01222021வெ
Last updateச, 16 ஜன 2021 11am

செல்போன் பெருகியது: வறுமை ஒழிந்தது! -செட்டிநாட்டு சிதம்பரத்தின் அபாரக் கண்டுபிடிப்பு!

ஐ.நா. அவையின் அறிக்கையின்படி, பசியால் வாடும் 88 நாடுகளின் பட்டியலில் இந்தியா 65- ஆவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் 37 கோடி நபர்களுக்குக் கழிப்பிட வசதி இல்லை. 5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளில் 40 சதவீதத்தினர் சத்தான உணவு கிடைக்காமல் நோஞ்சான்களாக உள்ளனர். இவை இந்திய மக்களின் ஏழ்மையையும், அவல நிலையையும் காட்டும் புள்ளி விவரங்கள்.தொடரும் அரசியல் கூத்துக்கள்

தமிழக சட்டப் பேரவைக்கான 2011 பொதுத் தேர்தல்களுக்கான அரசியல் கூத்துகள் களைகட்டத் தொடங்கி விட்டன. இப்போதே கூத்தாடிகள் மீதான கவர்ச்சியை ரசிகர்களிடையே பரப்பும் முக்கிய ‘ஜனநாயகக் கடமை’யைப் பெருந்திரள் செய்தி ஊடகங்கள் பொறுப்புடன் தொடர்கின்றன. கூத்துக்குத் தேவையான கதை அமைப்புகள் - அரங்கக் காட்சிகள் தயாரிப்பில் ஓட்டுக் கட்சிகள் தீவிரமாகிவிட்டன.


காஷ்மீர் இந்திய இராணுவமே வெளியேறு!

‘‘இந்திய நாய்களே திரும்பிச் செல்லுங்கள்!", "இப்பொழுதே வேண்டும் விடுதலை!" என்ற முழக்கங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. "இது இந்திய மக்களைப் பற்றியதல்ல; இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீர் போலீசும் சாதாரண காஷ்மீர் மக்களுக்கு இழைத்த அநீதிகளைப் பற்றியது" என காஷ்மீரில் நடந்துவரும் தெருப் போராட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார், இர்ஷத் என்ற இளைஞர்.  பெண்களும் தாய்மார்களும் இளைஞர்களும்தான் தற்பொழுது நடைபெற்றுவரும் போராட்டத்தில் முன்னணியாக நிற்கிறார்கள்.


நல்லகாமன் வழக்கு: தோல்வி நிலையென நினைத்தால்...

முன்னாள் இராணுவ சுபேதார் நல்லகாமன் தொடுத்திருந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தால் ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த போலீசு எஸ்.பி பிரேம்குமாரை, 2.8.2010 அன்று, மாரக்கண்டேய கட்ஜு, சி.பி.தாகுர் ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு விடுதலை செய்தது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய கைகளைத் தலைக்கு மேலே உயர்த்தி நீதிபதிகளுக்குக் கும்பிடு போட்டார், பிரேம்குமார்.


போபால்: கொலைகார 'டௌ'-வே வெளியேறு! புரட்சிகர அமைப்புகளின் முற்றுகை

போபால் நச்சுவாயுப் படுகொலையை விபத்தாகச் சித்தரித்துக் குற்றவாளிகளை ஒருநாள்கூடச் சிறைக்கு அனுப்பாமல் பிணையில் விடுவித்திருக்கிறது, போபால் நீதிமன்றம். 23,000 இந்திய மக்களைப் படுகொலை செய்து, 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோரை ஊனமாக்கியிருக்கும் பயங்கரவாதியான  யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுக்கிறது, அமெரிக்க  அரசு.