12022020பு
Last updateஞா, 29 நவ 2020 7pm

மீண்டும் ஜெனீவா மீட்டுத்தருமா எம் உரிமைகளை?

இல்லை என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை

யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் முழுமையாக குடியமர்த்தப்படவில்லை, யுத்தத்தில் சொத்துக்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்தவர்களுக்கு எவ்வித நிவாரணமோ இழப்பீடோ வழங்கப்படவில்லை, யுத்தத்தில் அவயங்களை இழந்தவர்களிற்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை, சுதந்திரமான ஊடக செயற்பாடுகளிற்கோ அரசியல் செயற்பாடுகளிற்கோ இடமில்லை, இராணுவ முகாம்களிற்காகவும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களிற்காகவும் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மக்களிடம் மீளக் கையளிக்கப்படவில்லை, சுதந்திரமான மீன்பிடித்தலிற்கு இன்னும் அனுமதியில்லை, விவசாயத்தை அபிவிருத்தி செய்ய எவ்வித திட்டங்களும் இல்லை, சீரழிந்த நீர்ப்பாசனம் மீள சீராக்கப்படவில்லை, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் சிறைக்கைதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை, கைதுகள் கடத்தல்கள் நிறுத்தப்படவில்லை, சேதமடைந்த பாடசாலைகள் புனரமைக்கப்படவில்லை, பொது இடங்களிலிருந்தோ தேவையற்ற இடங்களிலிருந்தோ இராணுவம் விலக்கிக் கொள்ளப்படவில்லை, காணாமல் போனவர்கள் தொடர்பாக எந்த தகவலும் இல்லை, சிவில் நிர்வாகமோ மக்களின் வாழ்வுரிமையோ உறுதி செய்யப்படவில்லை, யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்கள் நிறைவடைய உள்ள நிலையில் இப்படியான இன்னல்களைத் தவிர வேறொன்றும் இல்லை.


வங்கக் கடலோடிகளின் கண்ணீர்: வடபகுதி மீன்பிடியின் இன்றைய நிலை

கடந்தமாத போராட்டத்தில், பிரசுரிக்கப்பட்ட இக்கட்டுரைத் தொடரின் முதற் பாகத்தின் இறுதியில் '1983 இல் வடபகுதியின் அதி உச்ச மீன்பிடி காரணமாக, நாட்டின் 40 சதவீதத்திற்கும் அதிகமான மீன் உணவுத்தேவையை வடபகுதி மீனவர்களே பூர்த்தி செய்தனர். அக்காலத்தில் இலங்கையில் இருந்த மீன்பிடி தொழிலாளர்களில் 15 சதவீதமான மீனவர்கள் இந்த சாதனையை செய்தனர் என்று குறிப்பிட்டிருந்தேன். வடபிரதேச மீன்பிடி உச்சத்திலிருந்த 83 ஆம் ஆண்டில் மொத்தமான உள்ளக இயந்திரம் பொருத்தப்பட்ட ஆழ்கடல் மீன் பிடிப்படகுகள் (one day boats -3 ½ Tonners) 680 ஆகவும் வெளியிணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடி இழைப்படகுகள் 2600 ஆகவும், மரவள்ளங்கள் 3865 ஆகவும் இருந்தது. இந்தக் காலத்தில் பிடிக்கப்பட்ட பெருந்தொகையான மீன்கள் பிரதானமாகக் கண்ணாடி இழைப்படகுகளாலும், கரையோரத் தொழிலாளர் பயன்படுத்தும் மரவள்ளங்களாலேயே பிடிக்கப்பட்டது.

நாட்டை நாறடிக்கும் காவிச்சாமிகளும் ஆசாமிகளும்

மதக் குரோதத்தை மனதில் நிரப்பிக் கொண்டு, சிங்கத்தின் வாளை கையிலேந்தி இலங்கைவாழ் முஸ்லிம்களுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்திருக்கும் காவி உடை தரித்த இனவாத சாமியார்களும் அவர்களுக்கு குற்றேவல் புரியும் ஆசாமியார்களும் பெரும்பான்மை மக்களின் இன உணர்வுகளை தூண்டும் விதத்திலான கோஷங்களை ஏந்திக் கொண்டு, ஆர்ப்பாட்டம் பேரணி என்ற பெயரில் நாட்டை இனவாத சாக்கடையில் மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றனர்.

உலகப்பொருளாதார நெருக்கடி

ஒருவன் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டுமென்றால், மற்றவன் இழப்பதன் மூலம் துன்பத்தை அனுபவித்தாக வேண்டும். மற்றவனுடைய செல்வத்தை அனுபவிப்பது தான் மகிழ்ச்சி. இதுதான் இந்த தனியுடமை சமூக அமைப்பின் அறம் மற்றும் கோட்பாடாகும். இதை அமெரிக்க அரசின் முன்னைய முக்கிய கொள்கை வகுப்பாளரும், முக்கிய மந்திரியுமாக இருந்த கொலின் பாவெல் நறுக்குத் தெறித்தது போல் மிக எடுப்பாகவே கூறியிருந்தார். "தனிச் சொத்துரிமையை மதிப்பது மனித கௌரவத்தின் அடையாளம் இதில் சமரசம் செய்து கொள்வது கூடாது. சுதந்திரச் சந்தையும், சுதந்திர வாணிபமும் நமது தேசியப் பாதுகாப்புத் திட்டத்தில் முன்னுரிமை பெறுகின்றது" என்றார். தனியுடமைச் சமூக அமைப்பு இதைத் தாண்டி மனிதனை மனிதனாக மதிக்காது. இந்தத் தனியுடமை சார்ந்த பொருள் உலகில், மனிதன் தானும் ஒரு உயிருள்ள சடப்பொருளாக மாற்றப்பட்டு விடுகின்றான். இந்த சமூக அமைப்பில் ஏற்படும் அதிர்வுகளில் ஒன்றுதான் உலகப் பொருளாதார நெருக்கடி.

சுகாதாரம் எந்தக் கடையில் கிடைக்கும்? தொழிலாளர்களுக்கு மறுக்கப்படும் சுகாதார வசதிகள்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் கடந்த 200 வருடங்களுக்கு மேலாக பெரும்பங்காற்றும் மலையகத் தமிழ் மக்களுக்கு இன்னும் வீட்டு உரிமையோ அல்லது காணி உரிமையோ இல்லை. இதை தட்டிக்கேட்க மலையக தமிழ் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ள மந்திரிமார்களுக்கு எவ்வித திறமையோ அல்லது அறிவோ இல்லை. ஆனால், அவர்கள் ஊடகங்களிலும் கூட்டங்களிலும் சிங்கங்களைப் போல் கர்ச்சிப்பதை மட்டும் காணமுடிகின்றது. தங்களது உதிரத்தையும் வியர்வையையும் சிந்துகின்ற மக்கள் தொடர்ந்தும் இப்படிப்பட்டவர்களிடம் ஏமாந்து கொண்டே வாழ்வதா?