியாத நிலையில், வாழ்வின் மீதான மனித நம்பிக்கையை இழந்து சிலர் கருத்துக் கூற முனைகின்றனர். நம்பிக்கையாக மக்களின் வாழ்வு சார்ந்து

நாம் ஏன் இவர்களை காடையர்கள் என்கின்றோம்? மக்களின் சமூக பொருளாதார உறவுகளுடன், எந்த சமூக உறவுமற்றவர்கள் நடத்துவது காடைத்தனம் தான். இதை யாரும் தேசியம் என்று கூறமுடியாது. தமது அரசியல் என்ன, தமது நோக்கமென்ன என எதுவும் கூறத் தெரியாதவர்கள், மக்களின் பெயரில் நடத்தும் அனைத்தும் சமூகவிரோதத் தன்மை கொண்டவையே. இவை காடைத்தனமாகவே எப்போதும் சமூக உள்ளரங்கில் அரங்கேற்றப்படுகின்றது.