10262020Mon
Last updateMon, 26 Oct 2020 2pm

இனவாதம், மதவாத்தினை முறியடித்து ஆட்சி அமைப்பினை மாற்றியமைக்க ஒன்றுபடுவோம்!

பேரினவாத அரசு சிறுபான்மை இன மக்களை தனது இனவெறியூட்டிய படைகள் மூலமாக கொலைகள், அச்சுறுத்தல்கள், ஆக்கிரமிப்புகள், பெண்கள் மீதான வன்புணர்வுகள் முதல் இனப்படுகொலை வரை தனது அடக்குமுறையினை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இவற்றினை அரசு, படைகளைக் கொண்டு முன்னெடுப்பதாலும் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து மிக நீண்ட காலமாக பேரினவாதத்திற்கு எதிரான குரல்கள் மற்றும் செயற்பாடுகள் அற்ற நிலையில் எம்முன்னால் ஒட்டுமொத்த சிங்கள இனமுமே எதிரியாக தெரிகின்றது. தமிழ் குறுந்தேசிய அரசியல்வாதிகளும் “சிங்களம் எம்மை அடக்கியாள அனுமதிக்கோம். தகுந்த பதிலடி கொடுப்போம்” என்பன போன்ற இனவெறியூட்டும் கோசங்களை முழங்கி தமது அரசியல் இருப்புக்காக முழுச் சிங்கள மக்களுமே இனவாதிகள் என்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர்.


மீண்டும் “மரம் பழுத்தால் வெளவால்கள் பறந்து வரும்” கதை………

1977 ஆம் ஆண்டு தேர்தலில் போது வண்ணை ஆனந்தன் என்ற ஆசாமி “மரம் பழுத்தால் வெளவால்களை” (வெளிநாடுகளை) அழைக்கத் தேவையில்லை. அவை தாமாக பறந்து வரும் என கதை விட்டு, இளைஞர்களின் இரத்தத்தினை சுடாக்கி இரத்தத் திலகமிடவைத்தும்; தாழ்த்தப்பட்ட சாதியினைச் சேர்ந்த உடுப்பிட்டி வட்டாரக்கல்வி அதிகாரியாக இருந்த இராசலிங்கம் அவர்களை உடுப்பிட்டி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி, உலகமே உடுப்பிட்டி தொகுதியின் முடிவினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது என்று தமிழ் குறுந்தேசிய வெறியினை ஊட்டி தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் வென்று பாராளுமன்றம் சென்றதுடன் மக்களிற்கு கொடுத்த தமிழீழ வாக்குறுதியினையும் காற்றில் பறக்கவிட்டனர்.

ஜே.வி.பி…. மகிந்தா……. தமிழ் மக்கள்……..

நாம் இலங்கையர் அமைப்பினர் என்னும் பெயரில் ஜே.வி.பியினர் யாழ் நகரின் பேருந்து நிலையத்தில் காணாமல் போனோர் மற்றும் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும், அவர்களின் பெயர் விபரங்களை வெளியிடக் கோரியும், ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தி இருந்தது. அதில் கலந்து கொள்ளவென யாழ் சென்ற ஜே.வி.பி இன் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட பலரை, பாசிச மகிந்த அரசின் கூலிப் படை தாக்கியது.  அத்துடன்  ஆர்ப்பாட்டத்தின் போது கல் மற்றும் கூழ்முட்டைகளை வீசியது. அதனை நடத்தவிடாது குழப்ப முயன்றதை பத்திரிக்கை செய்திகளும், காணொளிகளும, படங்களாகவும் வெளிவந்தது.

உலகச் சண்டியனின் யாழ் வருகையும் மகிந்தா அடிவருடிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும்.

தமிழ் மக்கள் தங்களின் விடுதலைக்காக கடந்த பல சகாப்தங்களாக போராடிய போதெல்லாம் எந்த விதமான நேரடியான அக்கறையும் அற்று இருந்த அமெரிக்காவும் மேற்குலகமும்; இன்று விசேட அக்கறையுடன் தமிழ் மக்களின் பிரச்சினையினை தமது கைகளில் எடுத்து மகிந்த அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளதாகவும் நீதி விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் எனவும் பல அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன.

 

போலி ஜனநாயக தேர்தலும் மக்கள் விரோத கட்சிகளும்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகளின் மரண ஓலங்கள் இன்னமும் ஒலித்து கொண்டேயிருக்கின்றது யுத்தத்தினால் அங்கவீனரானோர் மற்றும் காயமடைந்தோர்களின் ரணங்கள் இன்னமும் ஆறவில்லை மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டு வந்தவர்களது மரண பயம் இன்னமும் அடங்கவில்லை முட்கம்பி வேலிகளின் முகாம்களுக்குள் லட்சக்கணக்கானோர் இன்னமும் எதிர்காலம் பற்றிய பெரும் கேள்விக் குறியுடன்…