06202021ஞா
Last updateவெ, 18 ஜூன் 2021 3pm

புலிகளை மீறிப் போராடும் மக்களும் புலி உறுப்பினர்களும்

மகிந்த சிந்தனையும் பிரபாயிசமும், மனிதத் தன்மையற்ற கெடுபிடியான இரக்கமற்ற ஒரு மக்கள் விரோத யுத்தத்தையே நடத்திவருகின்றது. இதில் சிக்கி தவிக்கும் மக்களையிட்டு எந்த அக்கறையற்ற சுயநலமே, இன்று எங்கும் புரையோடிக்கிடக்கின்றது. இதனால் பாதிக்கப்படும் மக்களையி;ட்ட எமது அக்கறை தான், இதை செய்பவர்கள் இவர்கள் மேலான எமது கடும் விமர்சனமாக மாறுகின்றது.  


மகிந்தவின் பாசிச சிந்தனையிலான புலித்தடை

இலங்கையில் புலியை தடை செய்யப்போவதாக அறிவித்துள்ள பின்னணியோ, மிகவும் ஆபத்தான பாசிசமாகும். புலிப் பாசிசமோ மக்களை யுத்தப் பணயப்பொருளாக வைத்துக் கொண்டு நடத்துகின்ற மனித விரோத யுத்தத்தையே, தனக்கு சாதகமாக கொண்டு பேரினவாதம் அறிவிக்கும் புலித் தடை சூழ்ச்சிமிக்கதும், ஆபத்தானதுமாகும். இதன் மூலம் தமிழினத்தை அழித்தொழிக்கும் யுத்தத்தை, சர்வதேச ஆதரவுடன் பேரினவாதம் நடத்த முனைகின்றது.

தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு துரோகம் இழைக்கும் புல்லுருவித்தனம்

தமிழ்மக்கள் இன்று எதை விரும்புகின்றனர்? இந்த யுத்தத்தையா? இந்த யுத்தத்தை ஆதரிப்பதையா? தற்காப்பு பெயரிலான மற்றொரு யுத்தத்தையா? அல்லது இவற்றில் இருந்து ஒரு விடுதலையையா? சொல்லுங்கள்! நெஞ்சில் துணிவிருந்தால், உங்களிடம் ஓரு துளி நேர்மை இருந்தால், அதைச் சொல்லுங்கள்.

மக்களின் அவலம், அவர்களின் தனிப்பட்ட பிரச்சனையா?

மக்கள் விரோத யுத்தத்தால் தமிழ் மக்களோ சொல்லொணாத் துயரங்களையும் துன்பங்ளையும் அனுபவிக்கின்றனர். இவை அவர்களின் தனிப்பட்ட பிரச்சனையா? இதற்காக கவலைப்படுவதோ, தேச விரோதமாக இன்று சித்தரிக்கப்படுகின்றது.

மக்களைப் பற்றிப் பேசும் துரோகத்துக்காக போராடி மரணிப்போம்

தமிழ் மக்களைப் பற்றி பேச மறுப்பதையே, தியாகம் போராட்டம் என்கின்றனர். ஒரு இனத்தை இன்று அழித்துக்கொண்டு இருப்பவர்கள் அனைவரும், இதைத்தான் கூறுகின்றனர். இதைத்தான், இன்று புலிகள் முதல் பேரினவாதம் வரை கூறுகின்றது. தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பேசாது, தேசியம், யுத்தம் பற்றி மட்டும் பேசக் கோருகின்றனர்.