07252021ஞா
Last updateசெ, 20 ஜூலை 2021 1pm

கடாபியின் முடிவும் அதே தொடர்ச்சியும்....

 

மரணத்தின் பின்னான மகிழ்ச்சி ஆரவாரங்கள்

துப்பாக்கி ரவைகளாகவே

வானை நோக்கி தீர்க்கப்படுகின்றன

எண்ணையை நோக்கியவர்கள்

குண்டுகட்கான பெறுமதியை வென்றுவிட்டார்கள்


எசமானத் தேசங்களின் வீட்டோ அதிகாரம்

ஈக்கள் மொய்க்கும் சின்னஞ் சிறுசுகளின்
வறண்டு வெடித்துப்போன உதடுகள்
தொலைக்காட்சி செய்திகட்காய் படமாக்கப்படுகிறது
மொய்க்கும் ஈக்களை எப்பொழுதாவது
இந்தக் குழந்தைகள் பசியில் விழுங்குமாவென
ஒளிப்பட பதிவாளர்கள்
விருது பெறுவதற்காய் காத்துக் கிடக்கிறார்கள்

சங்கிலியன் வாளும் சிங்கத்து வாளும்

நாற்றெழுந்து

கதிர் தள்ளி

சோற்றுப் பருக்கை தரும் நெற்கதிரும்

காற்றில் சுளகெடுத்து தூற்றிய நெல்மணியும்

வயிறாற்றிய கஞ்சியும் அறியார்

சேற்று நிலம் அறியார்

ஏர் உழுத மண்வாசம் ஏதும் அறியார்

 

சோமாலிய முள்ளிவாய்க்கால்!

கொட்டுகின்ற

ஒவ்வோர் குண்டும்

அத்தனை குழந்தைகளினதும் பசியாற்றும்

சோமாலியப் பாலைவனத்தில்

இன்னோர்

முள்ளிவாய்க்கால் பிணத்தில் குவிகிறது

எந்தச் சீமானும் போராடக்காணோம்………

அம்மாவின் வாய்வழி ஈழச்சொல் விழுமென
காவடியாட காத்துக் கிடக்கிறாங்கள்
இருப்பாய் புழைப்புவாதிகளே
முதல்வர் அம்மாவின் செருப்பாய்
நெருப்பாய் நிமிரும்
தமிழக உணர்வை அணைப்பாய்
சட்டசபை சரித்திரம் படைத்ததாய்
மக்கள் எழுச்சியைத் தடுப்பாய்…..