கைபர் மற்றும் போலன் கணவாய் வழியாக நடந்த ஆரிய படையெடுப்பு என்பது பழைய செய்தி. ஒரு கையெழுத்தின் மூலமாகவே, தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு எனும் முந்தைய தி.மு.க. அரசின் அரசாணையை கோபுரச் சின்னத்தால் ஒரு குத்து குத்தி கிழித்தெறிந்து விட்டது பார்ப்பனப் பேய். கருணாநிதியின் குறுகிய சுயநல நோக்கில் தமிழ்ப் புத்தாண்டு மாதத்தை மாற்றி விட்டதாகவும் ஒரு ஆணவ அறிக்கை விட்டது அந்தக் கொள்ளிவாய். ஆமாம் ஆமாம் என்று தலையாட்டவும் சில தமிழறிஞர்கள்.
புதிய கலாச்சாரம்
டீனேஜ் பெண்ணின் கர்ப்பம் முதலில் கடைக்காரனுக்கு தெரிந்ததெப்படி?
தனியார் துப்பறியும் நிறுவனங்களைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தியாவில் இருக்கும் மேட்டுக்குடியினர் தமது வாரிசுகளின் மண உறவு, கள்ள உறவு குறித்த உண்மைகளைக் கண்டுபிடிப்பதற்கு இவர்களைப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்காவில் அதற்கும் மேலே போய் ’ஒரு மனிதன் என்ன பொருள் வாங்குகிறான்’ என்று கண்டுபிடிப்பதற்குக் கூட ஆள் வைத்து அறிந்து கொள்கிறார்கள். அதாவது எல்லா பேரங்காடிகளையும் நடத்தும் நிறுவனங்களுக்கு இத்தகைய புலனாய்வுப் புலிகள்தான் முக்கியமானவர்கள்.
ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு…..
ஒவ்வொரு நாளும் இருநூறு கி.மீ. தூரம் வரை புகைவண்டியில் கடந்து வேகமாக சென்னைக்குள் வந்து விட்டு, மாலை ஆறு மணிக்கு மீண்டும் அதே வேகத்துடன் இன்னொரு இருநூறு கி.மீ பின்னோக்கிப் பயணித்து, இடைப்பட்ட நான்கு மணி நேரத்தை இருளில் உண்டு, உறங்கிக் கழித்து விட்டு, அதிகாலை நான்கு மணிக்கு மீண்டும் எழுந்து சென்னைக்கு பயணிப்பவர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?
நிஜாமின் கஜானாவுக்கு வரி கிடையாதா?
ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2008-ஆம் ஆண்டு வெளியிட்ட கடந்த நூற்றாண்டின் (1900-2000) பணக்கார வரலாற்று மாந்தர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்திலிருக்கும் ஹைதராபாத் நிஜாமின் அதிகாரப்பூர்வ சொத்து மதிப்பு 210.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதே பட்டியலில் இருபதாவதாக வரும் பில்கேட்சின் சொத்து மதிப்பு 101 பில்லியன் டாலர்கள் தான்.
ஐ.பி.எல்: முதலாளிகளின் மங்காத்தா!
இந்தியன் பிரீமியர் லீக் எனும் குத்தாட்ட கிரிக்கெட் போட்டியின் இரசிகனான பொறியியல் கல்லூரி மாணவன் ரவிச்சந்திரா, ஐ.பி.எல் சூதாட்டத்தில் ஐந்து இலட்சம் ரூபாõயைத் தோற்றுவிட்டு, அதனை அடைப்பதற்காக ஒரு சிறுவனை கடத்தி, பிணையத் தொகை கேட்டுக் கொலையும் செய்துவிட்டான். இது ஆந்திரத்தின் கோதாவரி மாவட்டத்தில் ஒரு சிறுநகரில் நடந்திருக்கும் சம்பவம்.
சினிமா விமரிசனம்: ‘காதலில் சொதப்புவது எப்படி?‘
உண்மையான காதலென்பது ஆவிகளைப் போல; அதைப் பற்றி அனைவரும் பேசுவார்கள் என்றாலும் பார்த்தவர்கள் சிலர்தான்.
- & François de La Rochefoucauld (17 ஆம் நூற்றாண்டு பிரெஞ்சு எழுத்தாளர்)
எண்பதுகளில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை முதல் தற்போது படையெடுக்கும் காதல் சார் திரைப்படங்கள் வரை இடம், காலம் மட்டும்தான் மாறியிருக்கின்றன; பொருள் மாறவில்லை. அன்று கிராமம், கடற்கரை, ஏழ்மை, சைக்கிள், பேருந்து, ஊரக விளையாட்டு என்றிருந்தவை இன்று காஃபி ஷாப், ஷாப்பிங் மால், மல்டி பிளக்ஸ், ஸ்கூட்டி, ஃபேஸ்புக், நடுத்தர வர்க்கம் என்று ’வளர்ந்தி’ருந்தாலும் காதலின் சித்தரிப்பு என்னவோ அதேதான்.
சிறுகதை: ‘குடி’காத்த மாரியம்மன்!
“என்ன? வய வேல எதனாச்சும் நடக்குதா! ஆளையே பார்க்க முடியல.”
அதெல்லாம் ஒண்ணுமில்ல. வரப்ப மிதிச்சு மாசம் ஆவுது! நம்ப பயதான் பயணம் போவணும்னு பிடிவாதமா இருக்கான். அந்த வேலயாதான் ஏஜெண்ட பாக்க வடமட்டம் வரைக்கும் போயிருந்தேன். இப்பதான் நம்ப தவக்கள மவன் ட்ரஸ்டி தேடுனார்னு சொன்னான். ஏண்ணே! எதனாச்சும் பஞ்சாயத்தா? “
குறுக்கு வெட்டு – 2012/1
ரண்வீர் சேனா குண்டர்கள் விடுதலை!
1996-ஆம் ஆண்டு ராஜ்புத் மற்றும் பூமிகார் ஆதிக்க சாதிகளது குண்டர் படையான ரண்வீர் சேனா, மத்திய பீகாரின் போஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பதானி டோலா ஊருக்குள் நுழைந்து 21 தலித் மக்களைக் கொடூரமாகக் கொன்றது. கொல்லப்பட்டவர்களில் பெண்கள், சிறுமிகள் ஏன் பத்து மாதக் குழந்தையும் கூட உண்டு. குற்றவாளிகளை ஆரா மாவட்டத்தில் உள்ள அமர்வு நீதிமன்றம் பதினைந்து ஆண்டுகளாக விசாரித்து, கடந்த 2010 மே மாதம் மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனையும், இருபது பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது.
உனக்கும் சேர்த்து தான் மே நாள்!
தொழிலாளி என்றால்
வேறு யாரோ போல் நினைக்கிறாய்!
நடை, உடை, பாவனை
நவீன முகப்பூச்சு,
பன்னாட்டு குளிர்பானம் உதட்டில்
பாதிகிழிந்து தொங்கும் ஆங்கிலம் நாக்கில்.
அணுத்திமிர்
அவன் கொடுப்பதை குடிக்க வேண்டும்,
அவன் தருவதை படிக்க வேண்டும்,
நம் தினச்சாவு கூட – இனி
அணுச்சாவாகவே அமைய வேண்டும்
எனும் அமெரிக்க திமிரின்
ஆதிக்க குறியீடே,
கூடங்குளம் அணு உலை !
The Whistleblower (2010) திரை விமரிசனம் : அமெரிக்க, ஐ.நா அமைதிப்படையின் அட்டூழியங்கள்!
உலகம் முழுவதிலும் போர் நடக்கும் நாடுகளுக்கு ஐ.நா.வின் அமைதிப்படை செல்கின்றதே, அதன் வேலை என்ன? ஏதோ ஒரு நாட்டில் அமைதியை ஏற்படுத்த அவர்கள் ஏன் சிரமப்பட வேண்டும்? அப்படி ஒரு ஆபத்தான பணியை அவர்கள் ஏன் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள்?
இந்தக் கேள்விகளுக்குச் சரியான, அதே நேரம் அதிர்ச்சியான பதிலைச் சொல்லும் திரைப்படம் தான்“Whistle Blower ”. ஐ.நா. அமைதிப்படையின் கோர முகத்தை உறைக்கக் கூறும் இந்த திரைப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.