11262020வி
Last updateசெ, 24 நவ 2020 7pm

உண்டியல் செய்வோரும் தேசிய பத்திரிகை வீரகேசரியும்

புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள எம்மவர்கள் தமது பணத்தை இலங்கை, இந்தியா......... போன்ற நாடுகளுக்குள் மாற்றிக்கொடுக்கும் இந்த உண்டியல் தொழில் ஒரு இலாபம் தரும் தொழிலாக இன்று உள்ளதுடன் கருப்புப் பணத்தை மாற்றிக்கொடுக்கும் வகையில் இலங்கை, இந்தியா..... ஊழல் கொள்ளை கரண்சியாகவும் மாற்றி விடுகின்றனர். எந்த சட்டவிரோதப் பணத்தையும் மாற்றிவிடும் இந்தத்தொழிலில் வீரகேசரி  விபச்சாரம் செய்யப்போனது தான் ஆட்ச்சரியமானது.

வெளிநாடு வரும் ஞாயிறு வீரகேரி வாரப் பத்திரிகையின் உள்ளே இன்றைய பணப் பெறுமதி என்னவென்று குறிப்பிட்டு வருவது வழக்கம். எம்மவர்கள் பணம் அனுப்பமுன் இதை ஒப்பிட்ட பின் உண்டியல் ரேற்றைக் கேட்டு அதைச் சரிபார்த்து தமது கடின உழைப்புப் பணத்தைக் கைமாற்றுவர். இந்த வீரகேசரி பணப்பெறமதி செய்தி உண்டியல் காரரக்கு ஒரு பெரிய தலையிடியாக இருந்தது. தமது பெரிய கொள்ளைக்கும் வாராவாராம் இலங்கைப் பணப் பெறுமதிக்கு இசைவாக 0,20,30,40 பிராங் குறையக் கொடுக்க வேண்டி ஒரு நெருக்கடிக்குள் குறைந்த இலாபத்தை வீரகேசரி மூலம் பெறவேண்டி இருந்ததால் இந்த உண்டியல் பேர்வழிகள் வீரகேரியுடன் நடந்த பேரத்தின் பின்  வீரகேரி அப்பகுதியை போடுவதையே திட்டமிட்டு கைவிட்டுள்ளத. இதன் மூலம் இல்கை, இந்தியப் பெறுமதியை திட்டமிட்டு மறைக்க உதவியதன் மூலம் உண்டியல் பேர்வழிகள் பச்சையாகவே கொள்ளையடிக்க வீரகேசரி துணைபோயுள்ளனர். வாழ்க! கொள்ளையடிப்போர் சார்பான உங்கள் பேரங்களும் சம்திங்குகளும்.


எகிப்தில் கூடிய பயங்கரவாதத் தலைவர்களின் பரங்கரவாத ஒழிப்புப் பற்றிய பிரகடனம்

பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்த யூத இனவெறியர்கள் 2ம் உலகயுத்தின் பின் மிகமோசமான ஒரு காட்டாட்சியை நடத்திவந்தனர். ஜனநாயகம் பற்றி உரத்துக் கத்தும் ஏகாதிபத்தியங்கள் சாமரம் வீச, இஸ்ரேலிய இனவெறியர்கள் இந்த மண்ணின் உரிமையாளர்களை, அவர்களின் ஜனநாயக உரிமைகளை அடக்கியொடுக்கி சுடகாடாக படுகொலைகளின் மூலம் இராணுவ ஆட்சிகளை இந்த ஜனநாயகத்தின் பேரில் நடத்தினர். இதை எதிர்த்துப் போராடிய மண்ணின் மைந்தர்களான பாஸ்தீன வீரர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி பயங்கரவாத காட்டாச்சி நடத்தினர். கொள்ளை, கொலை, கற்பழிப்பு...ஊடாகவே இஸ்ரேல் என்ற இந்த நாடு உருவானது.

போர்க்குணம் கொண்ட பிரஞ்சுத் தொழிலாளியும் பிரஞ்சு மக்களின் மொத்த சமூக அமைப்பும்

சென்ற இதழின் இத் தொடர்ச்சியை நாம் மேலும் விரிவாக ஆராய்வது மேலும் மேலும் பிரஞ்சு சமுதாயத்தை புரிந்து கொள்வதன் மூலம் சர்வதேச சமுகத்தையும் புரிந்துகொள்ள உதவும். சர்வதேச ரீதியாக இவ்விடயத்தை உங்கள் முன் இக்கட்டுரையின் மூலமும் வெளிக்கொண்டு வருகின்றோம். சர்வதேச ரீதியாக உற்பத்தியை வருடம் (Pஐடீ) ஒன்றுக்கு நாம் முன்னணி ஒழுங்கில் ஆய்வு செய்வோமாயின்

சிறையிலிருந்து எழுதும் கடிதம்

அம்மா

நண்பர்கள் என்னைத்தேடி வந்து

கதவிலே தட்டும் போதெல்லாம்

தாயே, நீ வெம்பிக் கண்ணீர் -மல்குவதை

எண்ணி நான் வேதனைப்படுகிறேன்

 

ஆனால் வாழ்க்கையின் சிறப்பு என்

சிறையிலே பிறக்கிறதென்று

நான் நம்புகிறேன் அம்மா.

என்னை இறுதியில் சந்திக்க வருவது

ஒரு குருட்டு வெளவாலாய்

இருக்காதென்றும் நான் நம்புகிறேன்

அது பகலாயத்தான் இருக்கும்

அது பகலாய்த்தான் இருக்கும்

 

சமீஹ் அல் காசீம்

நன்றி:- பலஸ்தீனக் கவிதைகள்-

தேசியம் புறநிலை சாராத அகநிலை சார்ந்த, வர்க்கம் சாராத நடுநிலை கற்பனைப் பெருளாம்! -இது ஓர் உயிர்ப்பின் வாதம்

உயிர்ப்பு-6 வெளிவந்துள்ளது. வழமைபோல மார்க்சிசத்தின் மீது இம்முறையும் சேறடிப்புத்தான். இம்முறை ஆசிரியர்தலையங்கங்கள், டிசம்பர் 1994 வெளியாகிய அ.மார்க்சின் "தேசியம் ஒரு கற்பிதம்" என்ற பகுதிக்குள் உள்ளடங்கியுள்ளது. தேசம் என்பது ஒரு கற்பிதம் என்ற வரையறையில் தொடங்கி அ.மர்க்ஸ் அதில் குறிப்பிட்ட சிவத்தம்பியின் சைவ வேளாளர் சித்தாந்தமே தேசியம் என்ற எல்லையைத் தாண்டிவிடவில்லை.