12012020செ
Last updateஞா, 29 நவ 2020 7pm

மின்கட்டண ஏமாற்றமும் நிவாரத்திற்கான போராட்டமும்

இந்தநாட்டு ஜனாதிபதிக்கும், ஒட்டு மொத்த அமைச்சர்களுக்கும் ஏற்ப இன்று இந்நாட்டில் மக்கள் நல அரசாங்மொன்றுதான் இருக்கின்றது. தேசாபிமான அரசாங்கமொன்றதான் இருக்கின்றது.


குழப்பு குழப்பு நாட்டைக் குழப்பு! -'தம்பி" யை நாட்டிலிருந்து விரட்டு! இறைச்சிக் கடையை மூடு!


மாடுகளை கொலை செய்வதை  நிறுத்துமாறு கோரி தனது மேனியில் தானே பெற்றோலை ஊற்றிக் கொண்டு இறந்த போவத்தே இந்திர ரத்ன தேரரின் உடலை பெற்றுத் தருமாறு கோரி அலரி மாளிகையின் முன்பாக ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்திய , இறைச்சிக் கடைகளை உடைத்ததாகக் கூறும் சிங்கள ராவய ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்திலேயே மேற்கூறப்பட்ட கோஷங்கள் ஒலித்தன.

டென்மார்க் சமவுரிமை இயக்கத்தின் அங்குரார்பண நிகழ்வும் கலந்துரையாடலும் (படங்கள் இணைப்பு)

டென்மார்க் கோஸ்ரப்பரோவில் சம உரிமை இயக்க அங்குராப்பண கூட்டமும் கலந்துரையாடலும் (27/3/2013) இன்று நடைபெற்றது. தோழர்கள் ஸ்ரீஹரன், முரளி ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னிலை சோஷலிச கட்சியின் தலைமை உறுப்பினர் தோழர் குமார் குணரத்தினம் சிறப்புரை ஆற்றியதுடன் கலந்துரையாடலிலும் கலந்து கொண்டார்.

இன்று வியாழன் நோர்வேயில் சம உரிமை இயக்க கூட்டம்

இன்று  வியாழன் நோர்வேயில் சம உரிமை இயக்க அங்குராபணக் கூட்டம் நடைபெறவுள்ளது.

நோர்வேயில் நடைபெறவுள்ள கூட்டத்தின் விபரம்.

காலம்: 28-03-2013 நேரம்:- 5.30 P.M (வியாழன் மாலை)

கூட்டம் நடைபெறும் இடம்:

Vestaveien 26, 1476 RØYKÅS, LØRENSKOG, NORWAY


(ca. 3 min med bil fra LØRENSKOG ELKJØP )

செயல்தந்திரம் குறித்த மேற்கோள்கள் - லெனின் மேற்கோள்கள்

செயல்தந்திரத்தின் வரையறை

கட்சியின் செயல்தந்திரம் என்பதன் மூலம், நாம் ‘கட்சியின் அரசியல் நடத்தை, அல்லது பண்பு அதன் அரசியல் செயல்முறையின் திசைவழி மற்றும் வகைகள்’ ஆகியவற்றைக் குறிப்பிடுகிறோம்.

புதிய கடமைகள் அல்லது  புதிய அரசியல் சூழ்நிலை ஆகியவற்றின் விளைவாக, கட்சி முழுமைக்கும் அதன் சரியான அரசியல் நடத்தையை வரையறுப்பதற்காகக் கட்சியின் காங்கிரஸ்களால் செயல்தந்திரத் தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

(லெனின் – இரு செயல்தந்திரங்கள் – லெ.நூ. தி. 9.ப.22)

செயல்தந்திரம் பற்றிய கேள்வியானது கட்சியின் அரசியல் நடத்தையைப் பற்றிய கேள்வியாகும்.

நடத்தை வழியானது கோட்பாடு, வரலாற்றுக் குறிப்புக்கள், அரசியல் சூழ்நிலை முழுவதையும் பகுப்பாய்வு செய்தல், இன்ன பிறவற்றின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும்.

(லெ.நூ. தி. 9.ப.26)