11262020வி
Last updateசெ, 24 நவ 2020 7pm

புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ் கலாச்சாரம் என்றபெயரால் ............!

1980களின் பின் எம் தேசவிடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளுடன் 2 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் பல்;வேறு மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்துள்ளனர். இதைவிட 1 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இந்தியாவில் புலம் பெயர்ந்துள்ளனர். மேற்கு நாடுகளில்புலம் பெயர்ந்தோர்களில் 80 வீதமானோர் யாழ் குடாநாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மத்திய மற்றும் மேற்தட்டு வர்க்கப் பிரிவினராகவுள்ளனர். மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்தோரில் 98 வீதமானோர் பொருளாதார அகதியாகவே புலம் பெயர்ந்தவர்கள். இன்று மேற்கு நாடுகளில் இருந்து திரும்பிச் செல்லல் என்பது 5வீதம் அல்லது  10வீதமாக மட்டுமே இருக்கும்.


வதைமுகாமில் இருந்து தப்பி தலைமறைவாக வாழ்ந்த வாழ்வை கைவிட்டு பகிரங்கமான 21.08.1987 அன்று பல்கலைகழகத்தில் ஆற்றிய உரை

28.4.1987 அன்று உரிமை கோராத சதிகள் மூலம் கோழைத்தனமாக இரகசியமாக புலிகளால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்ய முயன்ற நிலையில், 16.7.1987 அவர்களின் புனித இரகசிய பாசிச வதைமுகாமில் இருந்து தப்பிச் சென்றேன்.