01222021வெ
Last updateச, 16 ஜன 2021 11am

மோடி கும்பலைக் காக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு

குஜராத் மாநிலத்தின் இந்துவெறிபயங்கரவாத முதல்வர் மோடியின் தலைமையில் முஸ்லிம்களுக்கு எதிரான குஜராத் படுகொலைகள் நடத்தப்பட்டு 8 ஆண்டுகள் கழிந்து விட்டன. இந்திய வரலாற்றில் மிகக் கொடூரமாக நிகழ்த்தப்பட்ட இந்த இனப்படுகொலைகள் குறித்த விசாரணை மிகவும் கீழ்த்தரமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதை, அவற்றை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மீதான குற்றச்சாட்டுகளே நிரூபித்துக்காட்டுகின்றன.


பழங்குடியினத் தலைவர் லால் மோகன் டுடூ படுகொலை: அரசு பயங்கரவாத அட்டூழியம்!

மே.வங்கத்தின் லால்கார் வட்டாரத்தைச் சேர்ந்த பழங்குடியின விவசாயியும், போலீசு அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டியின் தலைவருமான லால்மோகன் டுடூ, கடந்த பிப்ரவரி 22ஆம் தேதியன்று அவரது வீட்டிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு, அருகிலுள்ள வயல்வெளியில் கோரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவருடன், தம்பதிகளான யுவராஜ், சுசித்ராமுர்மூ ஆகிய இரு பழங்குடியினரும் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங் – சுகதேவ் நினைவை நெஞ்சிலேந்துவோம்!” – புரட்சிகர அமைப்புகளின் உறுதியேற்பு!

தோழர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் 79வது நினைவு நாளில், அவர்களின் சோசலிசப் புரட்சிக்கனவையும் உழைக்கும் மக்களின் விடுதலை எனும் இலட்சியத்தையும் சாதிக்க உறுதியேற்று, இம்மாவீரர்கள் வெள்ளை ஏகாதிபத்தியத்தால் தூக்கிலிடப்பட்ட நாளான மார்ச் 23 ஆம் தேதியன்று, தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் அத் தியாகத் தோழர்களின் நினைவை நெஞ்சிலேந்தி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தின.

தொழிற்சங்கத்தை உடைக்க முதலாளி – போலீசு கூட்டுச் சதி! போராடும் தொழிலாளர்கள் மீது பொய்வழக்கு! கோவையில் தலைவிரித்தாடும் முதலாளித்துவப் பயங்கரவாதம்!

கோவை  தடாகம் சாலையிலுள்ள சிறீ ரெங்கனாதர் இன்டஸ்ட்ரீஸ் எனும் நிறுவனத்தில் ஏறத்தாழ ஈராண்டுகளாக பு.ஜ.தொ.மு. சங்கம் செயல்பட்டு வருகிறது. சங்கம் தொடங்கப்பட்டதிலிருந்து ஆலை முதலாளியின் பழிவாங்கலும் அடக்குமுறையும் தீவிரமாகத் தொடங்கியது. சாதி உணர்வு என்ற துருப்புச் சீட்டை ஏவியும், 15.2.10 இல் எவ்வித முன்னறிவிப்புமின்றி சட்டவிரோதக் கதவடைப்பு செய்தும் சங்கத்தை முடக்க முதலாளி வி.நாராயணசாமி மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. அதன் பிறகு, முதன்மை நுழைவாயிலைப் பூட்டிவிட்டு பின்வாயில் வழியாகத்தான் அனைத்து தொழிலாளர்களும் உணவருந்தச் செல்ல வேண்டும் என்று தன்னிச்சையாக அறிவித்து, இதனால் ஏற்படும் தாமதத்தை வைத்து தொழிலாளர்களை நிர்வாகம் பழிவாங்கியது.தொழிலாளர்களை ஆபாசமாக ஏசுவது, கேவலமாக நடத்துவது, அற்ப விவகாரங்களை வைத்து பழிவாங்குவது என்று ஆலை முதலாளி கேள்விமுறையின்றி சட்டவிரோதமாக கொட்டமடித்து வருகிறார். அதற்குவிசுவாசமாகப் போலீசு வாலாட்டுகிறது.

ஓட்டுப் போடாதே! புரட்சி செய்! - வி.வி.முவின் இடைத்தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரம்

பா.ம.க. நிறுவனரான ராமதாசு, ""சாராயக் கடைகளை ஏலம் விடுவதுபோல் இனி தொகுதிகளையும் ஏலம்விட்டு விடலாம். அந்த அளவுக்கு ஆளும் கட்சி இங்கே வாக்காளர்களை விலை பேசுகிறது'' என்று புலம்பும் அளவுக்கு ஓட்டுச் சீட்டு ஜனநாயகம் சந்தி சிரித்தது. சீமைச் சாராயம், வேட்டி, துண்டு, புடவை, வளையல், மூக்குத்தி, புத்தகப் பை, ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்றெல்லாம் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் கோடிகளை வாரியிறைத்து வாக்காளர்களைக் குளிப்பாட்டின. பென்னாகரம் இடைத் தேர்தல் திருவிழாவை ஓட்டுப் பொறுக்கிகள் கோலாகலமாக நடத்திக் கொண்டிருந்த சூழலில், இப்போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணித்து, புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரளுமாறு மக்களை அறைகூவி, இப்பகுதியில் இயங்கிவரும் விவசாயிகள் விடுதலை முன்னணி வீச்சாகப் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டது.